Tuesday, April 04, 2006

பேயும் நானும்

நேற்று (தமிழோடு பரிச்சயம் குறைந்த, நீண்டகாலம் வெளிநாட்டில் வாழும்) ஈழத்து நண்பரொருவரோடு கதைத்துக்கொண்டிருந்தபோது "பேப் பம்பல்" என்று ஒருரிடத்திற் பாவித்துவிட்டேன்.

அவர் பேயைக் கண்டது போல் முழித்ததுதான் மிச்சம்.

அவருக்கு "பேய்" என்ற சொல் வரும் முறையும் தெரியவில்லை; பம்பல் என்ற சொல்லும் தெரியவில்லை.

அவருக்கு அதை விளக்கியபின் யோசித்துப் பார்த்தேன்.
'பேய்' என்பதை நாங்கள் சில இடங்களில் வேறு பொருளில் பாவிக்கிறோம். 'பம்பல்' பற்றிச் சொல்ல வேண்டிய தேவையில்லையென்பதால் 'பேய்' பற்றி மட்டும் சிறிது கதைக்கலாம்.

ஈழத்தில் (ஆம் யாழ்ப்பாணத்தில் மட்டுன்று) பேச்சு வழக்கில் 'பேய்' என்ற சொல்லை வேறுவேறு பொருள்தரும் வண்ணம் நாலைந்து சந்தர்ப்பங்களில் பாவிக்கிறோம்.

முதலில் 'பெரிய', 'சிறந்த' என்ற பொருள்களில்.
"பே(ய்)ப் பம்பல்" -> சிறந்த / பெரிய நகைச்சுவை
"பே(ய்)ச் சந்தோசம்" -> மிகுந்த மகிழ்ச்சி.
"பே(ய்)க் காய்" -> ஒன்றில் சிறந்தவர், நிபுணத்துவமானவர் என்பதைக் குறிக்கும். இங்கே 'காய்' என்பது நபரையே குறிக்கும். ஆனால் தனித்துப் பொருள் தராது.
விடலைப்பருவத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு துணையை கற்பனையாக ஒழுங்கு பண்ணி வைத்துக்கொள்வோம் (பெண்களும் இதைச் செய்தார்களா தெரியாது). அப்போது அத்துணையை 'காய்' கொண்டே குறிப்பிடுவது வழக்கம். 'சுரேசின்ர காய் இண்டைக்கு வரேல, உன்ர காயோட மாறன் சேட்டை விட்டவன், அவனின்ர காய் மூஞ்சைய நீட்டிக்கொண்டு போகுது, அவன் காய மாத்திப்போட்டானாம்" என்பது போன்ற கதைகள் நிறைய வரும். (காய் பற்றியே தனிப்பதிவு போடலாம் போல கிடக்கு;-)).

ஒருவரைச் சுட்டி "ஆள் உதில பே(ய்)க்காய்" என்றால், அவர் குறிப்பிட்ட ஒன்றில் விண்ணனாக, வல்லவனாக இருப்பார். சின்னவயசில ஒருத்தன் ஆரையாவது "பேக்காய்" எண்டு சொன்னா, 'உனக்குத் தெரியுமோ? அவனொரு சீக்காய்" எண்டு எதிர்த்து நக்கலடிப்போம். (சீக்காய் - பனங்காயின் முற்றியவடிவம்)

மேற்கண்டவற்றில் 'பேய்' என்பது பெரிய, சிறந்த என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. பேய் என்பது கதைக்கும்போது தனியே "பே" என்பது மட்டுமே ஒலிப்பதால் அடைப்புக்குறிக்குள் (ய்) கொடுத்துள்ளேன்.
பேச்சந்தோசம், பேப்பம்பல், பேக்காய்... போல.

உண்மையில் 'பேய்' என்பதற்கு வேறேதாவது பொருளிருக்கா? பிசாசு என்ற பொருள்தரும் பேயைத்தான் இதற்குப் பாவிக்கிறோமா? அல்லது சிறந்த, பெரிய, அருமையான என்ற பொருள் தரும் வேறேதாவது சொல்லிலிருந்துதான் இந்த 'பே' என்ற ஒலி வந்திருக்குமா? என்று யாராவது சொல்லுங்கள்.
*******************************

இன்னொரு பொருளிலும் இந்தப் 'பேய்' வருகிறது.
"பே(ய்)ப் பட்டம் கட்டாதே"
"பே(ய்)க் காட்டாதே
"
மேற்கண்டவற்றில் பேய் என்பது 'ஏமாற்றுதல், குழப்புதல் என்ற பொருளில் வருகிறது. பேக்காட்டுதல் என்றால் ஏமாற்றுதல்.

"என்னைப் பேயன் எண்டு நினைச்சியோ?"
"நானொரு பேயன் இஞ்ச குந்திக்கொண்டிருக்கிறன்
." என்பதில் 'பேயன் முட்டாளாகவோ விசரனாகவோ அர்த்தப்படும்.

இதற்கு ஏதாவது கதையுண்டா தெரியவில்லை. 'புலி வருது புலி வருது' கதைபோல யாராவது பேயைக் காட்டுவதாகச் சொல்லிச்சொல்லி ஏமாற்றிய மாதிரி ஏதாவது கதைகள் மக்களிடம் இருந்து, அதிலிருந்து இந்தப் 'பேய்' வந்திருக்குமா?
*********************************
"உதுவொரு பேய்வேலை"
என்றால் முட்டாள்தனமான, புத்தியற்ற, நன்மை பயக்காத வேலை என்ற பொருளில் வரும்.
"நானொரு பேவேலை பாத்திட்டன்' என்றாலும் முட்டாள்தனமான செயலொன்றைச் செய்துவிட்டேன் என்ற கருத்தே.
(மலைநாடனின் பின்னூட்டத்தையடுத்துச் சேர்க்கப்பட்டது)
********************************
அடுத்து பேய்க்கதை.
இதுவொன்றும் திகில் கதையன்று.

"பேக்கதை பறையாத"
'நான் இவ்வளவு சொல்லிறன், நீ பேக்கதை கதைச்சுக்கொண்டிருக்கிறாய்'

என்பன போன்ற, எதிராளியின் மீதான சினத்தைக் கொட்டும் வசனங்களில் பேய்க்கதை வருகிறது.

இங்கே 'பே(ய்)க்கதை' என்பது ஆத்திரமூட்டும், எரிச்சலைத்தரும், சினந்தரும் பேச்சு என்ற பொருளில வருகிறது.
**இரண்டு வெவ்வேறான மனநிலையில் இந்தப் பேய் வருகிறது. முதலாவதில் மகிழ்ச்சி (பேச்சந்தோசம்). மற்றதில் ஆத்திரம் (பேக்கதை)
********************************

இதைவிட ஒருவனை/ஒருத்தியை 'பே(ய்)க்கிளாத்தி' (அவளொரு பேக்கிளாத்தி) என்று திட்டும் வழக்கமுண்டு. "அப்பக்கோப்பை" போல இதற்கும் ஏதாவது விளக்கமிருந்தால் தெரிந்தவர்கள் சொல்லவும்.

நான் சொன்னவற்றைவிடவும் மேலதிக 'பேய்'த்தனமான மொழியாளுகைள் இருந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும்.

ஈழத்தைவிட, தமிழகத்தில் இப்படி 'பேய்'த்தனமான உரையாடலுண்டா என அறிய விருப்பம்.
*******************************

நான் வலைப்பதிவுகளில் பின்னூட்டமிடும்போது நாலைந்து முறை 'பேய்' என்றதைப் பாவித்து எழுதிவிட்டு பின் அழித்திருக்கிறேன். ஏனென்று சரியான காரணம் தெரியவில்லை. மற்றவர்கள் இந்த மொழிபற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைப்போ, அன்றி எனக்கே அது பொருந்தாத வடிவமாகத் தோன்றியதோ என்னவோ தெரியவில்லை. மற்ற ஈழத்தவரும் இப்படி "பேய்"த்தனமாக எழுதியதில்லை. நானறிய பொடிச்சி ஒருமுறை 'பேச்சந்தோசம்' என்று என் பதிவொன்றில் (நாங்கள் கவிதை எதிர்ப்பு இயக்கம் தொடங்கிய காலத்தில், அதுபற்றிய பதிலொன்றுக்கு. வழக்கம் போலவே இயக்கம் சிதறிப்போச்சு;-)) குறிப்பிட்டிருந்தா.

ஆனாலும் 'சூப்பர் காமடி' என்பதற்கிணையாக 'பேப்பம்பல்' பாவிப்பதில் என்ன பிரச்சினையிருக்க முடியும்?
***************************

என்னைத் திட்டுவதற்குச் சொல் தேடித்திரிந்த அன்பர்களுக்கு இப்பதிவில் சில சொற்களை ஞாபகப்படுத்தியிருக்கிறேன்.
ஆசைதீரத் திட்டிச் செல்க.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பேயும் நானும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 April, 2006 23:29) : 

வசந்தகுமாரா, நல்லதொரு பதிவு. 'பேயும் நானும்' என்று தலைப்பிட்டதைவிட, 'பேயும் இன்னொரு பேயும்' என்று (அதுதானே உண்மையும் கூட) நீர் தலைப்பிட்டிலிருந்தால், நான் உம்மளை 'பேய்க்காய்' என்று பாராட்டியிருப்பேன். 'பேய்க்கதை கதைக்காதை' என்பதைப்போல 'விசர்க்கதை கதைக்காதை' என்பதுவும் அதிகம் வழக்கிலுள்ளது. நாங்கள் பேச்சு வழக்கில் பாவிக்கும் -வட்டார வாழக்கு- சொற்களை ஏன் எழுதும்போது தெரிந்தோ/தெரியாமலோ ஏன் தவிர்க்கின்றோம் என்று யோசித்துப்பார்க்கையில் பிறருக்கு விளங்காதோ என்ற முன்முடிவு ஒரு காரணமாயிருக்கலாம் (சிலவேளை அதன் பொருளை சரியாக உணராதாவர்கள் பிழையாக விளங்கிக்கொள்ளக்கூடும் என்ற தயக்கமும் இன்னொரு காரணமாய் இருக்கக்கூடும்).
.....
அதுசரி, அடுத்தபதிவில் உம்மடை 'காய்களைப்' பற்றி எழுதும்...இல்லையென்டால், நீர் இலவு காத்த கிளியாக இருக்க, மற்றவங்கள் கொத்திக்கொண்டு போய் 'பேய்க்காய்'களான சோகத்தையாவது சொல்லும்.
.....
எங்கை சயந்தனை நீண்ட காலமாய் காணவில்லை.... தன்ரை காயோடு 'கடலை' போடுவதில் பிஸியாக இருக்கிறாரோ....என்னவோ....

 

said ... (04 April, 2006 23:48) : 

வணக்கம் வசந்தன்!
பேப்பகிடி, பேவேலை, என்பன என் நினைவுக்கு வந்தன. ஒரு வட்டாரச் சொல்லாடல் குறித்து, இவ்வளவு விரிவாக யோசித்து எழுதிய நீங்கள் ஒரு பேக்காய்தான்..
நன்றி!

 

said ... (05 April, 2006 00:01) : 

//விடலைப்பருவத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு துணையை கற்பனையாக ஒழுங்கு பண்ணி வைத்துக்கொள்வோம் //

நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்கை.. அண்ணைமார் லைன் எண்ட சொல்லைப் பாவிப்பினம். பிறகு கொழும்பில துண்டு எண்ட சொல்லை பாவிச்சாங்கள்.. - உன்ர துண்டு என்ர துண்டு -

(நான் எப்பவும் பாவிக்கிறது.. ஆள் எண்ட சொல்லைத்தான்.. - என்ர ஆள், உம்மடை ஆள்..) :)

பேய்க்காட்டாதை என்பது.. ஒரு வேளை பேயைக் காட்டாதே.. அதாவது பேயிருக்கிறதா சொல்லி ஏமாற்றாதே எண்ட பொருளில் வர கூடும்..

டிசே நீங்க ரொம்ப கரெக்ட்.. :)

 

said ... (05 April, 2006 00:02) : 

ஈழத்து வட்டார வழக்கு பற்றி சொல்லுறதாலை சொல்லுறன்.. தப்பா விளங்க வேணாம்.. பேய்ப் பு.. .. எண்ட சொல்லும் காவனையில இருக்கிறது.

 

said ... (05 April, 2006 00:12) : 

பேய்கள் பேசுமிடத்தில் யாம் பறைய என்ன இருக்கிறது?

எண்டாலும், "ஈழத்தைவிட, தமிழகத்தில் இப்படி 'பேய்'த்தனமான உரையாடலுண்டா என அறிய விருப்பம்" எண்ட மாதிரி பே(ய்)க்கேள்வி கேக்கிறான் பெடியன். பே(ய்)க்கிளாத்தி, சயந்தனா கதைக்கிறது பே(ய்)க்கதைதானே அப்பனே? ;-)

கடற்புலியார் சூசையைப் பற்றி ஒரு பழைய பகிடியிருக்கு.

எண்பதிலை ஈபிஆர் எல் எப், டெலோ உவையள புலியள் அமத்தின காலம். கிட்டு பருத்துறையில எங்கையோ கூட்டத்தில தமிழ்மக்களின்ரை உரிமையைப் பற்றி ஏதோ பேசி முடிச்ச பிறகு, சூசை வந்து, "இப்ப அண்ணையிற்றை கேள்வி கேக்கிறவை கேக்கலாம்" எண்டு சொல்லியிருக்கிறார். சனம் சத்தம்போடாமயிருந்திருக்கு. ஒரு சின்ன வட்டு(க்காய்) ஈபி சப்போட்டரோ ரெலோ சப்போட்டரோ என்னவோ, எழும்பி, "தமிழ்மக்களின்ரை உரிமை எண்டுறியள்? பிறகேன் ஈபி, ரெலோப்பெடியளைத் தட்டினனியள்?" எண்டு துணிஞ்சு கேட்டுப் போட்டுது.

சூசை பதில் சொல்லுறார்: "கேள்வி கேக்கலாமெண்டுதான் சொன்னனானே ஒழிய, பே(ய்)க்கேள்வி கேக்கயில்லை."

கதை எந்தளவு உண்மையெண்டு தெரியாது. ஆனா, மோட்டசைக்கிளைப் பறிச்ச கதை, கிளிப் கழண்ட கிரனைட்டை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துச்செத்தவன் கதை போல செவிவழி எங்கடை காதுக்குப் பொசிஞ்சு வந்த பல இயக்கக்கதையளிலை ஒண்டு.

 

said ... (05 April, 2006 00:31) : 

//சயந்தனா கதைக்கிறது பே(ய்)க்கதைதானே அப்பனே? ;-)//

அண்ணை.. நீங்கள் பேரைப் போட்டே எழுதலாம்.. பிரச்சனை இல்லை.. அதை விடுங்கோ.. என்ரை பேரை ஏன் இழுக்கிறியள்.. (நீங்கள் இருக்கும் மட்டும் எனக்கும் வசந்தனுக்கும் பப்ளிசிற்றிதான்)

ஹி ஹி.. உப்பிடி மாறி மாறி பேருகளை போட்டு எழுதினால் நான் இப்பிடி எழுத வேண்டியிருக்கும்..

"உங்களை பின்னூட்டம் தான் போடச் சொன்னது.. பேப் பின்னூட்டம் இல்லை.."

 

said ... (05 April, 2006 00:33) : 

சய்ந்தன், நானும் கொழும்பிலிருந்த காலத்தில் 'துண்டு' என்று தை அறிந்திருக்கின்றேன். பிறகு எஙகடை ரியூசன் Maths வாத்தி 'ரிக்கெட்' என்ற புதுப் பெயரை அறிமுகப்படுத்த அதைப்பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தனாங்கள். பேய்க்காய் மாதிரி - ஆனால் கொஞ்சம் ஏடாகூடமான அர்த்தம் வரக்கூடிய- 'பேய்ச் சரக்கு' என்ற சொல்லும் பாவனையிலுண்டு.. (ஆங்கிலத்தில் 'chicks' என்று சொல்வதற்கு ஒத்தது என்று கொள்ளலாமோ).

 

said ... (05 April, 2006 00:39) : 

வாசிக்கிற ஒவ்வொருவரையும் பேய் எண்டு சொல்ல வைத்ததற்கு நன்றி. (நீங்களும் வாசிச்சு பாருங்க)

தமிழ் அழகான எத்தனையோ வார்த்தைகள் இருக்கு. அத விட்டுட்டு, சும்மா பேவேலை செஞ்சு கொண்டு இருக்கிறியள்?.. இல்லை... 'பே' என்ற வார்த்தை எப்படிப் பயன்படுத்தப்படலாம் எண்டு யோசிச்சுப் பார்த்தன்.

 

said ... (05 April, 2006 00:41) : 

சரக்கு என்ற சொல்லை சபை நாகரிகம் கருதி சொல்லாமல் இருந்தன்.. அண்ணன் டிசேயே அவுத்து விட்ட பிறகு எனக்கென்ன..? ஒரு முறை கொழும்பு வானொலியில ஒருவரிடம் நீங்க யாருக்காக பாட்டுக் கேக்கிறியள் எண்டு கேக்க.. எனக்காகவும் என்ர சரக்கிற்காகவும் எண்டார்..

 

said ... (05 April, 2006 00:55) : 

/ஒரு முறை கொழும்பு வானொலியில ஒருவரிடம் நீங்க யாருக்காக பாட்டுக் கேக்கிறியள் எண்டு கேக்க.. எனக்காகவும் என்ர சரக்கிற்காகவும் எண்டார்../
உப்பிடி நடந்தாப்பிறகுதான், வசந்தனை அவரது 'ஆள்' dumped பண்ணினவா என்டு கேள்விப்பட்டனான்...உண்மையோ?

 

said ... (05 April, 2006 01:37) : 

வசந்தன்,

சரியான பேப்பதிவைய்யா இது! :)

தமிழகத்தில் எனக்கு தெரிந்து பேய் என்றால் அது "பேய், பிசாசு, ஆவி" என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது.

அதனால்தான் "பேயும் நானும்" என்ற தலைப்பை பார்த்தவுடன் ஏதேனும் திகில் கதையான்னு ஒடிவந்தேன்...

சரி விடுங்க... காய், சரக்கு, துண்டுன்னு 'ஆளு'க்கு நிறைய அறிஞ்சொற்பொருள் கற்றுக்கொண்டேன்! :)

 

said ... (05 April, 2006 02:46) : 

தமிழகத்திலும் பேய்க்காத்து வீசுது....பேய்த்தனமா செய்றதுன்னு சொல்வாங்களே...இங்கே பேய் என்பது பெரிய அல்லது மிகப்பெரிய என்று பொருள் தரும்.

ஈழத்தமிழில் பேயைப் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன். :-)

 

said ... (05 April, 2006 02:49) : 

வசந்தன் நல்லாத்தான் பேய்க்காட்டுறீர்

 

said ... (05 April, 2006 07:20) : 

//நானறிய பொடிச்சி ஒருமுறை 'பேச்சந்தோசம்' என்று என் பதிவொன்றில் (நாங்கள் கவிதை எதிர்ப்பு இயக்கம் தொடங்கிய காலத்தில், அதுபற்றிய பதிலொன்றுக்கு. வழக்கம் போலவே இயக்கம் சிதறிப்போச்சு;-)) குறிப்பிட்டிருந்தா.
//

அதென்ன இயக்கம்?

யோகன்.

 

said ... (05 April, 2006 07:30) : 

//நாங்கள் பேச்சு வழக்கில் பாவிக்கும் -வட்டார வாழக்கு- சொற்களை ஏன் எழுதும்போது தெரிந்தோ/தெரியாமலோ ஏன் தவிர்க்கின்றோம் என்று யோசித்துப்பார்க்கையில் பிறருக்கு விளங்காதோ என்ற முன்முடிவு ஒரு காரணமாயிருக்கலாம் (சிலவேளை அதன் பொருளை சரியாக உணராதாவர்கள் பிழையாக விளங்கிக்கொள்ளக்கூடும் என்ற தயக்கமும் இன்னொரு காரணமாய் இருக்கக்கூடும்).
//

இருக்கலாம் டி.சே,
நான் நாலைந்து இடங்களில் பாராட்டுவதற்காக "அந்த மாதிரி" என்று எழுதிவிட்டு பின் அதை விளக்கி இன்னொரு பின்னூட்டம் போடவேண்டி வந்தது.

சயந்தனைப் பற்றி இவ்வளவு துல்லியமான தகவல்கள் உமக்கு எப்பிடிக் கிடைக்குது எண்டு தீர விசாரிக்க வேண்டிக்கிடக்கு.
***************
பேக்கதை, விசர்க்கதை எல்லாம் ஒரு பொருள்தான் என்றாலும் இங்கே "பேய்' பற்றிக் கதைப்பதால் பேக்கதையோடு நிறுத்திவிட்டேன். [விசர் = கேந்தியென்றால் (விசரக்கிளப்பாத = கேந்தியக்கிளப்பாத) கேந்திக்கதை என்றும் ஏதாவது இருக்குமோ?;-)]

'கடலை போடுவது' இறக்குமதிச் சொல்லன்றோ? எங்களுக்குரிய சொல் என்ன? (சத்தியமாகத் தெரியாது. உங்களிடம் தான் அதுபற்றிக் கேட்க வேண்டும். சிலவேளை கடலைபோடும் வழக்கமே எம்மவரிடம் இருந்ததில்லையோ?;-))

 

said ... (05 April, 2006 07:32) : 

மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் 'பேவேலை'யைச் சேர்த்துவிட்டேன்.
***************
மற்றவர்களுக்கு ஆறுதலாக வந்து பதிலளிக்கிறேன்.

 

said ... (05 April, 2006 07:39) : 

"காய்", 'ஆள்' என்பதெல்லாம் கொஞ்சம் 'மரியாதை'யான சொல்லாடல்கள். ஆனால் 'சரக்கு' கொஞ்சம் அப்பிடியிப்பிடி. அதைவிட 'துண்டு', 'ரிக்கெற்' பற்றி எனக்குத் தெரியாது.
இன்னும் பதிவுக்கு வராத "பெண்டுகள் சேனை" யிடமிருந்து (ஆகலும் பிரச்சினை முத்திப்போனா உது தென்தமிழீழத்தின்ர இடமொன்றின் பெயர் எண்டு தப்பிக்கத்தான்) தாக்குதல் வரமுதல், தம்பிமாரே, அண்ணன்மாரே, கொஞ்சம் நாகரீகமான சொற்களைப் பாவியுச்சு என்ர வலைப்பதிவைக் காப்பாற்றுங்கோ எண்டு தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளிறன்.

 

said ... (05 April, 2006 12:11) : 

முதல்ல இதுக்குப் பதில் சொல்லும் ஐசே!

//பெண்டுகள்//

-0-

பின்னூட்டங்களையெல்லாம் காலமையே வந்து பாத்திட்டுத்தான் போனனான். கதையுங்கோ கதையுங்கோ. என்ன கூத்தெல்லாம் செஞ்சனீங்க. செய்யுறீங்க. செய்வீங்க எண்டு தெரிஞ்சு வைச்சுக்கொள்ளுறம்.

அண்ணைமார் எல்லாரும் புத்திசாலிகளாக ஒதுங்கி கொடுப்புக்குள்ள இசிரிப்பை ஒளிச்சு வைச்சுப் பார்த்தண்டிருக்க தம்பிமார் விளையாடுறீங்க எண்டு நினைக்கிறன். எனிவே. நடத்துங்க. நடத்துங்க.

 

said ... (05 April, 2006 12:19) : 

வசந்தன்,
பொதுவாகத் தமிழ்நாட்டில் பேய் என்பதற்கு ஒரே அர்த்தம்தான். அது சுடுகாட்டில் அலையும் பேய். மற்றபடி "பே" என்ற எழுத்தைச் சிலவற்றுக்கு முன்னால் சேர்த்தால் பெரிய என்று பொருள்படுவதும் உண்டுதான், எடுத்துக்காட்டு: அரசன் - பேரரசன், ஊர் - பேரூர், ஊராட்சி - பேரூராட்சி இப்படி. இங்கே ராகவன் சொன்ன பேய்க்காற்று, பேய்மழை போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி காய்களைப் பற்றிய விளக்கம் தமிழகத்திற்கு ரொம்பப்புதிது. உங்கள் காய்களுக்கு இணையான தமிழகச் சொற்கள் சில, பிகர், ஆள், பார்ட்டி, சைட் மற்றும் இன்னபிற.

 

said ... (05 April, 2006 12:29) : 

இப்போது ஒன்னொரு பேயும் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வழங்கும் சொல்லாடல் இது. மற்ற இடங்களிலும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பேப்பயல் - முட்டாள், பேத்தனமாப் பேசாத - முட்டாள்தனமாப் பேசாத.

 

said ... (05 April, 2006 12:58) : 

//பே(ய்)க் காய்" -> ஒன்றில் சிறந்தவர், நிபுணத்துவமானவர் என்பதைக் குறிக்கும். இங்கே 'காய்' என்பது நபரையே குறிக்கும். ஆனால் தனித்துப் பொருள் தராது.

"என்னைப் பேயன் எண்டு நினைச்சியோ?"
"நானொரு பேயன் இஞ்ச குந்திக்கொண்டிருக்கிறன்." என்பதில் 'பேயன் முட்டாளாகவோ விசரனாகவோ அர்த்தப்படும்.
//

தமிழகத்தில் (b)பேக்கு என்றால் முட்டாள் என்று பொருள். இது இந்தி பேவகூஹ்ப் இன் திரிபு."உதாரணம் - நீ என்ன பேக்கா?" . உங்களை சொல்லவில்லை :) இதுதான் பேயன் என்று திரிந்ததோ?

அன்புடன்
சிங்கை நாதன்.

 

said ... (05 April, 2006 13:05) : 

//'கடலை போடுவது' இறக்குமதிச் சொல்லன்றோ? எங்களுக்குரிய சொல் என்ன? (சத்தியமாகத் தெரியாது. உங்களிடம் தான் அதுபற்றிக் கேட்க வேண்டும். சிலவேளை கடலைபோடும் வழக்கமே எம்மவரிடம் இருந்ததில்லையோ//

பாடசாலைக்காலங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் போது கடலை போடும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் பாரியளவு இருந்ததில்லை.. (அவ்வாறு சேர்ந்து படிக்கும் அனுபவம் எனக்கு வன்னியில் ஒரேயொரு வருடம் மட்டும் கிடைத்தது..)

பேசினாலும், என்ன? ம்... சும்மா போம்.. வாங்கப்போறீர்.. எங்களுக்கு தெரியும்.. போன்ற நறுக் வார்த்தைகள் தான் பேசுவார்கள்..

ஆனால் நிறைய நேரம் பார்த்துக்கொள்வார்கள். அடிக்கடி பார்ப்பார்கள்.. அதை லைன் அடிக்கிறது எண்டு சொல்லுவினம்.. அதே மாதிரி உன்னை வெட்டுறாளடா அல்லது ஏனடா அவளை இப்பிடி வெட்டுறாய் எண்டும் எண்டும் சொல்லுறது. வெட்டுதல் எண்டது விழுங்குறது போல பாக்கிறது எண்ட பொருளில வருமாக்கும்.

வசந்தன் பொய் சொல்லுவதை அங்கை தாளிக்கிறது எண்டும் சொல்லறது தானே.. (சும்மா தாளிக்காதை..)

 

said ... (05 April, 2006 13:15) : 

//'கடலை போடுவது' இறக்குமதிச் சொல்லன்றோ? எங்களுக்குரிய சொல் என்ன? (சத்தியமாகத் தெரியாது. உங்களிடம் தான் அதுபற்றிக் கேட்க வேண்டும். சிலவேளை கடலைபோடும் வழக்கமே எம்மவரிடம் இருந்ததில்லையோ//

////பாடசாலைக்காலங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் போது கடலை போடும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் பாரியளவு இருந்ததில்லை.. (அவ்வாறு சேர்ந்து படிக்கும் அனுபவம் எனக்கு வன்னியில் ஒரேயொரு வருடம் மட்டும் கிடைத்தது..)////

வசந்தன்,
பின்னூடம் பிச்சுக்கிட்டுப் போகுது போலத் தெரியுது. இதைப் படித்தவுடன் ஒன்றை எழுதத் தோன்றியது. எழுதியும் விட்டேன். இங்கே பாருங்க

 

said ... (05 April, 2006 13:31) : 

நாங்க "பே(ய்) முளி" மட்டுமே முழிப்போம் :-)

 

said ... (05 April, 2006 13:32) : 

பேக்கையள்

 

said ... (05 April, 2006 13:36) : 

சயந்தன்,
உன்ர துண்டு என்ர துண்டு எண்டெல்லாம் கதைச்சது சுத்த ஆணாதிக்கத்தனம்.
பெண்களைச் சொத்துக்களாகப் பாக்கிற குணம். உதை வன்மையாக் கண்டிக்கிறேன். பின்னால வாற பெண்டுகள் சேனையிட்டயும் வாங்கிக்கட்டும்.
****************************
அனாமதேயம்,
ஓம்.. பேப் பு.... எண்டும் பாவனையில இருக்குத்தான். (உங்களுக்கெல்லாம் நல்லதா ஒரு எடுத்துக்காட்டு வராது பாருங்கோ)
****************************
செந்தூரன்,
"பேவேலை" பற்றி எழுதியாச்சு. நீர் யோசிச்சுக் கண்டுபிடிக்கத் தேவையில்லை (முயற்சித்து "மாடா"ப்பிடியும் ;-)
******************************
டி.சே, சயந்தன்,
நான் சொல்லத்தயங்கின சரக்குகள நீங்கள் எடுத்துவிட்டதுக்கு நன்றி.
ஆனா டம்ப் பண்ணினதெல்லாம் அனுபவம் பேசுதெண்டு விடவேண்டிய கதையள்தான்.

 

said ... (05 April, 2006 13:48) : 

அனாமதேயமா வந்து இயக்கக் கதைசொன்னவரே,

உதுக்க சயந்தன் ஏன் வந்தாரெண்டு தெரியேல. வாசிச்ச தவறோ விளங்கின தவறோ நானறியேன். ஒருத்தர் தான் எண்டாலும் பரவாயில்லை. உங்கட கும்பலே அப்பிடித்தான் வாசிச்சு விளங்கியிருக்கெண்டது கொஞ்சம் யோசிக்க வேண்டியவிசயம். ("யாம்" எண்டு பாவிச்சதை வைச்சு நீங்கள் தனிமனிதரன்று, ஒரு கும்பலென்று-அல்லது கும்பலாக உணர்ந்துகொள்ளும் தனிமனிதனென்று உணர்ந்தேன்.)

கும்பலே "பேக்கிளாத்தி"க் கும்பலோ எண்டும் யோசிச்சன். (சும்மாதான். நான் பாவிச்ச சொல்லுகள வைச்சு எப்பிடியும் ஒரு பின்னூட்டம் போட வேணுமெல்லோ, நீங்கள் முக்கித்தக்கி நாலு "பே"ச் சொல்லைப் போட்ட மாதிரி)

நிற்க, கடற்புலிச் சூசையார் பற்றின கதையில் ("கேள்விதான் கேக்கச்சொன்னான். பேக்கேள்வியில்லை")விழுந்துவிழுந்து சிரித்தேன். இதில் சிரிப்பென்ன கிடக்கு என்று கேட்டாலும் நான் ரசித்ததை மறைக்கும் எண்ணமில்லை. நல்ல தருணத்தில் நல்லதொரு காட்டு. (அதேபோல் சயந்தனின் "பின்னூட்டம் தான் பேத்தனமான பின்னூட்டமில்லை" எண்டதையும்) அந்தக் கதை உண்மையாக இருக்கவே சந்தர்ப்பமிருக்கு. சூசையார் அப்பிடிக் கதைக்கக்கூடியவர்தான். அதோடு 'அன்பு' மட்டுமன்றி அதற்குப்பின்னும் சம்பவத்தொடர்ச்சி இருப்பதால்.

ஆனா மோட்டச்சைக்கிள் பறிச்ச கதை தெரியாதே.
***************
நான் என்ர பதிவில கடசியாச் சொன்ன வசனத்தை விளங்கினவர் நீங்கள்தான். (நான் ஞாபகப்படுத்தின சொற்களை வைச்சு என்னைத் திட்டச்சொல்லி) ஆனாலும் பாவம், சயந்தன் தான் மாட்டுப்பட்டது.

 

said ... (05 April, 2006 13:49) : 

பெரிய மழையா இருந்தா( ஷ்ரேயாவைச் சொல்லலை) பேய்மழைன்னு சொல்றது உண்டு.

 

said ... (05 April, 2006 13:50) : 

'கடலை போடுவது' :

சுழட்டிக்கொண்டு திரியிறது.
நாசமறுவாங்களே, ரயனி கமல் விசய் அசித் தமிழ்ப்படமும் குமுதம் விகடன் கல்கியும் வாசிச்சு வாசிச்சு அன்ன நடை நடக்கப்போய்த் தன்னடையும் கெட்டுப்போயிருக்கிறியள். திருந்தமாட்டியளடா நீங்கள்

 

said ... (05 April, 2006 13:55) : 

அன்பிற்குரிய வசந்தன்,

பேய் = பெரியது என்ற பொருளில் தமிழ்நாட்டு வழக்குப் பற்றி நிறைய எழுதலாம்; இந்த வார இறுதியில் முயலுவேன்.

சட்டென்று நினைவுக்கு வருவது மேலே ராகவன் சொன்னது போல் பேய்க் காற்று, அப்புறம் பேய் மழை; பேய்க் கரும்பு, பேயன் பழம் (ஒருவகை வாழைப் பழம்); இன்னும் பல இருக்கின்றன.

குறிப்பாக இந்தப் புழக்கம் தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்களில் தான் அதிகம். ஏற்கனவே நான் சொன்னது போல், இப்படி வட்டார வழக்குகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால், தமிழ்ப் புழக்கமும், புரிதலும் நம் எல்லோருக்குள்ளும் கூடும். அது எதிர்காலத்திற்கு நல்லது.

அன்புடன்,
இராம.கி.

 

said ... (05 April, 2006 14:00) : 

மற்றவர்கள் இந்த மொழிபற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைப்போ


உதுக்காண்டியே உமக்குக் கட்டிவைச்சு விளக்குமாத்தாலை ரெண்டு சாத்துச்சாத்தலாம். எவனாச்சும் எவளாச்சும் என்னத்தை நினைச்சாத்தான் உமக்கென்ன கோதாரி. உவையளிலை தாங்கள் எழுதைக்குள்ளை உந்த இழவை யோசிக்கிற ஆக்கள் எத்தினை பேர் இருப்பினம் எண்டு நினைக்கிறீர்? தங்கடைதான் மொழியெண்டு ஒரு குஞ்சும் நிண்டாட ஏலாது கண்டீரோ? வேறை ஆராச்சும் சொல்லியிருந்தினமெண்டால், சரி போடாவெண்டு விட்டிருப்பன். நீர் சொல்லுறீர். உமக்கு உதை மட்டும் போதாது. கன்னத்தைப் பொத்தி ரெண்டு அறையும் தரவேணும் கண்டீரோ? ஏற்கனவே இப்பத்தைய பொடிபெட்டையள் கடலை, பயங்கரமெண்டு சொல்லுகளை நுழைச்சுப்போட்டுது. நீர் வேறை நெற்றிலை இருக்கிறவைக்கு விளங்கோணுமெண்டு அநியாயத்துக்கு உம்மடை மொழியையும் வளைக்கப்போனீரெண்டால் நாளைக்கு மூண்டு சுழி நானாவுக்கும் ரெண்டு சுழி நானாவுக்கும் வித்தியாசம் தெரியாத குஞ்செல்லாம் உமக்குத் தமிழ் சொல்லித்தர வெளிக்கிடும். கவனமா இரும். உப்பிடியான விசர்யோசினையள் யோசிச்சு உம்மடை மொழியை ஊராருக்காண்டி வளைக்காதையும். என்ன விளங்குதோ? இல்லை உதை போட்டுச் சொன்னாத்தான் விளங்குமோ?

 

said ... (05 April, 2006 14:02) : 

இளவஞ்சி,
வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி.
ஏதோ எங்கள் புண்ணியத்தால் நீங்கள் தமிழின் அதிமுக்கியமான சில சொற்களை அறிந்திருக்கிறீர்களென்பது மகிழ்ச்சியே.
பொதுவாக இலக்கியம், ஊடகங்காளால் சொற்கடத்தல் ஒருவழியாக மட்டுமே நடக்கிறது. (தமிழகத்திலிருந்து ஈழம்) எங்கள்பக்கமிருந்து முக்கியமான சில சொற்களாவது நீங்கள் அறிய வேண்டாமா? அதுதான் இப்படியான பதிவு. (ஈழத்தமிழுக்கு "நாம்" செய்யும் இச்சேவையைக் கொச்சைப்படுத்துபவர்கள் "துரோகிகளாக" இனங்காணப்படுவார்கள்.)
*****************
இராகவன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
********************
குமரேஸ்!
வாங்கோ வாங்கோ. கனநாளாக் காணேல.
நீங்கள்சொன்ன பேக்காட்டல் எந்தக் கருத்தில வருது?;-)

அண்ணன்மாரெல்லாம் பதுங்கினதா ஒருத்தி கீழ வந்து சொல்லிப்போயிருக்கிறா. நீங்களாவது நெஞ்சு நிமித்தி வந்ததுக்கு நன்றி.
**********************
யோகன், (நீங்கள் பாரீஸ் யோகனில்லையெண்டு நினைக்கிறன்)
அது கொஞ்சக்காலத்துக்கு முந்தி பொடிச்சியெண்டு ஒருத்தி ஒரு இயக்கம் தொடங்கினவா. அதில நானொரு மூத்த உறுப்பினர். பிறகு மத்தியகுழுவுக்க (எத்தினபேர் இருந்தவையெண்டு இண்டைவரைக்கும் எனக்குத் தெரியாது) சண்டைவந்து, ஒருகட்டத்தில தலைவியே இயக்கத்தைக் கலைக்கிறதா அறிவிச்சிட்டா...உப்பிடியே கதை சொல்லிக்கொண்டு போகலாம்தான். ஆனா நேரமில்லை.
*********************

 

said ... (05 April, 2006 14:13) : 

ஹஹஹஹஹ...
வாங்கோ மதி வாங்கோ. என்னடா இன்னும் காணேல எண்டு பாத்தன்.
எண்டாலும் உங்களையொரு பின்னூட்டம் போடவச்ச 'பெண்டுகள்' வாழ்க.
'பெண்டுகள் சேனை' எண்டதுக்கு அடைப்புக்குறிக்குள்ளயே விளக்கம் குடுத்தாச்சு. அதுக்குப்பிறகு என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு? (இடத்தின்ர அமைவிடத்தை வரைபடத்தோட சொல்ல வேணுமோ?)

கூத்துக்கள் தெரியிறதில நல்ல ஆர்வம் போல.
//அண்ணைமார் எல்லாரும் புத்திசாலிகளாக ஒதுங்கி கொடுப்புக்குள்ள இசிரிப்பை ஒளிச்சு வைச்சுப் பார்த்தண்டிருக்க தம்பிமார் விளையாடுறீங்க எண்டு நினைக்கிறன். எனிவே. நடத்துங்க. நடத்துங்க. //
நீங்கள் சொல்லிற அண்ணைமாரெல்லாம் ஆடியடங்கீட்டினமோ தெரியாது. அல்லது பழத்துக்குப் (கலியாணத்துக்கு முன்பு காய் எண்டா, பிறகு பழம்தானே?) பயந்து தான் பதுங்கினமோ? எண்டாலும் வராமலா போயிடுவினம்? குமரேஸ் வந்து போயிருக்கிறாரே? நீங்கள் குறிவச்சது வேற ஆரையோ எண்டு விளங்குது;-) எண்டாலும் உந்த நக்கலுக்கெண்டாலும் அவையள் வந்து ஏதாவது சொல்ல வேணும். உதில 'எனிவே' எண்டு வந்தது anyway யா?

 

said ... (05 April, 2006 14:29) : 

முத்து, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பே என்ற சொல் சேர்ந்து பெரிய, பெருமை என்ற கருத்தில் வருவது தமிழுக்கே பொதுவானது. நீங்கள் சொல்லும் பேரரசன், பேரூராட்சி என்பவை, மேலும் பேராசிரியர் (பெருமை + ஆசிரியர்) என்ற சொல்லுமுண்டு. இவற்றுக்கும் "பேய்" என்பதற்கும் சம்பந்தமில்லை.
நீங்கள் மற்றும் இராகவன் சொன்ன பேய்மழை, பேய்க்காற்று என்பன ஈழத்திலுமுண்டு. அவைதான் பேய் என்ற சொல்லோடு வருகின்றன.
மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட பேத்தனம், பேப்பயல் என்பன அதே அர்தத்தில் நாங்களும் பாவிப்பதுதான். பேய் நேரடியாகச் சம்பந்தப்படும் சொற்களிவை.
****************************
செந்தில்,
//தமிழகத்தில் (b)பேக்கு என்றால் முட்டாள் என்று பொருள். இது இந்தி பேவகூஹ்ப் இன் திரிபு."உதாரணம் - நீ என்ன பேக்கா?" . உங்களை சொல்லவில்லை :) இதுதான் பேயன் என்று திரிந்ததோ?//

தகவலுக்கு நன்றி. ஆனால் இது சாத்தியமற்றது. எங்களிடம் "(B)பேக்கு" இல்லை. இந்தியின் சொல் வந்திருக்கவும் சாத்தியமில்லை. நேரடியாக 'பேய்' என்பதோடுதான் சம்பந்தப்பட்டுள்ளதென்று நினைக்கிறேன்.
நிற்க, உங்கே சிங்கையில் ஏதோவொரு நாதன் என்பவர் வலைப்பதிந்து வந்தார். அப்படியொருவர் இன்னும் இருக்கிறாரா என்று பார்த்துச்சொல்லுங்கள்.
*********************
சயந்தன்,
கடலைபோடுறதுக்கு இணையான சொல் தெரிஞ்சாச் சொல்லும். இல்லாட்டி விடும். கடசியா 'தாளிக்கிறது' எண்ட சொல்லைத் தந்திருக்கிறீர் பாரும். அது நீர் செய்ததுக்குப் பொருந்தும். உமக்கு கடலைக்குரிய மாற்றுச்சொல் தெரியாமலேயே வழவழாவெண்டு கதைவிடுறீர் பாரும், அதுதான் தாளிக்கிறது.
சும்மா தாளிக்காமல் உருப்படியா யோசிச்சு அந்தச் சொல்லைச் சொல்லும்.

 

said ... (05 April, 2006 14:36) : 

அண்ணை பேப்பயல் எண்டு வந்ததுக்குக் காரணம் வேறை. கடையில ரியூசன் முடிஞ்சோனை எல்லாரும் போய் வடையும் பிளேன்ரீயும் குடிச்சுப்போட்டு ரீவிகொட்டகைக்குப் போக முன்னாலை, ஒருத்தன் தன்ரை காசைவிட்டு எல்லாருக்கும் காசியரிட்டை pay பண்ணுவான் பாருங்கோ அதால அவன்தான் பே பயல்

பேக்கு இல்லை பேக்கை இருக்கெண்டு சொன்னன் கண்டியளோ?
கடலைபோடுறதைத்தான் சுழட்டிக்கொண்டு திரியிறதெண்டும் சொல்லுறவை எண்டும் சொன்னன். இளந்தாரியள் கேக்கமாட்டியள். உங்களுக்கு மணிரத்தினம் சுசாதா வசனத்திலை அப்துல் கமீட் பிரகாச் ராசுவுக்கு உதை உச்சரிக்கச் சொல்லிக்குடுத்து ஒரு படம் விட்டாத்தான் நம்புவியள். உங்களுக்கெல்லாம் சொல்ல வந்தன் பாருங்கோ. உன்னாணை இனிச் சொல்லமாட்டன்.

 

said ... (05 April, 2006 14:42) : 

சுழட்டுறது எண்டது கடலை போடுதல் எண்டு வராது.. சுழட்டுறது எண்டுறது பின்னாலை சுத்தறது. ஒருத்திக்கு பின்னாலை சுத்தறதைதான் சுழ்ட்டுறது எண்டுறது.. (நல்லா சுழட்டுறாய்..)

கடலை போடுறது யாழ்ப்பாண பாடசாலை மட்டத்தில கிடையாது.. ஒரு கதை கேட்டால் ஆயிரத்தெட்டு தரம் வளைஞ்சு நெளிஞ்சு வெட்கப்படவே அவங்களுக்கு..நேரம் காணாது.. இதில எங்கை கடலை..

கம்பஸ் பெடியளிட்டை கேட்டுப் பாத்தால் சிலநேரம் தெரியும்.. இப்ப என்ன முறையையை அவையள் பாவிக்கினம் எண்டு.. சில நேரம் கடலை போடுதல் எண்டது அங்கையும் பாவனையில் இருக்கலாம்.. (பல்கலைக்கழக மட்டத்தில)

நான் அறிய கடலை போடுவது என்பது.. கடலையை எடுத்து வாயில போடுறது தான்..

 

said ... (05 April, 2006 14:44) : 

"சுழட்டல்"
அண்ணே, காலக்காட்டுங்கோண்ண. இந்த ஒரு பதில் போதுமண்ணை வசந்தனுக்கு, (அப்பிடியே "இந்த பேய்ப்பதிவொண்டே போதும் வசந்தனின்ர இலக்கியப் பங்களிப்புக்கு, வசந்தன்பக்கமெண்ட இந்த வலைப்பதிவே போதும் தமிழ் இலக்கியத்துக்கு ...." எண்டு நீண்டு கொண்டு வரும்.)
உந்தச் "சுழட்டலை" எப்பிடி மறந்துபோனன்?
ஆனாலும் சுழட்டல் எண்டது, காயோட கதைக்கவே தொடங்காமல், பின்னால முன்னால சுத்தித் திரியிறதில தொடங்கி விரிஞ்ச பொருளெல்லாம் தருமெல்லோ?)
//நாசமறுவாங்களே, ரயனி கமல் விசய் அசித் தமிழ்ப்படமும் குமுதம் விகடன் கல்கியும் வாசிச்சு வாசிச்சு அன்ன நடை நடக்கப்போய்த் தன்னடையும் கெட்டுப்போயிருக்கிறியள். திருந்தமாட்டியளடா நீங்கள்//
அதெண்டா சரிதானண்ணை.
ஒரு சந்தேகம். அனாமதேயமா வந்து அறிவுரை சொல்லிறதில காரணமேதுமுண்டோ?
கனடாக்காரி வேற சீண்டிவிட்டிட்டுப் போயிட்டா.
நான் அவவுக்குக்கான மறுமொழியில சொன்னமாதிரிப் "பழ"த்துக்குப் பயந்தோ?
இல்லாவிட்டால் நான் "பேய்"ப் பின்னூட்டமிடாததுக்குச் சொன்ன காரணமான "மற்றவர்கள் இந்த மொழிபற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு"த் தான் காரணமோ?

 

said ... (05 April, 2006 15:06) : 

அனாமதேயச் "சுழட்டல்" அண்ண,
(அந்தக் காலத்தில சுழட்டல் மன்னான இருந்திருப்பியோ?)
உங்கட விளக்குமாத்துச் சாத்துக்களையும் கன்னத்தைப்பொத்தின அறைகளையும் வாங்கிறதில பிரச்சினையில்லை.
ஆனா
//வேறை ஆராச்சும் சொல்லியிருந்தினமெண்டால், சரி போடாவெண்டு விட்டிருப்பன். நீர் சொல்லுறீர். உமக்கு உதை மட்டும் போதாது. கன்னத்தைப் பொத்தி ரெண்டு அறையும் தரவேணும் கண்டீரோ? //
உது என்ன/எதுக்கு எண்டு விளங்கேல.
உண்மையில நான் வலைப்பதிவுத் தொடக்கத்தில என்ர நடையிலயே எழுதி, பிறகு இடையில கொஞ்சம் விலத்தியிருக்கிறன். இப்ப ஓரளவுக்கு என்ர சுயத்திலயே நிக்க வேணுமெண்டு விளங்கீட்டுது. (நகைப்புக்குரியதெண்டு தெரிஞ்சும் 'கெரி' பற்றிப் பதிவு போட்டதும் அப்பிடித்தான். கொஞ்சக்காலம் முந்தியெண்டா உது சாத்தியமேயில்ல)
//உப்பிடியான விசர்யோசினையள் யோசிச்சு உம்மடை மொழியை ஊராருக்காண்டி வளைக்காதையும். என்ன விளங்குதோ? இல்லை உதை போட்டுச் சொன்னாத்தான் விளங்குமோ? //
விளங்கீட்டுது. உதை விளங்க/விளக்க 'உதை' எதுக்கு?

 

said ... (05 April, 2006 15:09) : 

>>அனாமதேயச் "சுழட்டல்" அண்ண,
(அந்தக் காலத்தில சுழட்டல் மன்னான இருந்திருப்பியோ?)>>

ஐயையோ!
பிசகிப்போட்டுது.
'இருந்திருப்பியோ' எண்டது "இருந்திருப்பியளோ?" எண்டு வந்திருக்க வேணும்.
(இல்லாட்டி நானும் அண்ணன்மார் பட்டியலுக்குள்ள வந்திடுவன் எண்டதுதான் உந்த விழுந்தடிப்புக்காரணம்.)

 

said ... (05 April, 2006 15:17) : 

முத்தின்ர பதிவு பார்த்தேன்.
கச்சான் (கடலை) வறுக்கிறது பற்றிச் சொல்லியிருக்கிறார்.
நாங்களும் அதைப் பெயர்த்து "கச்சான் வறுக்கிறது" எண்டே சொல்லலாமா? எண்டு யோசிச்சன்.
அனா பாருங்கோ அது கொஞ்சம் சிக்கலான விளக்கத்தில ஏற்கனவே எங்களிட்ட பாவனையில இருக்கு.
கச்சான் வறுக்கிறதெண்டா, ஒருத்தர் அரையில கடிவந்து சொறியிறதைக் (கொஞ்சம் 'நாகரீகமாக'ச் சொன்னால், 'கவட்டுக்க சொறி'யிறத) குறிக்கச் சொல்வதுண்டு. அதைக் காதலர்களின் 'கடலை போடலோடு' எப்படிப் பொருத்த முடியும்?

 

said ... (05 April, 2006 15:30) : 

சயந்தன்,
//எனக்காகவும் என்ர சரக்கிற்காகவும் எண்டார்..//

ஆஹா! படிக்கும்போதே ஒரு கிளுகிளுப்பை உணரமுடிகிறது! :)

ஆனால் எங்க பக்கம் சரக்கு என்றால் அது பெண்ணல்ல என்று நினைக்கிறேன்!

"சரக்கு வச்சிருக்கேன் - சாராயம் வைச்சிருக்கேன்!
சரக்கு படம் - அடல்ட்ஸ் ஒன்லி படம்"

இப்படித்தான் உபயோகப்படுகிறது! ஆனா நீங்க சொன்னது டாப்!

இந்த விளக்கம் வசந்தன் சொன்னதுபோல தமிழ் வார்த்தைகளை ஒரிவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு தமிழை வளர்த்தவே! குறை கண்டு துரோகி ஆகிவிடாதீர்!!! :)

ok..கொஞ்சம் சீரியசாய்...

இராம.கி ன் பதிவினை எதிர்பார்க்கிறேன்!!

 

said ... (05 April, 2006 15:39) : 

வசந்தன்
நல்ல பதிவு.
சமீபத்தில் South Indian Rebellion எனும் ஆங்கில நூலைப் படித்தேன். தமிழகம் ஆங்கிலேயரால் ஆட்சி செய்யப்பட்ட காலத்தில் ஆங்கிலேயப் படையில் தளபதியாக இருந்த ஒர் ஆங்கிலேயரால் பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல். வீர பாண்டிய கட்டப்பொம்மனையும், அவரது முக்கிய தளபதியான வெள்ளையத்தேவனையும் கொலை செய்து வீரபாண்டியகட்டப்பொம்மனின் ஆட்சியை கைப்பற்றிய பின், ஆங்கிலேயர் செய்த முதல் வேலை, வெள்ளையத்தேவனின் உறவு முறையான பல வாட்ட சாட்டமான 150 க்கு மேற்பட்ட இளைஞர்களை இரவோடு இரவாக கை கால்களில் விலங்குகள் இட்ட படி 70 நாட்கள் கப்பலில் பயணிக்க வைத்து மலேசியாவில் கொண்டு போய் விட்டது தான். அப்படி கொண்டு செல்லப்பட்டு மலேசியாவில் அநாதரவாகக் கை விடப்பட்டவர்களின் பெயர்களை அந்த ஆங்கிலேயத் தளபதி குறிப்பிட்டிருந்தான். அவர்களில் மூவரின் பெயர்கள் பேயன் என்பதாகும். ஆகவே இந்த பேயன் என்பதற்கு என்ன அர்த்தம் என எனக்கு தெரியாது. ஆனால், இச் சொல் கட்டப்பொம்மன் காலத்தில் பெயராகவும் பாவிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

 

said ... (05 April, 2006 16:31) : 

///வெள்ளையத்தேவனின் உறவு முறையான பல வாட்ட சாட்டமான 150 க்கு மேற்பட்ட இளைஞர்களை இரவோடு இரவாக கை கால்களில் விலங்குகள் இட்ட படி 70 நாட்கள் கப்பலில் பயணிக்க வைத்து மலேசியாவில் கொண்டு போய் விட்டது தான். அப்படி கொண்டு செல்லப்பட்டு மலேசியாவில் அநாதரவாகக் கை விடப்பட்டவர்களின் பெயர்களை அந்த ஆங்கிலேயத் தளபதி குறிப்பிட்டிருந்தான். அவர்களில் மூவரின் பெயர்கள் பேயன் என்பதாகும். ஆகவே இந்த பேயன் என்பதற்கு என்ன அர்த்தம் என எனக்கு தெரியாது. ஆனால், இச் சொல் கட்டப்பொம்மன் காலத்தில் பெயராகவும் பாவிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.///

யாழ்ப்பாணம்,
நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டியதுதான். வெள்ளையத்தேவனின் உறவு முறையினருக்கு அப்பெயர் இருந்திருக்கிறது. அன்று மட்டுமல்ல், இன்றும் தென்மாவட்டங்களில் இப்பெயர் உண்டு. அடிக்கடி கேள்விப்பட்ட பெயர், பேயத்தேவர்.

 

said ... (05 April, 2006 16:56) : 

பே யை வச்சு இவ்வளவு பேர் எவ்வளவோ கதைச்சு போட்டியள். (வசந்தன் உங்கட பதிவை படிச்சா அதே நடை சற்று தொத்தி கொள்ளும்.) இந்க வட்டார மொழி பிரச்சினை தமிழுக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு பிரச்சினையே. இலங்கை தமிழர்கள் அதிக சமஸ்கிரத சொற்களை பயன்படுத்துவாதகவும் தெரிகின்றது. உதாரணம்: உதாரணம், விஞ்ஞானம் போன்றவை. அதைப்பற்றியும் ஒரு பதிவு இட்டால் நன்றாக இருக்கும். நல்ல பதிவு/இடுக்கை.

 

said ... (05 April, 2006 19:11) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (05 April, 2006 20:58) : 

//கேந்திக்கதை என்றும் ஏதாவது இருக்குமோ?;-)//
'கெரி' மாதிரி இது என்ன புதுக்கதை?

நாய்ப்பேச்சு, நாய்க்கதை, விழல்கதை, இவையெல்லாம் எமது வட்டாரப் பேச்சுக்கள் தாம்.

//தமிழ் அழகான எத்தனையோ வார்த்தைகள் இருக்கு. அத விட்டுட்டு, சும்மா பேவேலை செஞ்சு கொண்டு இருக்கிறியள்?..//
செந்தூரன், மழலைகளோடை இந்தப் பேய்க்கதைகளைக் கதைச்சுப்போட வேண்டாம்...(ரேடியோவிலை):)

 

said ... (05 April, 2006 22:32) : 

ramachandranusha ,
துளசி,
வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி.
****************
இராம.கி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
"பேய்" என்பது பெரிய, சிறப்பான என்ற கருத்தில் இருதரப்பிலும் பாவிக்கப்படுவதை அறிந்துகொண்டேன்.
அதையும் தாண்டி சில "பேய்"ப் பயன்பாடுகள் எம்மிடமுள்ளதை என்பதிவிலிருந்த தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இம்மாதிரிப் பதிவுகள், திடீரென்று ஏற்படுபவைதாம். இதுகூட ஒருவரோடு கதைத்ததில் ஏற்பட்ட பதிவுதான்.
******************
மீண்டும், சுழட்டலண்ணை,
பேப்பயல் விளக்கத்துக்கு நன்றி.
உப்பிடியெல்லாம் விளக்கம் குடுக்கிறதுக்கு நிறையத்தரம் பேப்பயலா இருந்திருக்க வேணும். மனுசிமாரை சீலைக்கடைக்கும் நகைக்கடைக்கும் கூட்டிக்கொண்டு போட்டு பேந்தப்பேந்த முழுசிக்கொண்டு வாற pay பயல்களை நினைக்கச் சிரிப்பாக்கிடக்கு.
அண்ணை, 'பேக்கை' எண்டது எனக்குப் புதுசாக்கிடக்கு அல்லது மறந்துபோச்சு.
நீங்கள் சொன்னதைக் கண்டுகொண்டேன். ஆனா கண்டுகொள்ளவில்லையெண்டு புலம்பின பின்னூட்டத்தை இப்பதான் கண்டன். "உன்னாணை இனிச் சொல்லமாட்டன்" எண்டு ஓடினா என்னமாதிரி? (ஒரு பதில்காணும், ஒரு பின்னூட்டம் காணும் எண்டு நான் சொன்னது சும்மா பம்பலுக்குத்தான்)
******************

 

said ... (05 April, 2006 22:46) : 

எனக்கு தெரிந்தவரை அப்படி யாரும் வலை பதியவில்லை.பழைய சுட்டி ஏதும் உண்டா? எனது இந்த கமெண்ட் 50 ஆவதா?

அன்புடன்
சிங்கை நாதன்.

 

said ... (05 April, 2006 23:01) : 

சிங்கைநாதன், நான் சும்மா பகிடிக்கு.
நான் இவரைத்தான் சொன்னன்.
உங்கட 48 ஆவது. என்ர இந்தப் பின்னூட்டம் 49 ஆவது.

 

said ... (06 April, 2006 00:29) : 

முத்து,
தங்களின் தகவலுக்கு நன்றி. இன்றும் அப்படியான பெயர்கள் புழக்கத்தில் இருப்பது என்பதை உங்கள் மூலம் தான் அறிந்தேன். மிக்க நன்றி.
பேயன் என்பதன் அர்த்தம் இப்படி இருக்குமோ என நான்[Guess] ஊகிக்கிறேன்:
பே = பிரமாண்டம்,பெரிய, மிகையான
எடுத்துக் காட்டுகள்:
பேரின்பம்,பேரரசு, பேருந்து.
மேற்குறிப்பிட்ட சொற்களில் 'பே' என்பது பெரிய அல்லது மிகையான எனும் பொருள் பொதிந்திருக்கிறது.
எனவே:
பேயன் = பே + அன்
பெரியவன் எனும் சொல்லே நாளடைவில் பேயன் என திரிபடைந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. முத்து ,நீங்கள் குறிப்பிட்டது போல் பேயத்தேவர் என்பது கூட பெரியதேவர் என்பது நாளடைவில் மருவி பேயத்தேவர் ஆகியிருக்கலாம்.

 

said ... (06 April, 2006 01:11) : 

எழுதிக்கொள்வது: தர்சன்

வசந்தன்,
வட்டார வழக்கை வைத்து 'பேய்ப்'பதிவொன்றை வழங்கியிருக்கிறீர்கள்.

எனக்கு தெரிந்தவரை, 'சரியான' என்ற பெயரெச்சத்தை வைத்தும் இப்படியான பதிவொன்றை வழங்கலாம். உதரணத்துக்கு: சரியான மழை, சரியான வெய்யில்.

மேலும், புதிய நாட்டில் தோன்றும் வட்டார வழக்குகளும் சிலரை பயப்பிடவும் சிரிப்பூட்டவும் வைக்கும்.
"நான் உனக்கு அடிச்சிட்டு இறங்கிறன்" இது கனடாவில் ஈழத்தமிழர்கள் பலராலும் அடிக்கடி பாவிக்கப்படும் வார்த்தைகள். தெருந்தவர் அமைதியாக இருங்கள். தெரியாதவர் இதன் அர்ததை ஊகியிங்கள் பார்க்கலாம்.11.3 5.4.2006

 

said ... (06 April, 2006 01:15) : 

அப்ப நான் 50 வதாக வந்திருக்கிறன் போல . வசந்தன் இந்த பேய்க்கதை
போலத்தான் எங்கடை ஊரில் பாவிப்பார்கள் "கூழ்" கதை கதைக்காதீர்கள் எண்டு இதுக்கு என்ன
காரணம் எண்டு பார்த்தால் அந்த
காலத்தில் வாழ்ந்த ஒரு வழக்கறிஞரின்
பெயர் cool அதுவே பேச்சு வழக்கில்
கூழ் ஆகிவிட்டது.

 

said ... (06 April, 2006 03:09) : 

/"நான் உனக்கு அடிச்சிட்டு இறங்கிறன்"/
தர்சன், நான் உனக்கும் சேர்த்து 'தண்ணி' அடிச்சிட்டு இறங்கிறன் என்பதாய் அர்த்தம் வருமா :-)?

 

said ... (06 April, 2006 04:56) : 

//நான் உனக்கு அடிச்சிட்டு இறங்கிறன்//

என்ன வேலைக்கு இல்ல வீட்ட இருந்து வெளிக்கிடேக்க "போன்" பண்ணுறன் எண்டத சொல்லிறதாக்கும்.....

வசந்தன்.....இந்த பேக்கதையுக்க என்னோட சிறு பங்களிப்பு

கடலை போடுறதுக்கு பதிலா வாளி வைக்கிறது , எண்டொருரு சொல்லு புழக்கத்திலை இருக்கு,
பே வாளி காய் மச்சான்
வழிசல்.....


ஆக்கள பேக்கிணந்தி எண்டும் பேசிறது....

 

said ... (06 April, 2006 05:00) : 

மேல வாளி கதை சொல்லி பின்னூட்டம் போட்டது நான்

குழைக்காட்டான்

 

said ... (06 April, 2006 06:00) : 

வசந்தன்!
பே வேலை என்பதை இருவகையில் அர்த்தப்படுத்துவார்கள்.
1. முட்டாள்த்தனமான வேலை.
2. கடினமான வேலை அல்லது அதிகவேலை. இச்சொற் பிரயோகம் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பியத் தமிழரிடையே தற்போதும் பேச்சு வழக்கில் உண்டு.
மேலும், தர்சன் குறிப்பிட்ட விடயமும் சுவையானதே.
' எதுக்கும், எனக்கு அடிச்சுப்போட்டு இறங்கு...'
'பச்சையில காட்டுவான், ஆனா நீ நீலத்தில எடுத்து வா..'

 

said ... (06 April, 2006 14:42) : 

///பேயன் = பே + அன்
பெரியவன் எனும் சொல்லே நாளடைவில் பேயன் என திரிபடைந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. முத்து ,நீங்கள் குறிப்பிட்டது போல் பேயத்தேவர் என்பது கூட பெரியதேவர் என்பது நாளடைவில் மருவி பேயத்தேவர் ஆகியிருக்கலாம்.///

யாழ்ப்பாணம்,
உங்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. பெரியசாமி, பெரியதேவர், பெரியண்ணன் போன்ற பெயர்கள் மிகவும் வழக்கமான பெயர்கள்தான். இதுபோல் திரிபு மிகச்சாத்தியமான ஒன்றுதான். தென்மாவட்டாங்களில் சில இடங்களில் "பேசாமப் போ" என்பதைக்கூட "பேயாமப் போ" என்று கூறுவதுண்டு :-).

 

said ... (06 April, 2006 15:09) : 

வசந்தன்,
இப்போது மீண்டும் நினைவுக்கு வருகிறது. நான்கூட பேயுடனான எனது அனுபவம் பத்தி முன்பு எழுதியிருக்கிறேன்.

 

said ... (06 April, 2006 23:17) : 

எழுதிக்கொள்வது: சின்னாச்சியின்ரமோன்

வசந்தன்..
இண்டைக்குத்தான் புதுசா இந்தப் பக்கம் வாறன்.

நீங்களெல்லாம் கதைக்கிறதைச் சும்மா கேட்டிட்டுப் போவமெண்டுதான் முதல்ல நினைச்சன்.

ஆனால் பேய்க்கதை சுவாரசியமாப் போகேக்குள்ளை ஓரிரண்டு வார்த்தையள் சொல்லிப்போட்டுப் போவமெண்டு பட்டுது.

பேயும் நானும் எண்ட தலைப்பைப் பார்த்த உடனை சின்னவயசிலை நான் படிச்ச பேய்க்கதைமன்னன் பி.டி.சாமியின்ரை
கதையள்மாதிரி ஆரோ கதை எழுதுகினமாக்கும் எண்டு நினைச்சுக்கொண்டு பார்த்தால் இது எங்கடை பேய்க்கதை.

பேய்க்கதை கதைக்கிறதிலை எங்களவிட்டா ஆக்கள் கிடையாது எண்டதுமாதிரி எத்தினைபேர்..
இதுக்குள்ளை இப்ப நானும்.

தொடக்கத்திலையே எனக்குத் தெரிஞ்சதுகளையும் ஏதாவது சொல்லுவமெண்டு வாயைத்திறந்தா, கடலை போடுறது.. சுழட்டுறது எண்டு
பேய்க்கதை கதைச்சுக்கொண்டு இளந்தாரிப்பொடியங்கள்..
உதுக்குள்ளைபோய் நான் என்னத்துக்கு பேத்தனமா வாயைக்குடுப்பான் எண்டு ஒதுங்கிநிப்பமெண்டு பார்த்தால், கிழடுகளெல்லாம் எங்கை போய்த் துலைஞ்சிற்றுதுகள்? மனிசிமாருக்குப் பயந்துகொண்டு வாயை மூடிக்கொண்டிருக்குதுகளோ எண்டு வசந்தன் கத்திறார்.
(அண்ணைமாரைச் சொன்னாலும் அது அப்புமாருக்கும் கொஞ்சம் பொருந்தும்தானை?)

வசந்தன்ரை தமிழார்வத்துக்கு சும்மா ஒரு தட்டுத்தட்டிக்குடுக்கவேணும் எண்டுதான் வந்தன்.

பேயன் எண்ட சொல் பெரும்பாலும் ஏமாந்தவன், இளிச்சவாயன், விசரன் எண்டதுமாதிரியான அர்த்தத்திலைதான் வழக்கத்திலை இருக்குது.
"எடி பேச்சி! உனக்கு இது விளங்குதில்லை!" எண்டு பொம்பிளைப் புள்ளையளிட்டைச் சொல்லுறபோதும் அவளின்ரை அறியாத் தனத்தைத் தான் அதுகுறிக்குது.
(கோயிலுகளிலை இருக்கிற பேச்சி ஆச்சி, பெரியவள் எண்ட அர்த்தத்திலை வந்திருக்கலாம். (பெரிய +ஆச்சி= பெரியாச்சி= பேச்சியாச்சி)

பேயை நம்பிறவையும் நம்பாதவையும் எண்டு ரெண்டுபகுதி சனம் எந்தக்காலத்திலையும் இருக்குது.
பேயை நம்பாத வசந்தனுக்கு நான் பேய் இருக்கிறதாச் சொன்னா, நான் பேய்க்காட்டிறன் எண்டு வசந்தன் நினைப்பார் இல்லையா?
ஒண்டை இருக்கெண்டு ஒருத்தன் சொல்லப்போக அது இல்லை எண்டு மற்றவன் தீர்மானிச்சால் அது பேக்காட்டிறவேலை.

ஆக பேய் எண்டதிலையிருந்தே இந்த மற்றப் பேய்கள் - பேவேலை பேக்காட்டுறான் பேய்க்கதை எல்லாம் வந்திருக்குமெண்டு நான் நினைக்கிறன்.
எதுக்கும் பொழுதுபட்டாப் பிறகு மற்றப் பேய்களைப் பற்றி ஆராஞ்சு சொல்லுறன்.

மற்றது-
இந்தக் "கேந்தி".
வசந்தன்ர உதுமாதிரிப் பேய்க்கதையளிலை சிலபேருக்குக் "கேந்தி"வரும்தான்.
ஆனா அவையளின்ர கேந்திக்குப் பயந்தா நல்ல தமிழ்ச் சொல்லுகளெல்லாம் மறைஞ்சுபோற ஆபத்தும் இருக்குது.
நான் சின்னப் பெடியனா இருக்கேக்கை கனபேர் இந்தக் கேந்தியைப் பாவிச்சதைக் கேட்டிருக்கிறன்.

கேந்தி எண்டது கோபத்தை அல்லது எரிச்சலைக் குறிக்கிறசொல்.
கனகாலத்துக்கு முந்தி நான் இளந்தாரியா இருக்கேக்கை (1971ல்)ஒருக்கால் இரசிகமணி கனசெந்திநாதன் அவர்களை ஒரு பேட்டிக்காகச்
சந்திக்கப் போயிருந்தன்.
அப்ப அவரிட்டையிருந்த புத்தகங்கள் சிலதை அவர் எனக்குக் காட்டினார்.
அதிலை ஒரு புத்தகம் கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் எழுதின " காந்தி கேந்திக்குச் சாந்தி!"
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தனது மகன்மீது கோபம் கொண்டு கல்லடி வேலுப்பிள்ளை எழுதிய பாடல்கள் அடங்கிய நூல் அது என்று இரசிகமணி சொன்னார்.
ஆனால் வாசிக்கத் தர மறுத்திட்டார்.
இதை ஏன் எழுதிறன் எண்டால் "கேந்தி" ஒரு பழைய தமிழ்ச் சொல் எண்டதை நிரூபிக்கத்தான்.

வேறை கதையள் என்னட்டை இப்போதைக்கு இல்லை.

உங்கடை வயசுக்கு ஏற்றமாதிரி சுழட்டல்பற்றி ஒருவிசயம் சொல்லி முடிக்கிறன்.
கன தமிழ்ச் சொல்லுகளுக்கு ரெட்டை அர்த்தம் குடுத்துக் குடுத்து எல்லாத் தமிழ்ச் சொல்லுகளையும்
புளக்கத்திலை இல்லாமல் செய்யிறதுக்கு ஆரோ வெளிநாட்டான்கள் சதி செய்யுறாங்கள்.
அதுக்குள்ளை இந்தச் சுழட்டலும் சிக்கிப்போட்டுது போலக் கிடக்குது.

ஒருத்திக்கு முன்னாலும் பின்னாலும் ஒருத்தன் சுற்றிச்சுற்றி வாறானெண்டால்
எல்லாத் திசையளிலையும் அவன் அவளைத்தான் காண்கிறான் எண்டதுதான் அர்த்தம்.
இவன் சுழல்வதால் அவளும் சுழலவேண்டியிருக்குது.
சுத்திச்சத்தி வந்தீங்க.. சுட்டும்விழியால் சுட்டீங்க.. எண்டு பாட்டுக்கூட இருக்குதெல்லே.
அதுதானப்பு சுழட்டல்.
அதைக் கொச்சைப்படுத்தாதீங்கோ!

கனக்க மினக்கெட்டிட்டன்போலை.
ஏதோ எங்கடை வழக்கச்சொல்லுகளை மறுபடித் தேடிப் பார்க்க முயற்சிபண்ணுற வசந்தனுக்கு
வாழ்த்துக்கள் ராசா!
வரட்டே!15.41 6.4.2006

 

said ... (07 April, 2006 18:33) : 

வருகை தந்த எல்லோருக்கும் நன்றி.
யாழ்ப்பாணம்,
நல்ல தகவல். விருமாண்டி பேய்க் காமனையும் சேத்துக் கொள்ளுங்கோ.

நக்கீரன்,
வடசொற்களைக் கதைக்கிறோம்தான். ஆனால் யாரோடு ஒப்பிட்டு, அதிகமாகக் கதைக்கிறோமென்று தெரிய ஆவல். பெயரிலியும் இதைப் பலமுறை சொல்லியுள்ளார். (உதாரணம், விஞ்ஞானம் எல்லோரும் பாவிக்கும் சொற்கள்தானே? நன்றிக்குப் பதில் 'மெத்தப் பெரிய உபகாரம்' என்று சொல்வது மட்டில் பெயரிலியின் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இன்றும் அச்சொல் பாவிக்கப்படுகிறதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. Thanks வந்து சேர்ந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இவற்றைவிட்டு 'நன்றி' சொல்லும் ஒரு கும்பலுண்டு. இயல்பாகவே 'காலை வணக்கம் முதல் இரவுவணக்கம்' வரை (என் தெரிவு தனியே வணக்கம் மட்டுமே) சொல்லும் அதேகும்பல் இன்றும் இருக்கிறது. மாறாக இன்று யாழ்ப்பாண நகர்ப்புறத்தில் போய் 'தம்பி என்ன நேரம்?' என்றோ 'தங்கச்சி இண்டைக்கு என்ன கிழமை?' என்றோ கேட்டுப்பாருங்கள். முக்கால்வாசிப் பேர் ஆங்கிலத்தில்தான் பதில் சொல்லுவார்கள்.

உங்களைப் போலவே நானும் "நாங்கள் மற்றவர்களைவிட எந்தவிதத்தில் அதிக வடசொற்களைப் பாவிக்கிறோமென்பதை" அறிய ஆவலாயிருக்கிறேன். வேறு யாராவது தான் அதைப் பற்றி எழுத வேண்டும். கூடவே அப்படி வந்ததற்கான ஏதுநிலைகளையுமறிய ஆவலாயிருக்கிறேன்.
***************************

சிறிதரன், கேந்திக்கதை சும்மா சொன்னது.
(இதுக்கு உது சமன், உதுக்கு அது சமன். ஆகவே இதுக்கு அது சமன் எண்டு போட்டுப் பாத்தன்.)
****************************
யாழ்ப்பாணம், ஏற்கனவே பேருந்து, பேரரசன், பேரீச்சை என்பவற்றில் வரும் 'பே'க்கும் நாங்கள் கதைக்கும் பேய்க்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையெண்டதைச் சொல்லிப்போட்டன். அதுவேற இதுவேற.
****************************
தர்சன்,
"சரியான" எண்ட சொற்பாவனை மிகவும் சுவாரசியமானது.
கடுமையான, மிகையான என்ற பொருளில் அதைச் சொல்லும்போது,
சரியான மழை, சரியான வெயில், சரியான காய்ச்சல் என்று சொல்லிக்கொண்டு வந்து,
'சரியான பிழை' எண்டும் சொல்லுவம்.

அதென்ன 'சரியான பிழை?' எண்டு கேட்டா மண்டை காயும்.
ஆனா அதுக்காக ஒருத்தரும் உதை விடுறேல. "உது சரியான பிழை கண்டியோ?"
நான் உனக்கு அடிச்சிட்டு இறங்கிறன் எண்டது போரின்ர தாக்கமெண்டு நினைக்கிறன். உது போர்க்களத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட சொல்.
*********************
அதுசரி, புலம்பெயர்ந்த எங்கட சனங்களிட்ட இருக்கிற இப்பிடியான சுவாரசியமான சொற்களைப் பட்டியலிட்டு நீங்கள் யாராவது பதிவொண்டு போட்டா என்ன? அதுகூட அவசியமான பதிவுதான்.
********************
கரிகாலன்,
கூழ்க்கதை நன்று.
*******************
குழைக்காட்டான்,
"வாளி" வைக்கிறது நல்லாயிருக்கே.
நான் "பேக்கிணாந்தி" எண்டு சொல்லித்தான் பழக்கம். வன்னிக்கு வந்தபிறகு அங்கயிருக்கிற 'வெங்கணாந்தி"ப் பாம்போட அந்தச் சொல்லை ஒப்பிட்டு யோசிச்சிருக்கிறன்.
*******************
மலைநாடான்,
'பச்சையில காட்டுவான், ஆனா நீ நீலத்தில எடுத்து வா
எண்டது விளங்கேல. ஏற்கெனவே சொன்மாதிரி உங்களில ஆராவது உதுகளைத் தொகுத்தா நல்லது.
"வெளிநாட்டில இருந்தனீ. உனக்கு உதுகள் தெரியாதோ?" எண்டு என்னை நாளைக்கு ஆரும் கேட்கக்கூடாது பாருங்கோ.

 

said ... (07 April, 2006 18:44) : 

முத்து,' பேசாமல் போ' என்பது "பேயாமல் போ" என்று திரிபது இயற்கையே, யகர - சகர திரிபு இருவழியும் நடக்கும். (மயிர் - மசிர், உயிர் - உசிர், உயரம் - உசரம், தேயம் -தேசம்)
உங்கள் பேய்ப் பதிவு நான் ஏற்கனவே படித்தது தான்.
****************************
வாங்கோ சின்னாச்சியின்ர மோன்.
ஏதோ உங்களுக்கெண்டாலும் ரோசம் பொத்துக்கொண்டு வந்ததே!
அப்பு, "கேந்தி" பற்றி நீங்கள் சொல்லிறது வித்தியாசமாக்கிடக்கு. அந்தச் சொல்பற்றி ஏற்கனவே என்ர பதிவொண்டிண்ட பின்னூட்டத்தில கதைக்கப்பட்டது. அப்ப உது சிங்களத்திலயிருந்து வந்த சொல் எண்டு "மூத்தோர்கள்" (உங்கள விட குறைவுதான்) சொல்லியிருக்கினம். இப்ப நீங்கள் இப்பிடிச் சொல்லிறியள். கல்லடி வேலுப்பிள்ளை கிழக்கில எண்டபடியா இலகுவில மூவின மக்களின்ர வட்டாரச் சொற்களும் கலக்க வாய்ப்பிருக்கெல்லோ?
சுழட்டல் பற்றின விளக்கத்துக்கு நன்றி.
(உங்கர வலைப்பதிவு தமிழ்மணத்தில இணைச்ச உடனயே பாத்தன். பின்னூட்டம் போடப்போனா அது விடேல. இன்னும் பெரிசா ஒண்டும் எழுதக்காணோமே?)

 

said ... (07 April, 2006 20:19) : 

// கல்லடி வேலுப்பிள்ளை கிழக்கில எண்டபடியா இலகுவில மூவின மக்களின்ர வட்டாரச் சொற்களும் கலக்க வாய்ப்பிருக்கெல்லோ?//
வசந்தன், உங்களை மாதிரிக் மழலைகளுக்காகத்தான் என்ட இந்த வலைப்பக்கம் வைச்சிருக்கிறன்:):). அங்கை போனீங்களெண்டால் கல்லடி வேலுப்பிள்ளை எந்த ஊர்க்காரர் எண்டு தெரியும். வயாவிளானிலை பிறந்தவர். அங்கை வேலுப்பிள்ளை பிறந்த வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெரிய கல் மலை இருந்ததாம். அதாலை கல்லடி வேலுப்பிள்ளை எண்டு அழைப்பினமாம்.

சின்னாச்சியின்ரமோன் சொல்றத்திலை அர்த்தம் இருக்கும். ஆனால், //காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தனது மகன்மீது கோபம் கொண்டு கல்லடி வேலுப்பிள்ளை எழுதிய பாடல்கள்// எண்டு சொன்னதை நம்பேலாமல் இருக்கு.

இதே கல்லடி வேலுப்பிள்ளை இப்படியும் எழுதியிருக்கிறார்:
"மகாத்மாவின் யாழ்ப்பாண தரிசனம், யாழ்ப்பாணச் சரித்திரத்தில் ஒரு விசேட ஸ்தானத்தைப் பெற்று விட்டது. யாழ்ப்பாண வாசிகளுக்குப் புத்துயிரளித்துவிட்டது. கதர் மீது ஆர்வத்தையும், அபிமானத்தையும் மூட்டிவிட்டது. போனது போக, இனியாவது மகாத்மா கேட்டுக் கொண்டபடி கதராடையையே நம்மவர்கள் அணிவார்களாக!"

 

said ... (07 April, 2006 20:34) : 

சிறிதரன்,
தவறுக்கு மன்னிக்கோணும்.
இப்ப விளங்கீட்டது.
உவர் கொண்டாடினான் ஒடியற்கூழ் வேலுப்பிள்ளைதானே. இந்த முறை பிசகிப்போச்சு.
நான் மழலை எண்டதை ஏற்றுக்கொள்ளிறன்.

 

said ... (07 April, 2006 21:41) : 

உதவ முடியுமா?

 

said ... (07 April, 2006 21:45) : 

சந்திரவதனா,
என்ன சுட்டி தந்தனியள். தவறான சுட்டியல்லோ?

 

said ... (08 April, 2006 01:14) : 

-சின்னாச்சியின்ரமோன் சொல்றத்திலை அர்த்தம் இருக்கும்.
//காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தனது மகன்மீது கோபம் கொண்டு
கல்லடி வேலுப்பிள்ளை எழுதிய பாடல்கள்// எண்டு சொன்னதை நம்பேலாமல் இருக்கு.
எண்டு கனக்ஸ் எழுதியிருக்கிறார்.

அண்டைக்கு இரசிகமணி சொன்னதைத்தான் நான் எழுதினன்.
அதைப்பற்றி அவரும் அதிகமாகக் கதைக்கேல்லை. (ஒருவேளை வேலரின் மகன், காந்தியின் அதிதீவிரபக்தராக மாறினதாலை வேலருக்குக் கேந்திவந்துதோ என்னமோ?!)
இரசிகமணி தன்ர கையிலையே அந்தப் புத்தகத்தை வைச்சுக் கொண்டு எனக்குக் காட்டினதாலை அதின்ர உள்ளடக்கம் என்னெண்டு
நானும் அறிஞ்சுகொள்ளச் சந்தர்ப்பமில்லாமப் போச்சு. அந்தநேரம் அதை விலாவாரியாக் கேட்டு வைச்சிருக்கலாமோ எண்டு இப்ப நினைக்கிறன்.

கல்லடி வேலர் எண்டு எல்லாராலும் அன்பாய் அழைக்கப்பட்ட ஆசுகவி வேலுப்பிள்ளை அவர்களைப்பற்றி
அந்த நாளையிலை என்ர அப்பு கனக்கக் கதையள் சொல்லியிருக்கிறேர்.

அவரைப்பற்றிய பகிடிக்கதையள் ஏராளமாய் இருக்கு.
ஆனால் அதுகளுக்கையெல்லாம் அவரின்ரை தமிழ்ப் பற்றுத்தான் அதிகமாய் எனக்குத் தெரிஞ்சுது.

பள்ளிக்கூடம் போற பெடியள் சிலபேர் அவரின்ரை வீட்டுக்கு முன்னாலை இருந்த பெரிய கல்லிலை
கல்லடிவேலன் கல்லடி வேலன் எண்டு சோக்காலை எழுதிப்போட்டுப் போயிருந்தாங்களாம்.
அடுத்த நாள் அவங்கள் வந்துபார்த்தால் அவங்கள் எழுதினதுக்குக் கீழை "கண்டாப் பொல்லடி கண்டாப் பொல்லடி" எண்டு எழுதியிருந்துதாம்.
"கல்லடி வேலன் கண்டாப் பொல்லடி"

ஒருதடவை ரயில் தண்டவாளத்துக்குப் பக்கத்திலை "கோச்சிவரும் கவனம்!" எண்டு அறிவிப்புப் பலகை போட்டிருந்தாங்களாம்.
அதென்ன கோச்சி எண்டு எழுதிறது எண்டு கோவப்பட்ட வேலர், அதுக்குக் கீழை "கொப்பர் அதிலை ஏறிவருவார்!"எண்டு எழுதி வைச்சாராம்.
(உன்ரை ஆச்சி எண்டதுதான் "கோச்சி" எண்டு பேச்சுவழக்கத்திலையிருந்தது)

தமிழ்மீது பற்றுக்கொண்ட மனிதர் ஒரு கவிதைநூலுக்கு "கேந்தி" எண்ட சொல்லைப் பாவித்திருந்தால் அது தமிழாகத்தான் இருக்கும் எண்டதுதான் என்ர கணிப்பு.
மற்றும்படி மற்றவைக்குக் கேந்திவாறமாதிரி எழுத எனக்கென்ன விசரே?

அடுத்தாப்போல வசந்தன்ர "தமிழ்க் குழப்ப"ப் பக்கத்துக்கு "கெதி"யாப் போய் "உவ்விடத்திலை" இருந்ததுகளையெல்லாம்
"சுறுக்கா" வாசிச்சுப்போட்டு கொஞ்சநேரம் "கெலி"ச்சுப் போய் நிண்டிட்டன்.
எட இவ்வளவு தூரத்துக்கு எங்கடை பிள்ளையள் தமிழோடை விளையாடிக்கொண்டிருக்குதுகளா எண்ட கெலிதான்.
உதுகளைப் பற்றியும் நான் பறையிறதெண்டால் அதுக்குத் தனிப்பக்கம் வேணும்.

பின்னூட்டம் போடுறன் எண்டிட்டு வசந்தன்ர நேரத்தையும் சும்மா வீணடிக்கப்படாது எண்டுதான் கெதியா முடிக்கிறன்.

அந்தக் கெரிவேலை எண்டது -
அது கரிவேலை.
ஒருத்தரை அவமானப்படுத்திறதை கரிபூசுறது எண்டு நாங்கள் சொல்கிறனாங்கள்.
"என்ரை முகத்திலை கரிபூசிப்போட்டான்!"
அதுதான் கரிவேலை. உச்சரிப்பில் அது கெரிவேலை.

இப்பெல்லாம் லகர ளகரங்களிலையும் ரகர றகரங்களிலையும் உச்சரிப்பிலை கனபேருக்குச் சிக்கல்.

கோமாளிகளிலை மரைக்கார் பாடுறது மாதிரி..
"அவலா சென்னால் இரிக்காது.
அப்புடி எதுவும் நடக்காது
நம்பமுடிய விள்ளை..."


முடிக்கிறதுக்கு முதல் வசந்தனுக்கு என்ர கவலை ஒண்டையும் சொல்லி முடிக்கிறன் ராசா!
தமிழைச் சரிப்படுத்திறம் எண்டிட்டு தமிழிலை இருக்கிற கன வார்த்தையளை அவன்ரை இவன்ரை எண்டு சொல்லி
வேற்று மொழிக்காரனுக்கு தானம் செய்கிற கொடுமை எல்லா இடங்களிலையும் நடக்குது அப்பு.
(இந்த அப்பு நீங்க என்னைக் கூப்பிடுறதுமாதிரி வயசுக்குப் போடுற அப்பு இல்லை.
சின்னப்பிள்ளையளை பாசமாய்க் கூப்பிடுற அப்பு.)
ஒண்டு தமிழா இல்லையா எண்டு தீர்மானிக்கிறவை ஆரெண்டும் தெரியுதில்லை.
என்ரை காலத்திலை நான் தமிழெண்டு படிச்சதுகளெல்லாம் இப்ப தமிழில்லையெண்டு சொல்லிப்போட்டு
புதுச்சொல் உருவாக்கினம்.
புதுசு புதுசா வாறது நல்லதுதான் ராசா.
ஆனால் ஏன் பழசுகளை வெட்டி எறியினம் எண்டுதான் எனக்கு விளங்கேல்லை.
ஆகப் பழையமொழி எண்டு இருக்கிற தமிழ் ஏன் அடுத்தவனட்டை இரவல் வாங்கவேணும் எண்டதுதான் என்ர கேள்வி.
நான் இலக்கண இலக்கியம் தெரியாதவன் ராசா. படிச்சவையள் கொஞ்சம் யோசிச்சு நடக்கவேணும் எண்டு கேக்கத்தான் எனக்குத்தெரியும்.

பழைய வார்த்தைகளைக் கண்டுபிடிச்சுப் பாவனைக்குக் கொண்டு வந்தால் நல்லதுதான்.
வசந்தன் அதுக்காகத்தான் பாடுபடுறார் எண்டு நான் நம்புறன்.

(இன்னொண்டு-
என்ர வலைப்பக்கம் பற்றி.
அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறியள்.
போனமாதம்தான் அதைத் துவங்கினன். காசி வாத்தியாரின்ரை கட்டுரைமட்டும்தான் துணை.
திருப்பித்திருப்பி வாசிச்சுப்போட்டுத்தான் துவங்கினன். எண்டாலும்
உதிலை எனக்கு அவ்வளவாய் அனுபவம் பத்தாது.
எழுதிப்போட்டு ஒரு கிழமையிலை ஏதோ மாத்துவம் எண்டு வெளிக்கிட்டன்.
எழுதினதுகளைக் காணேல்லை. ஒருமாதிரி அப்பிடி இப்பிடி முயற்சிசெய்து ஒருமாதிரி உருப்படியாக்கியிருக்கிறன்.
"நித்திரை முழிச்சு முழிச்சு என்ன வெட்டி விழுத்திறியள்? வயசுபோன நேரத்திலை மண்டைகாய்ஞ்சுபோய் சுறுக்காப் போகப் போறியளோ?"
எண்டு என்ர கிழவியின்ர வாழ்த்துப் பாவோடை முக்கிக்கொண்டிருக்கிறன்.
பாப்பம். )

 

said ... (08 April, 2006 05:32) : 

வசந்தன் நல்லதொரு பதிவு

பேய்க்காத்தி இதுவும் பேய்க்காய் மாதிரித்தான் ஆனால் இன்னும் கொஞ்சம் விசயமுள்ள ஆள் என்று பொருள் படும்.
பேய்க்காய் Lecturer எண்டால் பேய்க்காத்தி Professor
பேய்க்கு ஒப்பாக தமிழகத்தில் புழங்கிற பயங்கர எண்ட சொல்லைச் சொல்லலாம்
உ + ம் : “பயங்கர ஆளுடா நீ”


கம்பஸில எதிர்பாலாரிடம் விழல் அலம்புவதை (கடலை போடுறதை) சல் அடிக்கிறதெண்டும் ஒரேபாலாரிடம் விழல் அலம்புவதை கொன் அடிக்கிறதெண்டும் எண்டும் சொல்லிறது.
உ + ம் : “நாளைக்கு எக்ஸாமடாப்பா சும்மா கொன் அடிக்காமா போடா உன்ரை றூமுக்கு”
பேராதனைப் பல்கலைக்கழகத்திலை புழங்கின சொல் எண்ட படியால் சிங்களச் சொல்லோ தெரியாது.

 

said ... (08 April, 2006 05:36) : 

வசந்தன் ´
அவசரமாய் அனுப்பும் போது ஏதோ பிழை வந்து விட்டது.
கிராமிய விளையாட்டுக்கள் சம்பந்தமான கேள்வி. சுட்டிக்குப் போய்ப் பாருங்கள்.


http://manaosai.blogspot.com/2006/04/blog-post_07.html

 

said ... (08 April, 2006 08:54) : 

சின்னாச்சியின்ரமோன், உங்கள் மேலதிக தகவலுக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவுக்கு போனன். நீங்கள் தந்த சுட்டி தவறு. ஒண்டோடை நிப்பாட்டிப் போட்டீங்கள். கல்லடியைப் பற்றி அங்கை ஒரு பதிவைப் போடுங்கோ. இங்கை அவரைப் பற்றிக் கதைத்தா அது பேய்க்கதையாப் போகுடும்:)

 

said ... (10 April, 2006 11:54) : 

நான் ஒரே பிந்திப் பிந்திப் பின்னூட்டம் போடுறன்... :O|

நான் என்ர சிங்கள அறிவைக் காட்டுவம் என்டு உமக்கு "கேந்தி" விளக்கஞ் சொன்னா நீர் காலை வார்ர வேலை செய்யிறீர்.
மேலே சின்னாச்சியின்ர மோனின்ர பின்னூட்டத்தைப் பாத்தா துவாய், இடியப்பம், பிட்டு, சிரசு போல தமிழுக்கும் சிங்களத்துக்கும் பொதுவான சொல்லா "கேந்தி" இருக்குமோ?

நாங்கள் மற்றவர்களைவிட எந்தவிதத்தில் அதிக வடசொற்களைப் பாவிக்கிறோமென்பதை//

நக்கீரன் சொல்றது போல போனகிழமை தான் நாங்க கதைச்சுக்கொண்டம். இப்போதைக்கு இதுகள் தான் ஞாபகம் வருது:. அச்சா(ப்பிள்ளை), துவி(ச்சக்கரவண்டி)(இப்ப சொல்றேலயெண்டாலும்). பிறகு வேற சில சொற்கள் ஞாபகம் வரக்கூடும்.

ஏனோ ஞாபகம் வந்த இரண்டு .:.
புளுகித்தள்ளுறதுக்கு/கனக்க அலட்டுறதுக்கு - "அவிக்கிறது"
"நல்ல பிள்ளை" திரியோ திரியென்று திரிஞ்சு "நல்லுள்ளை" ஆகிறது.

 

said ... (10 April, 2006 19:51) : 

ஷ்ரேயா,
நீங்கள் ஆறுதலாவே வந்து போங்கோ.
இடியப்பம், பிட்டு, சிரசு எல்லாம் சிங்களத்திலயுமிருக்கோ?

'அச்சா' வடமொழியென்றால், அதை ஏற்றுக்கொள்கிறேன். (நாங்கள் மட்டும்தான் பாவிக்கிறனாங்கள் எண்ட அளவில)
'துவிற்சக்கரவண்டி' இப்பவும் பாவிக்கிறுதுதான். நான் கேட்டது, மற்றவர்களைவிட எந்தவிதத்தல் நாங்கள் அதிகமாகப் பாவிக்கிறோமென்பதை. உங்களிடமிருந்து விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

நான் அவிக்கிறன் எண்டு நீங்கள் சொல்லவரேல தானே?
'நல்லுள்ளை' எனக்குப் புதுசு.

 

said ... (11 April, 2006 08:57) : 

அந்தச் சொற்கள் வடமொழியென்று எனக்குத் தோன்றியதால் சொன்னேன். (ஆனா எந்த விதத்தில் அதிகமாகப் பாவிக்கிறோம் என்று எனக்கும் தெரியாது.)
வேற சொல்லுகளுக்கும் யோசிச்சிருக்கிறன் (எல்லாம் ஹிந்திப்படம் பாக்கிறதால தெரிய வாறதுதான்.) ஒரு சந்தேகம், "சாமான்" என்டு ஹிந்திப் படத்திலையும் வருது. தமிழ்லயிருந்துதான் போயிருக்குமோ?

மற்றப்படிக்கு, நீங்கள் அவிக்கிறீங்களெண்டு நான் சொல்லேல்ல. உங்களுக்கு அப்பிடித் தோன்றுதோ?? ;O)

 

said ... (13 April, 2006 17:43) : 

வசந்தன்
பேய்க்காய் நீங்கள்.
பேய்த்தனமா எழுதுற மாதிரி எழுதி,
ஒரு பேய்ப்பதிவு பதிஞ்சு
பேயாப் பின்னூட்டம் எடுத்திட்டீங்கள்.
பேய்மூளை உங்களுக்கு.

 

said ... (14 April, 2006 19:59) : 

வசந்தனுக்கும் வசந்தனோடு சேர்ந்து பேய்க்குப் பேன் பார்க்கும் அண்ணாமார் அக்காமருக்கும்(ஆப்பாடி நானும் அண்ணைமார் பட்டியல்ல் இல்லை) ஈழத்து வட்டார வழக்குச் சொல்லகராதியொண்டு தயாரிக்கிற வேலையிலை இறங்கிருக்கிறன் உதுக்குச் சரியான ஆள் வசந்தன் எண்டுதான் படுகுது ஒழுங்கு மரியாதையா இதிலை பின்னூட்டம் போட்டாக்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச நூறு சொல் அது எந்த வட்டாரத்திலை வழக்கத்திலை இருக்கு உதாரணமா யாழ்ப்பாணமா மட்டக்களப்பா வன்னியா அதுக்கு சரியான எழுத்து வடிவம் என்ன எண்ட குறிப்புகளோடை எழுதி அனுப்பவேண்டும் இல்லாட்டி நான் பழையபடி கவிதை எழுதி உங்களையெல்லாம் பழிவாங்க வெளிக்கிட்டிடுவன்.

உங்கடை பங்களிப்பை இங்கே அளியுங்கள்
www.murasam.net/akarathi

 

said ... (14 April, 2006 21:22) : 

எட சீ!

நான் மூசி மூசி எதையெழுதினாலும் ஒரு உருப்படியான எழுத்தெண்டு யாரும் பின்னூட்டுப் போடுவதில்லை!

இப்படிப் பலருடைய பின்னூட்டுக்களைப் பெறுவதில் வசந்தன் "பேய்க் காய்"தாம்!

எல்லாவற்றிலும் சிறப்பாய் பல பேய்களைப் பெறும்படி வாழ்த்துக்களை அள்ளி வீசி,என் வயிற்றெரிச்சலை மறைப்பதிலாவது நானனும் ஒரு பேய்க் காயாக வீரும்புகிறேன்.

 

said ... (15 April, 2006 13:56) : 

சாதாரணன்,
சல் அடிக்கிறது, கொன் அடிக்கிறது எல்லாம் அறியத் தந்ததுக்கு நன்றி.
பேராதனைச் சொற்களெண்டா வலையுலகில இன்னொருத்தருக்கும் நல்லாத் தெரிஞ்சிருக்க வேணுமே?

சந்திரவதனா,
உப்பிடிப் பேய்த்தனமாப் பின்னூட்டம் போடாதையுங்கோ.

ஈழநாதத்தாரே,
இன்னும் எங்களை மறக்காம இருக்கிறது நன்றி.
வந்து பார்த்தேன் நீர் தந்த தளத்துக்கு.

சிறிரங்கத்தார்,
வயித்தெரிச்சலைக் கொட்ட வேண்டாமப்பா.
எனக்கும் இந்தப்பதிவுக்கு அம்பதைத் தாண்டிப் பின்னூட்டம் போனது ஆச்சரியம்தான். என்ர நட்சத்திர வாரத்துக்கே இப்பிடி நடந்ததில்லை.
இப்பவெல்லாம் பின்னூட்டம் அதிகம் வாங்க, என்ர சிபாரிசு, "வெண்பா வடிக்கலாம் வா" எண்டு துவங்கிறதுதான். இரட்டை இலக்கத்தில பின்னூட்டங்களுக்கு நான் உத்தரவாதம்.

 

said ... (15 May, 2006 00:41) : 

எழுதிக்கொள்வது: wimalenthiran

னான் நினைகிரென் இது ஒரு பேய் பகிடி

16.9 14.5.2006

 

said ... (15 May, 2006 07:05) : 

அந்த காலத்தில்..சிரித்திரன் மாதிரி...கலகலப்பு... என்ற நகைச்சுவை பத்திரிகை வந்தது.... அதில் கொத்தியின் காதல் என்ற நகைச்சுவை நாவல் செங்கை ஆழியானால் எழுதப்பட்டது தொடராய் வந்தது.....அதிலை பேயள் தான் முழு பாத்திரமும்...சுடலைமாடன் , அப்படி இப்படி என்று பேய் பெயர்கள் தான் பேய் சண்டை தான், பேய் காதல் தான், பேய் பிரச்சனையள் தான், பேய்ப்பகிடியள் தான், பேய்ச்சோகம்தான், பேய்த்திரில்லர் தான் நாவல் முழுவதும்..... அதிலை.......

 

said ... (04 December, 2006 14:49) : 

விமலேந்திரன்,
வருகைக்கு நன்றி.

சின்னக்குட்டியர்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களுக்குச் சொன்னனான் உந்தப் புள்ளிபோட்டுக் கோலம் போடுறதை நிப்பாட்டச் சொல்லி.

 

said ... (04 December, 2006 15:18) : 

வசந்தன்,
நல்ல பதிவு. சும்மா மற்றவையைப் பேய்க்காட்டி பேய்ப்பதிவுகள் போடுறதை விட இந்தப் பேய்பதிவு நல்லாத்தான் இருக்குது. சும்மா சொல்லகுடாது, நீரும் ஒரு பேய்க்காய்தான் ஐஸ்சே.:))

 

said ... (04 December, 2006 22:15) : 

உண்மையிலேயே நீங்க ஒரு பேய்க்காய் வசந்தண்ணை.அது சரி டிசே தமிழன் செல்றது உண்மையெண்டா அவா தான் இப்பவும் உங்கட சர..கோ இல்ல அப்பவே கழட்டி விட்டிட்டியளோ.கழட்டினா இப்ப யார்? நீங்க லொரு சழட்டல் மன்னன் தானே சுழட்டாமயா இருப்பியள். சும்மா சொல்லுங்கோ பேய்க்காட்டாம

 

said ... (07 December, 2006 00:36) : 

வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்பதான் இந்தப் பதிவு உங்கட கண்ணில பட்டிருக்குப் போல கிடக்கு?
நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் நான் பே(ய்)க்காய்தான். ஆனா எதில எண்டதிலதான் பிரச்சினை.

 

said ... (14 December, 2006 23:24) : 

//உண்மையிலேயே நீங்க ஒரு பேய்க்காய் வசந்தண்ணை.அது சரி டிசே தமிழன் செல்றது உண்மையெண்டா அவா தான் இப்பவும் உங்கட சர..கோ இல்ல அப்பவே கழட்டி விட்டிட்டியளோ.கழட்டினா இப்ப யார்? நீங்க லொரு சழட்டல் மன்னன் தானே சுழட்டாமயா இருப்பியள். சும்மா சொல்லுங்கோ பேய்க்காட்டாம//


தம்பி அகிலன்,
பதிவில நான் பாவிச்ச சொற்களைப் பாவிச்சு ஒரு பின்னூட்டம் போடவேணுமெண்டு சரியாக் கஸ்டப்பட்டிருக்கிறீர் போல கிடக்கு.

அதுசரி, அவா எண்டா எவா?
எனக்கு அப்பிடியொருத்தரையும் தெரியாதே?
எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்பிடி சிலரின்ர விசர்க்கதையைக் கேட்டுப் பின்னூட்டம் போடலாமோ?
;-) ;-)

 

said ... (09 February, 2007 23:32) : 

நல்ல இருக்குது அண்ணே !!!

என்ற பங்குக்கு ....

பல + கலை + களகம் + இல்

நல்ல வாளி வைக்கிறாண்ட.
அவன் செம வாளிட.
நல்ல ஊத்தூறண்ட.
டேய் ஊத்தல்

பெண்களிடம் வளியிற ஆக்களுகை குறிக்கும் சொல்லுகள்.

இன்னொண்டு இருக்கு ரொபி (toffee), பொன்ஸ் (pones)

அவனொரு பொன்ஸ்ட, அவனொரு ரொபிட
பேடித்தனமான ஆக்களுக்கு சொல்லுவாங்கள்.

பேய பற்றி தொடங்கி எங்கயொ எல்லாம் கொண்டுபோட்டியள்.
உண்மைய நீங்க பேக்காய் தான்!!!

 

post a comment

© 2006  Thur Broeders

________________