Friday, June 01, 2007

நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு

இதுவொரு வித்தியாசமான ஒலிப்பதிவு முயற்சி. ஓடியாடித் திரிந்த இடங்களைப் பற்றிய நினைவுமீட்டலாக இருக்கும். முதற்கட்டமாக வீதியொன்றினூடான பயணமாக இது இருக்கும். பலவருடங்களின் முன் அவ்வீதியால் பயணம் செய்த நினைவை மீட்டுப் பார்க்கிறேன்.

முதற்கட்டமாக பண்டத்தரிப்புச் சந்தியிலிருந்து யாழ்ப்பாண நகர்ப்பகுதி நோக்கிய பயணம் தொடங்குகிறது. யாராவது ஒருவருக்கு இது சுவாரசியமாக இருக்கக்கூடும். பலருக்கு இது சலிப்பான ஒலிப்பதிவாக இருக்கும். ஏராளமானோருக்கு கதைக்கப்படும் இடங்களே தெரியாமலிருக்கும் சூழ்நிலையில் எப்படி சுவாரசியமிருக்கும்?
அப்படிப்பட்டவர்கள் என்வலைப்பதிவில் 'நினைவுப்பயணம்' என்ற தலைப்புடன் வரும் இடுகைகளைத் தவிர்த்துவிட்டால் போயிற்று.

இனி ஒலிப்பதிவைக் கேளுங்கள். நகர்ப்பகுதிக்குள் போவதற்குள் யாராவது துணையாக வந்து சேராமலா போய்விடுவார்கள்?



_____________________________
அனைவருக்கும் இலகுவாக ஒலிக்கோப்பின் கொள்ளளவு நன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவு: சிஞ்சாமனுசிக் கலையக பரீட்சார்த்தக்கிளை (அவுஸ்திரேலியா)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (01 June, 2007 23:30) : 

இங்கே இன்னிக்கு ஆட்டையப் போடலாமா????

 

said ... (01 June, 2007 23:35) : 

டிசெவை சைக்கிள் கேப்பில் வம்பிழுப்பதை கண்டிக்கிறேன்.

 

said ... (02 June, 2007 00:05) : 

அப்பிடியே சயந்தன்ர வீட்டுக்குப் பக்கதில இருக்கிற குளத்தில குளிச்சிட்டு போங்கோ......ஓற வழியில நல்ல கள்ளு கிடைக்கும்.சயந்தனிட்ட கேளுங்க இடம் சொல்லுவான்......வரேக்க கள்ளடிச்சியள் எண்டால் மானிப்பயில நல்ல கணவாய் கறி கிடைக்கும்.

நேரமிருந்தால் நானும் வாறன்

 

said ... (02 June, 2007 00:07) : 

நல்லாயிருக்கு வசந்தன்.. நல்லதொரு முயற்ச்சி ஊரை ஒலி வடிவத்தில் கண் முன்னே கொண்டு வாறது

இனிதே சுகமாக உங்கள் சைக்கிள் பயணம் அமைய வாழ்த்துக்கள்.

 

said ... (02 June, 2007 01:44) : 

வசந்தன்,
பண்டதரிப்பு சந்தியிலை இருந்து சித்தங்கேணிக்கு போகேக்க வாறது பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி. மற்ற பாடசாலைகளை பற்றி தெரியாது, அல்லது நினைவில் இல்லை.

வி.ஜெ.சந்திரன்

 

said ... (02 June, 2007 03:42) : 

தம்பி சைக்கிள் பஞ்சர் ஆகாத எந்தப்பாதையிலயெண்டாலும் போம் ராசா

 

said ... (02 June, 2007 03:49) : 

ரவுணுக்குள்ளை எதாலை போகப் போறீர்.. சங்கானையாலயோ.. காலமை அல்லது ஒரு 2 மணி போல போறதெண்டால் நானும் வாறன். போற வழி முழுக்க மானிப்பாய் லேடிஸ் கொலிஜ் ஆக்களைப் பாக்கலாம். பிறகு அப்பிடியே தட்டாதெரு சந்தியைத் தொட்டு கொஞ்சம் போய் `ஹின்டு லேடிஸ் கொலிஜ்ஜடியாலை ரவுணுக்குள்ளை போவம் வாறிரோ.. கொஞ்சம் சுத்துத் தான். பரவாயில்ல வாரும். பொழுது போகும்.

மற்றது இந்த பகிடி தெரியுமோ.. பஸ் கொண்டக்டர் சொன்னாராம்.. மானிப்பாய் சண்டிலிப்பாய் சங்கானை சித்தன்கேணி பண்டத்தரிப்பு சில்லாலை ஏறு எண்டு. அதுக்கு ஒராள் சொன்னாராம் சில்லாலை ஏறினால் கண்ணாடி விடுகுதில்லையெண்டு.

சில்லாலை இன்னாசித்தம்பிகாரரை தெரியுமோ..?

 

said ... (03 June, 2007 10:05) : 

கெள்வி கேட்பவன்,
ஆட்டையைப் போடலாம், ஆனால் மட்டுறுத்தல் இருக்கும்.
_______________
கண்டிப்பவன்,
வருகைக்கு நன்றி. இன்னும் குறிப்பிட்ட நபர் வரவில்லை. வந்ததும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
_______________
சோமி,

//அப்பிடியே சயந்தன்ர வீட்டுக்குப் பக்கதில இருக்கிற குளத்தில குளிச்சிட்டு போங்கோ..//

ஏதாவது கேணியைக் கீணியைச் சொல்லிறியளோ?

கள்ளடிக்கிற இடம், கணவாய் கிடைக்கிற இடம் எல்லாம் 'தண்ணி பட்ட பாடு' போல கிடக்கு.

ஆனால் நீங்கள் ஆனைக்கோட்டை - உயரப்புலத்தைச் சொல்லிறியள் எண்டு நினைக்கிறன். ஞாபகமிருக்கோ 'சும்மா ரீ றூம்' உம் அதன் சுற்றாடலும்.

ம். நேரமிருந்தால் வாங்கோண்ணை, ஒண்டாகவே போய்வரலாம்.

 

said ... (04 June, 2007 03:37) : 

நினைவுப் பயணம் அருமை; சொல்லும் இடங்கள் தெரியாவிட்டாலும் சொல்லும் விதத்தால் சலிப்புத்தட்டவில்லை.நன்றாக இருக்கிறது.

 

said ... (04 June, 2007 14:26) : 

சின்னக்குட்டியர்,
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சந்திரன்,
தகவலுக்கு நன்றி. அப்ப சந்தியில இருக்கிறது மத்திய கல்லூரியா இருக்க வேணும் எண்டு நினைக்கிறன்.
________________________
//பூச்சிமருந்தும் பொலிடோலும் said...
தம்பி சைக்கிள் பஞ்சர் ஆகாத எந்தப்பாதையிலயெண்டாலும் போம் ராசா //
வாங்கோண்ணை, எங்க உங்கட ஆசியில்லாமல் எங்கட பயணம் தொடங்கீடுமோ எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தன்.
அதுசரி, 'பஞ்சர்' எண்ட சொல்லை நாங்கள் பேச்சுவழக்கில பாவிச்சனாங்களோ? எனக்கெண்டால் அப்பிடி ஞாபகமில்லை. 'ஒட்டு' எண்டுதான் பாவிச்ச ஞாபகம். எதுக்கும் மற்றாக்களும் சொல்லட்டும்.

 

said ... (05 June, 2007 10:01) : 

இன்று தனது 29வது பிறந்த தினத்தை கொண்டாடும் மொக்கை பதிவு மன்னன் சயந்தனுக்கு எமது வாழ்த்துக்கள்...........

 

said ... (06 June, 2007 15:37) : 

என்னடாப்பா செய்யிறியள்? இன்னும் கிளம்பேலயோ?
இண்டைக்கு நாள் சரியில்லை. திரும்பி சில்லாலைக்குப் போம்.

 

said ... (08 June, 2007 06:11) : 

இப்ப விழங்கிது யாழப்பாணம் போனது என்ன அலுவலுக்கெண்டு எங்கடை ஊர் மானிப்பாய் லேடிஸ் அக்களை பாக்கதானே ம்...ஏதோ தப்பி வெளி நாடு வந்திட்டீர் நல்தொரு முயற்சி பாராட்டுகள்

 

said ... (06 October, 2007 22:54) : 

நீர் பண்டத்தரிப்புச் சந்தியில குந்தி நாலு மாசமாச்சு. இன்னும் என்னதான் செய்யிறீர்?

 

said ... (21 March, 2008 22:32) : 

வணக்கம், உங்கட பதிவு பண்டத்தரிப்பைப்பற்றி நல்லா இருந்திச்சுது, கண்டியளே! இதில பண்டத்தரிப்புச் சந்தியிண்ட படம் ஒண்டைப்போட்டாய் நல்லா இருக்குமெண்டு நான் நினைக்கிறன். ஆனால் நீங்கள் இட்ச்சுட்டினை மட்டும் காட்டி உரையை நிகழ்த்தாமல், அவ்விடத்தில நடக்குற சம்பவத்தையும் காட்டி சொன்னீங்கள் எண்டால் புண்ணியமா இருக்கும், இந்த பண்டத்தரிப்பு சந்தியில ஆமிக்காரன் பெரிய சென்ரி போட்டு இருந்தவனெல்லோ, அதை எடுக்கச்சொல்லி தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குணேந்திரன்(இவர் அண்மையில கம்பசுக்குள்ள சுட்டுக்கொல்லப்பட்டார்) ஆமிக்காரனோட சண்ட பிடிச்ச இடம், இது எனக்கு தெரிஞ்சது, அவர் ஏன் சண்டை பிடிச்சாரெண்டால் வீதியோரமாக நிலக்கீழ் காப்பரணமைத்து தங்கியிருந்த ஆமிக்காரர் அதுக்குள்ள இருந்து கொண்டு மேலால போற ஆக்களைப்பார்க்கினம் எண்டு சொல்லித்தான். அதுக்கு முன்னாலதான் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி உள்ளது. பாதிக்கப்படும் மாணவர்களுக்காக குரல்கொடுத்த தீபம் ஒன்று அணைந்துவிட்டது.அத்தீபதிற்காக நாம் ஒருநிமிடம் நம் விடுதலையை நேசிப்போம்....

 

post a comment

© 2006  Thur Broeders

________________