Sunday, May 15, 2005

நினைத்தாலே இனிக்கும்.

ஒரு பலாப்பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை எப்பிடி "உய்த்துணர்வது" என்று உங்களுக்குத் தெரியுமா?
அதன் மேற்பரப்பிலுள்ள முட்களை எண்ணவும். அவற்றை ஐந்தால் வகுத்து வரும் விடையுடன் அப்பழத்தின் ஆகக்கூடிய குறுக்குச் சுற்றளவை அங்குலத்தில் அளந்து கூட்டி பின் எட்டால் வகுக்கவும். வரும் விடைதான் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை.

தடல்களின் எண்ணிக்கை அறிவது மிகச் சுலபம். முட்களின் எண்ணிக்கையுடன் குறுக்குச் சுற்றளவின் அங்குலக்கணக்கின் மும்மடங்கைக் கூட்டினால் வருவது தடல்களின் எண்ணிக்கை.

இச் சூத்திரத்தைக் கண்டுபிடித்தது அடியேன்தான். வேறெங்காவது பாவிப்பதாயின் Copy right எடுக்கவும்.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நினைத்தாலே இனிக்கும்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (17 May, 2005 00:08) : 

தலையச் சுத்துது சாமி!

 

said ... (17 May, 2005 01:03) : 

எழுதிக்கொள்வது: Oruvan

கணக்குப் புலி தான் நீர்.

1.32 17.5.2005

 

said ... (17 May, 2005 04:42) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

நல்ல கணக்கு எவ்வளவு தரணும் copy right க்கு

21.10 16.5.2005

 

said ... (17 May, 2005 11:03) : 

தலைசுத்துக்கும் நல்ல மருந்து பலாப்பழம்.
மரத்துக்கே தலைசுத்துதா?

நான் கணக்கில் புலியல்லன்.
பலாச்சுளை சாப்பிடுவதில் புலி.

குழைக்காட்டான்!
எனக்கு மின்னஞ்சல் போடும். அங்க வைப்போம் எங்கட வியாபாரத்தை.

 

said ... (17 May, 2005 18:57) : 

நாங்கள் மரத்தைச் சுத்த
மரத்துக்கே தலை சுத்துதாம்.
என்ன நடக்குது?

 

said ... (18 May, 2005 03:52) : 

//அதன் மேற்பரப்பிலுள்ள முட்களை எண்ணவும். அவற்றை ஐந்தால் வகுத்து வரும் விடையுடன் அப்பழத்தின் ஆகக்கூடிய குறுக்குச் சுற்றளவை அங்குலத்தில் அளந்து கூட்டி பின் எட்டால் வகுக்கவும்//

அட! இதப் படிச்சிட்டு நீங்கள் எல்லாம் நேராத்தான் இருக்கீங்களா?. எனக்கு மட்டும்தான் சுத்துதா? கணக்குனாலே, தெரிச்சு ஓடி தெருக்கோடி போயிருவேன்! 'அங்குலம், எட்டால்' ங்கிறது எல்லாம் 'அங்குசம், எமனால்' ங்கிற மாதிரி இருக்குது ராசா! அது என்னா? மேல் பரப்புல இருக்கிற முட்களை வேல மெனக்கெட்டு எண்ணனுமா? ஆள விடுங்கப்பு! நான் வரல இந்த விளையாட்டுக்கு.!!

 

said ... (18 May, 2005 03:57) : 

சும்மா குடுத்தா கூட எனக்கு வேணாம் காப்பிரைட்டு!., அதுக்கு ஒரு வாய் காப்பி தாங்க சந்தோசமா அப்படி ஒரு ஓரமா நின்னு குடிச்சிட்டுப் போயிற்ரேன்

 

said ... (18 May, 2005 10:22) : 

எதையுமே இலவசமாக் குடுத்துப் பழக்கமில்லை.
காப்பியென்றாலும்.

 

said ... (27 May, 2005 01:34) : 

எழுதிக்கொள்வது: Nalayiny Thamaraichselvan

நகைச்சுவைக்கும் ஒரு அளவிருக்கு. அதுக்கு இப்படியாhhhhhh......?

9.3 26.5.2005

 

said ... (27 May, 2005 02:13) : 

எழுதிக்கொள்வது: விசுவனாதன்...

இது எங்கோ படித்தார்போல் இருக்கிரதே.. னல்ல கண்டுபிடிப்பு.. இது போல தமிழில் எழுத எதை பயன் படுத்த வெண்டும்.. சர்ரெ உதவி செய்யவும்.. என் வலைபதிவுகல் ஆங்கிலத்தில் மட்டுமே செய்து வருகிரென்..
உதவிக்கு னந்த்ரி.

12.35 26.5.2005

 

post a comment

© 2006  Thur Broeders

________________