தமிழகப் பாதிரியாரின் வன்னி அனுபவங்கள்.
நம் தமிழ்வலைப்பதிவுலகில் சில பின்னூட்டங்கள் மூலம் எங்களுக்குப் பரிச்சயமான பாதிரியார் "அடைக்கலராசா" அவர்கள் தனது "தமிழீழ" (இச்சொல்லை அவரேதான் பாவித்துள்ளார்) அனுபவங்களை "தடங்கள்" என்ற வலைப்பதிவிற் பதிகிறார். ஓராண்டுகாலம் அவர் வாழ்ந்த ஈழத்தின் பதிவுகளைப் புத்தக வடிவில் எழுதுகிறார். படிக்க ஆர்வமிருப்பவர்கள் அங்குச் சென்று படிக்கலாம். அவரின் வலைப்பதிவு தமிழ்மணத்திரட்டியில் அங்கத்துவமாயில்லையென்று நினைக்கிறேன். அதை இணைத்தால் இன்னும் நன்று. ஏற்கனவே அவர் எழுதி இன்னும் வெளிவராத புத்தகத்தையே இங்குப் பதிகிறார். எனவே பின்னூட்ட வசதியைப் பேண வேண்டுமா என்ற கேள்வி எனக்குண்டு. ஆனாலும் உடனடியான வாதங்களுக்கோ, தகவற்பரிமாற்றங்களுக்கோ கூட இவ்வசதி உதவக்கூடும். மறுவளத்திற் சில சிக்கல்களுமுண்டு. தமிழ்ப்பதிவுகள் |
"தமிழகப் பாதிரியாரின் வன்னி அனுபவங்கள்." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: சிறில் அலெக்ஸ்
எனக்கு முன் எழுதிவிட்டீர்கள்.
15.16 22.3.2006
மன்னிக்கவும்.
அவரின் தடங்கள் பக்கம் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நான் தான் கவனிக்கவில்லை.
சிறில்,
அதற்கென்ன?
நீங்களும் ஒரு பதிவு போட்டாற் போயிற்று.
என் பதிவைப் பார்க்காதவர்கள் உங்கள் பதிவைப் பார்க்கலாமில்லையா?
அதுவும் பெரும்பாலும் குழுக்களாகப் பிரிந்திருக்கும் வாசகவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தவறேயில்லை.
எழுதிக்கொள்வது: அடைக்கல ராசா
ஐயா மிக்க நன்றி. பாதிரியார் என்ற சொல் சற்று நெருடலாக உள்ளது. இங்கு தமிழகத்தில் அந்த சொல் சற்று வித்தியாசமாக கருதப்படும். பிரச்சனையில்லை. தங்களின் அறிமுக பதிவிற்கு மிக்க நன்றி.
22.29 23.3.2006
சரி, அடைக்கல ராசா அவர்களே, (உங்களைப் பெயர் சொல்லியே அழைக்கிறேன் இனிமேல்)
பாதிரியார் என்தை விட்டுவிடுவோம்.
ஆனால் என்னை ஐயா என்று அழைப்பது மட்டும் எம்மாத்திரம்?;-)
எழுதிக்கொள்வது: துளசி கோபால்
வசந்தன்,
உங்க இமெயில் ஐடி என்ன? ஒரு தனிமடல் அனுப்ப வேணும்
11.50 28.3.2006
துளசியம்மா,
ஐயையோ,
மறந்துபோச்சா? துலைஞ்சு போச்சா?
இதுக்குமுதல் தனிமடல் சில பரிமாறியிருக்கிறமே?
சரி, பக்கவாட்டில என்ர ஐடி போட்டிருக்கிறேனே. பாத்திட்டு அனுப்புங்கோ.