Wednesday, April 18, 2007

ஈழத்துப்படைப்பாளி சந்திரபோஸ் படுகொலை

ஈழத்துப்படைப்பாளியான சந்திரபோஸ் சுதாகர் திங்கட்கிழமை (16.04.2007) இரவு வவுனியாவில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட சுதாகர் சிறந்த படைப்பாளி ஆவார். அதிகமாக கவிதைகளை எழுதிவந்த இவர் 'நிலம்' கவிதைகளுக்கான இதழை வவுனிவாயில் இருந்து வெளியிட்டு வந்தார்.

தொடக்க காலத்தில் 'வெளிச்சம்', 'ஈழநாடு', 'ஈழநாதம்' ஆகிய நாளேடுகளில் பணியாற்றிய இவர், லண்டனில் இருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழை கொழும்பில் இருந்து அதன் ஆசிரியராக இருந்து தயாரித்து வெளியிட்டு வந்தார். வீரகேசரி நாளேட்டிலும் அவர் சிலகாலம் பணியாற்றி வந்தார்.

செய்தி: புதினம்.
______________________________
சந்திரபோஸ் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இயங்கிவந்தவர். காத்திரமான படைப்பாளி. மிகுந்த தேடலுள்ளவர். வவுனியாவுக்குச் சென்றபின் 'நிலம்' என்ற கவிதையிதழை காலாண்டு இதழாக நடத்திவந்தார்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஈழத்துப்படைப்பாளி சந்திரபோஸ் படுகொலை" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (18 April, 2007 20:37) : 

டி சே யும் இன்று காலை இதுகுறித்து விரிவான பதிவிட்டிருந்தார்.

 

said ... (18 April, 2007 21:37) : 

கானாபிரபா,
இவ்விடுகை இடுவதற்கு சற்றுமுன்னர்தான் செய்தியைப் பார்த்தேன். உடனே பதிந்துவிட்டேன். இன்னும் டி.சேயின் இடுகை வாசிக்கவில்லை.
செய்தியில் இவருக்கு இறக்கும்போது வயது 32 என்று போட்டிருந்தார்கள். சரியா தெரியவில்லை.
அப்படியாயின் மிக இளம்வயதில் பல சலனங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
இவரை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

 

said ... (07 May, 2007 03:05) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (08 May, 2007 07:13) : 

கோபக்கனல் சிந்தனைச்சுடர் கொண்டலைந்த ஒரு கவிஞனை கவிஉலகும் தமிழும் இழந்துள்ள கொடுமை நடந்து முடிந்துள்ளது. இக் கவிஞனது மரணம் தமிழுத்தாய்கே பேரிழப்பு.

விலங்கிடப்பட இருந்த நாளொன்றில்
___________________________________
எழுதிய அஞ்சலிக் குறிப்பு
____________________


அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி
பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்
சீருடையைக் கிழித்து வீசு
ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக
உழைக்கவும்
தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்
உன்னைப் போலவே மாற்று அவனை"

போஸ் நிஹாலே.
18.11.1999

அழகிய கனவுகளோடு துயர்படிந்த தெருக்களில் வாழ்ந்திருப்பது தெரிகிறது.நளாயினி தாமரைச்செல்வன்.

 

said ... (20 May, 2007 11:37) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (22 May, 2007 03:49) : 

This comment has been removed by a blog administrator.

 

post a comment

© 2006  Thur Broeders

________________