Tuesday, July 26, 2005

சயந்தனும் நண்பர்களும்

"கூட்டாளி" சயந்தன், தன்ர பக்கத்தில தானும் தன்ர நண்பர்களும் நிண்டு எடுத்த படமொண்டைப் போட்டிருக்கிறார்.
அதே நண்பர்களோடு சயந்தன் நிண்டு எடுத்த படங்கள் சிலதும் சயந்தனின்ர படங்கள் சிலதும் ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் வந்து சேர்ந்தன.

அதுகள உங்களோட பகிரலாமெண்டு தான் இந்தப் பதிவு.ஏற்கெனவே, கறுப்பாக்கி 'கண்ணிவெடியகற்றுவதாக'ப் போட்ட படம்."அயுத எழுத்து" பார்த்த தாக்கத்தில் எடுத்திருப்பார்களோ?"ஒளித்துப் பிடித்து" விளையாடும்போது எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. திருமுகம் யாருடையதென்று தெரிகிறதா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சயந்தனும் நண்பர்களும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 July, 2005 20:58) : 

ஒளிச்சது சரி..ஆராவது உம்மைக் கண்டுபிடிச்சவையோ?? :o)

 

said ... (26 July, 2005 21:03) : 

ஆயுத எழுத்தின்ர பாதிப்பு படம் இரண்டில இருக்கிறது சரி. அப்படியே சயந்தன்ர நானும் நண்பர்களும் பதிவின் பாதிப்பு உங்களுக்கு நிறையவே இருக்கு போல. நானும் நண்பர்களும் என்றுதலைப்பு போட்டு உங்கட படத்தைப்போட்டா ஷ்ரேயா என்ன எல்லாருக்கும் சந்தேகம் தீரும் தானே வசந்தன்.

 

said ... (26 July, 2005 22:43) : 

//ஒளிச்சது சரி..ஆராவது உம்மைக் கண்டுபிடிச்சவையோ??//
நான் சொல்ல நினைத்ததையே ஷ்ரேயாவும் கூறியிருக்கின்றார். அது சரி எந்தப் 'பூவை'யப்பா தேடினீர்? பூவின் படத்தைப் போட்டாலும் வேண்டாம் என்றா சொல்லப்போகின்றோம் ;-)?

 

said ... (26 July, 2005 23:09) : 

என்னட்டை ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் நீர் உம்மண்டை பாட்டுக்கு செய்யிற உந்தச் சீலம்பாய் வேலையளை உடனை நிறுத்தும்.

இல்லையெண்டு சொன்னால் தவிர்க்க முடியாமல் மரத்துக்கு கீழை ஒரு bag கொழுவிக்கொண்டிருக்கிற ஒரு தொக்கை மனிசனின் படத்தை நான் போட வேண்டியிருக்கும்.

 

said ... (27 July, 2005 01:43) : 

எல்லாருக்கும் நன்றி.
உந்தப் பெயர் மாறாட்டப் பிரச்சினை இப்ப முடியாது எண்டு மட்டும் விளங்கிட்டுது.
அது முடியாமலிருக்கிறது தான் எங்கள் ரெண்டு பேருக்கும் நல்லம். (பின்ன சும்மா விளம்பரம் கிடைக்குதெல்லோ, ஷ்ரேயாவத் தவிர)

தேடின பூவை போடலாம் தான். அதுக்கு சயந்தன் ஓமெண்ட வேணுமே.

சயந்தன்,
என்னப்பா இப்படிப் பயப்பிடுத்திறீர்?
ஆனா தொக்கை ஆளெண்டு சொல்ல சந்தோசமாயிருக்கு. டி.சேக்கு கவலையா இருக்கும்.
இருந்தாலும் நீர் வெளியிட்ட ஆக்களின்ர படங்களத் தானே வெளியிட்டன்.

 

said ... (27 July, 2005 02:07) : 

எழுதிக்கொள்வது:

எனக்கு ஒண்டு விளங்கிற்றுது.

ஒஸ்ரேலியாக்கு வர முதல் இருந்த படம் - சயந்தன்.

ஒஸ்ரேலியா வந்து ஒரு வருசத்துக்குப் பிறகு எடுத்த படம் = வசந்தன்.

அந்த பூக்குவியலுக்குப் பின்னுக்கு நிக்கிற ஆளை நல்ல வடிவாப்பாருங்க. வசந்தனின்ற சின்ன போட்டோவையும் பாருங்க.

13.21 26.7.2005

 

said ... (27 July, 2005 02:35) : 

//ஒஸ்ரேலியாக்கு வர முதல் இருந்த படம் - சயந்தன்.

ஒஸ்ரேலியா வந்து ஒரு வருசத்துக்குப் பிறகு எடுத்த படம் = வசந்தன்.//

எனக்கென்னமோ அன்னியன் பட நினைவு தான் வருகுது.

அம்பியும் றெமோவும் வந்தாச்சு..

அந்நியன் யார்...? அது மஸ்ற் டு வாக இருக்குமோ?

 

said ... (27 July, 2005 02:39) : 

எழுதிக்கொள்வது:

//அந்நியன் யார்...? அது மஸ்ற் டு வாக இருக்குமோ?//

வசந்தன்/சயந்தனுக்கு ஜேர்மன் மொழி தெரியாது கண்டியழோ

13.54 26.7.2005

 

said ... (27 July, 2005 03:50) : 

//இல்லையெண்டு சொன்னால் தவிர்க்க முடியாமல் மரத்துக்கு கீழை ஒரு bag கொழுவிக்கொண்டிருக்கிற ஒரு தொக்கை மனிசனின் படத்தை நான் போட வேண்டியிருக்கும்.
//

அப்படிப்போடுங்க

 

said ... (27 July, 2005 16:36) : 

நீர் தேடின பூவை(ய)ப் பற்றி நீர் எழுதிறதுக்கு சயந்தன்ட அனுமதி ஏன்? சயந்தன் உம்மட மனச்சாட்சியோ? :oD

//பின்ன சும்மா விளம்பரம் கிடைக்குதெல்லோ, ஷ்ரேயாவத் தவிர)//

எனக்கும் விளம்பரம் வருமென்டுபாத்தால் நடக்க விட மாட்டீங்கள் போல கிடக்கு! :o(

 

post a comment

© 2006  Thur Broeders

________________