Tuesday, May 20, 2008

நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவு

'நினைவுப்பயணம்' என்ற பெயரில் ஒலிப்பதிவுத் தொகுப்பொன்றை நான் தொடங்கியது சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (எனக்கே இடையிடையேதான் ஞாபகம் வரும்). கடந்தவருடம் ஜூன் முதலாம் திகதி இத்தொடரின் முதலாவது ஒலிப்பதிவை இட்டேன். சரியாக ஒருவருடம் முடிவதற்கு இன்னும் பத்துநாட்கள் உள்ள நிலையில் (இதன்மூலம் ஒருவருடம் இழுத்தடித்தான் என எவரும் சொல்ல முடியாதபடி செய்துவிட்டேன்.)இரண்டாவது ஒலிப்பதிவை வெளியிடுகிறேன்.

இப்போது சயந்தனும் என்னோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்.
எனவே இனி நிறையக் கதைப்போமென்று நினைக்கிறேன். அவசர அவசரமாகச் செய்யப்பட்ட ஒலிப்பதிவிது. சிறிதளவும் திருத்தங்களின்றி அப்படியே தருகிறோம்.

யாழ்ப்பாண நினைவலைகள விரைவில் முடித்து, வன்னிபற்றி நிறையக் கதைப்பதாகத் திட்டம்.

இனி, ஒலிப்பதிவைக் கேளுங்கள்.







ஒலிப்பதிவின் அடிப்படையில் காலவழுவொன்று இடம்பெறுகிறது. கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 July, 2008 19:26) : 

அருமையான நினைவுப்பயணம்.

நான் சண்டிலிப்பாய்க் காரன் எண்ட முறையில சில மேலதிக தகவல்கள்:

சங்கானையில இருந்து சண்டிலிப்பாய்ச் சந்தியில நேரபோற றோட் (ஒழுங்கை இல்லை) டச்சு றோட் எண்டு சொல்லுவினம். இது டச்சுக் காலத்தில ஒரு பிரபலமான றோட். நேர போனா சங்குவேலி, உடுவிலுக்குப் போகலாம். சண்டிலிப்பாய்ச் சந்தியில சீரணி நாகம்மாள் கோயில் பிரபலமானது. இந்திய இராணுவம் வந்த காலத்தில சண்டிலிப்பாய்ச் சந்தியில ஒரு முகாம் போட்டு கொஞ்ச நாள் இருந்தவங்கள்.

தொடர்ந்து உங்கள் நினைவுப் பயணத்தைத் தொடருங்கள். நன்றி.

 

said ... (15 August, 2008 09:21) : 

Kanags ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த முயற்சி அவ்வளவாக வெற்றியளித்ததாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தை விட்டுவிட்டு வன்னியில் உலாத்தலாமென்று நினைத்திருந்தேன். பார்ப்போம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________