Sunday, July 03, 2005

ஷ்ரேயா அக்காவுக்குப் பதில்.

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?

அடடே!இப்படியொரு சக்தி கிடைத்தால் எப்படியிருக்கும். அச்சக்தியை வைத்துச் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன. அதற்குத்தான் இருக்கவே இருக்கின்றனவே என் நாட்டில் சிங்கள இராணுவ முகாம்கள்.

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

இதற்குரிய பதில் முதற்கேள்விக்குரிய பதிலோடு சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புத்தான்.

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

ஆச்சரியமாயிருக்கலாம். முதல் ஞாபகமும் இராணுவம் சம்பந்தப்பட்டது தான்(ஏறக்குறைய மூன்றரை வயது). ஒரு சுற்றிவளைப்பும் என் வீட்டிலிருந்தவர்கள் உட்பட சில கைதுகளும்.

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

இது சற்றுக் கடினமானது தான். இருந்தாலும் நான் ஆசைப்படும் பலவற்றுள் ஒன்று மனிதனின் முதலாவது பறப்பு முயற்சியில் பங்கெடுத்தல். அதாவது வானத்தில் பறந்த முதல் மனிதன் நானாக இருக்கும் சந்தர்ப்பம். (கண்டு பிடிப்பாளிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது சந்தர்ப்பத்தைப் பெற்றிருப்பேன். என் அனுபவத்தைப் பற்றி வலைப்பதிவிலும் எழுதியிருப்பேன்)

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

கரப்பான் பூச்சிகள்: நிறையப் பேரைப் போல் நான் பயப்படுவதில்லை. அருவருப்பு சிறிதளவு உண்டு. அது உண்ணக்கூடிய உயிரினம் என்று அறிந்தபின், அதை உணவாக உட்கொண்டவரை (விரும்பித்தான். கட்டாயத்தால் அன்று) சந்தித்தபின் உண்ண ஆசை. ஆனால் எப்படி? எந்த வடிவத்தில் என்று சரியாகத் தெரியாததால் இதுவரை உண்ணவில்லை. வேறு எதுவும் அதுகுறித்து நினைப்பதற்கில்லை.


நான் புதிதாகக் கேள்விகள் கேட்கப்போவதில்லை. புதிதாக யாரையும் போட்டிக்கு அழைக்கப்போவதுமில்லை. விரும்பியவர்கள் நீங்களே கேள்வியைத் தயார் செய்து பதிலளியுங்கள். அல்லது ஷ்ரேயா கேட்ட கேள்விக்கே பதிலளியுங்கள்.

நன்றி.
வரட்டுமா?
ஷ்ரேயா அக்கா!
திருப்திதானே?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஷ்ரேயா அக்காவுக்குப் பதில்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (07 July, 2005 01:26) : 

\\உங்களுடைய முதல் ஞாபகம் என்ன? //
எனக்கு நான் முதன் முதலாக நாலு வயசில கடையில சாப்பிட்ட வடையும் சம்பலும்தான் ஞாபகமிருக்கு வசந்தன்.

 

said ... (07 July, 2005 13:39) : 

அட..இந்தப்பதிவை இன்டைக்குத்தானே பாக்கிறன்! பதில் எல்லாம் நல்லா இருக்கு. யார் கரப்பொத்தானைப்பற்றி உம்மட பதில் மாதிரிச் சொல்லப்போகினம் என்டு யோசிச்சுக் கொண்டிருந்தன். கரப்பானை சாப்பிடுறவயின் படமோ "குழந்தைகளுடன்..." என்று போட்டிருக்கிறீர்?

ஏன் நீங்க ஒருத்தரையும் கேள்வி கேட்கவில்ல? :o(

ஆனாலும் இதப் பிள்ளைகள் சரியான மோசம்.."ஷ்ரேயா அக்கா" என்டத் தொடங்கீட்டினம்! ஏதோ அன்ரி, பாட்டி மாமி என்டு கூப்பிடாதவரைக்கும் சரிதான்! :o)

 

said ... (07 July, 2005 15:23) : 

உங்கள அக்கா எண்டு கூப்பிடுறதுக்கு நான் நல்ல ஒரு காரணம் கண்டு பிடிச்சிருக்கிறன். அது என்ன தெரியுமோ?
உங்கட பேர் ஆங்கிலத்திலயும் தமிழிலயும் தெரியேக்க இடையில aka எண்டு இருக்கெல்லோ?
அதுதான் நான் அப்பிடிக் கூப்பிடக் காரணம்.
எப்பிடி என்ர காரணம்?

மதி கண்டசாமி (mathy kandasamy)யிட்டயும் நல்ல பேச்சு வாங்கித்தான் நிப்பாட்டினனான். இப்ப நீங்கள்.
சினேகிதி!
மையடிக்காத கண் தான் வடிவு.

 

said ... (07 July, 2005 15:24) : 

அட!
படங்களில இருக்கிற ஆக்கள நான் சொல்லேல. அது வன்னியில தான். சுத்தத் தமிழங்கள்.

 

said ... (07 July, 2005 16:23) : 

வன்னியில கரப்பொத்தான் சாப்பிடுறது வழமை போல! :o(

ஒருக்கா யாழ் போயிற்று வாற வழியில் ட்ரெய்ன் எடுக்க முன்னம் ஒரு கடையில போய்ச் சாப்பிட்டனாங்க. என்ட நல்ல காலத்துக்கு சூடா இருக்கிற ஒன்டும் நான் சாப்பிடுறதில்ல..தந்த சாப்பாடோ சுடச்சுட. ஒரு வெட்டு வெட்டுவம் என்டு சாப்பாடை ஆற வைக்க நான் தட்டில சோற்றை பரத்தினன்..இப்ப நினைச்சாலும் என்னவோ செய்யிது..என்ன இருந்துது தெரியுமோ ஒரு கரப்பான் முட்டை. அரியண்டம்!

வசந்தன் கவனம்...சினேகிதியின்ட கண்ணில கனபேர் கண் வைக்கினமாம் என்டும் கண்ணூறு கழிச்சுக் கழிச்சு தாங்கள் களைச்சுப் போச்சினமாம் என்டும் அவவின்ட குடும்பத்தார் அறிக்கை விட்டிருக்கினம்..தெரியாதோ! :oD

 

said ... (07 July, 2005 16:25) : 

//உங்கட பேர் ஆங்கிலத்திலயும் தமிழிலயும் தெரியேக்க இடையில aka எண்டு இருக்கெல்லோ?
அதுதான் நான் அப்பிடிக் கூப்பிடக் காரணம்.//

இப்ப ????? பிரச்சனை தீர்ந்திட்டுது போல கிடக்கு..நான் பேரை பழையபடி ஷ்ரேயா என்டு மாத்தப்போறன். aka யை அக்கா என்டு வாசிக்கிற உம்மை...(பொறும் பொறும் எப்பவாவது மெல்பேண் வருவன் தானே!) :o)

 

said ... (07 July, 2005 20:18) : 

எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்

வசந்தன் கரப்பான் பூச்சி சாப்பிட விருப்பமோ அப்ப புடிச்சு எண்ணையில பொரிச்சு போட்டு உப்பு , தூள் போட்டு சாப்பிடும் :-))

12.45 7.7.2005

 

said ... (08 July, 2005 22:13) : 

also known as-க்கு இவ்வளவு பகிடியா ?
:-((

 

post a comment

© 2006  Thur Broeders

________________