Monday, December 31, 2007

என்னத்தைச் செய்தோம் இவ்வாண்டில்?

இவ்வாண்டில் நானெழுதிய மொத்த இடுகைகள்: 33.
சயந்தனால் எழுதப்பட்டது: ஒன்று.
கிடைத்த மொத்தப் பின்னூட்டங்கள்: 353.
அதிக பின்னூட்டங்கள் கிடைத்த இடுகை (37 பின்னூட்டங்கள்):
பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

இவ்வாண்டில் நானெழுதிய முதலாவது இடுகை:

கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்

இறுதியிடுகை: இவ்விடுகை.


இவ்வாண்டில் நானிட்ட ஒலிப்பதிவுகள் ஆறு:

உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு


கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு


நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்


பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு


நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு

இவற்றைவிட மற்றவர்களின் குரல்களை ஒலிப்பதிவாக்கி இட்ட இடுகைகள் மூன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகை எழுதுவதற்கான ஆராய்ச்சியிலீடுபட்டிருந்தபோது இடுகைகளுக்கிடையிலான கால இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளேன்.
2005 இல் எழுதிய இடுகைகள்: 111.
2006 இல் எழுதிய இடுகைகள்: 83
2007 இல் எழுதிய இடுகைகள்: 32. [இவற்றுள் மீளிடுகை, படியிடுகை என்பவற்றைக் கழித்தால் 25 தாம் வரும்.(2005 மேயில் நட்சத்திரக் கிழமையில் எழுதிய இடுகைகள் மட்டுமே 26)].
இருந்தாலும் நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எழுதத்தொடங்கியவர்கள் பலரைவிட அதிகமான இடுகைகள் எழுதியிருக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*** இதுதான் இவ்வாண்டின் கடைசியிடுகை.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"என்னத்தைச் செய்தோம் இவ்வாண்டில்?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (31 December, 2007 17:31) : 

மனசு அலைபாயும் வயது நெருங்கும் போது அதிகம் எழுத வராதாம்.

என் பின்னூட்டலுக்கு எதிர்வினையாக வரும் பின்னூட்டம் இப்படி இருக்கும்: கானா பிரபா அதிகம் எழுதுவதால் அலைபாயும் வயசு தாண்டீட்டார்.

 

said ... (31 December, 2007 20:19) : 

//இவ்விடுகை எழுதுவதற்கான ஆராய்ச்சியிலீடுபட்டிருந்தபோது //

ஐயோ ஐயோ

 

said ... (03 January, 2008 12:36) : 

கானா பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்னைச் சின்னப்பொடியன் எண்டு சொன்னதுக்கு மிகமிக நன்றி.

சயந்தன்,
என்னத்துக்கு ஐயோ எண்டுறீர் எண்டு விளங்கேல.

 

said ... (11 January, 2008 10:01) : 

கேப்டன் பாணியில் இருக்கிறதே பதிவு?

 

post a comment

© 2006  Thur Broeders

________________