பாலுமகேந்திராவின் செவ்வி
இன்று இயக்குநர் பாலு மகேந்திராவின் செவ்வியொன்றைத் தொலைக்காட்சியிற் பார்த்தேன். இடையிலிருந்து பார்க்கத் தொடங்கியதால் முழுவதும் பார்க்கமுடியவில்லை. ஏமாற்றம் தான். செவ்வியின் இறுதியில் இலங்கைத் தமிழரைப் பற்றிக் கேட்டபோது, “இலங்கையின் மட்டக்களப்பு மண்ணைப்பற்றியும் அம்மக்களைப்பற்றியும் நான் இறப்பதற்குள் ஒரு பதிவைச் செய்ய வேண்டும். இருப்பிடமிருந்து அகதிகளாய் அலையும் என் மக்களைப் பற்றிய படைப்பைச் செய்யவேண்டும். என்னுடைய அந்த மக்களுக்காக இதுவரை நான் எதுவுமே செய்யவில்லை. என் படைப்பாற்றலை உபயோகிக்கவில்லை......” என்று பாலுமகேந்திரா பதிலளிக்கையில் அவரால் இயல்பாகக் கதைக்க முடியவில்லை. உடைந்து போன நிலையில், குரல் கம்மி, விம்மி இடையிடையே நிறுத்தி நிறுத்திக் கதைத்தார். கலைஞனொருவனின் உண்மையான விம்மல் இது. (குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்.) எனக்கு பாலு பற்றி சிறிது ஏமாற்றம் இருந்தது. (நிச்சயமாய் வருத்தமில்லை.) என்னடா இந்தாள் இலங்கைத் தமிழர்பற்றி ஏனோ தானோ என்று இருக்கிறார்? என்ற ஏமாற்ற உணர்வே அது. ஆனால் இச்செவ்வியைப் பார்த்தபின் உள்ளத்தில் ஒரு குளிர்ச்சி. நான் நேசிக்கும் கலைஞனொருவனிடத்தில் எனக்கிருந்த வருத்தமொன்று நீங்கிய திருப்தி. பாலுவின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பற்றிய, அம்மக்களைப் பற்றிய ஏக்கம் அவ்வளவு இலகுவில் மறைந்து விடுமா என்ன? அதுவும் பாலு போன்ற மென்மையான, உணர்ச்சிமயமான கலைஞனுக்கு. இதைத்தான் தொப்புட்கொடி உறவு என்பாதா? (நிறையப் பேர் இச்சொல்லைப் பாவிக்கிறார்கள்...குறிப்பாக தமிழ்நாடு, ஈழம் பற்றிப் பேசுகையில்.) Labels: இலக்கியம், ஈழ அரசியல், கலந்துரையாடல், செய்தி, நேர்காணல், படைப்பாளி |
"பாலுமகேந்திராவின் செவ்வி" இற்குரிய பின்னூட்டங்கள்
This comment has been removed by a blog administrator.
மன்னிக்கவும் நற்கீரரே
தங்களது கருத்து என்விளையாட்டுத் தனத்தால் அழிக்கப்பட்டு விட்டது.
புரிந்து கொண்டேன். சரிப்படுத்த முயற்சிக்கிறேன்