Wednesday, December 13, 2006

நேர்காணல்: ஓவியர் விஜிதன்

_____________________________________

இது எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல்.
ஈழத்து ஓவியத்துக்குப் புது வரவான விஜிதனுடனான நேர்காணலை இங்குப் பதிகிறேன்.

_____________________________________

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை


சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி வீட்டிலவந்து ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

** இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.
ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப்படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.




** இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்திமுறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இந்தப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக்கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம்;. ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன். அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால் பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டுவந்திருக்கிறேன். அதாவது மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டுவந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.



** உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டுவந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

செவ்வியின் தொடர்ச்சி....
___________________________________________
செவ்வியின் தொடர்ச்சியையும் மேலதிக ஓவியத்தையும் எரிமையில் காணலாம். அப்பதிப்பும் ஒருங்குறியிலேயே இருப்பதால் அனைவராலும் வாசிக்க முடியும்.

நன்றி: எரிமலை

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நேர்காணல்: ஓவியர் விஜிதன்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (13 December, 2006 13:03) : 

வசந்தன்
செய்திக்கு நன்றி.
இவர் ஓவியர் ரமணியைக் குறித்துச் சொன்னது மகிழ்ச்சியைத் தருகிறது. ஓவியர் ரமணி எழுபதுகளிலேயும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் தனது கோட்டுச்சித்திரங்களினால், ஈழத்துப்பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் அலங்கரித்தவர். அவரின் கோடுகளிலே ஒரு கவரும் தன்மையிருக்கும்; மணியம் செல்வனின் படச்சாயல் கொஞ்சம் இருந்ததாக ஞாபகம். வீரகேசரி போன்றவற்றிலே மொறாயஸ் உருவத்துக்கும் வெளிக்குமான விகிதமில்லாமல் வரைந்து கொண்டிருந்த நேரத்திலே இவரது சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கான கோட்டுப்படங்கள் மாறுதலாகவிருந்தன. இவர், சௌ போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளும் வரைந்த படங்கீறிகளையும் நாம் சேகரிக்கவும் பதிக்கவும் செய்யவேண்டும். இவர் 07.05.2004 அன்று தமிழ்நாதத்துக்கு வழங்கிய செவ்வியைக் குறித்து வைத்திருந்தேன். ஆனால், இப்போது தமிழ்நாதம் அவற்றினை விலக்கிவிட்டார்கள்.

கிடைப்பின் இவர்களின் செவ்விகள் ஒவியாவணங்களாகச் சேமிக்கப்படவேண்டும். நமக்கு "செய்யவேண்டும்; பண்ணவேண்டும்" என்று சொல்வதுமட்டுமே தொழில். செய்கிறவர் செய்து கொள்ளட்டும்; பண்ணுகிறவர் பண்ணிக்கொள்ளட்டும். செய்து, பண்ணிய பின்னால், வேண்டுமானால், என் பதிவுகளிலே இணைப்பினைக் கொடுத்து, "மண்டபத்திலே வாங்கி வரவில்லை; நானே நானே செய்தேன்" என்பதுபோலப் பெயரை எடுத்துக்கொள்வேன் ;-)) ஏதோ என்னால் தமிழுக்கான பிணி.

 

said ... (13 December, 2006 19:30) : 

மீள்பிரசுரம் செய்வதால் இவர்கள் ஓரளவு வெளித்தெரிகிறார்கள். இல்லாவிட்டால் அதுவுமில்லை. வெளிச்சம் இணையப் பதிப்பாக வெளிவராதது எங்கள் 'தலையெழுத்து'.

 

said ... (13 December, 2006 20:36) : 

மேலிடப்பட்ட பின்னூட்டம் குதறப்பட்டுவிட்டதால் மீளவும்...

பெயரிலி,
வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.
அப்பப்ப உங்களை இப்படிப் பின்னூட்டங்களில காணுறது பேச்சந்தோசம்.

வன்னியில் இவ்விளைஞன் பற்றி 'வெளிச்சம்' வெளியிட்டு அதை 'எரிமலை' மீள்பிரசுரம் செய்வதால் இவர்கள் ஓரளவு வெளித்தெரிகிறார்கள். இல்லாவிட்டால் அதுவுமில்லை. வெளிச்சம் இணையப் பதிப்பாக வெளிவராதது எங்கள் 'தலையெழுத்து'.

அதைச் செய்ய வேணும், இதைப் பண்ண வேணுமெண்டு சொல்லிற நீங்கள் ஏதாவது செய்யலாமே பண்ணலாமே எண்டு உங்களைப் பாத்துக் கேக்க முதல் நீங்கள் முந்தீட்டியள்.
உப்புப்பெறாத விசயங்களுக்குக் குந்தியிருந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிற வேலையை விட்டிட்டு இப்பிடி ஏதாவது எழுதலாமே?

//செய்து, பண்ணிய பின்னால், வேண்டுமானால், என் பதிவுகளிலே இணைப்பினைக் கொடுத்து, "மண்டபத்திலே வாங்கி வரவில்லை; நானே நானே செய்தேன்" என்பதுபோலப் பெயரை எடுத்துக்கொள்வேன் ;-)) //

இதில ஒரு ஓட்டுமாட்டும் இல்லைத்தானே? இல்லாட்டி ஆருக்காவது ஏதாவது செய்தி இருக்கோ?

 

post a comment

© 2006  Thur Broeders

________________