வன்னியில் புராதனகால இரும்பு உலைகள்
• 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டபோது அதில் 68.12 விழுக்காடு இரும்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதேபோன்ற இரும்பு உலை; கசடுகள் முறிகண்டி- அக்கராயன் சாலையோரம், கோணாவிலில் அக்கராயன் கழிவாறின் கரையோரம், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் கோட்டைகட்டினகுளம் என்பவற்றிலும் கொக்காவிலிpலும் காணப்படுகின்றன. கொக்காவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உருக்குலைப் பகுதிகள் A-9 சாலை புனரமைப்புக்காக கிரவல் மண் அள்ளப்பட்டவேளையில் அழிக்கப்பட்டுவிட்டன. ஏனைய உலைகள் அப்படியே உள்ளன. இரும்பு உருக்குலைப்பகுதிகள் காலக்கணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் பெறுபேறு இந்த உலை கி.மு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தது. இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி மிகத்தொன்மையான இரும்பு உருக்குலை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரும்பு உருக்கு உலையே சிங்கள வலராறு கூறும் விஜயன் வருகை என்பதற்கு முன்பாகவே இலங்கைத்தீவில் மனிதர்கள் வாழ்ந்து வேளாண்மை, மந்தைமேய்ப்பு, இரும்புப்பயன்பாடு என்பவற்றை மேற்கொண்டிருந்தனர் என்ற அறிக்கையை ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்கள முன்னாள் ஆணையாளர் S.U.தெரனியகலையினை வெளியிடச்செய்தது. இதைவிட 3000 ஆண்டுகள்வரை தொன்மையான புத்தளம் பொம்பரிப்பு முதுமக்கள் தாளிகளில் எடுக்கப்பட்ட இரும்புப் பாகங்களும்இத்தீவில் இரும்புப் பயன்பாட்டை உறுதிசெய்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பூநகரியில் மேலாய்வு மேற்கொள்ளப்பட்டு இரும்பு உருவாக்கங்கள் எடுக்கப்பட்டபோதிலும் அவை காலக்கணிப்பு மூலம் இதுவரை காலம் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் அக்கராயனில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உலை காபன்-14 கதிரியக்க காலக்கணிப்பு செய்யப்பட்டு அது கி.மு 1300 ஆண்டுகள் தொன்மையானது என அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீன அறிவியல் உலகில் தொல்லியல் சான்றுகள் காலக்கணிப்பு மூலம் உறுதி செய்யப்படும்போதே அவை அங்கீகரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டு காலக்கணிப்பு முறைகள் தொல்லியல் என்ற அறிவியல் துறையில் ஏற்புடையதாக்கப்படுவதில்லை. அந்த ரீதியில் அக்கராயன் இரும்பு உலை அறிவியல் மூலம் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழரின் பெருங்கற்காலம் எனப்படும் (கி.மு.0 முதல் 1000 வரையான) காலம் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. பெருங்கற்காலத்திலேயே தமிழர்கள் இரும்பினைப் பயன்படுத்தியதால் இது இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய இரும்பு உலைகள் தமிழர் தாயகத்தில் இருப்பதான விடயங்கள் ஆதாரபூர்வமாக இதற்குமுன்னர் வெளிவரவில்லை. ஆதாரபூர்வமாக காலக்கணிப்புடன் தமிழர் தயாகத்தில் இரும்பு உலைகள் பற்றிய விடயம் வெளியாவது இதுவே முதல் தடவையாகும். தமிழர் தாயகத்தில் இரும்புத்தாது திருக்கோணமலையின் சேருவலையில் உள்ளது. இந்த இரும்புத்தாதுதான் தமிழர்தாயக இரும்பு உலைகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. ஏனெனில் சேருவிலை இரும்புத்தாது இன்னமும் பயன்படுத்தாத நிலையில்தான் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அது வந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தொழில் நுட்பங்கள் எல்லாமே ஒரே இடத்தில் தோன்றின என அடிப்படை வாதம் பேசினால் அதுவே உண்மை வரலாறின் தவறாகும். ஆக எமக்கு இரும்பு நுட்பம் வேறொங்கோ இருந்தே கிடைத்திருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டில் வருகைபுரிந்த பிரிட்டிஸ் பயணியான “றொபேட் நொக்ஸ்” ;தான் இத்தீவில் பாரம்பரிய இரும்பு உருக்கு உலைகளை கண்டதாகவும் கூறி அதன் நுட்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். நவீனத்துவம் வரும்வரை இப்பாரம்பரிய உருக்குலைகள் இத்தீவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் தயாகத்திலும் மூத்த இரும்பு உருக்குலைகள் உள்ளன. இதனை வன்னி இரும்பு உருக்குலைகள் எடுத்துக்கூறுகின்றன. -தி. தவபாலன்- _____________________________________ மூலப் பதிப்பு நன்றி: எரிமலை. _____________________________________ இது பற்றி ஏற்கனவே வன்னியன் எழுதிய பதிவொன்று: நெடுந்தீவும் தமிழனின் தொன்மமும் |
"வன்னியில் புராதனகால இரும்பு உலைகள்" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: இராவணன்
விசயன் இலங்கைக்கு வந்தது ஏறத்தாள கி.மு.500 இல எண்டால் சிங்களவரின்ட வரலாறு 2500 வருடம்தான்.. ஆனா அதுக்கு முந்தியே நாகரிகமடைந்த தமிழன் இலங்கையில வாழ்ந்ததுக்கு இது மற்றோர் சான்று.. இதைத்தான் மற்ற ஆய்வுகளும் சொல்லுது.. என்னத்தை கத்தினாலும் சிங்களவனுக்கு தமிழன் வந்தேறு குடிதான்.. மோட்டு சி_____கள் மகாவம்ச பொய்மையிலிருந்து விடுபடும்வரை உருப்பட(இலங்கையும் அவர்களும்) சந்தர்ப்பம் இல்லை..
1.15 28.12.2006
எழுதிக்கொள்வது: இராவணன்
எழுதிக்கொள்வது: இராவணன்
விசயன் இலங்கைக்கு வந்தது ஏறத்தாள கி.மு.500 இல எண்டால் சிங்களவரின்ட வரலாறு 2500 வருடம்தான்.. ஆனா அதுக்கு முந்தியே நாகரிகமடைந்த தமிழன் இலங்கையில வாழ்ந்ததுக்கு இது மற்றோர் சான்று.. இதைத்தான் மற்ற ஆய்வுகளும் சொல்லுது.. என்னத்தை கத்தினாலும் சிங்களவனுக்கு தமிழன் வந்தேறு குடிதான்.. மோட்டு சி_____கள் மகாவம்ச பொய்மையிலிருந்து விடுபடும்வரை உருப்பட(இலங்கையும் அவர்களும்) சந்தர்ப்பம் இல்லை..
1.15 28.12.2006
1.15 28.12.2006
நல்லதொரு மீள்பதிவு
வன்னியில் புஷ்பரட்ணம் போன்ற வரலாற்றாசிரியர்களாலும் பல அரிய தொல்பொருட்களும் வரலாற்று விழுமியங்களும் கிடைத்துள்ளன. செங்கை ஆழியானிடம் நான் கேட்ட கேள்விகளில் ஒன்று, செழுமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நம் தமிழ் அரசர்களின் வரலாற்றுப் பதிவுகள் அதிகம் சுவடே அற்று உள்ளனவே, அக்காலத்தில் அந்த அரசர்கள் நிச்சயம் கல்வெட்டுக்களாகவாதல் தம் வரலாற்றைப் பதிந்திருப்பார்கள் தானே? ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் முதலில் கை வைப்பது நம் வரலாற்றுச் சான்றுகளை இல்லையா? என்று கேட்டபோது அவர் அதை ஆமோதித்துப் பல உண்மைகளைச் சொன்னார்.
சமீபத்திய உதாரணம் : யாழ் பொது நூலகம்
இராவணன், கானா பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இக்கட்டுரைகள் கூடிய கவனம் பெறப்பட வேண்டும்.
ஒழுங்கான முறையில் அகழ்வுகள் நடைபெற்றால் வன்னியில் மட்டுமே நிறைய தடயங்கள் கிடைக்குமென்று நம்புகிறேன்.
நீங்கள் கூறுவது மிகச் சரி வசந்தன்.
கிளிநொச்சி அக்கராயனை அடுத்த ஆற்றுப்படுக்கையின் ஓரமாக உள்ள சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது தொன்மையான செய்நேர்த்தியுடன் கூடிய பல சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆனைவிழுந்தான எனும் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுன.
198+ களில் மக்கள் வாழ நிலமாக இருந்த ஆனைவிழுந்தான் பகுதியை மக்கள் வாழும் நிலமாக அப்போதிருந்த பிரதேச சபையினரால் தான் அறிமுகப்படுத்தப் பட்டு தற்போது மக்கள் வசிக்கின்றனர். மக்கள் அங்கே குடியமர்த்தப்பட்ட பின்பே இந்த அகழ்வாராய்ச்சிகளும் நடைப்பெற்றது.
என்னைப் பொருத்தமட்டில் தமிழீழ வன்னி காட்டுப்பிரதேசங்களில் இன்னும் கண்டறியப்படாத குளங்களும், எம் மூதாதையர்களின் அடிச்சுவடுகள் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது,
முதலில் வன்னியில் இருக்கும் குளங்களின் பெயர்களை பட்டியலிட்டாலே, அக்குளங்கள் கட்டுவித்தவர்கள், காலங்கள் போன்ற பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
நன்றி!