Thursday, July 28, 2005

வேலை தேடும் படலமும் வெளிப்பட்ட சில உண்மைகளும்

மெல்பேணில் அண்மையில் நடந்த சுவாரசியமான சம்பவமொன்று.
இதில் சம்பந்தப்பட்டவர்களை உங்களுக்குத் தெரியுமாகையால் இதை இங்கே பகிரலாம் என்று எண்ணுகிறேன்.

அருணன் எண்ட பேரில ஒருவர் முந்தி எழுதிக்கொண்டிருந்தவர். ஞாபகமிருக்கோ? இப்ப ஏன் எழுதிறேல எண்டு கேட்டா ஒவ்வொரு தரமும் புதுசுபுதுசா ஒவ்வொரு சாட்டு சொல்லிக்கொண்டு திரியிறார். அவர் பகுதி நேர வேலை தேவையெண்டு சில இடங்களில விசாரிச்சுத் திரிஞ்சவர். அந்த நேரம் மெல்பேணில இருக்கிற எங்கள் எல்லாருக்கும் சீனியர் ஒருத்தர், (இவரும் வலைப்பதிவாளர் தான். இப்பவும் பதியிறார்.) தான் வேலை ஒழுங்கு செய்து தாறன் எண்டு அருணனுக்குச் சொல்லியிருக்கிறார். பிறகு தனக்கு வேலையெடுத்துத் தந்த, தனக்கு நல்லாத் தெரிஞ்ச ஒருத்தரிட்ட அருணனைப் பற்றிச் சொல்லி அவருக்கு ஒரு பகுதி நேர வேலை ஒழுங்கு செய்து தரச்சொல்லியும் கேட்டிருக்கிறார். அந்த மனுசனும் (தமிழர் தான்) சரியெண்டு சொல்லியிருக்கு.

அந்த மனுசன்தான் வெள்ளைக்கார முதலாளி இல்லாத நேரத்தில கடையப் பாக்கிறவர். ஒரு பொறுப்பான ஆள். நிறையத் தமிழருக்கு வேலை எடுத்துக் குடுத்திருக்கிறார். அந்தக் குறிப்பிட்ட சீனியர் வலைப்பதிவாளரோட கனநாள் பழக்கமும்கூட. சரியெண்டு அந்தாளும் எரிபொருள் நிரப்பு நிலையமொண்டில அருணனுக்கு வேலையொண்டு ஒழுங்கு பண்ணியிருக்கிறார். அதுக்குள்ள அருணனுக்குப் பரீட்சைகள் வந்ததால ஆள் ரெண்டு கிழம படிப்போட நிண்டிட்டார். பிறகு வேல சம்பந்தமா குறிப்பிட்ட வலைப்பதிவாளரிட்டக் கதைப்பமெண்டா அவர் மெல்பேணில இல்ல. தாயகம் போயிட்டார். அப்ப அருணன் ‘சீனியர்’ தொடர்புபடுத்தி விட்ட, வேல தாறணெண்டு சொன்ன மனுசன தொடர்பெடுத்திருக்கிறார்.

அப்ப அந்த மனுசன், அருணணிட்ட ஒரு கேள்வி கேட்டாராம்.
தம்பி, உண்மையாவே உமக்கு உழைக்கோணுமெண்ட ஆசையிருக்கோ? இல்லாட்டி ‘அவன’ மாதிரி சும்மா முசுப்பாத்திக்கும் பொழுது போக்குக்கும் தான் வேல செய்யப் போறீரோ? அவன மாதிரி விளையாடித்திரியத் தான் வேலையெண்டா முதலே சொல்லும், அதுக்கேத்த மாதிரி வேல தாறன். பிறகு எங்களக் கரைச்சல் படுத்திக்கொண்டு இருக்கக் கூடாது. அவனொருத்தனோட நாங்கள் படுற பாடு போதும்
எண்டு அருணணிட்டச் சொல்லியிருக்கிறார் அந்த மனுசன்.
அவன்’ எண்டு குறிப்பிடப்பட்டது, அந்த சீனியர் வலைப்பதிவர் தான். ஆள நல்லாத்தான் மனுசன் புரிஞ்சு வச்சிருக்கிறார். (பின்ன? ஒரே இரவில 800 டொலர் தண்டம் கட்டவைக்கிற வேலைக்காரனெல்லே அவர்.) அருணன் என்னட்ட இதச்சொல்லி சிரிசிரியெண்டு சிரிச்சார். இதுக்குள்ள ஒரு மாத சுற்றுலாவில தாயகம் போனவர் அரை மாதத்தில பதறியடிச்சுக் கொண்டு வந்து சேந்திட்டார். ஏன் விழுந்தடிச்சு வந்தாரெண்டது அவருக்குத் தான் வெளிச்சம்.

இதில அந்த சீனியர் வலைப்பதிவர் ஆரெண்டு தெரியுதோ உங்களுக்கு. சீனியர் எண்டது வயதில இல்ல. மெல்பேணுக்கு வந்ததிலயும் வலைப்பதியிறதிலயும் தான். இப்பிடியான வேலையாட்கள் கிடைக்க முதலாளிமார் என்ன தவம் செய்தினமோ தெரியேல. பாரதி பாட்டு மாதிரி அவையளும் ஒரு பாட்டு இயற்றக்கூடும். இவ்வளவுக்கும் அதைப் பெருமையா வேற சொல்லித் திரியினமாம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வேலை தேடும் படலமும் வெளிப்பட்ட சில உண்மைகளும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (28 July, 2005 00:56) : 

சயந்தன், இதையும் வாசித்துவிட்டு சும்மா இருந்தால் உம்மை அந்த ஆண்டவனால் கூடக் காப்பாற்றமுடியாது :-). சும்மா சும்மா அறிக்கை எல்லாம் பெருசுகள் மாதிரி விடாமல், வசந்தனின் வண்டவாளங்களை பதிவும், படமும் போட்டு தண்டவாளத்தில் விரைவில் ஏற்றிவிடவும்.
....
//ஒரு மாத சுற்றுலாவில தாயகம் போனவர் அரை மாதத்தில பதறியடிச்சுக் கொண்டு வந்து சேந்திட்டார். ஏன் விழுந்தடிச்சு வந்தாரெண்டது...//
இதற்குக் காரணம், விரைவில் இலண்டனுக்குச் சென்று aerospace engineering படிக்கப்போவதுதான் காரணம் என்று அறிந்தேன். உண்மையா?

 

said ... (28 July, 2005 09:06) : 

//சீனியர் எண்டது வயதில இல்ல. மெல்பேணுக்கு வந்ததிலயும் வலைப்பதியிறதிலயும் தான்.//

அவ்வளத்திலும் தானா? வேறொன்றிலும் இல்லயா..?

 

said ... (28 July, 2005 10:41) : 

//(பின்ன? ஒரே இரவில 800 டொலர் தண்டம் கட்டவைக்கிற வேலைக்காரனெல்லே அவர்.//

இவ்வ்வ்வளவு காசு கட்ட வேண்டியதா அப்பிடி என்னதான் நடந்தது? அதையுஞ் சொல்லுமன்! ;o)

 

said ... (28 July, 2005 10:41) : 

//சும்மா சும்மா அறிக்கை எல்லாம் பெருசுகள் மாதிரி விடாமல், வசந்தனின் வண்டவாளங்களை பதிவும், படமும் போட்டு தண்டவாளத்தில் விரைவில் ஏற்றிவிடவும்.//

நல்லாச் சொன்னீங்க டிசே.
சயந்தன்..விரைவில் எதிர்பார்க்கிறோம்! :o)

 

said ... (28 July, 2005 11:11) : 

அட ஷ்ரேயா!
உங்களுக்கு அந்தப் பம்பல் தெரியாதோ?
இத வாசிச்சுப் பாருங்கோ.
நல்ல வேளை முதலாளி மனமிரங்கி மன்னிச்சு விட்டதால தப்பிச்சார்.


இதையும்
வாசிச்சுப் பாருங்கோ.
இதுக்கும் 150 டொலர் கட்டினவர்.

 

said ... (28 July, 2005 11:16) : 

பின்னூட்டமிட்ட ஆக்களுக்கு நன்றி.
எங்களுக்குள்ள சண்டைய மூட்டிவிட மல்லுக்கட்டிக் கொண்டு நிக்கிறியள்.
இதைத்தான் சொல்லுறது, "ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்"

//அவ்வளத்திலும் தானா? வேறொன்றிலும் இல்லயா..?//

இருக்கிறார். எங்களவிட அவர் சில விசயங்களில சீனியர் தான். குறிப்பா "பூ"ப் பிடுங்கிறதில.

ஆனா aerospace engineering பற்றி எனக்கு ஒண்டும் தெரியாது. இது இரகசியமாக்கும்.

 

said ... (28 July, 2005 23:34) : 

டிசே மற்றும் ஷ்ரேயா!
வசந்தனின் படத்தினை வெளியிட்டே தீருவது என்றே நானிருந்தேன். ஆயினும் வசந்தனை போலல்லாது நேரிலும் அது பற்றி அவருக்கு சொல்லி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் தனது படத்தை வெளியிட்டால் அத்தோடு எல்லாம் முடிவுக்கு வரும் என்றார். இது வரை கால உறவும் முடிவுக்கு வரும் என்றும் சொன்னார்.

நான் அதற்கு என்ன தமிழ்ச்செல்வன் மாதிரி கதைக்கிறீர் என்று அவருக்கு சொல்லும் வரையும் அவரின் படத்தை போடுறது தான் என்றிருந்தேன்.

ஆனால் அவர்.. கொஞ்சம் யோசித்து விட்டு.. தமிழ்ச்செல்வன் மாதிரி இல்ல.. இது பொட்டம்மான் மாதிரி என்று ஒரு விறைப்பாக சொன்னார்.

இதுக்கு மேலையும் அவரின் படத்தை போடுவதாக நான் இல்லை. என்னை எல்லாரும் மன்னித்து விடுங்கள்.:(

 

post a comment

© 2006  Thur Broeders

________________