மெல்பேர்ண் காக்கைகள்.
இதோ இவைகள் மெல்பேர்ணின் காகங்கள். முதுகிலும் அலகிலும் வெள்ளையாக இருக்குமிவை வெள்ளையினக் காகங்கள் போலும். கரையிறதில மாற்றமில்ல. ஆனா அவைக்கேயுரிய சேட்டைகள் எல்லாம் இல்லை. இதேபோல் எங்கட ஊர் மாதிரியே கறுப்பர்களும் இருக்கினம். கறுப்பெண்டா கடும்கறுப்பு. எல்லாத்தையும் பாத்தா அண்டக் காக்காக்கள் மாதிரித்தானிருக்கும். அதுகளில சிலதுகளையும் படமெடுத்தன்; ஆனா சரியா வரேல. முடிஞ்சா அவயளையும் படமெடுத்துப் போடுறன். Labels: படம் |
"மெல்பேர்ண் காக்கைகள்." இற்குரிய பின்னூட்டங்கள்
சனிக்கிழமை விரதத்துக்கு காகத்துக்கு சாப்பாடு வைக்கிறதெல்லோ? உந்த காகத்துக்கும் வைக்கலாமோ? அல்லது கறுத்த காகத்துக்கு மட்டும் தான் வைக்கலாமோ?
அட வெள்ளைக் காகமா?
எங்க ஊர்ல ஜால்றா அடிக்கிறவங்கள அல்லது ஒத்து ஊதுதறவங்களை , "நாம வெள்ளைக் காக்கா மள்ளாக்கப் (பின்புறம்) பறக்குதுன்னா, ஆமாங்க ஒரு கால இழுத்து இழுத்துப் பறக்குதுன்னு சொல்றவர்" என்பார்கள். கிட்டத்தட்ட நம்ம கூட்டணி கட்சித் தலைவர்கள் போல் உள்ள ஆட்களை!!!. மெல்பன்ல கருப்பு காகத்தை உதாரணம் சொல்வார்களோ?
எழுதிக்கொள்வது: காஞ்சி பிலிம்ஸ்
undefined
19.50 27.5.2005
வெள்ளைக் காக்கைகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ஊர்க்காகந்தான் அவுஸ்ரேலியா போய் மயிருக்குச் சாயம் அடிச்சிருக்கோ ;-)
kaham = karupu = No No
எழுதிக்கொள்வது: Mathy Kandasamy
ºÃ£®®®.. þó¾ì ¸¡¸õ ´Šð§ÃÄ¢Âý ¯îºÃ¢ôÀ¢¨Ä ¸òЧÁ¡?
±í¸¼ «ôÀ¡Å¢ýÈ ¬Ã¡ö¢ýÀÊ ;) þÄí¨¸ì ¸¡¸õ, þó¾¢Âì ¸¡¸õ, Áò¾¢Â ¸¢ÆìÌì ¸¡¸õ, þí¸¢Ä¡óÐì ¸¡¸õ, «¦Áâì¸ì ¸¡¸õ ±øÄ¡õ «ó¾ó¾ ¿¡ðÎ ¯îºÃ¢ô§À¡¼ ¸òÐÁ¡õ. :P ¯ûǾ¢§Ä§Â «¦Áâì¸ì¸¡¸òÐ측¾¡ý ¦¾É¡ÅðÎì ܼšõ. ´Šð§ÃÄ¢Âì ¸¡¸õ ±ôÀÊ???
22.31 27.5.2005
கறுப்பி!
காகம் கறுப்பு எண்டது பொய்தான். ஆனா அத எங்கட ஊரிலதானே படிப்பிக்கிறம். இஞ்ச என்ன மாதிரியோ தெரியேல.
சயந்தன்!
நான் வச்சனெண்டால் கறுப்புகளுக்குத்தான். ஆனா அதுகள் இலகுவில அம்பிடாதுகள். "கள்ளக்குணமுள்ள" எண்டு சோமசுந்தரர் சொன்னது கறுப்புகளுக்குத்தான் பொருந்தும்.
அப்படிப்போடு! (இது பேர்)
அது "மல்லாந்து". அப்படிப்பட்டவர்களை இங்கே எப்படி அழைக்கிறார்கள் என்று கேட்டுப்பார்க்க வேணும்.
பெயரிலி!
சிலவேளை மயிர் நரைச்ச காகத்தைத்தான் நான் படமெடுத்துப்போட்டேனோ?
காஞ்சிக்கும் மதிக்கும் நன்றி. மதி என்ன எழுதினனியள் எண்டு விளங்கேல.
சரீஈஈஈ.. இந்தக் காகம் ஒஸ்ட்ரேலியன் உச்சரிப்பிலை கத்துமோ?
எங்கட அப்பாவின்ற ஆராய்ச்சியின்படி ;) இலங்கைக் காகம், இந்தியக் காகம், மத்திய கிழக்குக் காகம், இங்கிலாந்துக் காகம், அமெரிக்கக் காகம் எல்லாம் அந்தந்த நாட்டு உச்சரிப்போட கத்துமாம். :P உள்ளதிலேயே அமெரிக்கக்காகத்துக்காதான் தெனாவட்டுக் கூடவாம். ஒஸ்ட்ரேலியக் காகம் எப்படி???
This comment has been removed by a blog administrator.
கா கா கா
எழுதிக்கொள்வது: கருவெண் பாணன்
என்ன வசந்தன் நல்லா கதை விடுகிறியள். :) நீங்கள் காட்டுவது மாக்பை (Australian Magpie) எனும் பறவை போலும். ஒருவேளை அதற்கு தமிழில் மெல்பேர்ண் காக்கை என பெயரிட விரும்புகுறீர்களோ? அப்படியாயினும், பின்வரும் இணைப்பு இவற்றை இனிய குரல் கொண்ட ஒஸ்திரேலியப் பாணர் என்றல்லோ விவரிக்கின்றன.
http://www.calm.wa.gov.au/plants_animals/bird_magpie.html
இதென்னொரு படம் (ஒஸ்திரேலியப் பாணர்) :)
http://www.solanum.net/images/birds/Magpie1.jpg
3.45 28.5.2005