கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு
வலைப்பதிவு அனுபவங்கள் பற்றி வலைப்பதிவாளர் இருவர் கலந்துரையாடிய ஒலிப்பதிவை இங்குப் பதிவாக்குகிறோம். தைப்பொங்கலை முன்னிட்டு நாம் தரும் சிறப்புப் பதிவு இது. நானும் சயந்தனும் மூன்று மாதங்கள் இடைவெளியில் வலைப்பதிய வந்தவர்கள். இரண்டு வருடங்கள் நிறைவாகிவிட்டன. இந்நிலையில் நாங்கள் வந்த காலப்பகுதி பற்றிய சில மீளும் நினைவுகளோடு குறுகியநேர கலந்துரையாடலொன்றை கணினி-தொலைபேசி வழித் தொடர்புமூலமாகச் செய்தோம். இதுவரை கட்டிக்காத்த சில இரகசியங்கள் இதில் கசியவிடப்பட்டுள்ளன. எதுவித ஆயத்தமுமின்றி திடீரென கதைத்ததில் இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீண்ட கலந்துரையாடலை வெட்டிச் சுருக்கித் தொகுத்தவர் சயந்தன். கலந்துரையாடலின் தொடக்கப்பகுதியும் முடிவுப்பகுதியும் தெளிவற்றுப் பதிவாகியதால் அவையும் வெட்டப்பட்டன. எனவே சிலருக்கு தொகுப்பு மொட்டையாகத் தொடங்கி மொட்டையாகவே முடிவதுபோல் தோன்றலாம். மீண்டும் ஒலிப்பதிவு செய்ய நாங்களெடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே அப்படியே தருகிறோம். ஒலிப்பதிவைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். Labels: அனுபவம், ஒலி, கலந்துரையாடல், பதிவர் வட்டம், வரலாறு |
"கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்
இது புதுசா இருக்கே..
எழுதிக்கொள்வது: karikaalan
நல்லா இருக்கு. வசந்தன்,சயந்தன்.
புது வருடத்தில் நிறைய எழுதுங்கள்.
11.57 14.1.2007
வணக்கம்.
நல்லா இருக்கு உங்கள் வலைக்கதை.
புத்தாண்டில் நிறைய சாதிக்க எனது
வாழத்துக்கள். உங்கள் இருவருக்கும்(நம்பலாமா?).
அத்தாருக்கே ஆப்பா :-)?
வலைப்பதிவிலை ஒரு புதிய முயற்சி பாராட்டுக்கள்..
அத்தாற்றை படத்தை போட்டு கலாய்ச்ச மாதிரி..... வசந்தனோ சயந்தனோ தெரியலை நல்ல டைமிங்கோடை மிமிக்ரி செய்யினம்.....
//அத்தாற்றை படத்தை போட்டு கலாய்ச்ச மாதிரி..... வசந்தனோ சயந்தனோ தெரியலை நல்ல டைமிங்கோடை மிமிக்ரி செய்யினம்....//
எனக்கு மிமிக்ரி தெரியாது.
/
/எனக்கு மிமிக்ரி தெரியாது//
அப்ப வசந்தன் தான்..................................
ஒரு உறையில் இரு வாள்கள்
வசந்தனை மூண்டுநாளா வலையில காணேல. உடனுக்குடன பதில் போடுறவர், வழமைக்கு மாறா முந்தின பதிவுகளில வந்த பின்னூட்டங்களுக்குப் பதில்போடவேயில்லை. இந்தப்பதிவுக்கும் இன்னும் பதில்போடேல. ஆனா சயந்தன் வந்து பின்னூட்டம் போடுறார்.
அடச்சே! வழக்கமான பகிடிய விடுவமெண்டு வந்தால், ரெண்டு மூண்டு பேர் அதே பகிடியைப் போட்டிட்டினம். உது சரியில்லை. இனி நான் புதுப்பகிடியெல்லே தேடோணும்.
நீரும் அவரும் ஒராளில்லை; நீரும் அவரும் அரையரை ஆக்கள்.
ஈழநாதன் பதிவையெல்லாம் சிங்கப்பூர் முஸ்தபாவில பிச்சுப்பிச்சு வித்துப்போட்டார். தெரியாதோ?
மாநாடு? மாடுநாடு?
//ஆனா சயந்தன் வந்து பின்னூட்டம் போடுறார்//
இப்ப நான் என்ன பண்ணா - (தம்பி ஸ்ரைலில் படிக்கவும்)
This comment has been removed by a blog administrator.
நல்ல முயற்சி. ரசிக்கும்படியாக இருந்தது.
This comment has been removed by a blog administrator.
எழுதிக்கொள்வது: சிநேகிதி
அடடா நான் உங்களுக்கு எதிரியா??? சொல்லவே இல்லை? என்னால அப்பிடி உங்களை விட்டிட்டு யார் ஓடிப்போனவை? இந்தக்கோவத்தை மனசில வைச்சுத்தான் நான் முதன்முதலா யாழில எழுத வந்த நேரம் "ஏன் உசா மேடமும் துளசிப்பெரியம்மாவும் துரத்தி விட்டிட்டினமா" என்று கேட்டனீங்கள்?? அப்ப யோசிச்சனான் இப்பத்தானே விளங்குது.நான் எழுதிறது யாழ்ப்பாணத்தமிழோ என்று எனக்கே சந்தேகம் இடைக்கிடை மாத்தளைத் தமிழ் வந்து எட்டிப்பார்க்கும் :-) இப்ப நீங்கள் வேற பெருமை என்றெல்லாம் சொல்றீங்கள் எனக்குச் சும்மா அப்பிடியே 10 கல்யாணி ஐஸ்கிறீம் குடிச்ச மாதிரிக்கிடக்கு.
வசந்தன் அண்ணாட படத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரிக்கிடக்கு.நல்ல தொடக்கம் இனிம இரண்டு பேரும் இப்பிடியே பாட்டு பாடுங்கோ நாடகம் நடியுங்கோ வேற என்ன என்ன செய்யலாமோ எல்லாம் ஒலிப்பதிவில போடுங்கோ.
16.9 15.1.2007
வசந்தன் அண்ணாட படத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரிக்கிடக்கு
வசந்தனை வயசானவர் எண்டு நினைச்சிட்டியள் போல.. பாவம் பொடியன்.. அழப்போறான்..
This comment has been removed by a blog administrator.
தாமதமான பதில்களுக்கு மன்னிக்கவும்.
அனானி, கரிகாலன், டி.சே, சின்னக்குட்டி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கரிகாலன்,
நம்பலாம். நம்பினா நம்புங்கோ, இல்லாட்டிப் போங்கோ.
எங்களுக்கொரு நட்டமுமில்லை. ;-)
டி.சே,
உவர் இப்ப சிட்னியிலயிருந்து நாடு மாறிட்டதால துணிஞ்சு விசயத்தை வெளியில விட்டிருக்கிறார்.
சின்னக்குட்டி,
கரிகாலனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்.
_________________________
கானாபிரபா,
நீரெழுதின ரெண்டு பின்னூட்டத்தையும் ஏன் அழிச்சனீர்?
உம்மட பேரை இதுக்க இழுத்தது பம்பலுக்குத்தான். உம்மட விளக்கத்தை விட்டிருக்கலாம்.
சின்னக்குட்டி,
திரும்பவும் சொல்லிறன், ஒரு உறையில ஒரேவாள் தான்.
இப்பதான் ஒருத்தி வந்து தானும் மெல்பேண்தான் எண்டு வயித்தில புளியைக் கரைக்கிறா.
அடுத்து வந்து நான் பதில்போடேல எண்டு கவலைப்பட்ட அனானி,
நான் இணையத் தொடர்பில்லாமல் ஒருகிழமையா இருந்தன். இடைக்கிடை எட்டிப்பாக்கிறதோட சரி. பின்னூட்டங்களை வெளியிடுற வேலையைக்கூட இன்னொருத்தர்தான் செய்யவேண்டியிருந்தது.
விட்ட சிலநாள் இடைவெளிக்குள்ள சந்தில சிந்துபாட வெளிக்கிட்டியள்.
வழக்கமான பகிடி விடவெண்டு வந்தவரே,
நீங்கள் திருநாளை புளொக்கரோ?
மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் தன்னிலை விளக்கம் குடுக்கப் போய், ஏதோ கோபத்தில புறுபுறுத்தனான் எண்டு சனம் நினைக்கும் எண்டுதான் முந்தின பின்னூட்டத்தை எடுத்தனான். பிழைச்சுப் போங்கோ தம்பிமார் ;-)
நான் தன்னிலை விளக்கம் குடுக்கப் போய், ஏதோ கோபத்தில புறுபுறுத்தனான் எண்டு சனம் நினைக்கும் எண்டுதான் முந்தின பின்னூட்டத்தை எடுத்தனான். பிழைச்சுப் போங்கோ தம்பிமார் ;-)
//சின்னக்குட்டி,
கரிகாலனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்.//
_________________________
சும்மா பகிடிக்கு கலாச்சனனான். சயந்தன் யாழ் இணையத்தில் இருந்தவர் தெரியுந்தானே
சினேகிதி,
நீர்தான் எங்கட பரம எதிரி.
அதுசரி, யாழ்க்களத்தில எழுதினது ஆர், நானா சயந்தனா?
நான் அங்க ஏதும் எழுதினதில்லையே?
எனக்கு குளிர்பானமெண்டாத்தான் கல்யாணி, ஐஸ்கிறீமெண்டா அது லிங்கம்தான்.
என்ர படத்தை எங்க பாத்தியள்?
சந்திப்புப் படத்தில ஆர் நிக்கிறதெண்டு சயந்தன் சொல்லிட்டார்தானே?
வேற எங்கயேன் பாத்திருந்தாலும் அது என்ர படம்தான் எண்டதை எப்பிடி உறுதிப்படுத்துவியள்?
சரி, என்ர குரலுக்குத் தக்கமாதிரி நான் இருக்க வேணுமெண்டா எப்பிடி இருக்கவேணுமெண்டு நினைக்கிறியள்?
_______________________________________________
அனானி, வருகைக்கும் என் இளமையை நினைவூட்டியமைக்கும் நன்றி.
கானாபிரபா,
விளக்கத்துக்கு நன்றி.
பிழைச்சுப் போறம்.
அப்ப அது நீங்கள் இல்லையா? வசந்தன் என்ற பெயரில இருந்த யாழ் மெம்பர். உங்கட படம் உங்கட வலைப்பதிவிலதான் பார்த்தனான். ஒரு குண்டாள்ட படம் அத நீங்களில்லையோ?
சினேகிதி,
அப்ப என்ர குரல் மெல்லிய ஆளுக்குரிய குரலா?
நான் யாழ்க்களத்தில உங்களோட கதைக்கேல.
வசந்தன் எண்ட பேரில அங்க எழுதிறவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
வீட்ட போய்க் கேட்பம் என்டு விட்டதில இன்டைக்குத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறன். நல்லாத்தான் இருக்கு.
உவை ஒருத்தரும் வலைப் பதியிற பேரில யாழ்க் களத்தில எழுதிறேல்ல.:-)
//வீட்ட போய்க் கேட்பம் என்டு விட்டதில இன்டைக்குத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறன். நல்லாத்தான் இருக்கு.//
ஷ்ரேயா அக்கா.. இந்திரா காந்தியைச் சுட்டுப் போட்டாங்களாம். செய்தி கேட்டனியளோ..?
//இந்திரா காந்தியைச் சுட்டுப் போட்டாங்களாம்//
சயந்தன் தகவலுக்கு மிக்க நன்றிகள்
உங்கள் ரெண்டுபேருக்கும் அடிபோட ஆக்களில்லை போல.