Thursday, June 09, 2005

அவசரப் பதிவு.

வணக்கம்.

இப்போது தமிழ் மணத்திலே தம் பெயருக்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சகோதரர்களாகப் பழகிவிட்டு திடீரென அவர்கள் மீதே வழக்குத் தொடுப்பதும், தொடுப்பதாக மிரட்டுவதும் சிறந்ததன்று என்றாலும்கூட, சில சந்தர்ப்பங்களில் அது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனக்கும் இப்போது அந்நிலையொன்று ஏற்பட்டுவிட்டது. ஆதலால் இப்பதிவு.

எனக்கு ஏற்பட்ட அடையாளப்பிரச்சினைகளை இரு பிரிவுகளாக்குகிறேன்.
முதலாவது, என்னையும் சயந்தனையும் ஒருவரே என்றது.
இரண்டாவது, மஸ்ட் டூவும் நானும் ஒருவரே என்ற தொனியில் கருத்துவெளிப்பட்டிருப்பது.

முதலாவது பிரச்சினை எனக்கு அவ்வளவாக இழப்பை ஏற்படுத்தவில்லை. நன்றாக எழுதும் ஒருவருடன் தானே இணைத்துக் கதைக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன். மேலும் இருவரும் ஒருவரே என நினைப்பதற்கு ஏதுவான சந்தர்ப்பங்களும் இருந்தனவென்பது கவனித்தக்கது. ஆதலால் அப்பிரச்சினையை சட்ட நடவடிக்கையாக மாற்றாமல் பேசாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்போது வருந்துகிறேன். அன்று இதைச் சரியாக அணுகியிருந்தால் இன்று வந்த பிரச்சினைக்கு வாய்ப்பில்லை. ஆகவே
இத்தால் அறியத்தருவது,

நான் எதிரிகளாகக் குறிப்பிடும் நபர்கள் விரைவில் இதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதிவாதிகளாக நான் குறிப்பிடுவது,
மதிகந்தசாமி,
கறுப்பி
ஈழநாதன்
கிறுக்கன்.

மேலும் பலர் இக்குற்றச்சாட்டைச் சொல்லியிருந்தாலும், இவர்கள் நால்வரும் மீதுமே நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறேன்.

அடுத்த பிரச்சினைதான் கடுமையானது. எனது தனித்துவத்துக்கும் இறைமைக்கும் விடுக்கப்பட்ட சவால் மட்டுமன்றி, உயிர், உடமை இழப்புக்கும் வழிகோலிவிடும் அபாயமுண்டு.
மஸ்ட் டூ என்ற பெயரில் எழுதும் நபரும் நானும் ஒருவரே என்ற தொனியில் பெயரிலி அளித்திருக்கும் பின்னூட்டம் (அது அத்தொனியிலில்லை என்று அவர் வாதிடக்கூடும். எதுவாயிருந்தாலும் கோட்டில வந்து பேசிக்கோ) மிக ஆபத்தானது மட்டுமன்றி நயவஞ்சகமானதுங்கூட. அதற்கு இன்னொருவரும் பக்கப்பாட்டுப் பாடியுள்ளார்.

மஸ்ட் டூ என்ற பெயரில் எழுதுபவர், சில சிக்கலான விடயங்களைத் தொட்டுச் செல்கிறார். சிலரைக் குறிவைத்துத் தாக்குகிறார். பலரின் கவிதைகளையும் புத்தகங்களையும் சிலரின் எழுத்து நடையையும் நையாண்டி பண்ணுகிறார். உண்மையில் பலரால் தாக்கப்படும் சாத்தியமுள்ள நபரொருவரை நான்தான் எனச்சொல்வது அவ்வாபத்துக்களை என்னை நோக்கித் திருப்பிவிடும் நயவஞ்சகப் (உள்நோக்கம்) புத்தியென்றே சொல்லுவேன்.

ஆகவே எனக்கேற்பட்டிருக்கும் இவ்வாபத்தைப் போக்கும் வகையில் அக்குற்றச்சாட்டைச் சொன்னவரும் ஒத்தூதியவரும் பகிரங்க அறிக்கை விடவேண்டும்.
முதலாவது எதிரி பெயரிலி. (அவரைப் பல பெயரில் அழைத்தபோதும் அவர் அமைதிகாத்தார். ஆனால் என்னால் அப்படி முடியாது. காரணம் உயிர்ப்பிரச்சனை)
இரண்டாவது எதிரி, ஈழநாதன்.
இவர் இரண்டு பிரச்சினைகளிலும் சம்பந்தப்பட்டவர்.
இப்போதைக்கு இந்த இருவரும்தான். ஆனால் கறுப்பியின் பதிவில் வேறு யாராவது இணைந்தால் அவர்களும் இப்பட்டியலில் இணைவார்கள்.

மஸ்ட் டூ நான் தான் என நிரூபிக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை. அதற்காக தமது ஆதாரத்தை அவர்கள் வைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பகிரங்க அறிக்கை விடவேண்டும்.

நான் மஸ்ட் டூ இல்லையென்பதற்கு என்னிடமிருக்கும் சில கருத்துக்கள்.
(இரண்டு மணித்தியாலம் மினக்கெட்டு எடுத்திருக்கிறன்.)

இருவரின் எழுத்து நடையும் வெவ்வேறானது.
நான் புணர்ச்சி விதிகளை இயன்றவரைக் கடைப்பிடிப்பவன். ஆனால் மஸ்ட் டூவின் எழுத்தில் வலிமிகல் கடைப்பிடிக்கப்படுவது மிகக்குறைவு.
மேலும் 'அன்று' 'அல்ல' என்பவற்றை இயன்றவரை சரியானபடி கையாள்பவன் நான்.
மேலும் இந்தியத் தமிழில் என்னால் எழுத முடியாது. அனால் மஸ்ட் டூவின் பழைய பதிவில் இந்தியத் தமிழில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. (குறைந்த பட்சம் அவர்கள் இருவராக இருக்கக்கூடிய சந்தர்ப்பம் கூட உள்ளது.)
மேலும் எனக்கு ஆங்கிலமே மட்டுமட்டான மொழி. இதற்குள் மஸ்ட் டூவிற்கு இருக்கும் பிரஞ்சு மற்றும் ஜேர்மன் மொழி ஞானத்துக்கு நான் எங்கு போவது?
டோண்டுவால் கூட இந்த மொழியறிவுக்காகப் பாராட்டப்பட்டவர் தான் அவர்.
ஈழத்தைவிட்டுப் புறப்பட்டு வெறும் 7 மாதங்களே ஆன நிலையில் எங்கிருந்து அம்மொழியறிவைப் பெற்றுக்கொள்வது?

மேலும் மஸ்ட் டூவின் அந்தப் பக்கத்தில் குரற்பதிவுகூட உள்ளது. (இசையும் கதையும்.) எற்கெனவே என் குரலிலும் பதிவுகள் எனது தளத்திலுள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டாவது பார்த்திருக்கலாம். அந்த இசையும் கதையும் ஒலிப்பதிவில் குறைந்தது இரண்டு பேர் குரல் கொடுக்கிறார்கள்.

மேலும் பலவிருந்தாலும், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நான் அவர்தான் எனச் சொன்னவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும். (எதிராளிகளிற் சிலருக்கு மின்னஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது.)

அல்லாத பட்சத்தில் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிவருமென்பதை இத்தால் அறியத் தருகின்றேன்.
இப்போதிருந்து உங்களுக்கான நேரம் கணிக்கப்படத் தொடங்குகிறது.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"அவசரப் பதிவு." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (09 June, 2005 22:41) : 

/மஸ்ட் டூ என்ற பெயரில் எழுதும் நபரும் நானும் ஒருவரே என்ற தொனியில் பெயரிலி அளித்திருக்கும் பின்னூட்டம் (அது அத்தொனியிலில்லை என்று அவர் வாதிடக்கூடும். எதுவாயிருந்தாலும் கோட்டில வந்து பேசிக்கோ) மிக ஆபத்தானது மட்டுமன்றி நயவஞ்சகமானதுங்கூட./
ஐயோ ஐய்யாய்யோ||
சரியாய் எந்தக்கோட்டில சந்திப்பதெ ண்டு சொல்லாமப் போனா எப்பிடி?
நேர்கோடா, வளைகோடா, முறிகோடா?

என் பெயரை -/பெயரிலி. என்று சரியாக எழுதாமல், பெயரிலி என்று எழுதியதற்காக நான் வசந்தன் என்பவரையும் அதே கிளித்தட்டுக் கோட்டுக்கு இழுக்க இருக்கிறேன்.

அதைச் சரியாகத் திருத்திக்கொண்டால், போனாப்போகுதெண்டு "must do mustn't do வசந்தன்" எண்டு தோணி... கோதாரி... தொனி மாறாமல் பகீர்அரங்க அறிக்கை என்ன, அறியாதகால் அரியாத கழுத்து தடவாத கன்னம் உயிர் பொருள் ஆவி எல்லாமே பலே பாண்டியா ஜிவாஜிமாதிரி குடுக்கத் தாயாராய்.. அடச்சீ.. தயிராய்.. அய்ய்ய்யோ.. கோட்டில செக் சொல்லிப்போடுவாரோ எண்ட பழத்தில .. ஆஆஆ.. பயத்திலை ஒரு இழவுமே சரியாச் சொல்ல வரயில்லை இருக்கிறேன்; நிக்கிரேன், விக்கிறேன், வெடிக்கிறேன், விழுங்குறேன்... ஏன் ஏன்ன்??!!

பி.கு.: அப்பிடியெண்டால், மஸ்டூவும் மஸ்கட்டும் உருவிலே ஒண்டா, ரெண்டா, ஒன்பதா?

 

said ... (09 June, 2005 22:45) : 

மேலதிக அவசரஅவரசக்குதிப்புக்குறிப்பு:
ஈழநாதன், வெள்ளித்தொனியான், கிறுக்கன், கிறுக்கான், மதி, மந்தி, கறுப்பி, குழப்பியையும் சட்டத்தின் முன்னே இழுப்பியளெண்டால், கனவான்கோடென்ன, காலன்புள்ளிக்கே கணனியிலை வருவன். எனக்கு ஒரு கண்போனால், மீதிப் பிரதிவாதியளுக்கு ரெண்டு கண்ணும் போகவேணும். அதுதான் முக்கியமும் முக்காததும்.

 

said ... (09 June, 2005 22:46) : 

வசந்தன், நான் நீர் எதிர்த்தரப்பு வாதிகளாக வைத்திருப்பவர்களின் சார்பில் ஆஜாராக உள்ளேன். உமது மிரட்டலுக்கு எல்லாம் பயப்பிட முக்கியமாய் பெயரிலியும், ஈழநாதனும் பனங்காட்டு நரிகளல்ல, புறநானூற்றின் புறமுதுகு காட்டி ஓடாத மானமறவர்கள் :-). A=B & B=C, So A=C மாதிரி, வசந்தன் = சயந்தன் & சயந்தன் = மஸ்ட்டூ, ஆகவே... என்ன முடிவுக்கு வருவது என்று அனைவருக்கும் தெரியும். முழுப்பூசணிக்காயை புளியோதரையில் மறக்காதீர். மிச்சத்தை நீதிமன்றத்தில் சந்திப்போம்.

 

said ... (09 June, 2005 22:58) : 

/A=B & B=C, So A=C மாதிரி, வசந்தன் = சயந்தன் & சயந்தன் = மஸ்ட்டூ, /

ரொறொண்டோ மப்பு,
தம்பி ஆங்கிலத்தில நிறுவுறதுக்கு, இணையத்தாரோ வாழைத்தாரோ போட்டு அழிக்க ஏலாதெண்டு நினைக்காதையும்.
இணையக்கணக்கில நாங்கள் நிரூபிக்கிறது வேற மாதிரி:

அX0 = 0
ஆX0 = 0
இX0 = 0
0=0
ஃ, அ=ஆ=இ

இதைத்தான் முந்தியே சுக்கு வெந்தயமாகி வெங்காயமாகி எண்டு சித்தரோ சுத்தரோ சொல்லியிருக்கினம். இப்ப, வெங்காயமெண்டு சொல்லிட்டன் எல்லோ, இந்த விவாதத்துக்கே வேற பரிணாமமும் பரிமாணமும் வரப்போகுது; பெரியார், சிறியார், சீரியார் எண்டு வெங்காயவிரோதிகள் வரப்போராங்கள் பாரும். போறாங்கள் எண்டதுபோடாதது எழுத்துப்பிழையில்லை எண்டு கதிர்காமஸ் விளங்கோணும்; இது தனிமனிதனின் பெயர்ப்போர்.. சீச்சீ bore இல்லை போர்.. கலிங்கத்துப்போர், கன்னிமாடப்போர் மாதிரி, four people இடையில வந்த கணினிப்போர், கண்டீரோ?.

 

said ... (09 June, 2005 23:21) : 

வசந்தன் சும்மா உமக்கு என்னை வம்புக்கிழுக்காமல் இருக்கேலாதே? சயந்தன் அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பிற்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நான் ஒஸ்ரேலியா ஓஸியா வந்து ஒருக்காச் சுத்திப் பாக்கலாம் எண்டிருக்கிறன். இப்ப போய் கேஸ் அது இதுவெண்டு. மப்புப் போல உமக்கு ஆ..?

சரி சயந்தன் நீங்கள் சொல்லுங்கோ..

 

said ... (09 June, 2005 23:22) : 

இப்பிடிப்பதிவு போட்டா ஓட்ட அள்ளிரலாம்னு நினைப்பு?. அரசியல்வாதிகளைவிட பெரியாளுகப்பா!

 

said ... (09 June, 2005 23:30) : 

//அந்த இசையும் கதையும் ஒலிப்பதிவில் குறைந்தது இரண்டு பேர் குரல் கொடுக்கிறார்கள்.//

அது வசந்தனும் சயந்தனுமாக்கும்.. க்கும்..

 

said ... (09 June, 2005 23:46) : 

வலைப்பதிவுகளில் கொஞ்ச காலத்துக்கு எழுதுவதில்லை என்ற தவத்தில் (ஆனால் படம் போடுவன், அதோடை குரலும் போடுவன்) இருக்கும் நான் சொல்லிக் கொள்வதாவது..

டிசேயின் சமன்பாடு குறித்த ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வசந்தனின் இந்த பதிவிற்கு இட்ட பின்னூட்டத்திற்கூடாக தெரியப்படுத்துகிறேன்.

மற்றும் பெயரிலியின் சமன்பாடு குறித்து ஆராய்ந்து கொண்டிருப்பதால் அது குறித்து கருத்தெதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

கறுப்பியின் அண்மைய கருத்துக்கள் சயந்தன் வேறு வசந்தன் வேறு என்பதனை ஏற்றுக் கொண்டது போல இருப்பதனால் அவர் மீதான குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வசந்தனுக்கு பரிந்துரைக்கின்றேன்.

இதற்கிடையில் நானும் வசந்தனும் வேறு வேறு நபர்கள் என்பதனை மீளவும் நினைவுபடுத்துகிறேன்.

மஸ்ற்டு தொடர்பான பிரச்சனை எனக்கு அப்பாற்பட்ட வசந்தனுக்கும் மஸ்ற்டுவிற்குமான பிரச்சனை என்பதால் எனது வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப அது அவர்களது உள்விவகாரமாக கருதி அதில் தலையிடா கொள்கையை கடைபிடிக்கிறேன். ஆயினும் இப்பிரச்சசனை உடனடி முடிவுக்கு வர என்னாலான எல்லாவித உதவிகளையும் வழங்கவும் தயாராக இருக்கிறேன்.

நன்றி

 

said ... (09 June, 2005 23:53) : 

//வரப்போராங்கள் பாரும். போறாங்கள் எண்டதுபோடாதது எழுத்துப்பிழையில்லை எண்டு கதிர்காமஸ் விளங்கோணும்; //
பெயரிலி, என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீர்கள்? நானே நேரமில்லாமல் "ஸ்க்ரோல்" மவுசோடு ஓடிக்கொண்டிருக்கிறேன். இருங்க இன்னும் 4 நாள் கழித்து வருகிறேன் பாறாங்கல்லோடு.

வசந்தன், நீர் யாரோ எவரோ, புண்ணியமா போகும் , இதை பெயர்ச்சண்டையை விடுத்து உருப்படும் வழியைப் பாரும்!!

 

said ... (10 June, 2005 00:11) : 

//எனது வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப அது அவர்களது உள்விவகாரமாக கருதி அதில் தலையிடா கொள்கையை கடைபிடிக்கிறேன்//

எப்பவாவது முந்தி எங்களிட்டை வாங்கி கட்டினீரோ? உப்பிடிக் கதைக்கிறீர்..

இப்பிடி சொல்லிப்போட்டு பிறகு உங்கடை உளவுப் படையை அனுப்பக் கூடாது சொல்லிப்போட்டன்.

அதோடை எதையும் உங்களிட்டை கேட்டுத்தான் செய்ய வேணும் எண்டும் எதிர்பாக்கக் கூடாது.

 

said ... (10 June, 2005 00:14) : 

அதெப்படி மஸ்ட் டூ பிரச்சினையில நீர் சம்பந்தப்படேல எண்டு சொல்லுவீர்?
நீர்தான் நான் எண்டுதான் டி.சே நிறுவியிருக்கிறார்.

 

said ... (10 June, 2005 00:54) : 

எழுதிக்கொள்வது: wichita

இதற்கெல்லாம் தீர்ப்பு சொல்ல ஒரு நாட்டாமை இருக்கிறாரா - அவர் பேசாப் பொருளை ஏச இல்லை பேசத் துணிந்தவர்.அவரிடம் போய் முறையிடுங்கள் :)

17.20 9.6.2005

 

said ... (10 June, 2005 00:59) : 

சகல இணைகணியர்களுக்கும், இத்தால், அறியத்தருவதென்னவென்றால்,

விசிதா தவிர்ந்த might do, Didn't do, Do Do உட்பட அத்தனை புனைபெயர்களிலும் (பூனைபெயரிலும் எழுத இருந்தேன்; பிறகு பூனை புலி எல்லாம் மிருகவதைச்சட்டத்தின்கீழை கேஸ் போட்டாலுமெண்ட பயத்தில விட்டுப்போட்டன்) எழுதுவதும் எழுதப்போறதும் நானேயெண்டதாலை, என்னை may_did, june_is_doing, july_will_do என்ற பெயர்களிலே பெயரிலி எழுதுவதில்லை என்ற தொன்னையிலே கள்ளுத்தனமாகப் பேசுகின்றவர்களிலே சட்டை ரீதியாக (அதாவது சேட் கொலரைப் பிடிச்சு) நடவடிக்கை எடுப்பேன், ஈர், முட்டை என்று சொல்லிக்கொள்கிறேன்

 

said ... (10 June, 2005 01:51) : 

எனக்கென்னமோ உலகலாவிய வக்கீல்கள் சங்கத்தாரின் சதி இதுவென தோன்றுகிறது.... தமக்கு வேலை வாய்ப்பினை பெருக்கிட வலைப்பதிவுகளை உபயோகிக்கிறார்களோ என்னவோ... (இப்படி சொல்றதுக்கு என்கிட்ட ஒரு ஆதாரமும் இல்ல. சும்மா நகைச்சுவையா சொல்லிவிட்டேன். இதுக்காக வக்கீல்கள் சங்கத்தார் என் மேல கேஸ் போட்டுடாதீங்க)

 

said ... (10 June, 2005 02:08) : 

வசந்தன் சயந்தன் இரண்டென்பர் அறிவுளார்
வசந்தன் சயந்தன் ஒண்டென்பர் அறிவிலார்
வசந்தனே இல்லையென்று சொன்ன பின்
வசந்தன் பக்கம் நியாயம் அமர்ந்திருந்தாரே.

 

said ... (10 June, 2005 02:14) : 

"(எதிராளிகளிற் சிலருக்கு மின்னஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது.)"

ஒன்றாகினாய்
வசந்தன் நீயாகினாய்
இரண்டாகினாய்
சயந்தன் தானாகினாய்
மூன்றாகினாய்
மஸ்டூ ஏனாகினாய்?
நான்காகுவாய்
நாளை நீமாட்டுவாய்!

 

said ... (10 June, 2005 02:55) : 

குதம்பாய்க்குழவிப்பாவாய் விழிகுளம் பாராய் குழம்பாய்க் குழம்பாய்

 

said ... (10 June, 2005 11:04) : 

ஐயோ ஐயோ ஐயோ!
நேற்றிரவு பதிவு எழுதிப்போட்டுவிட்டுப் போய்ப் படுத்துவிட்டேன். இப்போது பார்த்தால் இவ்வளவு நடந்திருக்கிறது.
நான் சீரியசாக எழுதிய ஒரு விடயம் இப்பிடி நகைச்சுவைக் கதம்பமாகப் போய்விட்டது. (தாளாத வேதனையிலிருக்கிறேன். "கண்ணீரோடு விடை பெறுகிறேன்" என்று ஒரு பதிவு போடலாம் தான். அனால் எத்தனை பேர் வந்து, நீங்கள் போகக்கூடாது என்று பின்னூட்டுவார்களோ தெரியாது என்ற படியால் அத்திட்டத்தைக் கைவிடுகிறேன்.)

உண்மையில் நான் மஸ்ட் டூ தான் என்பதற்கு எவரும் எந்த ஆதாரமும் தரவில்லை என்பதுடன் அதை மறுத்து நான் தந்த ஆதாரங்களையும் எவரும் மறுக்கவில்லை. சும்மா அலம்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஆதாரம் தரச்சொல்வதைக்கூட நான் ஒத்துக்கொண்டதாய் ஆக்கிக்கொள்ள இணையப் புலிகள் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் இது உயிர்ப்பிரச்சனை சம்பந்தமானது என்று எடுத்துச்சொல்லியும் யாரும் காதில் போட்டுக்கொண்ட மாதிரித் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் இப்பிரச்சினையைக் கதைக்க எனக்கே அலுப்பாக இருக்கிறது. இன்னும் எதிராளிகளிற் சிலர் மறுமொழி தரவில்லை (மின்னஞ்சல் அனுப்பியும் கூட).

நிற்க, பலர் ஏதேதோ பூடகமாகவும், ஏதோ கவிதையெழுதுவதாக நினைத்தும் எழுதியிருக்கிறார்கள்.
உண்மையில் குறிப்பிட்ட காலத்துக்குள் இதற்கொரு தீர்வு வராவிட்டால், வழக்கைச் சந்திக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

 

said ... (10 June, 2005 13:14) : 

//வசந்தன் சயந்தன் இரண்டென்பர் அறிவுளார்
வசந்தன் சயந்தன் ஒண்டென்பர் அறிவிலார்
வசந்தனே இல்லையென்று சொன்ன பின்
வசந்தன் பக்கம் நியாயம் அமர்ந்திருந்தாரே.//

அட.. வானா க் கவித

 

said ... (10 June, 2005 13:40) : 

/மீண்டும் மீண்டும் இது உயிர்ப்பிரச்சனை சம்பந்தமானது என்று எடுத்துச்சொல்லியும் யாரும் காதில் போட்டுக்கொண்ட மாதிரித் தெரியவில்லை./
வசந்தன் சீரியஸாக நீர் உயிர்ப்பிரச்சனை என்று உயிரை எடுப்பீரென்றால், நீர் must do என்பவர் இல்லை என்று சொல்லிவிட்டுப்போகிறேன். ஆனால், Must Do இலங்கையிலே பயன்படுவதுபோலவே, தமிழினைப் பயன்படுத்தியிருக்கின்றார் (கறுப்பியின் பதிவின் பின்னூட்டத்திலே பாரும்). தவிர, இணையத்திலே, அகப்படும் கணிமுகவரிகளையும் ஆட்கள் பெயர்களையும் சேர்த்துவைப்பது என் பொழுதுபோக்கு. உத்தேசமாக யார் யார் என்றாவது சொல்லமுடியும். must do உம் வசந்தனும் ஒரே ஆளா இல்லையா என்பவற்றிலே வந்த கணிமுகவரிகளின் விபரங்களை வைத்துக்கொண்டு சொல்லலாம். bigpond, optusnet, அல்லது ஏதாவது பல்கலைக்கழகத்திலேயிருந்து வருகின்றதா என்பதை வைத்தும் அவை வருகின்றவிதங்களை வைத்தும் ஊகிக்கலாம்.

வழக்கு மெய்யாகவே போடுவதானால், போடுங்கள். மஸ்ட் டூ, நீர், நான், டிஜே, ஈழநாதன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாட்டிலே இருந்து வழக்கினைப் பேசலாம்.

 

said ... (10 June, 2005 13:58) : 

வசந்தனும் மஸ்டூவும் ஒன்றே என்பதற்கு என்னிடம் எந்தவித ஆதாரமுமில்லை.அதே மாதிரி வசந்தனும் சயந்தனும் இரண்டே என்பதற்கும் என்னிடம் ஆதாரமில்லை.வசந்தன்,சயந்தன்,மஸ்டூ மூன்றே என்பதற்கும் என்னிடம் ஆதாரமெதுவுமில்லை.அட நான் தான் ஈழநாதன் என்று சொல்வதற்குக் கூட அம்மா தந்த பிறப்பத்தாட்சிப் பத்திரம் ஒன்றேதான் சாட்சி இலங்கையில் அதுகூடக் களவாய் எடுக்கலாம் என்று கேள்விப்பட்டதாலை நான் தான் ஈழநாதன் என்பதை நிறுவக் கூட என்னிடம் அத்தாட்சியில்லை.அட வசந்தனே சிங்கப்பூர் வந்து நான் தான் வசந்தன் என்றால் கூட நம்புறதுக்கு என்னிடம் சாட்சியில்லை நிரூபிக்கவும் அவரிடம் சாட்சியில்லை.

உயிர் போனா மயிர் நீக்காக் கங்காருமான் பரம்பரையில் வந்த வசந்தன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அடையாளமில்லா நபரின் உயிருக்கு என்னாலே ஏற்படக்கூடிய ஆபத்தைக் கருத்தில் கொண்டு.இந்தக் கருத்துப்பட கருத்துக்கூறியதற்கு மஸ்டூவிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.

அப்ப சயந்தனும் வசந்தனும் ஒண்டே இந்தக் கதை எனக்கு சத்தியமாய்த் தெரியாது?

 

said ... (10 June, 2005 14:42) : 

ஐயா பெயரிலி!
இதுவும்
மஸ்ட் டூ எழுதினதுதான். எந்தத் தமிழில இருக்கு?

மேலும் ராஜீவுக்கு அஞ்சலிகூட செலுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் என் உயிருக்கு மதிப்பளித்து கருத்துத் தெரிவித்ததுக்கு நன்றிகள். வழக்கு விவரத்தைப் பிறகு அனுப்புகிறேன். எனக்கொரு மன்னஞ்சல் போட முடியுமா?
maathahal@hotmail.com

 

said ... (10 June, 2005 16:31) : 

சயந்தனும் வசந்தனும் இரணடா ஒன்றா?
மஸ்ட் டூவுஅம் வசற்தனும் இரண்டா ஒன்றா?
ஆதாரமாய் எதுமில்லாமல் யாரை யாரெண்டு சொல்ல...........
யாதுமாகி நின்றாய் போற்றி எண்டுற மாதிரி வசந்தனெண்டுறவர் நீக்கமற நிறைந்துள்ளார் போல. :-)
வசந்தனெனப்படுகிற வசந்தனுக்கும்......
சயந்தனுமாய் மஸ்ற் டூவாய் ஆகியதாய சொல்லப்பட்டதா? சொல்லப்படுகிறதா தெரியலை.......
இதில யாரு யாரு உண்மை பொய் எண்டது தெரியலை.

ஆனால் வசந்தனும் சயந்தனும் மஸ்ட் டூ வும் தனி மனிதர்கள் எண்டது உண்மை.

 

said ... (10 June, 2005 17:44) : 

Sayanthan ≠ Vasanthan,
But,
Must Do = Sayanthan + Vasanthan.

எங்க வேணுமானாலும் வந்து கற்ப10ரம் ஏத்திச் சத்தியம் பண்ன தயார். சயந்தன் விட்டு விலகிறதிலயிருந்து சயந்தனுக்கும் இதுக்குமுள்ள தொடர்பு தெரியேலையா? ஆனால் ஒரு சந்தேகம்… இருவரும் யாரிடமிருந்து பிரஞ்சு மற்றும் ஜேர்மன் மொழியறிவைப் பெற்றுக் கொண்டீர்கள்? சயந்தன் ஜேர்மன் கொஞ்சம் கொஞ்சம் பொறுக்கியிருக்க முடியும். (சுவிஸிலிருந்து யாரும் சொல்லிக் குடுத்திருப்பினம். பிரஞ்சு எங்கையிருந்து?? )

 

said ... (10 June, 2005 17:49) : 

//ஆனால் வசந்தனும் சயந்தனும் மஸ்ட் டூ வும் தனி மனிதர்கள் எண்டது உண்மை//

இல்லை. நான் தனிமனிதன் இல்லை. என்னை நம்பி ஒரு பெரிய உயிரும் இரண்டு சிறிய உயிரும் இருக்கிறது.

 

said ... (10 June, 2005 17:59) : 

/மேலும் ராஜீவுக்கு அஞ்சலிகூட செலுத்தப்பட்டுள்ளது./
அப்போதே அதைப் பார்த்தேயிருந்தேன். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை (கொல்லவில்லை என்று எழுதினேனா என்று திரும்பச் சரிபார்த்துக்கொண்டேன்).

சரி விடும், உம் உயிரை நம்பி நீர்; must do இன் உயிரை நம்பி இன்னும் ஒரு முழு ரிக்கெற்றும் ரெண்டு அரை ரிக்கெட்டும். கதையை இதோட விடும். கடிதம் போடுறன்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________