Monday, August 01, 2005

போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.

இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.

அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.

சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.

அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.

இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.


போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.

நகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்




படஉதவி:- அருச்சுனா இணையத்தளம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"போராட்டத்தில் பாடகனும் நடிகனும்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (01 August, 2005 23:39) : 

அன்பு வசந்தன்,சிட்டுவின் பாடல்கள் என்னிடம் நிறைய இருக்கிறது.அற்புதமான பாடகன்.அவனது குரலை இன்றும் கேட்பதுண்டு.கூடவே கோணமாமலையில் கொடி ஏறவேண்டுமென்ற பாடலையும் அடிக்கடி கேட்பதுண்டு.புலிகள் இயக்கிய பல படங்கள் அற்புதமான படங்கள்.ஒரு படத்தில் தாயொருத்தியின் இருபிள்ளைகளும் போராளிகளாகவும்,மகள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள்.கணவின் கூழ்காச்சிக் குடிப்பதற்காக நண்பர்களை அழைக்க சயிக்கிளில் செல்கிறார்,அந்தோ வீதிவிபத்தால் மரித்துவிடுகிறார்.தாய் தனித்துவிடும்போது-தலைமைப்பீடம் ஒரு மகனை தாயோடு போகும்படி கூறுகிறது.இருவரில் ஒருவரைத் தாயே விரும்பி வைத்துக்கொள்ள ஆலோசனை கூறப்பட்டது.மக்களிருவரும் ஒதாக்குதலில் பங்கு பற்றிவிட்டு தாயிடம் செல்ல உத்தேசிக்கிறார்கள்.இருவரும் வேறு இடங்களில் வீராச்சாவடைகிறார்கள்.தாயிடம் ஒருவடல் வருகிறது.கலங்கும் தாயை மறுபிள்ளையின் வருகைக்காக ஏங்குகிறார்.மற்றவர் வருவதற்குச் சுணங்குகிறது... வழிகளில் நீர்கோர்க்கிறது எழுதமுடியவில்லை...

 

said ... (04 December, 2006 15:14) : 

சிறிரங்கன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________