Tuesday, February 13, 2007

மறுக்கப்பட்ட உரிமையும் புதிய வலைப்பதிவும்

விக்ரோறிய மாநிலம் (அவுஸ்திரேலியா) தொடர்பான சில தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொள்ள "மெல்பேர்ண் எனும் மெல்லியமகள்" என்ற வலைப்பதிவு நிறுவப்பட்டுள்ளது.
அவ்வலைப்பதிவு நிறுவப்பட்ட பின்னணி, முன்னணி பற்றி விரிவாக அங்குச் சொல்லப்பட்டுள்ளது.

விக்ரோறிய மாநிலம் என்று இருந்தாலும் தொடக்கத்தில் மெல்பேர்ண் நகரை மையப்படுத்தியதாகவே பதிவுகள் இருக்கும்.

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அதற்குமுன் ஓர் அறிமுகத்தைக் கொடுக்கவே இப்பதிவு.

அங்கு பின்னூட்ட வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் இப்பதிவிலேயே பின்னூட்டமிடவும்.


Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மறுக்கப்பட்ட உரிமையும் புதிய வலைப்பதிவும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (13 February, 2007 18:40) : 

அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். தென்துருவ வலைப் பதிவர் சங்கத் தலைவர் ஆரம்பித்திருக்கும் இப் பதிய வலைப் பதிவுக்கு ஐரோப்பிய வலைப்பதிவர் பேரவையின் ஏகோபித்த ஒட்டுமொத்த ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தலைவர்
ஐரோப்பிய வலைப்பதிவர் பேரவை

 

said ... (13 February, 2007 21:20) : 

மெல்லியமகள் மெல்பேர்ண்

வாழ்த்துக்கள்

மெல்பேர்ண் மணி போல சிணுங்கியது இவளா..? ஹி ஹி.

 

said ... (13 February, 2007 21:22) : 

ஐயா வசந்தன்
////தென்துருவ வலைப் பதிவர் சங்கத் தலைவர் ஆரம்பித்திருக்கும///

ஓகோ!....நீங்கள் தலைவராயிடீங்களோ?
அதுதானே பாத்தன், நான் மெல்போனில இல்ல எண்டு பேச்சந்தோசமாம்.

தலை, மூட்டை முடிச்செல்லாம் கட்டத்தொடங்கிட்டன் திரும்ப உங்க வாறத்துக்கு.
பயப்பிடாத மேனை, சும்மா..பகிடிக்கு.

 

said ... (14 February, 2007 01:59) : 

வசந்தனுக்கு ஆதரவாக அணிதிரள்வோம் எனச் சூழுரைக்கிறோம்.

 

said ... (14 February, 2007 08:13) : 

//1 Kommentare //

இதென்ன மொழியண்ணை? முதலிலை ரெம்ப்ளேட்டை மாத்துங்கோ, பிறகு ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் ;-))

 

said ... (14 February, 2007 11:39) : 

உமக்கு அனுப்பேல்லையோ? grrrr!! maathahal@gmail.com என்ட முகவரிக்கு ஒன்பதாம் திகதி அழைப்பு அனுப்பினனான் காணும். அதுக்குப் பதிலைக் காணேலயெண்டு இன்டைக்குத் திருப்பி இன்னொருக்கா அழைப்பு அனுப்பியிருக்கிறன்!! தனிமடல் போடுறன். அதையாவது பாரும்! :O)

 

said ... (14 February, 2007 13:30) : 

கொழுவியைக்கூப்பிடுங்கோ, விலக்கு தீர்க்க

 

said ... (14 February, 2007 14:33) : 

சின்ன சந்தேகம் ??

அதேன் "மெல்லியமகள் "?????
தனி ஆள வெளிக்கிடிருக்கிறியள்.
என்ன நடக்குது எண்டு பாப்பம்.

http://en.wikipedia.org/wiki/Victoria_%28Australia%29

 

said ... (14 February, 2007 14:50) : 

பிரபா, இவர் மின்னஞ்சலையே பாக்க நேரமில்லாமல் திரியிறார்.. பேந்தெங்கால வார்ப்புருவில கை வைக்கிறதுக்கு நேரம்! :O))

வசந்தன் - நான் போட்ட பின்னூட்டமெங்க? பிரசுரியும். எப்பவேனும் பிந்தி வந்து பின்னூட்டினா உடன பிரசுரிக்கிறீர், நேரத்துக்கு வந்தா பிரசுரிக்கிறீரே இல்ல/பிந்துது. என்ன அநியாயம்!!

முக்கிய குறிப்பு: ஜிலேபிகளை இல்லாமலாக்கிறதுக்கு கோபின்ட நிரலி பாவிக்கிறீங்களெண்டால் பிரபான்ட பதிவில நடந்தது மாதிரி நான் போட்ட பின்னூட்டத்தில என்ட பேர் இல்லாம இருக்கும். 'மழை' ஷ்ரேயா என்டு போடுறதில உள்ள single quote ஆல பேரை html விழுங்கீடுது. :O(
-'மழை' ஷ்ரேயா

 

said ... (14 February, 2007 14:57) : 

Annnoi!! ungada blog laum comment eluthinalda pear a kanella.. " said" enduthan varuthu!

\\பிறகு ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் ;-))
\\ ena paarka poreengal? yaru kooda poo vangirathenda?????????

 

said ... (14 February, 2007 15:53) : 

இன்னாதூஊஊஊஊஊஊ?

எங்கட தல தென்துருவச் சிங்கம் வசந்தனைக்கூப்பிடேல்லையோ. நானும் இது தெரியாம, வசந்தனையும் கூப்பிடுங்கோ எண்டெல்லாம் சொல்லி வாழ்த்தும் தெரிவிச்சிற்று வந்திருக்கிறன். சே! இப்பிடி ஏமாத்திப்போட்டாங்கள்.

தல இப்ப சொல்லுறன் கேட்டுக்கொள்ளுங்க. உங்கள ராசமரியாதையோட தாரை தப்பட்டை சகிதமா வந்து உரிய மரியாதையெல்லாம் செய்து கூப்பிட்டாத்தான் நானும் அங்க காலடி எடுத்துவைப்பன். குமணனைக்கூப்பிட்டு உள்ளுக்குள்ள போகேக்க குனிஞ்சு போறமாதிரியெல்லாம் முன்வாசல் அமைச்சிற்றுக் கூப்பிட்டாலும் கூப்பிடும் அந்தக் குள்ள நரிக்கூட்டம். ஏமாந்து போயிராத கண்ணு.

இங்கனம்,
தென்துருவச் சிங்கம் ஐயா வசந்தனின் எடுபிடி


(ஹெஹெஹ்ஹெஹெ... இவங்களுக்கிள்ள எப்படா பிரச்சினையைக் கிளப்பிவிடலாமெண்டிருந்தனான். அதை வெளியிர சொல்லிராதீங்க மக்களே. ஹெஹெஹ்ஹெஹெ...)

 

said ... (14 February, 2007 15:54) : 

// கானா பிரபா said...
கொழுவியைக்கூப்பிடுங்கோ, விலக்கு தீர்க்க
//

ஓமோம்! கூப்பிடுங்களப்பா. அவர்தான் சரியான ஆள். களத்தில எல்லாம் நிண்டு ரிப்போர்ட் குடுக்கிற அளவுக்கு அஞ்சா நெஞ்சன். இந்தப் பிரச்சினையையும் தீர்க்கிற அளவுக்குப் புத்திசாலி. மற்ற ஆக்களை விட்டா, குரங்கு அப்பம் பகிர்ந்த கதைமாதிரித்தான் போயிரும் கண்டீங்களே.

 

said ... (14 February, 2007 15:59) : 

//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
உமக்கு அனுப்பேல்லையோ? grrrr!! maathahal@gmail.com என்ட முகவரிக்கு ஒன்பதாம் திகதி அழைப்பு அனுப்பினனான் காணும். அதுக்குப் பதிலைக் காணேலயெண்டு இன்டைக்குத் திருப்பி இன்னொருக்கா அழைப்பு அனுப்பியிருக்கிறன்!! தனிமடல் போடுறன். அதையாவது பாரும்! :O)
//

தல. நீ அப்பாவி தல. இந்தப் பேச்சையெல்லாம் கேட்டு நம்பிராத. ஒவ்வொரு இடமா தரிப்புத்தரிப்பா நிண்டு புதிய டெக்னிக்கு எல்லாம் கத்துக்கிட்டு வந்திருக்கிறாங்க. தனிமடல் அனுப்பியிருக்கிறன் எண்டு சொல்லி உங்களை நம்ப வச்சு, அந்தத் தனிமடலுக்குள்ள ஒரு வைரஸ் பொம்ப் கிம்ப் வச்சு அனுப்பிக்கினுப்பி இருக்கப்போகீனம்.

'வஞ்சகர் கூட்டமா கர்ணா வஞ்சகர் கூட்டம்.'

அன்னிக்கே ஆந்திரா மாநிலத் தலை ராமராவ் சொல்லிட்டுப்போயிருக்காருப்பா. அவ்வளவுதான் சொல்லுவேன். ம்க்கும்..

பாத்து நடந்துக்கப்பு.

 

said ... (14 February, 2007 17:58) : 

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.
நான் இருதரம் அவுஸ்திரேலியா போய் வந்து விட்டேன்.
முதலே இந்தப் பதிவைத் தொடங்கியிருந்தீர்களானால் உதவியாக இருந்திருக்கும்.

இப்போ, இனி அங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. வேறு நாட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்து விட்டேன்.

 

said ... (14 February, 2007 20:56) : 

//தென்துருவச் சிங்கம் வசந்தனைக்கூப்பிடேல்லையோ. //

துருவப்பகுதிகளில பனிக்கரடிகள் தானே இருக்கும். சிங்கங்களும் உள்ளதா..?

 

said ... (14 February, 2007 22:05) : 

ஓமோம்! கூப்பிடுங்களப்பா. அவர்தான் சரியான ஆள்.

இது பற்றி எனக்கு எந்த விதமான மெயில்களும் இதுவரை வரவில்லை.

 

said ... (14 February, 2007 22:05) : 

ஓமோம்! கொழுவி விடிறதெண்டாலும் சரி, கொழுவிப் பின் குலவிறதென்டாலும், அவர்தான் சரியான ஆள். கூப்பிடுங்கோ கொழுவியை.

 

said ... (14 February, 2007 22:55) : 

//1 Kommentare //

இதென்ன மொழியண்ணை?

இது ஐரோப்பிய வலைப்பதிவர் பேரவையின் அன்புப் பரிசு..

 

said ... (14 February, 2007 22:59) : 

வடிவாப் பாருங்கோ.. அம்பு கிழிக்கிற இதயம் ஏற்கனவே கிழிபட்டு மேலை ஓட்டையாகக் கிடக்கு. வசந்தன்.. time waste.. விட்டுடும்..

 

said ... (15 February, 2007 12:03) : 

சயந்தன்,
ஆதரவுக்கு நன்றி.

சின்னக்குட்டியர்,
ரெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்பேண் மலர்போல் மெல்லிய மகளா

எண்டுதான் அவர் எழுதினவர்.
நீர் மாத்திப் பாடுறீர்.
_________________________________

செல்லி,

//ஓகோ!....நீங்கள் தலைவராயிடீங்களோ?//

அடப்பாவமே!
ஏதோ இப்பதான் தலைவரான மாதிரிக் கதைக்கிறியள்.
விடியவிடிய ராமர்கதை.........

உங்களுக்கு முந்தின ஆக்களிட்ட உதுகளைப்பற்றிக் கேக்கிறேலயோ?

ஒருபின்னூட்டம் போட்டிட்டு, பிறகு வந்து பகிடிக்குத்தான் சொன்னன், கோவியாதையும், பிழையா இருந்தா மன்னிச்சுக்கொள்ளும் எண்டு சினுங்கிறதை விடச்சொல்லி உங்களுக்கு முதலும் சொன்னனான்.
நான்தான் சிலரின்ர பதிவில ஒரு பின்னூட்டம் போட்டிட்டு பிறகு அவை மூஞ்சயநீட்ட, பிறகுபோய் அது பகிடிக்குச் சொன்னன் எண்டு கெஞ்சிக்கொண்டிருக்கிறன் எண்டா, என்னையும் அந்த சிடுமூஞ்சிக் கூட்டத்தில சேத்திடுவியள் போல கிடக்கு. (இதுக்கே இன்னொருக்கா மன்னிப்புக் கேட்டு மடலனுப்பவேணுமோ தெரியேல ;-))
நானென்ன பகிடி வெற்றி தெரியாதவனெண்டோ நினைச்சியள்?
எனக்குத் தேவையில்லாவிட்டால்கூட கூடியபட்சம் ஒரு நகைப்பான் போட்டாலே போதும்.

இந்தப்பதிவில நடக்கிறதெல்லாம் உப்பிடியான விசயங்கள்தான். சீரியசா ஏதாவது எழுதினால் - அதையும் நான் பகிடியாக எடுத்திடுவன் எண்டு கருதினால் - அடியில 'இது சீரியஸ்' எண்டொரு குறிப்பைத் தரலாம்.
_______________________________

ஷ்ரேயா,
உங்களுத்தான் உங்கட பேர்ப்பிரச்சினை விளங்குதெல்லோ?
பிறகு உங்கட பேரை மாத்தாமல் இஞ்ச வந்துநிண்டுகொண்டு என்ன செய்யிறியள்?

உந்த மெயில் அனுப்பிற விளையாட்டு எங்களுக்கும் தெரியும்.
நாங்கள் பின்னூட்டங்களையே இடையில செருகிக்கொண்டிருந்த ஆக்கள். (இப்ப புதுபுளொக்கர்காரன் எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டான் ;-(

 

said ... (15 February, 2007 15:21) : 

பிரபா,
கொழுவியை விடும்.
அவர் களத்தில நிற்கிறார்.
ஒண்டில் யொம்கிப்பூர் கள்தில அல்லது காதல் களத்தில.
____________________________

திலகன்,
அந்த வரி வைரமுத்திட்ட சுட்டது.
தனியாள வெளிக்கிட்டது பற்றி ஏற்கனவே அந்தப்பதிவில சொல்லியாச்சு இப்படி
"சிங்கம் தனியாத்தான் போகும்: பன்றிகள்தான் கூட்டமாப் போகும்".
_____________________________
சினேகிதி, மதி,
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
_____________________________
சந்திரவதானா, கொழுவி, சயந்தன், மலைநாடான்,
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

கொழுவி,
நான் போட்ட படம் இப்ப வேலை செய்யேல.
ஆனா அந்தப்படம் ஏதோ காதல் சம்பந்தப்பட்டது எண்டு நினையாதையும்.
அந்தக் கூட்டத்தின் நயவஞ்சகத்தால் நான் இதயம் நொருங்கிப்போனதைச் சித்தரிக்கும் படமது.

 

said ... (15 February, 2007 16:01) : 

:) வாழ்த்துக்கள்..இந்த பெயரை தெரிவு செய்த புண்ணியவான் யார்? தாங்களாக்கும் :P

 

said ... (16 February, 2007 12:47) : 

//நானென்ன பகிடி வெற்றி தெரியாதவனெண்டோ நினைச்சியள்?//
வலைப்பூ உலகிற்கு புதிய செல்லியக்காக்கு சொல்லியார் தர இருக்கினம்.நாந்தான் சல்லிசல்லியா உடைபட்டு தெளியோணும்.
வலைப் பதியுக்கு இங்கை வந்து 51 நாள்த்தான் ஆகிறது.


//இந்தப்பதிவில நடக்கிறதெல்லாம் உப்பிடியான விசயங்கள்தான். சீரியசா ஏதாவது எழுதினால் - அதையும் நான் பகிடியாக எடுத்திடுவன் எண்டு கருதினால் - அடியில 'இது சீரியஸ்' எண்டொரு குறிப்பைத் தரலாம்.//
சாச்சா..அப்பிடி சீரியஸ்' எண்டா, மன்..........கொ..ம் எண்டு கேட்டிருக்க மாட்டனல்லோ!
விளக்கமாக பதில் போட்டதிற்கு மிக நன்றி

 

post a comment

© 2006  Thur Broeders

________________