எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...
அண்மையில் மெல்பேணில் நடந்த எழுத்தாளர் விழாவில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவற்றின் முதற்பகுதியை ஒலிப்பதிவாக இங்கு இணைக்கிறேன். அன்றைய விழாவில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி கருத்தரங்கில் எஸ்.பொ. அரைமணித்தியாலம் கதைத்தவற்றையே மூன்று பாகங்களாக இங்கு இணைத்துள்ளேன். mp3, rm ஆகிய வடிவங்களில் ஒவ்வொரு கோப்பும் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான ஒலிப்பதிவைக் கேட்கலாம். யாருக்காவது ஒலிக்கோப்பைத் தரவிறக்க வேண்டுமானால் கேட்கவும், இணைப்பைத் தருகிறேன். ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் சிலவற்றைச் சொல்கிறார். கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதில் சில பெயர்கள் தெளிவில்லை. தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம். எஸ்.பொ. அவர்களின் அன்றைய முத்துக்கள் சில: **ஆறுமுகநாவலரை விடவும் தமிழுக்கு அதிகம் சேவை செய்தது விபுலானந்தர் தான். **வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது. கிழக்கில் போய் உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென்று கேட்டால் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி என்றுதான் பதில்வரும். இவர்களை ஆதர்சமாக வைத்துக்கொண்டிருந்தால் எப்படி உருப்படியான படைப்பை உருவாக்குவது? (குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேலான மயக்கம் யாழ்ப்பாணத்தாரை விடவும் கிழக்கில் அதிகமா???) **யாழ்ப்பாண மண்வாசனையைச் சரியாக கதைகளில் கொண்டுவந்த முன்னோடி இலங்கையர்கோன். (இவரின் வெள்ளிப் பாதரசம் கதையைச் சிலாகித்தார்) **எட்டாண்டுகளாக நைஜீரியாவில் எழுத்துலக அஞ்ஞாதவாசம் இருந்த தன்னை மீண்டும் எழுத வைத்தது லெ.முருகபூபதி தான். **சிறுகதை இலக்கியம் மீள உயிர்ப்புடன் எழுவது புலம்பெயர்ந்தவரால்தான். இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு ஒலிப்பதிவை முழுமையாகக் கேளுங்கள். தரமற்ற ஒலிப்பதிவுக்கு மன்னிக்க. எஸ்.பொ. பேச்சு - பகுதி ஒன்று எஸ்.பொ. பேச்சு - பகுதி இரண்டு
எஸ்.பொ. பேச்சு - பகுதி மூன்று
________________________________________________ அன்றைய விழாவில், கருத்தரங்கு முடிந்ததும் கேள்வி - பதில் நேரத்தில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவை, பின்னர் விமர்சன அரங்கு முடிந்ததும் அவர் நிகழ்த்திய பதிலுரை, இறுதியில் பவளவிழாப் பாராட்டு நிகழ்வு முடிந்ததும் அவர் நிகழ்த்திய ஏற்புரை என்பவற்றை அடுத்த பதிவில் ஒலிப்பதிவாக இணைக்கிறேன். இவற்றில், நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வாசகனை பேப்பட்டம் கட்ட எழுத்தாளராலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தபடும் ஓர் உத்தியேயன்றி வேறில்லை என்ற கருத்தைச் சொன்னதோடு இடையில் எழுத்தாளர் சாருவையும் இழுத்தது; சாகித்திய மண்டலப் பரிசு தனக்கு இதுவரை கிடைக்காததை வருத்தமாகவோ நையாண்டியாகவோ வெளிப்படுத்தியது; போன்றவை வருகின்றன. Labels: இலக்கியம், ஈழ அரசியல், எழுத்தாளர், ஒலி, படைப்பாளி, விவாதம் |
"எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்..." இற்குரிய பின்னூட்டங்கள்
ஆகா வருக வருக புதிய புளக்கர் சங்கத்துக்கு ;-)
ஒலிப்பதிவைப் பின்னர் கேட்கிறேன்.
நன்றி வசந்தன் ஒலிப்பதிவுகளை இணைத்தமைக்கு . இன்னும் கேட்க தொடங்கவில்லை. கேட்டு விட்டு பார்ப்போம்
வசந்தன்!
பகிர்வுக்கு நன்றி. கேட்டபின் கதைப்போம்.
வசந்தன்!
எஸ் பொ வின் "நனவிடை தோய்தல்" படித்ததில் இருந்து; மனிசனில் எனக்கு ஒரு மட்டுமரியாதை!
இரவு கேட்கிறேன். அவர் பேச்சுக் கெல்லாம் நான் பதில் சொல்லுமளவுக்கில்லை.அவர் உள்ளக்கிடக்கைகள் நாயமானவையாகவே இருக்கும்!
யோகன் பாரிஸ்
கானா பிரபா,
ஒருவழியா எங்களையும் பிடிச்சு ஏத்திக்கொண்டு போட்டான்.
நான் மாறினதில உங்களுக்குதான் எவ்வளவு சந்தோசமம்.
ஆனா செய்கூலி சேதாரம் இல்லாமல் மாறிட்டம்.
சிலரைப்போல அழுது குளறி ஆர்ப்பாட்டம் பண்ணி மாறேல. சோதினைப் பதிவெண்டு போட்டுப்புலம்பேல.
பெயின்ற் கடைக்குப்போய் நிறம் மாத்தமாதிரி நிமிசத்துக்கொரு நிறம் காட்டி விளையாடேல.
சத்தமில்லாமல் அப்பிடியே மாறினோம் கண்டியளோ?
;-)
~~~~~~~~~~~~~~~~~~
சின்னக்குட்டியர்,
கேட்டிட்டுச் சொல்லுங்கோ.
~~~~~~~~~~~~~~~~~~
மலைநாடான், யோகன்,
கேட்டிட்டுச் சொல்லுங்கோ.
நீர் தான் கடைசியா மாறுவீர் எண்டீர், அங்க பாரும் மழையக்கா (ஷ்ரேயா) இன்னும் மாறேல்லை. இன்னும் பழைய புளக்கர் தான். இண்டைக்கும் அதைப் பாவிச்சு மறுமொழி போட்டவ. ஆள் சூரி தான் ;-)
என்னது? ஷ்ரேயா இன்னும் மாறேலயோ?
மனுசி என்னெண்டு உதுக்கால உச்சிக்கொண்டிருக்கு எண்டு தெரியேல.
புளொக்கர் காரன் என்னெண்டு பிடிச்சேத்திற ஆக்களைத் தெரிவு செய்யிறான் எண்டு விளங்கேல.
பெண்டுகள் சேனையை விட்டுப்பிடிக்கிறானோ?
அதுசரி, அக்கா எண்டு கூப்பிட வேண்டிய நானே பேர் சொல்லிக் கூப்பிடுறன், நீரென்ன ஐசே அவவை அக்கா ஆக்கிப்போட்டீர்?