பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு
தற்போது வலைப்பதிவுலகில் காரசாரமாக பின்னவீனத்துவம் பற்றிய கட்டுடைப்புக்கள், விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் அடுத்தகட்ட வடிவமாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்குபண்ணி இங்கு ஒலிப்பதிவாகத் தருகிறோம். இக்கலந்துரையாடல் ஆகலும் அடிப்படையாக இல்லாமலிருப்பதால் ஏற்கனவே கொஞ்சமாவது இதுபற்றி அறிவிருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். எதற்கும் இப்பதிவைக் கேட்க முன்னர் கீழ்க்கண்ட இணைப்புக்களில் இருக்கும் கட்டுரைகளை வாசித்திருந்தால் நன்று. அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள். ஆனால் அதன்பின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கப்போவதில்லையென்பதே நீங்கள் செலுத்தப்போகும் விலை. பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல். -அற்புதன் பின்நவீனத்துவம் ➽ சில குறிப்புகள் -பாலபாரதி ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள் -டி.சே பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம் -பெயரற்ற யாத்ரீகன் என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள் -டி.சே கலந்துரையாடலில் பங்கேற்போர்: ஆய்வாளர் கும்பரோ பூஜே,
அவசரமாக ஒலிப்பதிய வேண்டி வந்ததால் கலந்துகொண்டவர்கள் சரியான ஆயத்தங்களின்றி பங்குபற்ற வேண்டி வந்துவிட்டது. இன்றுவிட்டால் பின் சனி ஞாயிறு என்பதால் அவசரமாக இன்றே அனைத்து வேலைகளையும் முடிக்கவேண்டி வந்தது. இதில் வரும் தொழிநுட்ப வழுக்களுக்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதைக் கேட்டு நீங்கள் சொல்லும் கருத்துத்தான் தொடர்ந்து இடம்பெறப்போகும் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு ஊக்கமாக அமையுமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். |
"பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்
ஆசானே! பின்னர்ஈனத்துவம்: அவியல்பூர்வக் கலந்துறையாடல் - கொள்ளிப்பதிவு எண்டதுதான் சரியான தலைப்பூ
உப்பிடி சிம்பிளாக் கதச்சியள் எண்டா எப்படி அப்பு அறிவுஜீவி எண்டு மகுடம் சூட்டிக் கொள்ளப் போறியள்.
மையம், விளிம்பு இருக்குது எண்டு சொல்லவும் , அதைக் கண்டு பிடிச்சு என்ன செய்யப்போறியள் என்ன செய்ய வேணும் எண்டு கேட்கப் படும் கேள்விகளுக்கு இந்தப்பின் நவீனதுவத்தைத் தூக்கித் திரியும் எவரிடமும் பதில்கள் இல்லை.வெறும் அறிவுஜீவித் தனமாகத் தெரியும் எதுவிதமான அடிப்படைகள் ,உட் பொருள் எதுவும் அற்ற சொல்லாடலல்களைத் தவிர.அறிவியற் சிந்தனை என்பது எல்லா சிக்கலான கோட்பாடுகளையும், இலகுவான துண்டங்களாக்கி அதன் மூலம் விடை காண்பது.ஆனால் உந்தப் பின் நவீனத்துவ வியாபாரிகள் சாதராணமான விடயங்களை சொல்லாடல்களால் சிக்கலானவை யாக ஒரு பிம்பத்தை உருவாக்கி, எதுவுமே அற்ற ஒரு விடயத்தை ஒரு கோட்பாடக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
தம்பி வசந்தன்,மற்றும் சயந்தன் வணக்கம்!நல்ல நகைச் சுவையோடு உரையாடுவது சிறப்பு.சிரிக்கத் தக்கப்படி உரையாடல் நகர்வது இரசிக்கத் தக்க முயற்சி.
பின் நவீனத்துவ நிலை பற்றி நிறையத் தமிழில் வாசிக்காதீர்கள்.
இவர்களுக்கே இன்னும் தெளிவானவொரு சுய முயற்சி அதற்குள் இல்லை!
எனவே லொயராட்த் (Jean-Francois Lyotard)போன்றவர்களை அவர்களுது மூல மொழியிலிருந்து வாசியுங்கள்.
இப்போதுள்ள மாணர்வர்கள் ஜேர்மன்,பிரஞ்சு,ஆங்கிலத்தில் தேர்ச்சியுள்ளவர்கள். அவர்களால் ஒவ்வொரு தத்துவத்தின் மூலத்தையும் அந்தந்த மூல மொழிகளில் வாசிக்க-படிக்க முடியும்.
நீங்களும் அப்படி முயற்சிப்பதே நன்று.
தமிழ்ச் சூழலில் உள்ள படிப்பாளிகளில் பலர் தொழில் முறைத் தேர்ந்த படிப்பாளிகளே தவிரப் புத்தி ஜீவிகளென்று சொல்லும் அளவுக்கு எனக்குத் தெரிய எவருமில்லை.
பின் நவீனத்துவ நிலை விஞ்ஞானத்தின் புனைவுகளை உடைத்தெறிகிறது.
இந்த நிலையிலையே அது மனிதர்களிகன் விடுதலைப் பிரச்சனையை மிக வேகமாகப் புரட்டிப் போட்டு ஒடுக்குமுறையாளருக்கு உந்து சக்தியாகவும் இருப்பது அதன் அகவயக் குறைபாடு.
எனினும் இதனால் மனித சமூகத்தில் விஞ்ஞானத்தின் ஒருகால உண்மைகள் வேறொரு காலத்தில் பொய்யாவதை முன்கூட்டியே உடைப்பதில் முடிகிறது.இன்றிருக்கும் நிலையில் அன்றைய விஞ்ஞானக் கருத்துக்கள் பல பொய்யாவதை நாம் கண்டோமல்லவா? அப்படியேதாம் இந்த உலகத்து ஒவ்வொரு வளர்ச்சிப்படியும் நகர்கிறது.
இங்கே எமது தரப்புக்குள் எவரெவர் எதை விரும்புகிறாரோ அதையே தத்தமது ஒழுங்கு என்று நிறுவ விரும்புவது உண்டு.இதுள் என்னையும் இணைக்கிறேன்.
இந்தத் தரணத்தில் இதை மட்டும் சொல்வதே பொருத்தம்.
எதையும் ஒவ்வொரு நிலையில் மிக ஆழ்ந்து அதன் மூல மொழியில் படைப்பாளியின் அகம் கண்டு கற்பதே மிகச் சிறப்பு.அது ஒரு கவிதையாக இருப்பினும்"கவியுள்ளம் கண்டு கற்பது-உள்வாங்குவது"என்ற நிலையை உங்களுக்குச் சொல்லலாம்.
இதவன்றி ஒரு கருத்துக்கு நேரடியாகக் கருத்தெடுப்பாமானால் பாரதியின் கவிதை,கட்டுரைகளைக் குப்பைக் கூடைக்குள்ளே கடாசிவிட்டு"முரண்பாடுகளின் மொத்த வடிவம் பாரதி"என்று அவனைத் தள்ளி விடாலாம்.
பின் நவீனத்துவ நிலை குறித்து நம் தமிழ்ச் சூழலுக்குள் நடக்கும் அரைகுறை விளையாட்டு மிகவும் மலினப்பட்ட அறிவினது இயலாமையே!இதை மூடி மறைக்கத் தேவையில்லை.ஒரு தத்துவத்தை அதன் உள்ளார்ந்த இயல்புகளுடன் கற்று உண்மைகளைப் புரிவது சில காலத்தில் பல்நூறு ஆண்டுகள் எடுத்திருக்கு.
ஒரு தத்துவத்தின் இருப்பைக் காலம்தாம் தீர்மானிக்குமே தவிர தனி நபர்களின் தீர்ப்பல்ல. பௌத்த தத்துவத்தின் இன்றைய நிலை ஏன் உபநிடதத்துக்கு இல்லை? பௌத்தம் இன்னும் விஞ்ஞானச் சூழலுக்குள் நெருங்கி வருவதால் இந்த நிலை.
எதையும் மிக ஆழ்ந்து அறிந்து மௌனித்து இருப்போம்.
காலத்துக்கேற்ற அவசியம் வரும்போது அதையதை அந்தத்தத் தளத்தில் வீரியத்தோடு படைத்துக் கொள்ளலாம்.
This comment has been removed by a blog administrator.
ரொம்ப தாங்ஸ்க தம்பிங்க...நன்னாயிருக்கு... நீங்கள் கதைச்ச கதை விளங்கினமாதிரி இருக்கு ஆனால் இன்னும் எனக்கு விளங்கே இல்லை. அது மாதிரி தானே இந்த உசம் . இதை அந்த நேரம் எதிர் புரட்சிகரவாதம் அது இது என்று சொன்னபடியால் அக்கறை காட்ட வில்லை.. இப்ப எல்லோரும் கதைக்கினம் இது என்ன என்று தெரிய வெளிக்கிட்டால் ஒரு நாசமறுப்பும் விளங்கவில்லை. தம்பியவை உண்ணாணை உங்கடை கதைக்கு பிறகு தான் இது . அத்துவித தத்துவம் என்று விளங்கிச்சு. ஆனால் வடை கதை விளங்கினமாதிரி. வசந்தன் படிப்பிச்ச கேத்திர கணிதத்தில் தேற்றம் கருவி போட்டு நிறுவியும் நிறுவாமிலிருந்த விசயம் ஒரு நாச மறுப்பும் விளங்கவில்லை
ஒரு கழுதை பற்றி வர்ணிச்சு கதை எழுதிவினமாம் அந்த கழுதை கதை கழூதை தானே . அதனால் நாலு கால் கழூதை என்று சொல்லாமால் ஜந்து கால் கழூதை ஆறு கால் கழூதை என்று சொல்லி பல உண்மைகள் சொல்லலாமாம்
அருமையான விளக்கங்கள் வசந்தன்:)) சிரிசிரியென்று சிரிச்சு என் கண்ணெல்லாம் தண்ணீர்.
ஆனால் எனக்குக் கேட்க மிகப்பிடிக்கும் ஈழத்தமிழ் உரையாடல் கேட்கமுடிந்தமைக்கு மகிழ்ச்சி. உரையாடிய ரெண்டுபேரும் நீங்களேதானா? தொடர்ந்து இருத்தலியம் பற்றியும் உரையாடித் தாங்க.
தம்பிமார் தொடலியைவிட்டுப்போட்டியளேடா? அது முக்கியமெல்லே!!
//எதையும் மிக ஆழ்ந்து அறிந்து மௌனித்து இருப்போம்.//
Sri Rangan uncle பினனவீனத்துக்கு வாய்மூடி மவுனமாய் இருக்கிறதுபோல் மார்க்சிசதுக்கும் அமதியானால் எங்கடைபாட்டில் நாங்கள் அதையும் அறிவமல்லோ.
வசந்தன், சயந்தன் இவ்வளவு நாளும் உந்த பின்நவீனத்துவம் எண்டா விளங்குறதே இல்லை. அதாலை நான் உந்த விவாத பக்கங்களுக்கு தலைவச்சு படுக்கிறதில்லை. உங்கடை விளக்கத்தை கேட்டதோட எனக்கு ஒரு தெம்புவந்திட்டுது.
:)
இப்ப விளங்கீட்டுது..பல காலத்தேடல்..ஒரு மாதிரி யாழ்ப்பாண ரியூட்டரியில் ரியூசனுக்கு போய் விளங்கினமாதிரிக் கிடக்கு..
அதாகப்பட்டது பின் ன ந வீனத்துவம் என்றால் சரியான வரைவிலக்கணம் சுத்தி சுத்தி அந்த வட்டத்துக்கை நிக்கிறது அப்படித்தானே..
இடைக்கிடை புருடா வின் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கலாம்.:)
அண்ணைமாரே, நீங்கள் எங்கையோ போய்விட்டியள் :-).
Anonymous said...
//ஆசானே! பின்னர்ஈனத்துவம்: அவியல்பூர்வக் கலந்துறையாடல் - கொள்ளிப்பதிவு எண்டதுதான் சரியான தலைப்பூ //
அண்ணை,
வருகைக்கு நன்றி.
தலைப்பைப் பற்றிச் சொன்னியள் சரி, பின்னவீனத்துவம் பற்றி உங்கட கருத்தைச் சொல்லேல பாத்தியளோ?
எண்டாலும் சுடச்சுடப் பின்னூட்டம் போட்டியளே, அதுக்கு நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அற்புதன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அறிவுஜீவிப் பட்டம் எனக்கு வேண்டாம். உதைக் கதைச்ச ஆய்வாளருக்கும் வேண்டாமாம். ஏனெண்டா ஏற்கனவே அவர் பெரிய ஆய்வாளராம்.
மையத்தைக் கண்டுபிடிக்கிறது எப்பிடி எண்டதையும் அதைக் குறிச்சு வைச்சுப்போட்டு அழிக்க வேணுமெண்டதையும் சொன்னவர், அந்த அழி-ரேசர் பற்றிச் சொல்லேல. மையத்தைக் குறிக்கிறது பேனையாலயோ பென்சிலாலயோ எண்டதையும் சொல்லாமல் விட்டிட்டார்.
சிறிரங்கன்,
உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.
உங்கள் பின்னூட்டஙகளிலொன்று நீக்கப்பட்டுள்ளது. முதலாவதன்பின் திருத்தத்தோடு இரண்டாவதை இட்டீர்கள் என்று நினைத்து வெளியிட்டேன். பிறகுபார்த்தால் ஒரே பின்னூட்டத்தை இருதரம் பதிந்துள்ளீர்கள். ஆகவே ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~
சின்னக்குட்டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்லிற "அத்துவித தத்துவம்" எண்டா என்னெண்டு எனக்கு விளங்கேல.
உதில சொல்லப்படுற மையம் கண்டுபிடிக்கிற செயன்முறை ஏற்கனவே நீங்கள் பள்ளிக்கூடத்தில படிச்சதுதான். ஆய்வாளர் சொன்னதை கீழ எழுதிறன் பாருங்கோ.
ரெண்டு நாண்கள் கீற வேணும். நாண் எண்டது வட்டத்தின்ர பரிதியில இருக்கிற ரெண்டு புள்ளிகளை இணைக்கிற ஒரு நேர்கோடு. பரிதி எண்டு சொல்லிறது வட்டத்தின்ர வெளிவிளிம்பு. இந்த நாண் வட்டத்தின்ர மையத்துக்கால போனா அதின்ர பேர் விட்டம். ஆகவே விட்டமில்லாத நாண்கள் ரெண்டு கீற வேணும். அந்த ரெண்டு நாண்களும் சமாந்திரமா இல்லாமல் இருக்க வேணும். (சமாந்தரமா இருந்தாலும் மையத்தைக் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் கூடுதலான வேலையிருக்கும்)
இப்ப நாங்கள் கீறியிருக்கிற நாண்கள் ஒவ்வொண்டிண்டயும் நடுப்புள்ளியை எடுக்க வேணும். ஒரு நாணை ரெண்டு சமபங்காப்பிரிச்சு நடுவில வாற புள்ளியைத்தான் சொல்லுப்படுது. அது எப்பிடிப் பிரிக்கிறது எண்டது இஞ்ச சொல்லத்தேவையில்லாத அடிப்படை.
இப்ப ரெண்டு நாண்களும் நடுப்புள்ளி வந்திட்டுது. இப்ப அந்த நடுப்புள்ளிகால நாணுக்குச் செங்குத்தா கோடு கீற வேணும். அப்ப ஒவ்வொரு நாணுக்கும் ஒவ்வொரு கோடு வரும்.
இப்ப பாத்தா நாணை ஊடறுத்துப்போற கோட்டின்ர ஒருமுனை வட்டத்தைவிட்டு வெளிநோக்கியும் மற்ற முனை உள்நோக்கியும் போகும் (உள்நோக்கிப் போறமுனை பரிதியைக் கடந்ததும் திரும்ப வெளிநோக்கித்தானே போகும் எண்டு பின்னவீனத்துவக் கேள்வி கேட்கக்கூடாது)
ரெண்டு நாணிலயிருந்தும் உள்நோக்கி வாற கோடுகள் ஓரிடத்தில சந்திக்கும். அந்தப்புள்ளிதான் வட்டத்தின்ர மையம்.
இதைத்தான் அந்த ஆய்வாளரும் சொல்லிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேல நான் சொல்லியிருக்கிற விளக்கம் ஆருக்கேன் விளங்காட்டி, சொல்லித்தர வல்ல ஆக்களிட்ட கேளுங்கோ. சரியாச் சொல்லத் தெரிஞ்சவை பின்னூட்டத்தில சொல்லலாம் பெயரிலி போன்றவர்கள் இந்தவிசயத்தில உதவி செய்யலாம். (பிறகு அந்த விளக்கத்தையும் பின்னவீனத்துவத்தில சொல்லிப்போடாதைங்கோ)
/அந்தப்புள்ளிதான் வட்டத்தின்ர மையம்.
இதைத்தான் அந்த ஆய்வாளரும் சொல்லிறார்./
வட்டத்தின் மையத்தை கடைசியாய் அழித்துவிடவும் வேண்டும் என்று அல்லவா நமது ஆய்வாளர் கூறுகின்றார். அதை இருட்டிப்புச் செய்யவேண்டாம் என்று ஆய்வாளர் கும்பரோ பூஜே சங்கத்தினூடாக வெருட்டிக்கேட்கின்றோம்.
மையத்தை அழிக்கச்சொன்னார் சரி. ஆனால் "விளிம்புகள் என்னவாகும்? விளிம்புகள் அப்படியே இருக்கும்வரை அதாவது பரிதியும், வட்டமும் இருக்கும்வரை இன்னொரு மையம் உருவாகும். இப்படி மையம் அழிக்கப்பட அழிக்கப்பட மீண்டும் உருவாகிக்கொண்டே அல்லவா இருக்கும்?" என்ற சுயிந்தன் கேள்விக்குக் கும்பரோ பூஜே பதில்சொல்லாமல் மழுப்பினார் என்பதையும் டிசேவுக்கு சுயிந்தன் சங்கத்தினூடாகச் சொல்லிக்கொள்கிறோம்:))
//ஆய்வாளர் கும்பரோ பூஜே,//
இதில டி.ஜே. தமிழனுக்கு எந்த உள்குத்தும் இல்லையே?
கொழும்பு தமிழ்சங்கத்தில ஆறு மணிநேரம் பவுமுடீன் சேர் எடுக்கும் இரசாயனவியல் வகுப்பில் எனக்கு பாதிவிசயங்கள் விளங்கிறதில்ல(மீதியும் விளங்கினது என்று அர்த்தமில்ல படிபிக்கிறது கெமிஸ்ரி எண்டாவது விளங்கும்) அதுலையும் விளிம்பு,மையம்,குவளை,தாக்கம் எண்டெல்லாம் வாறது அப்ப அது என்ன இரசாயனவியல் பின்னநவீனதுவமே?
தலைவர் கும்பரோ பூஜே சொல்லும் விளக்கத்தை பதிவிடுங்கள் வசந்தன்
This comment has been removed by a blog administrator.
சுயிந்தனுக்கு சங்கம் அமைத்த செல்வநாயகி வாழ்க
என்ர கேள்விக்கு இன்னும் பதில் வரேல்ல. பதில் சொல்லும்வரையும் பின்நவீனதுவப் பாணி போராட்டத்தில் குதிக்க வேண்டி வருமென்பதை சகலருக்கும் பகிரங்கமாக அறிவித்துக் கொள்ளுறன்.
செல்வநாயகி,
//உரையாடிய ரெண்டுபேரும் நீங்களேதானா? //
கதைச்ச ரெண்டு பேரின்ர பேர்களும் பதிவில போட்டிருக்கிறனெல்லோ?
தொடர்ந்து இருத்தலியம் பற்றியும் உரையாடித் தாங்க.
அது மற்ற வலைப்பதிவர்களின் கைகளிலுள்ளது.
இன்னொரு அனானி,
//தம்பிமார் தொடலியைவிட்டுப்போட்டியளேடா? அது முக்கியமெல்லே!!//
ஓமோம். ஆய்வாளர் தொடலியை இதுக்குள்ள சொல்லேலத்தான். ஆனா கட்டாயம் சொல்லியிருக்க வேணுமோ எண்டு விளங்கேல. மையத்தைக் கண்டுபிடிக்கிறதும் அதை அழிக்கிறதும் தொடர்பாத்தான் அவையள் கதைக்கினம். மையம், விளிம்பு எண்டதைத்தவிர வேற விசயத்துக்குப் போகேல. விளிம்பைத் தொட்டுக்கொண்டு போறதைத்தவிர 'தொடலி'க்குப் பின்-நவீனத்துவ விவாதத்தில வேற தொடர்புகள் இருக்கிறமாதிரித் தெரியேல. இன்னும் நுணுக்கமாகப் பாத்தால் தொடலியானது விளிம்புக்கு வெளியில இருக்கு. விளிம்பைத் தாண்டி வெளியில போறதுபற்றி பின்-நவீனத்துவம் என்ன சொல்லுதெண்டும் சரியாத் தெரியேல. விளிம்புக்கு வெளியில ஏதாவது இருக்கு எண்டதையே பின்-நவீனத்துவம் ஏற்றுக்கொள்ளுமா எண்டது ஐயம்தான்.
விளிம்புக்கு வெளிய வாறதுகள் பற்றி பின்-நவீனத்துவப் பதிவுகள் போட்ட டி.ஜே. போன்றவர்கள் ஏதாவது எழுதட்டும்; பிறகு எங்கட ஆய்வாளர் பூஜேயிட்ட இதுக்கான விளக்கத்தைக் கேட்டு நான் எழுதிறன்.
_______________________________
ஆனால் மையத்தைக் கண்டுபிடிக்கிறதுக்கு 'தொடலி' உதவக்கூடும் எண்ட புள்ளியில ( இந்தப்புள்ளி கேத்திரகணிதத்தில் வரும் எந்தப்புள்ளியுமன்று) நான் உடன்படுறன். இருக்கிற தொடலிக்குச் செங்குத்தா ஒரு கோடுகீறினா அது மையத்துக்குள்ளால போகுமெண்டும் (அந்தக் கோட்டில விட்டத்தை எடுக்கலாம்), அந்த விட்டத்தை இரு சமபங்காக்கினால் மையம் கிடைக்குமென்றும் விளங்குகிறது. ஆனால் மையம் இல்லாமல் தொடலி கீறுவது எப்படி எண்டுதான் யோசிக்கிறன். இது கோழியிலயிருந்து முட்டையா, முட்டையிலயிருந்து கோழியா எண்ட பிரச்சினை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உதார் இடையால குழப்பிக்கொண்டிருக்கிறது?
சோமியோ?
சேட்டை விடாமல் கியூவில நிண்டு வாரும் பாப்பம்.
மிக நன்றாக இருக்கிறது.
இடையில் விட்டுவிட்டு வரும் ஒலி சஞ்சலம் கொடுத்தாலும் கேட்டு இரசித்தேன்.
இறுதியில், Record பண்ணும் பையனிடம் விக்கிவிக்கி வரும்படி வெளியிடச் சொல்லிச் சொன்ன இடம் மிக அருமை. நல்ல முத்தாய்ப்பாக முடிந்தது.
நீங்கள் பேசியபோது புரியாத சில பின்னூட்டங்களில் புரிந்தது.
சிவகுமார்
வி. ஜெ. சந்திரன்,
வருகைக்கு நன்றி.
தீவு
//இடைக்கிடை புருடா வின் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கலாம்.:)//
அவரை புருடே எண்டுதான் ஆய்வாளர் சொல்லிறதா நினைக்கிறன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
டிசே தமிழன்,
நாங்கள் எங்கயும் போகேல. வட்டத்துக்குள்ளதான் நிக்கிறம், மையத்தைத் தேடிக்கொண்டு.
நிற்க, வட்டத்தின் மையத்தை அழிக்கச் சொல்லி ஆய்வாளர் சொல்லிறார்தான். ஆனால் அது முற்றாக அழிபடாது எண்டும் சொல்லிறார். அதாவது விளிம்பு இருக்கும்வரைக்கும் மையமும் இருக்கத்தான் போகுது. திரும்பத்திரும்ப மையத்தைக் கண்டுபிடிச்சு குறிச்சுவைச்சு பிறகு அழிச்சு எண்டு ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து நடக்கவேணுமெண்டும் சொல்லிறார். ஏனெண்டா பின்-நவீனத்துவக் கோட்பாடின்ர இருப்பே அதிலதான் தங்கியிருக்காம். மையத்தை நிரந்தரமா அழிச்சுவிட்டா பிறகு இந்தக் கோட்பாட்டுக்கு வேலையில்லையெண்டதையும் சொல்லிறார்.
செல்வநாயகி சரியா விளங்கியிருக்கிறா. ஆனா ஆய்வாளர் மழுப்பேல. தெளிவாச் சொல்லிறார். அதாவது கோட்பாடின்ர இருப்பு இருக்குவரைக்கும்தான் இவையளுக்கு வியாபாரம். அதால விளிம்பையும் அழிக்காயினம்; மையத்தையும் அழிக்காயினம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனானி,
>>//ஆய்வாளர் கும்பரோ பூஜே,//
இதில டி.ஜே. தமிழனுக்கு எந்த உள்குத்தும் இல்லையே?>>
உந்த சொறிக்கேள்விதானே வேண்டாமெண்டிறது. உது எப்பிடியெண்டா முந்தியிருந்த செவியை பிந்திவந்த கொம்பு மறைச்சமாதிரி.
விளிம்பிலை நிண்டு விளிம்பை அழித்தால்தான் பிரச்சினை. மையத்திலை நிண்டு மையத்தை அழித்தால் மையமில்லாது போகும். பிறகு மையமிருக்காது விளிம்புமிருக்காது...எல்லாத்தையும் ஒரே பெயரலால் அழைக்கமுடியுமெல்லோ...
எனக்கென்னவோ ஆய்வாளர்கள் அடுத்த பதிவில் விளிம்பு-மையம் குறித்து கதைக்காது, மையல்-தையல்-பையன் குறித்து ஏதும் பின்நவீனத்துவம் சொல்கின்றதா என்று விளக்கினால் நல்லம் போலத்தோன்றுது.
என்ன டிசே உங்களோட வம்பாப் போய்ட்டுது:))
ஆய்வாளர் மையத்தைத்தான் அழிக்கச் சொன்னார். விளிம்பைப் பற்றி அதாவது விளிம்பு என்னவாகவேண்டும் என்பது பற்றி அவருக்குக் கவலையே இல்லை. அவர் சொன்னபடி செய்தால் மையமும் இருக்காது, விளிம்பும் இருக்காது என்று சொல்றீங்களே? அதற்கு வட்டத்தையே அழிக்கவேண்டும் இல்லையா? வெறுமனே மையத்தைக் கண்டுபிடிச்சுக் கண்டுபிடிச்சு அழிச்சுக்கொண்டிருந்தால் விளிம்பு எப்படி அழியும்? கும்பரோ பூஜே இந்த மையத்தை அழிக்கும் வேலையை மட்டும்தான் சொல்கிறார். ஒருக்கா அழிச்சு மறுக்கா அழிச்சு...........இப்படித்தானே சொல்றார் அவர்? விளிம்புக்கு என்ன விடியல் இதனால்?
உங்க வகுப்பிலெல்லாம் படிச்சதைக்கொண்டு நான் ஒரு வீட்டுப்பாடம் எழுதப் போறேன்:))
சோமி,
உங்கட வாத்தியார் படிப்பிச்சது என்ன கோதாரித் தத்துவமோ தெரியாது. ஆனா பின்-நவீனத்துவத்தை இயல்பியலோட செருகி சிலர் கதைச்சுக்கொண்டிருக்கினம். உண்மை ஒன்றாக இருக்க முடியாது எண்டதை relativity யோட தொடர்புபடுத்துகினம்.
உங்கட கேள்விக்கு ஆய்வாளர் பதில் சொல்லேல, நான்தான் சொல்லிறன்.
நீரும் ஒரே பின்னூட்டத்தை ரெண்டுதடவை இட்டதால் ஒண்டு நீக்கப்பட்டுள்ளது.
அதென்ன பின்னவீனத்துவப்பாணிப் போராட்டமெண்டு சொல்லுமன்.
_____________________________
சிவகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்ப விக்கிவிக்கி வாறதுக்கு ஒலிப்பதிவில பிழையெண்டோ நினைச்சுக்கொணடிருந்தனீங்கள். ஒழுங்கா இருந்த கோப்பை ஆய்வாளரின்ர விருப்பப்படி விக்கிவிக்கிக் கொண்டுவாறதுக்கு எவ்வளவு பாடுபட்டது எண்டு தெரியுமோ?
_____________________________
டி.ஜே,
அற்புதன் உம்மட்ட கேள்வி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி நீர் இஞ்சை வந்து நிண்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்.
திரும்பவும் அவர் சொன்னதைச் சொல்லிறன்.
மையத்தில நிண்டு மையத்தை அழிச்சால் மையம் அழியாது.
விளிம்பை அழிக்காதவரைக்கும் மையம் இருந்துகொண்டே இருக்கும்.
மையம் அழிஞ்சமாதிரித் தெரியலாம். மையப்புள்ளி மறைஞ்சு போகலாம். ஆனா விளிம்பு எண்டு ஒண்டு இருக்கும்வரை மையம் ஒண்டு கட்டாயம் இருந்துகொண்டிருக்கும். அது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் விளிம்பு இருக்கும்வரை மையம் இருந்துகொண்டே இருக்கும். பேனையால குறிச்சு வைச்சு அதை அழிச்சிட்டாப்போல மையம் அழிஞ்சிடாது.
மையத்தை அழிக்க வேணுமெண்டால் விளிம்பு முற்றாக அழிக்கப்பட வேணும். விளிம்பை அழிச்சா மிஞ்சுறது வெறும் சூனியம். சூனியத்துக்குள்ள என்ன கிடக்கு? சூனியம் வரக்கூடாது எண்டதுக்காக விளிம்பை அழிக்கக்கூடாது எண்டு சொன்னாலும், இன்னொரு காரணமும் இருக்கு. விளிம்பையும் மையத்தையும் அழிச்சிட்டா பிறகு பின்-நவீனத்துவக் கோட்பாட்டுக்கு வேலையில்லை. அதுவும் அழிஞ்சுபோகும். எண்டபடியா விளிம்பையோ மையத்தையோ அழிக்கிறதை இக்கோட்பாடு விரும்புவதில்லை. ஏனெண்டால் அது தன்னையே அழிச்சுக்கொள்ளிற விளையாட்டு. பின்-நவீனத்துவம் தற்கொலை செய்ததாக முடியும். தற்கொலை பற்றி பின்-நீவனத்துவம் என்ன சொல்கிறது?
நிற்க, விளிம்புக்கு வெளியே இருப்பவை பற்றி - குறிப்பாக - தொடலி பற்றி பின்-நீவீனத்துவம் என்ன சொல்கிறது என்று முந்தைய பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லவில்லை. எங்கட ஆய்வாளரும் இப்ப வேற இடத்தில எண்டபடியா அவரிட்டயும் விளக்கம் கேக்க ஏலாமல் கிடக்கு.
திரும்பத் திரும்ப ஒரேவிசயத்தைக் கதைச்சுக்கொண்டிருக்காமல் வேற விசயத்துக்குத் "தாவ" வேணும். தொடலி பற்றிக் கதைக்கலாம். ஏன் - பின்-நவீனத்துவத்தையே ஒதுக்கி வைச்சிட்டு அடுத்த கோட்பாட்டுக்குத் தாவலாம். நீர் இருத்தலியல் பற்றி ஒரு விவாதத்தைத் தொடக்கிவையும். அங்க இஞ்ச எண்டு நாலைஞ்சுபேர் அதைப்பற்றிக் கதைக்கத் தொடங்க நாங்களும் எங்கட ஆய்வாளரைக் கூட்டியந்து அடுத்த கலந்துரையாடலைச் செய்யலாம்.
முந்தியொருக்கா தமிழ்வலைப்பதிவுகளில் இருத்தலியல் பற்றின பொறி வந்தது. ஆனா பெருசா பத்தாமல் இடையில நூந்துபோச்சு. எஸ்.வி.ஆர், சண்முகலிங்கம் (அல்லது சண்முகதாசன்?) எழுதின ரெண்டொரு கட்டுரைகளைப் பதிவாக்கினதோட எல்லாம் முடிஞ்சுது. நீர் இருத்தலியல் பொறியைக் கிழப்பும். நாங்கள் பத்த வைக்கிறம்.
______________________________
செல்வநாயகி,
நீங்கள் இந்தக் கலந்துரையாடலைச் சரியா விளங்கியிருக்கிறியள். இடையில குழப்பிற ஆக்களுக்கும் அப்பப்ப சரியா விளக்கம் குடுத்திருக்கிறியள்.
இந்த வகுப்பில முதலாம்பிள்ளை நீங்கள்தான்.
பரிசு ஏதும் கேட்டுப்போடாதைங்கோ.
சின்ன சந்தேகம் !!!
//(சமாந்தரமா இருந்தாலும் மையத்தைக் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் கூடுதலான வேலையிருக்கும்)//
இதேப்படி எண்டு சொல்லுறியளே ??
சமாந்தரமாய் நாணை கீறின நாணுகளுக்கால போற ஒரு கோடு தானே வரும். அந்த கோட்டில் தான் வட்டத்தின் மையம் இருக்கும் எப்படி புள்ளிய கண்டு பிடிக்கிறது
திலகன்,
நல்ல கேள்வி.
அப்பிடிக் கீறேக்க ஒரு கோடுதான் வரும். அந்தக் கோட்டை நாங்கள் விட்டம் எண்டு எடுக்கலாம். மையத்துக்கால போய் ரெண்டு பரிதியிலயும் தொடுற நேர்கோடுதான் விட்டம்.
இந்த விட்டத்தை ரெண்டு சமபங்குகளாப் பிரிச்சா மையத்தைக் கண்டுபிடிக்கலாம்.
ஒரு கோட்டை எப்பிடி ரெண்டு சமபங்காப் பிரிக்கிறதெண்டு விளக்கத் தேவையில்லைத் தானே?
ரெண்டு நாண்களும் சரியான சமாந்தரமாக இல்லாமல் கொஞ்சம் ஏறுக்கு மாறா இருந்தாக்கூட இந்தப்பிரச்சினை வரும். அதாவது ரெண்டு நாண்களினதும் மையத்துக்கால கீறப்படுற செங்குத்துக் கோடுகள் சந்திக்கிற இடத்தில துல்லியமான புள்ளி வராது. ரெண்டு கோடுகளும் கொஞ்சத்தூரம் தொட்டுக்கொண்டு போகும். இந்த நேரத்திலும் நாங்கள் மேற்சொன்ன முறைதான் பாவிக்கோணும்.
அதாவது ரெண்டு கோடுகளும் தொட்டுக்கொண்டு போற பகுதியை இரு சமபங்காகப் பிரிச்சு மையத்தை எடுத்தால் அதுதான் வட்டத்தின்ர மையம்.
பாருங்கோ, பின்-நவீனத்துவத்தில எவ்வளவு விசயங்கள் பொதிஞ்சு கிடக்கெண்டு.
இதுகளை அறியிறதை விட்டிட்டு சும்மா அது வெறும் பேக்காட்டல், பூக்காட்டல் எண்டு நக்கலடிச்சுக்கொண்டிருக்கிறியள்.
______________________________
திலகன்,
நீர் கேட்ட கேள்விக்குரிய விளக்கம் கிடைச்சிட்டுதோ?
இல்லாட்டிச் சொல்லும், பின்-நவீனத்துவ முறையில விளங்கப்படுத்திறன்.
அண்ணே இன்னமும் சாடைய குடையுது
நீங்க சொனன விளகமெல்லாம் சரி,
இப்ப அந்த விட்டத்தை ரண்டக்கிறியள் எல்லோ அப்பயிக்க முதல் வரந்த கோட்டுக்கு செங்குத்த ஒரு கோடு வரும்
அதுவும் வந்து வட்டத்துக்கு விட்டம்
எனவே பரிதிய வைச்சுக்கொண்டு மையத்தை காண கட்டாயம் ரண்டு நாண் (or விட்டம்) வேண்டும் என்றுரன்.
----------------------------
//பாருங்கோ, பின்-நவீனத்துவத்தில எவ்வளவு விசயங்கள் பொதிஞ்சு கிடக்கெண்டு.
இதுகளை அறியிறதை விட்டிட்டு சும்மா அது வெறும் பேக்காட்டல், பூக்காட்டல் எண்டு நக்கலடிச்சுக்கொண்டிருக்கிறியள்.//
நான் எங்கையண்ண சொன்னன்
உதெல்லாம் எனக்கு விளங்காது
எனக்கு விளங்காத விசயம் எலலாம் பெரிய விசயம்.
என்ர கூட்டாளி ஒருத்தன் இருக்கிறன்.
உந்த சொலுகள அவண்ட வாயில கேட்டிருக்கிறன். இப்ப அவன கேட்டன்
பின்-நவீனத்துவம் எண்ட என்ன ஏண்டு ? ஒரு கிளம வேணுமாம் அதுவும் சவயருக்கும் /westernக்கும் வரட்டாம் .உது வேலைக்கு ஆகாது.
கடைசிய விளிப்பிலேருந்து அதிகார மையதை கண்டு பிடிச்சு அத அழிக்க வேணும். திருப்பி திருப்பி செய்யோனும் சரியாண்ண ..
//ஒரு பரிதியிலயிருந்து இன்னொரு பரிதிக்கு//
ஒரு வட்டத்துக்கு இருக்கிற பரிதி ஒண்டுதான் அண்ணை,
அதிலயிருக்கிற ரெண்டு புள்ளிக்கு எண்டு சொல்லலாம்,
புட்ஷோ பின்னவீனத்துவவாதியோ இல்லாட்டிக்கு கேத்திரகணித அறிஞரோ?
இல்லாட்டிக்கு ரெண்டுமோ?
ஏனெண்டா உந்த தேற்றம் எல்லாம் கணிதத்தில வந்தது,
பரிதியை விளிம்பெண்டு சொல்லுறது சரியாப்படேல்லை,
விளிம்பு ரெண்டு தளங்கள் சந்திக்கேக்கை உருவாகிறது,,
வட்டத்துக்கு பரிதி பரிதிதான்...
நக்கல் பதிவுதானே? இல்லாட்டிக்கு உதுதான் பின்னவீனத்துவமோ?
மற்றது, மையத்தை ஏன் கண்டு பிடிப்பான் பேந்து அழிப்பான்??
சும்மா வெட்டிவேலை மாதிரிக்கிடக்கு உந்த பின்னவீனத்துவம்...
எனது கைத்தொலைபேசி இணையத்தின் வேகத்திற்கு உரையாடல் முழுக்க தரவிறங்கி கேட்டு முடிக்க அரை மணித்தியாலத்துக்0கு மேல போட்டுது, பின்னூட்டம் ஒண்டும் வாசிக்கேல்லை, ஏற்கெனவே இவை தெளிவுபடுத்தப்பட்டிருப்பின் மன்னிக்கவும்...
பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு என்ன நடந்தது??
தமிழ்மணத்துக்கு தேவையில்லையா?
கதைக்கேக்கை கொஞ்சம் குழப்பம், எழுதேக்கை தெளிவாத்தான் இருக்கிறீங்கள். :)
பழைய கணிதம் கொஞ்சம் ஞாபகம் வந்திச்சு..
பின்னவீனத்துவம் துப்புரவுக்கு விளங்கேல்லை...
திலகன்,
//எனவே பரிதிய வைச்சுக்கொண்டு மையத்தை காண கட்டாயம் ரண்டு நாண் (or விட்டம்) வேண்டும் என்றுரன்.//
இதைத்தானண்ணை நானும் அப்போதயிலயிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறன். கீறிர ரெண்டு நாண்களும் சமாந்தரமாக வந்திட்டா என்ன செய்யிறது எண்டதுக்குக்கதான் பிறகு விளக்கம் தரப்பட்டது.
_______________________________
படியாதவன்,
பரிதி ஒண்டுதான். முதல் எழுதின பின்னூட்டங்களில சரியாச் சொல்லியிருக்கிறன், கடசியிலதான் பிசகிப்போச்சு. பரிதியின் இரண்டு புள்ளிகள் எண்டுதான் வரவேணும். எங்கயண்ணை, ஆய்வாளர் சொல்லச் சொல்ல எழுதினது. என்ர பிழைதான், அவரின்ரயில்லை.
//மற்றது, மையத்தை ஏன் கண்டு பிடிப்பான் பேந்து அழிப்பான்??
சும்மா வெட்டிவேலை மாதிரிக்கிடக்கு உந்த பின்னவீனத்துவம்...//
உந்தச் சொறிக்கதைதான் வேண்டாமெண்டிறது. ஏன் மையத்தைக் கண்டுபிடிக்க வேணும், அழிக்க வேணும் எண்டதுகளை விளங்கிப்போட்டுத்தான் கலந்துரையாடலைக் கேட்டிருக்க வேணும். அதுக்குத்தான் நாலைஞ்சு சுட்டிகள் தந்து அதுகளை முதலில வாசிச்சிட்டு வாங்கோ எண்டு சொல்லியிருக்கிறன்.
தற்போது மட்டுறுத்தல் தேவையில்லை என அறிந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
//அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.//
நீங்கள்தான் சொன்னியள் அப்பிடி, நானும் கேட்டன், விளங்கேல்லை,
அதைவிடுவம்,
வேற சில ஆக்கள்மாதிரி ஆ அந்தக் கோட்பாடு விளங்காட்டி இவற்றை புத்தகங்களைப் படியுங்கோ எண்டெலாம் சொல்லிப்போடாதையுங்கோ.
இதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க இப்போது நேரமில்லை, பிறகு பார்ப்போம்
எனக்கு பின்நவீனத்துவம் பற்றி இப்போது புரிந்து விட்டது போலவும்
அல்லது புரியாதது போலவும் தோன்றுகிறது. செல்வநாயகி முதல் மாணவி என்றால் நான் கடைசி என்று வைத்துக் கொள்ளலாம். கடைசியாக வந்ததால் கடைசி என்பதே தவிர வேறு எதுவும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். இது போன்ற மற்ற உங்கள் ஒலிப்பதிவுகளை யும் கேட்டு பயன்பெறும் ஒரு பதிவர் என்பதால் நன்றிகளை தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்..வளர்க உங்கள் சேவை.