Wednesday, February 07, 2007

நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்

குரற்பதிவும் இடப்பட்டுள்ளது.
கேட்டுக்கொண்டே வாசியுங்கள்.

EnKavithaihal.mp3


கவிதை ஒன்று - விலகுகிறது இருள்

நதி,
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி
அவர்களின் மொழியிலேயே
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
சுகுணா திவாகர்
கூறிய வியப்புத்தான் -
எழுத்து நடையைப்பார்த்து-
எனக்கும் வந்தது.
....
புதிய மொழிநடைகள்,
பரந்த வாசிப்பு,
பன்முகப்பட்ட்ட முயற்சிகள்
இல்லாமற்தான்
புலம்பெயர் இலக்கியம்
தேங்கிக்கிடக்கின்றது.
தேக்கமுடைக்கும் புள்ளிகள் -முக்கியமாய்
உங்களைப் போன்ற
பெண்படைப்பாளிகளிடமிருந்து
புலத்தில்(?) ஆரம்பிப்பது
உண்மையிலேயே
மகிழ்ச்சி தருகின்றது.

ஈழத்துக் கவிதைகளுக்கு
ஒருகாலத்தில்
தமிழ்ச்சூழலில் மதிப்பிருந்ததுபோல
இனி மீண்டும் வருவதாயிருந்தால்
அது புலத்தில்/ஈழத்தில்
எழுதும்
பெண்படைப்பாளிகளால்தான்
வரமுடியும் என்று
யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருள்
விலகுகிறது போலும் :-)..

~~~~~~~~~~~~~~~~~
கவிதை இரண்டு -ஏன் வரவில்லை பாராட்டு?

இந்த மாதிரியான
நல்ல கதைகளைத் தேடி
ஏன் அதிகமும்
பாராட்டுகள்
வருவதில்லை?
சிந்தாநதி
பங்காளி
போன்ற
உங்கள் ரசிகப்பரிவாரங்கள்
எங்கே?
ஒருவேளை
நான் பாராட்டினால்
அதிகமாய்
பாராட்டுக் கொமொண்ட்கள்
குவியுமோ என்னவோ?

_________________________________
மேலே இடப்பட்டவை கவிதையா என்று சந்தேகம் கொள்பவர்கள் தயவு செய்து என் குரற்பதிவைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கவும்.
_________________________________
"வசந்தன், சுகுனாதிவாகர், டிசே போன்ற பெரிய ஆட்களெல்லாம் நிறையச் சொல்லிவிட்டபடியால்"
என்று என்னையும் மற்றவர்களுடன் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட்ட அம்மணி செல்வநாயகியின் வாக்குப் பொய்க்கக் கூடாதென்பதற்காக சிரமப்பட்டு நானெடுத்த முயற்சியிது.
ஆம்! நானும் பெரிய அள்தான்.

இதன் முதற்கட்டமாக நானெழுதிய இரு கவிதைகளை இங்குத் தந்துள்ளேன்.
கவிதை எழுதியது நானென்றாலும் அதன் பாடுபொருள், என்னோடு 'பெரிய மனிதர்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மற்ற இருவருக்குமுரியது.
தமிழ்நதியின் "அந்த எசமாடன் கேக்கட்டும்" என்ற பதிவில் அவர்கள் இருவரும் இட்ட பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து நானெழுதிய கவிதைகளே மேலே தரப்பட்டவை.

பெரிய ஆளென்று உறுதிப்படுத்தும் அடுத்த கட்டம் கதையெழுதுவதுதான்.
யாருடைய கருத்தாவது மாட்டாமலா போய்விடும்?

எதிர்பார்த்திருங்கள் "நான் பெரிய ஆள்-2".
அதுவரை வணக்கம் கூறிவிடைபெறுவது

அ.ஆ.இ. வசந்தன்.........

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (08 February, 2007 01:14) : 

எழுதிக்கொள்வது: வி. ஜெ. சந்திரன்

வணக்கம், வசந்தன் அண்ணை...
நீங்கள் சொன்னாலும், சொல்லாட்டிலும் நீங்கள் நல்லா கவிதையள் எழுதுவியள் எண்டதும், அது உங்கடை வலைப்பதிவை விட வேற இடங்களிலை வந்திருக்கு எண்டதும் , அதிலை சிலதை நானும் வாசிச்சிருக்கிறன் எண்டதையும் சொல்ல விரும்புறன்

8.45 8.2.2007

 

said ... (08 February, 2007 01:15) : 

கவிதையில் ஸ்மைலி போடுவதில்லை. கவனியும்.

 

said ... (08 February, 2007 01:17) : 

(இத போட மறந்து போனனுங்கோவ்.....)

:)))

 

said ... (08 February, 2007 01:33) : 

சூப்பராயிருக்கண்ணா... வாய் சுழுச்சிக்க போது. பார்த்து..விக்கபோகுது... பார்த்து... இந்தாங்க எப்பன் சோடா குடியுங்கண்ணா..(பெரியாளான படியால் சடங்கு கிடங்கு நடத்த மாட்டம்....... அண்ணா என்ற மரியாதை மட்டும் தான்)_

 

said ... (08 February, 2007 03:32) : 

உண்மையிலேயே கேட்கும் எங்களுக்கு ஒரு சிலிர்ப்பை உமது கவிதை தந்திருந்தது. அதுவும் குரல்களில் ஏக்கமும் அழுகையும் இழையோட நீங்கள் அதை வாசித்த விதம் அருமை. நானும் ஒரு கட்டுரை எழுதலாம் என்று இருந்தேன். அதை கவிதையாகவே எழுதிடலாம் என முடிவெடுத்துள்ளேன்

 

said ... (08 February, 2007 10:14) : 

வி.ஜெ.சந்திரன்,
வருகைக்கம் கருத்துக்கும் நன்றி.

இந்த ஆட்டத்துக்கு நான் வரேல. நீங்கள் வேற ஆரேன் எழுதினதுகளை நானெழுதினதெண்டு வெளியிட, பிறகு நான் தான் பிரச்சினைப்பட வேணும்.
;-)

டி.சே,
//கவிதையில் ஸ்மைலி போடுவதில்லை. கவனியும்.//

அதை நீர் அங்க பின்னூட்டம் போடேக்க கவனிச்சிருக்க வேணும்.
உம்மட பின்னூட்டத்தை அடிப்படையா வைச்சு கவிதை எழுதேக்க, உம்மட ஸ்மைலியையும் ஏதோ ஒரு விதத்தில வெளிப்படுத்தத் தானே வேணும்? இல்லாட்டி முழுமையில்லையெல்லோ?
ஆனா குரற்பதிவில அந்த இடத்தில மெலிதா சிரிச்சிருக்க வேணுமெண்டு நினைக்கிறன்.

 

said ... (08 February, 2007 11:36) : 

பெரிய ஆள் -2 இடுகையை ஆவலுடன் எதிர்பார்த்து.....(ஸ்மைலி போடவில்லை என்பதை கவனிக்கவும்)

பின்குறிப்பு:

கவிதைகள் எழுத்து வடிவத்துக்கும், குரல்வடிவத்துக்கும் இடையே ஒரு சிறு சொற்பிழை வந்திருந்தது. பெரிய ஆக்களிடம் இதெல்லாம் சகஜம்தான்.

 

said ... (08 February, 2007 13:24) : 

எங்கை நானெழுதின பின்னூட்டத்தைக் காணேல்லை...? 'கலாய்க்க'என்ரை பக்கம்தான் கிடைச்சுதா... மக்களே...!மாட்டாமலா போவீங்க...? இப்ப திருப்தியோ... வைன் அடிச்சுப்போட்டு சிக்கன் புரியாணி,பொரியல் எல்லாம் சாப்பிட்ட நிறைவோ.... கெக்கட்டம் விட்டுச் சிரிக்க வேணும்போலை கிடக்கோ...ஆராவது என்னாலை சிரிச்சுச் சந்தோசமா இருந்தாச் சரி. அது சரி... ஊரில மைக் டெஸ்டிங்குக்கு எண்டு ஆரேன் கூட்டிக்கொண்டு போறவை போலை... இல்லையெண்டா இப்பிடியெல்லாம் 'எக்கோ' பண்ணேலாது.
குரல் நல்லாத்தான் இருக்கு. என்ன... ஓவரா அழுது போட்டியள்... என்ரை கீ போட்டெல்லாம் கண்ணீர் மயம்.

 

said ... (08 February, 2007 13:56) : 

\\கவிதைகள் எழுத்து வடிவத்துக்கும், குரல்வடிவத்துக்கும் இடையே ஒரு சிறு சொற்பிழை வந்திருந்தது. பெரிய ஆக்களிடம் இதெல்லாம் சகஜம்தான்\\

:-)

 

said ... (08 February, 2007 15:36) : 

வசந்தன் *அய்யா,
உமது உணர்ச்சி ததும்பும் குரலை இப்போதுதான் கேட்கும் சந்தர்ப்பம் வந்தது. வெளியே -15C குளிர் எல்லாம் மறைந்து கோடை வந்தது மாதிரியான உணர்வு.
....
/என்ரை கீ போட்டெல்லாம் கண்ணீர் மயம்./
நதி,இதுநாள் வரை தொலைக்காட்சித்தொடர்கள் பார்த்துத்தான் பலர் இப்படி உணர்ச்சிவசப்படுவார்கள் என்று நினைத்தேன். எல்லாம் வசந்தனின் குரலின் மகிமைதான் :-).

*சின்னக்குட்டியே 'அண்ணா என்று அழைக்கும்போது, நான் 'அய்யா' என்று அழைப்பதே முறையாகும்.

 

said ... (08 February, 2007 15:40) : 

//ஈழத்துக் கவிதைகளுக்கு
ஒருகாலத்தில்
தமிழ்ச்சூழலில் மதிப்பிருந்ததுபோல
இனி மீண்டும் வருவதாயிருந்தால்
அது புலத்தில்/ஈழத்தில்
எழுதும்
பெண்படைப்பாளிகளால்தான்
வரமுடியும் என்று
யோசித்துக்கொண்டிருந்தேன்.//

மிக நல்லாயிருக்கு வழ்த்துக்கள்.

mikavum

 

said ... (08 February, 2007 17:27) : 

சின்னக்குட்டியர்,
வருகைக்கு நன்றி.
என்னை அண்ணா எண்டுறதிலதான் உங்களுக்கு எவ்வளவு சந்தோசம்?

சயந்தன்,
நான் சொல்ல வந்ததைச் சரியாப் பிடிச்சிட்டீர்.
இனி கவிதையாகவே எழுதித் தள்ளும்.

'தல' பொடிச்சியிட்ட எப்பிடித்தப்பிறது எண்டதுதான் இப்ப என்ர யோசின.

செல்வநாயகி,
வருகைக்கு நன்றி.

நீங்கள் சொல்லிற பிழை ரெண்டாவது கவிதையின்ர கடசி வரிகளை ரெண்டாவது தரம் வாசிக்கேக்க தானே?
'அதிகமா' எண்டது அதிகமாக ஒருதரம் வந்திட்டுது.

சரிசரி, பெரியாக்களுக்கு இதெல்லாம் பழக்கம் தான்.
ஆனா உப்பிடி அணுவணுவா ஆராஞ்சிருக்கிறியளே என்ர கவிதைய?

 

said ... (08 February, 2007 19:37) : 

தமிழ்நதி,
//எங்கை நானெழுதின பின்னூட்டத்தைக் காணேல்லை...? //

பெரியாக்கள் பட்டியலில இருந்த ஆக்களின்ர கருத்தை மட்டும்தான் கவிதைக்கு எடுத்தனான்.
உங்கட விசைப்பலகை நனைஞ்சதெண்டா நீங்கள்தான் ஓவரா அழுதிருக்க வேணும்.

சினேகிதி,
வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி.

டி.சே,
அப்ப முதற்பின்னூட்டம் ஒலிப்பதிவைக் கேக்காமல்தான் போட்டனீரோ?
என்ர குரலின் மகிமையைச் சொன்னதுக்கு நன்றி.
அடுத்த கட்டமாக பாட்டுக்கள் பாடி பதிவாக்கிற எண்ணம் வேற இருக்கு.

//*சின்னக்குட்டியே 'அண்ணா என்று அழைக்கும்போது, நான் 'அய்யா' என்று அழைப்பதே முறையாகும்.//

அதென்ன 'சின்னக்குட்டியே' எண்டு இளப்பமான ஏகாரம்?

 

said ... (09 February, 2007 01:58) : 

செல்லி,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 

said ... (09 February, 2007 02:18) : 

நல்ல தரமான காமெடி. (பகிடின்னு சொல்லணுமா?)

நீங்க விமர்சித்திருப்பவர்களை (விமர்சனம்?) நான் முழுவதும் படித்திருக்கவில்லை என்றபோதும் புதுக்கவிதைகள் பற்றிய பொதுவான கிண்டல் என்றே எடுத்துக் கொள்கிறேன், ரசித்தேன்.

:))

 

said ... (10 February, 2007 00:26) : 

சிறில்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காமெடியை பகிடி எண்டே சொல்லலாம்.

ஆனா நீங்களும் வந்து பகிடி விட்டிட்டுப் போறியள்.
பெரிய மனுசனா வாறதுக்கு சிரமப்பட்டு நானெழுதின கவிதைகள கூசாமல் ஒருவரியில நகைச்சுவை எண்டு சொல்லிப்போட்டுப் போறியள்.
போதாததுக்கு அந்த ரெண்டுபேரோடயும் கொழுவி விட்டுப் போறியள்.

இது நியாயமா?
;-( ;-(

 

said ... (10 February, 2007 00:29) : 

அழுவ அழுவயா வருதுங்கண்ணா

 

said ... (10 February, 2007 00:59) : 

விரைவில் வசந்தன் எழுதிய காதல் ரசம் சொட்டும் கவிதை.. காதலர் தின ஸ்பெசல்.. கேட்க வாசிக்க தவறாதீர்கள்..

 

said ... (10 February, 2007 10:58) : 

வசந்தன்!

இதென்னப்பா நீர் பெரிய ஆளென்டிறத பிரபா இப்பிடி அழுது அழுது சொல்லிறார்.

 

said ... (10 February, 2007 13:54) : 

வசந்தன் அண்ணை,

கலக்கிட்டீங்கள் போங்கோ. அப்பிடியே ஏதாவது வீடியோ கீடியோ சேத்து யூ-ட்யூப்ல போட்டீங்களெண்டா அதுதான் அதிகத்தவை தரவிறக்கியதாகவிருக்குமெண்டு நினைக்கிறன்.

அங்க உங்கட ஊர்க்காறர் ஏன் அழுகிறேர். பக்கத்து ஊர்க்காறரா இருந்தும் அவரின்ர கவிதையை நீங்கள் கண்டுகொள்ளேல்ல எண்டு அழுகிறேரோ?

கவிஞர் வசந்தன் அவர்களே, தயவு செய்து சயந்தனின் கவிதைகளையும் கண்டுகொள்ளவும். அவருடைய செல்ல மிரட்டலைக் கவனித்தீர்களா?

தலை பொடிச்சியிடம் போட்டுக்கொடுக்கப் போய்க்கொண்டேயிருக்கும்..

கவிஞர் வசந்தனின் தொண்டரடிப்பொடீஈஈஈ..

மதி மதி மதி (எதிரொலிங்கோ!)

 

said ... (11 February, 2007 01:10) : 

கானாபிரபா,
அழாதைங்கோ செல்லம்.

சயந்தன்,
உந்த விளையாட்டுக்கள் வேண்டாம்.

மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கு நன்றி.
சிலருக்கு நாங்கள் பெரியாக்கள் ஆகிறதில பொறாமைதான்.

மதி,
நீங்கள் என்னைத் தாராளமா அண்ணை எண்டு கூப்பிடலாம் (புதுசா வாற ஆக்களுக்கு உங்கள இளமையாக் காட்டிறதுமாகுது)
வயசு மூத்த ஆக்கள் கூப்பிட்டாக்கூட பொறுத்துக்கொள்வோம்.
சிலரைப்போல இளைய ஆக்கள் உறவுமுறைசொல்லிக் கூப்பிட்டாலே மூஞ்சைய நீட்டிக்கொண்டிருக்க மாட்டம்.
;-)

 

post a comment

© 2006  Thur Broeders

________________