கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார்
ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார். புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்திருந்தது. இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 56 வயதான இவர், 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். மயூரன் போன்றோர் மேலதிக தகவல்களைப் பதிவார்கள் என்று நினைக்கிறேன். செய்தி: புதினம். ________________________________ கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தன் குரலிலேயே பாடிய பாடல்களின் ஒலிவடிவங்களடங்கிய மதி கந்தசாமியின் முன்யை பதிவை இஙகுக் காணலாம். சு.வில்வரத்தினம் குரல்பதிவு பெயரிலியின் பதிவு -சு. வில்வரத்தினம் மறைவு சோமிதரனின் பதிவு - சு. வில்வரத்தினம். . . Labels: இலக்கியம், ஈழ இலக்கியம், கவிதை, செய்தி, படைப்பாளி |
"கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார்" இற்குரிய பின்னூட்டங்கள்
Vasanthan,
is this really true? Kana Praba mailed earlier abt this and later sent another mail saying that it is a hoax.Could you please confirm?
Sorry! there are no tamil fonts in this comp.
எழுதிக்கொள்வது: somee
2002 இல் மானுடத்தின் தமிழ்கூடல் நடந்த பொழுதொன்றில் விவரத்தினம் எனக்கு பழக்கமானார்.
நீடித்த உரையாடலில் ஆன்மீகத்தில் இருந்து அவர் விட்டுபோன தீவக மண் வரை நிறைய உரையாடினோம். அப்போது சண்முகம் சிவலிங்கமும் கூட இருந்தார். கிழக்கு வடக்கு கலாச்சாரம் ஆவணப்படுத்தல் அரசியல் இந்திய இலங்கை இராணுவக் காலம் என பலவற்றைப் பேசியது நினைவுக்கு வருகிறது.
இதன் பின்னர் பலதடவை சந்தித்தாலும் அதிகம் இலக்கிய வாசிப்பில்லாத என்னையும் இணைத்து வைத்துக் கொண்டு அவர்கள் பேசிய நிறய விடயங்கள் எனக்கு இன்றுவரை நிறய உந்துதலைத் தருகிறது.
சமீபகாலங்களில் ஈழத்தவர்களின் இழப்புகளின் தொகையும் அளவும் அதிகமாகவே இருகிறது.
21.52 9.12.2006
அன்னாருக்கு எம் அஞ்சலிகள்
//மதி கந்தசாமி (Mathy) said ... (10 December, 2006 02:35) :
Vasanthan,
is this really true? Kana Praba mailed earlier abt this and later sent another mail saying that it is a hoax.Could you please confirm?//
எனக்கு இரண்டு மணி நேரத்துக்குள் வந்த இரண்டு அழைப்புக்களில் இந்தக் குழப்பம் ஏற்பட்டு, இப்போது உறுதி செய்யப்பட்ட இழப்பாகிவிட்டது:-(
எழுதிக்கொள்வது: johan-paris
வசந்தன்!
ஆழ்ந்த அனுதாபங்கள்!
மதியின் பதிவில் முதற் தடவையாக அவர் ஆக்கம் வாசித்தேன்.
இது மறையும் வயதா?? இழப்பே!
யோகன் பாரிஸ்
13.3 10.12.2006
வருகைதந்து கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
கவிஞரின் இழப்புச் செய்தியை முதன்முதலில் இணையச் செய்தித்தளமொன்றில் கண்டபின்பே நான் பதிவிட்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பும் கவிஞர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு இப்படியொரு குழப்பம் நிகழ்ந்ததாக ஞாபகம்.