Tuesday, May 31, 2005

நீர் ஆடல் -1.




மெல்பேர்ண் 12.03.2005.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நீர் ஆடல் -1." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (31 May, 2005 10:14) : 

எழுதிக்கொள்வது: சுந்தரவடிவேல்

ஆடாத நீரும் உண்டோ? :))

20.43 30.5.2005

 

said ... (31 May, 2005 10:34) : 

வசந்தன்,போட்டோ எடுத்தது நீங்கள்தானா?. மிக அருமை. தொழில்முறை நிழற்படக்காரரின் நேர்த்தி தெரிகிறது.

 

said ... (31 May, 2005 10:43) : 

நீரா டல்? ;-)

 

said ... (31 May, 2005 11:43) : 

முத்து!
எடுத்தது நானே தான்.

சுந்தரவடிவேல்!
தலைப்பைச் சரியாய்ப் புரிந்துள்ளீர்கள்.

பெயரிலி!
உமக்கு 'டல்' ஆக இருக்கிறதா?

"நீர் ஆடல்" என்பதை வைத்து ஒரு உண்மைச் சம்பவமொன்றுள்ளது. பிறகு சொல்கிறேன்.

 

said ... (31 May, 2005 15:28) : 

அழகு

 

said ... (31 May, 2005 17:24) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

நல்லாயிருககு.

9.53 31.5.2005

 

said ... (31 May, 2005 18:29) : 

நீராடலும் நெஞ்சிழப்பும் இயற்கையின் வினைதாம்.உயரினது உன்னதம்,இயற்கையுடன் ஒன்றித்தலே! மனிதர்கள் தவிர்ந்த மற்றெல்லா உயிர்களும் அதனையுணர்ந்து,அப்பப்பக் காரியமாற்ற-அதைக்கண்ட மானிடனோ அற்புதம்,அழகு என்றுவிட்டு-அடுத்தவேளையுணவுக்காக அவசரமாக ஓடாய் உழைப்பதற்கு ஓடுகிறாள்(ன்)!இயற்கையோடொன்றித்த வாழ்வின்றிப்போனதால்,அசலரும்பி நகல் கொலுவேறுகிறது.அமிழ்தினுமினிது உங்கள் ஒளிப்படக் கலை.

 

said ... (31 May, 2005 18:32) : 

உயிரினது உன்னதம் இயற்கையுடன் ஒன்றித்தலே,என்று பொருள்கொள்க!-மேலே உயரினது என்றபடி...

 

said ... (31 May, 2005 19:24) : 

//நீராடலும் நெஞ்சிழப்பும் இயற்கையின் வினைதாம்//
உதுக்கெல்லாம் இயற்கை தான் காரணம்.

//உயரினது உன்னதம்,இயற்கையுடன் ஒன்றித்தலே!//
உயிரோடை இருக்கிறதின்ரை பெரிய விசயமே உப்பிடி இயற்கையோடை இருக்கிறது தான்.

//மனிதர்கள் தவிர்ந்த மற்றெல்லா உயிர்களும் அதனையுணர்ந்து,அப்பப்பக் காரியமாற்ற//
மனிசரை விடுங்கோ.. மற்ற எல்லாம் ஆடு மாடு வாத்து எல்லாம் அதை புரிஞ்சு இயற்கையோடை இணைஞ்சிருக்க

//அதைக்கண்ட மானிடனோ அற்புதம்,அழகு என்றுவிட்டு-அடுத்தவேளையுணவுக்காக அவசரமாக ஓடாய் உழைப்பதற்கு ஓடுகிறாள்(ன்)!//

மனிசன் என்னடா எண்டால் அதை பாத்திட்டு நல்லாயிருக்கு எண்டு மட்டும் சொல்லிப்போட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்காக உழைக்கிறதுக்கு ஓடுறான்.

//இயற்கையோடொன்றித்த வாழ்வின்றிப்போனதால்//

இயற்கையோடை இருக்கிற வாழ்க்கை இல்லையெண்ட படியாலை

//அசலரும்பி நகல் கொலுவேறுகிறது//

ஒரிஜினலை விட டுப்ளிக்கேற்றுக்குதான் மதிப்பு கூட (இதை சரியாக மொழிபெயர்த்தேனோ தெரியவில்லை)

//அமிழ்தினுமினிது உங்கள் ஒளிப்படக் கலை.//

அமுதை விட உங்கடை புகைப்படம் எடுக்கிற திறமை நல்லாயிருக்கு

 

said ... (31 May, 2005 20:03) : 

பேராசிரியர் திரு.மஸ்ற் டூ ஐயாவுக்கு நன்றி!

உங்களின் வேலைப் பளுவுக்குள்வேறு நானும்கூடவே இப்படியானவொரு வேலையைத் தந்துவிட்டேன்!

தங்கள் பொன்னான நேரத்தைக் காவுகொள்ளும் எனதெழுத்துக்காக, நான் மீளவுமொரு நன்றியறிதலைக் காணிக்கையாக்கி-தங்கள் திருக்கரங்களுக்குச் செல்லமாகவொரு அன்பு முத்தமிடவெண்ணித் துடியாயத் துடித்துத்து, மௌனிக்கிறேன்.

 

said ... (31 May, 2005 20:34) : 

"நும்மினும் சிறந்தது., நுவ்வை ஆகுமென அன்னை கூறினாள்
புன்னையது சிறப்பே!"

என்ற ஒரு அகப்பாடல் கேட்டுக்கிறீர்களா?., புன்னை மரம்., உன்னை விட வயதில் மூத்தது., உனக்குத் தமக்கை போன்றது என்று தன் பெண்ணிடம்., கூறி வளர்த்திருக்கிறாள் நமது பாட்டி ஒருத்தி!. இயற்கை என்பது வாழ்வின் பகுதி. இப்போது?., நீராடல், கடலாடல், காற்றாடல் எல்லாம் கணணி பெட்டி வழியே மட்டுமே!. வசந்தன், படம் அருமை!.

 

said ... (02 June, 2005 00:00) : 

வாரும் மஸ்ட் டூ!
இப்படி மொழிபெயர்த்துத் தந்தீரென்றால் எமக்குச் சுகமாயிருக்கும்.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

 

said ... (02 June, 2005 03:12) : 

// சுந்தரவடிவேல்
ஆடாத நீரும் உண்டோ? :))// வசந்தன் இப்படியா சுந்தரவடிவேலை வாருவது? :-)

 

said ... (02 June, 2005 06:17) : 

வசந்தன் தலைபைப் பாத்திட்டு இப்ப கொஞ்ச நாளா உம்மைப் பற்றிய படங்களைப் போட்டுக் கொண்டு வாறதால நீர் குளிக்கேக்க எடுத்த படத்தைப் போட்டிருக்கிறீரோ தெரியாது எண்டு பயந்து பயந்து (*_* ) பாத்தன். ஹப்பா நல்லா இருக்கு.

 

said ... (02 June, 2005 09:19) : 

கறுப்பி சொன்னது:
//நீர் குளிக்கேக்க எடுத்த படத்தைப் போட்டிருக்கிறீரோ தெரியாது எண்டு பயந்து //


என் தலைப்புக்கு வேறு பொருளும் உண்டு. அதனால்தான் புணர்த்தாமற் போட்டேன். சுந்தரவடிவேலர் பிடித்துவிட்டார்.
நீங்கள் சொன்னதுக்காகவே நான் குளிக்கும்போது எடுத்தபடம் போடப்போகிறேன். கண்ணைப்பொத்திக் கொள்ளுங்கோ.

ரமாசு!
பின்னூட்டுக்கு நன்றி. வாருதல் என்பது நல்ல சொல்; தலை 'வாருதலைப்" போல.

 

post a comment

© 2006  Thur Broeders

________________