Wednesday, July 06, 2005

இணையத்தில் விடுதலைப் புலிகள்.

(இப்பதிவு நேற்று எழுதிப்போடப்பட்டது. ஆனால் இணைப்பு வேலை செய்யவில்லை. இப்போது வேலை செய்வதால் மீண்டும் இப்பதிவு போடப்படுகிறது.)

விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" கரும்புலிகள் நாளான இன்று முதல் இணையத்தில் வருகிறது. இப்போது அதன் 123 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. அதைத்தும் pdf கோப்பாக உள்ளது.

புலிகளினதோ புலிகள் சார்ந்தவர்களினதோ வெளியீடுகள் வெளியிடங்களில் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியர்க்கு அவை நினைத்தும் பார்க்க முடியாது. இக்குறையை நிவர்த்தி செய்ய இணையம் பயன்படுத்தப்பட வேண்டும். இப்போது "விடுதலைப் புலிகள்" ஏடு இணையத்தில் வந்துள்ளது. ஏறத்தாள இருபது வருடத்துக்குமதிகமான காலம் வெளிவருகிறது இந்த ஏடு. இப்போது இணையத்தில் வந்ததன்மூலம் புதியதொரு பாய்ச்சலைச் செய்துள்ளது. இதன்மூலம் ஆர்வமுள்ளவர்கள் இணைய வழியில் இச்சஞ்சிகையை வாசித்துக் கொள்ளலாம்.

இதேபோல் போராட்டக்களத்தின் கலை இலக்கியங்களைத் தாங்கி வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கும் சஞ்சிகை "வெளிச்சம்". போர்க்களத்தின் இலக்கியம் பார்க்க வேண்டுமென்றால் வெளிச்சத்தை விட வேறு சஞ்சிகைகளைப் பரிந்துரைக்க முடியாது. போரின் மக்களாலும் போராளிகளாலும் படைக்கப்பட்ட இலக்கியங்களைத் தாங்கி வந்த வெளிச்சமும் இணையத்தில் வர வேண்டும். அதற்குரியவர்கள் ஆவண செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழக வெளியீடான "வெளிச்சம்" இணைத்தில் வருவதன் மூலம் வெளித்தெரியாமல் அமுங்கிக் கிடக்கும் இலக்கியப் பக்கமொன்று வெளிச்சத்துக்கு வரும்.

இதே போல் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் வெளியீடான "ஆதாரம்" சஞ்சிகையும் ஒரு காலத்தின் பதிவு. போர்க்காலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எம்மக்கள் வெற்றி கொண்ட விதங்களை அதன் பதிவுகளினூடகப் பார்க்கலாம். எம் மக்களின் முயற்சியும், அயராத உழைப்பும் வெளிப்படும். நிச்சயம் அந்தச் சஞ்சிகையும் இணையத்தில் வெளிவரவேண்டும்.

விடுதலைப் புலிகள் ஏட்டின் இணையப் பதிப்போடு மேலும் பல நல்ல செய்திகள் வருமென்ற அவலுடன் காத்திருக்கிறோம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இணையத்தில் விடுதலைப் புலிகள்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 July, 2005 22:36) : 

எழுதிக்கொள்வது: Shakunthala

நீங்கள் கொடுத்த லிங்கை கிளிக் செய்தேன். அது எடுக்க வில்லை. என்ன் காரணம்?

21.5 5.7.2005

 

said ... (05 July, 2005 23:39) : 

மன்னிக்கவும். அந்தத் தளத்தில் ஏதோ தொழிநுட்பக் கோளாறு என்று நினைக்கிறேன். ஒரு நாள் முழுவதும் நான் அத்தளத்தைப் பார்வையிட்டேன். சிக்கலின்றி வேலை செய்தது. புதினத்திலும் அத்தளம் செய்தியாக வெளியிடப்பட்டுவிட்டது. என்ன சிக்கலென்று தெரியவில்லை. நாளையோ நாளை மறுதினமோ வேலை செய்யலாம். பொறுத்துக் கொள்க.

 

said ... (06 July, 2005 17:52) : 

இணைப்பு இப்போது வேலை செய்கிறது. முயற்சிக்கவும்.

 

said ... (06 July, 2007 11:05) : 

னீங்கள் ஏன் ஒரே இந்திய தமிழர்களை எல்லாத்திற்கும் இழுக்கிறீர்கள்?????? உங்களின் வேலையை நீங்கள் பாருங்கள்..அவர்களின் வேலையை அவர்கள் பார்க்கட்டும்..

 

post a comment

© 2006  Thur Broeders

________________