Wednesday, May 11, 2005

காத்திருப்பு...

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரையன்று,
எந்தமீன் வந்தாலும் போதுமென்று
வாடியிருக்குமொரு விடலை.


காத்திருப்பு...

இடம்: வன்னியின் ஒரு குளம்.

பட உதவி: கருணா

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"காத்திருப்பு..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

Blogger ilavanji said ... (11 May, 2005 22:01) : 

வசந்தன்,

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்கீங்களா? :)

 

Anonymous Anonymous said ... (11 May, 2005 23:56) : 

எழுதிக்கொள்வது: sahana

வன்னியன் உங்களுக்கு கருணாகரன் நிலாந்தன் அமரதாஸ் போன்றவர்களுடன் பழக்கம் இல்லையா இவர்கள் வன்னியில் தானே இருக்கிறார்கள். தெரிந்தால் அவர்களைப்பற்றியும் எழுதுங்கள்

10.22 11.5.2005

 

Anonymous Anonymous said ... (12 May, 2005 01:01) : 

நல்ல படம். கருணா என்பது கருணாகரனா?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (12 May, 2005 01:16) : 

இளவஞ்சி!
உங்களளவுக்கு என்ர அம்மா அப்பா புத்திசாலியள் இல்லையே:-)
(கனடாவில ஒருத்தனுக்கு வயிறெரியும்)

சகானா!
இடம் மாறிப்போட்டிட்டியள் போல கிடக்கு.

பொடிச்சி!
இது கருணாகரன்தான்.
ஆனால் கவிஞர் கருணாகரன் இல்ல. சாதாரண கருணாகரன். என் நண்பனொருவன்.

 

Anonymous Anonymous said ... (12 May, 2005 01:44) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

கிளிநொச்சி குளமா?

18.12 11.5.2005

 

Blogger Unknown said ... (12 May, 2005 02:30) : 

எவ்வளவோ காலம் உருமினுக்காய்த்தான் கத்திருக்கிறீர்கள்! எந்தமீன் வந்தாலும் போதுமா?

 

Blogger இளங்கோ-டிசே said ... (12 May, 2005 04:52) : 

வன்னியில் போட்ட தூண்டிலை,மறக்காமல் மெல்போர்ணிலும் போடுங்கோ. Nicole Kidmanம் singleயாய் இருக்கின்றார் என்றுதான் கேள்விப்பட்டேன். எனவே பெரியமீனே அகப்படக்கூடும். சிக்காவிட்டால், 'கவலைப்படாதே சகோதரா'வைக் கேட்டு மகிழவும் :-)).
//(கனடாவில ஒருத்தனுக்கு வயிறெரியும்)//
செர்ரிப்பூ, எப்போது கனடாவுக்கு moved பண்ணினவர் :-) ?

 

Blogger கறுப்பி said ... (12 May, 2005 06:00) : 

காத்திருப்பு என்ற தலைப்பு எதற்காக? மீனுக்காய் காத்திருத்தல் என்று பொருள் பெறுமா?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (12 May, 2005 09:40) : 

கருத்துத் திசை மாறிவிட்டது.

டி.சே.!
எனக்கு விளைமீன், அறக்குளா, கும்பிளா என்ற மீன்களைத்தான் தெரியும். குளத்தில் என்றால் 'யப்பான்' மீனைத்தெரியும். Nicole Kidman என்ற மீனைத் தெரியாது. மெல்பேணில் இருக்கோ தெரியாது:-))

வயிற்றுப் பசியைப்போக்க உறுமீனோ குஞ்சு மீனோ எந்த மீன் வந்தாலும் போதுமென்று காத்திருக்கும் ஒரு சிறுவனின் படம் போட்டிருக்கிறேன். ஆளாளுக்குக் கலியாணம் பேசிறியள்.

ஒரு பாட்டாளியின் பசிபற்றி ஏதுமறியாமல், காலம்காலமாக ஊறிப்போன பூர்சுவா வர்க்கச் சிந்தனையில் திளைத்து, பெண் தேடுவதைக்கூட ஏதோ சந்தையில் மாடுபிடிப்பது போன்ற தொனியில் ஒப்பிட்டு பெண்ணையும் கேவலப்படுத்தி ஆணாதிக்ச் சிந்தனையுடன் பதிலிறுத்த பதர்களுக்கு, நான் போட்ட படத்திலிருக்கும் பாலகனின் பசிக்கொடுமையெங்கே தெரியப்போகிறது? என்று நான் கேட்கும் கேள்வி கூட உறைக்காமல், மீண்டும் வந்து போட்ட கருத்துக்கு மன்னிப்புக் கேட்கும் பழக்கமும் இல்லாமல், அப்படிக் கேட்டாலும் 'ஏன் நீயும் பின்னூட்டத்தில அத ஆமோதிச்சுப் பதில் போட்டனிதானே?' என்று என்னை எதிர்க்கேள்வி கேட்டு மடக்கி பதில் சொல்ல முடியாமல் ஆக்குவதற்கு அலையும் கூட்டத்திற்கு, இனி நான் பதில் சொல்வதாக எண்ணமில்லையென்று சொன்னால் பயந்து போயிட்டான் என்று எக்காளமிடக் காத்திருக்கும் கூட்டத்தின்மீது உண்மையிலேயே எனக்குக் கோபமில்லை என்று கூறி என் கருத்தை முடிக்கிறேன்.
காத்திருப்பு மீனுக்கானது தான்.

 

Anonymous Anonymous said ... (12 May, 2005 17:21) : 

ஓய்!
உமக்கு என்ன காணும் நடந்தது?
எதுக்கிந்த ஒப்பாரி?
அதுசரி, கண்ணீரோடு விடை பெறுகிறேன் எண்டு நேற்றொரு பதிவு போட்டனீர். இப்ப அதக் காணேல. என்ன நடந்திச்சு.

 

post a comment

© 2006  Thur Broeders

________________