போயிட்டு வாறன்’
ஒரு கிழமையா உங்கள அலைக்கழிச்சிட்டு ‘போயிட்டு வாறன்’ எண்டு ஒரு சொல் சொல்லாமப் போயிட்டன் எண்டு நினைக்கிறியளா? மத்தியானம் நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டிட்டு அவசரத்தில ஓடீட்டன். ஆனா அது தமிழ்மணத்தில வரேலயெண்டு இப்பதான் தெரிஞ்சுது. திருப்ப ஒரு நன்றிக் கடிதம் எழுதிறன். ஆனா நிறைய விசயங்கள நிப்பாட்டி சுருக்கமா. இந்தக் கிழம என்னோட ‘வெள்ளி பாத்த’ ஆக்களுக்கு நன்றி. மொத்தமா 25 பதிவுகள் போட்டிருக்கிறன். அதில ‘படங் காட்டினது’ ஏழு பதிவுகள். கொஞ்சம் கூடுதலாத் திணிச்சுப்போட்டன் போல கிடக்கு. சிலபதிவுகளைத் தவிர்த்திருக்கலாமென்று நினைக்கிறேன். குறிப்பாக திடீரென்று எழுதிய ‘தனித்தமிழும் மயிர்த்தமிழும்’ பதிவு. அந்த விவாதத்தைத் தொடர எண்ணமில்லை. என் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் தந்து உற்சாகமூட்டியவர்களுக்கும் ஏனைய வாசகருக்கும் நன்றிகள். உங்களுக்குப் பயன்பாடாக நான் விட்டுச்செல்லும் ஒரு அனுபவம்: ஏற்கெனவே உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். பின்னூட்டங்கள் அதிகம் வரவேண்டுமென்றால், படம் காட்டுங்கள் அல்லது படத்தைப் பற்றி எழுதுங்கள். நன்றி. வணக்கம். Labels: அறிமுகம், நட்சத்திரக் கிழமை |
"போயிட்டு வாறன்’" இற்குரிய பின்னூட்டங்கள்
வசந்தன்,
உங்க வாரம் நல்லாத்தான் இருந்தது! போயிட்டு வாங்க!!
உங்க பதிவுலே இன்னும் எழுதுங்க!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
கலக்கிவிட்டியள் போங்கோ.. ஒரு வாரத்தில 25 பதிவு நான் அறிஞ்ச வகையில இப்பதான். நிறைய தயார்ப்படுத்தியிருக்கிறியள். வாழ்த்துக்கள்.
நல்லாத் தானே சொன்னீங்க, வசந்தன். குறிப்பா நல்லதமிழ் பேசுவது பற்றிக் கதைச்சது எனக்குப் பிடிச்சிருந்துது. மேற்கொண்டு தொடருங்கோ. உங்களைப்போல நாலு ஆக்கள் சொன்னாத்தானே பலருக்கும் அதன் அருமை புரியும்.
தமிங்கிலம் என்ற நோய் பத்திப் பலருக்கும் தெரியணும் தானே?
அன்புடன்,
இராம.கி.
வசந்தன்
மிகவும் நன்றாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன உங்கள் பதிவுகள்.
எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் கொடுக்கவில்லையானாலும் அனேகமான பலதையும் ரசித்தேன்.
நட்புடன்
சந்திரவதனா
வசந்தன்,
உங்க வாரம் ரொம்ப நல்ல வாரம்! "தனித்தமிழும்.." எனக்கு ரொம்ப பிடிச்சது :)
எழுதிக்கொள்வது: kulakaddan
நல்ல பதிவுகள்............. தொடருங்கள் வாழ்த்துக்கள்
13.19 9.5.2005
அனைத்துப் பதிவுகளுமே படிக்க அருமையாக இருந்தன. ஒரு வாரத்தில் 25 பதிவுகள்! கலக்கிட்டிங்க!., படங்காட்டாட்டி நாம பரணிக்கு (தேவையில்லாத பொருட்களைப் போடும் இடம்) போக வேண்டியதுதான்!. நிறைய பதிவுகள், எனக்கு பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது! நன்றி!.
போய் அங்கால கிடக்கிற கதிரையில புரம்பா நித்திர கொண்டுட்டு, ஓடி வாங்களப்பா கெதியா!.
அப்படிப்போடு!
'பரணிக்கு' என்று வராமல் "பரணுக்கு" என்று வரவேண்டும்.
உங்க வாரம் நல்லாத்தான் இருந்தது! போயிட்டு வாங்க!!
bye take care!
நட்சத்திரமோ நிலவோ, வசந்தன், உங்கள் பதிவுகள் பலவும் இந்த வாரத்தில் நன்றாக இருந்தன. நிறையப் பதிவுகளையும் இட்டுச் சிறப்பாகச் செய்திருந்தீர்கள். ஏன் "தனித்தமிழும்..." பதிவு பற்றி அப்படிச் சொன்னீர்கள் என்று தெரியவில்லை. சிறந்த பதிவுகளுள் அதுவும் முக்கியமானது.
சொன்னதும்,சொன்னதற்குச் சொன்னதும் சுகமே!சென்று வா அன்பரே,இனிய பேச்சுமொழியோடு.இனித்ததும், கசத்ததும் உண்மை.இவற்றைவிட ஏது சொல்வேன் வசந்தன்!
நட்புடன்
ஸ்ரீரங்கன்
பின்னூட்டமிட நேரமில்லாமல் போனாலும், பெரும்பாலானவற்றை படித்தேன். வாழ்த்துக்கள்.
25 பதிவு எழுதிட்டீங்களா? கடும் உழைப்புத்தான். நான் கொஞ்சம் தான் படித்தேன். செல்வராஜ் சொன்னமாதிரியே 'தனித்தமிழ்...' பற்றி ஏன் அப்படி சொல்லணூம்?
வாழ்த்துக்கள் வசந்தன்.