வானொலியில் சயந்தனின் செவ்வி
நேற்றிரவு மெல்பேணிலிருந்து சிட்னிக்குப் புறப்பட்ட சயந்தன் எதுவித சிக்கலுமின்றி நலமாய்ப் போய்ச்சேர்ந்தார். வலைப்பதிவர் மாநாடுக்கு முன்பு வானொலி நிகழ்ச்சியொன்று செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலையே அவர் இன்பத்தமிழொலி வானொலியில் தனது நிகழ்ச்சி வருமென்று சொல்லிச் சென்றிருந்தார். நானும் இத்தகவலை ஷ்ரேயாவுக்குச் சொல்லி, கட்டாயம் இந்நிகழ்ச்சியைக் கேட்கும்படி கேட்டிருந்தேன். சகவலைப்பதிவாளர் ஒருவரின்ர செவ்வி வானொலியில் வருதெண்டு காத்திருந்தேன். நிகழ்ச்சியும் வந்தது. ஒருமணித்தியால நிகழ்ச்சி. சில இளைஞர்கள்கூடி அந்த ஒருமணித்தியாலத்தையும் ஒருமாதிரி போக்காட்டீச்சினம். அதில எங்கட சயந்தனின்ர நிகழ்ச்சியும் வந்திச்சு. என்ன நிகழ்ச்சியெண்டு கேக்கேல? "கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி?" இன்னும் ஆளின்ர தொடர்பு கிடைக்கேல. இதுதான் அவர் சொன்ன செவ்வியோ இல்லாட்டி உண்மையிலயே இவரின்ர செவ்வி வரப்போகுதோ தெரியேல. என்னதான் வாறதெண்டாலும் இண்டைக்கு வந்திருக்க வேணும். எண்டபடியா உதுதான் சயந்தனின்ர நிகழ்ச்சியெண்டு நான் நினைக்கிறன். ஷ்ரேயாவும் இசைநிகழ்ச்சிக்குப் போயிட்டபடியால தொடர்பு கொள்ள முடியேல. உவருக்கு என்னெண்டு கத்தரிக்காய்ப் பச்சடி செய்யிறதப் பற்றித் தெரியுமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். நிகழ்ச்சியக் கேக்கேக்க ஒரு புத்தகத்தைப் பாத்து வாசிச்சமாதிரியிருந்திச்சு. (அனேகமா மணிமேகலைப் பிரசுர வகையறாவா இருக்கும்). இன்பத் தமிழொலி வானொலி பாலசிங்கம் பிரபாகரனுக்கு ஒரு கேள்வி. உந்தப் புத்தகத்தை வாசிக்கிறதுக்காக மெல்பேணிலயிருந்து ஒருத்தன் வந்துதான் செய்யவேணுமோ? இந்த நிகழ்ச்சி பற்றி சயந்தன் விரிவா எழுதுவார் எண்டு நினைக்கிறன். நான் இந்தத் தகவல் வெளியிட்டதுக்கு, அவர அதப்பற்றி எழுத வைக்கிறதும் ஒரு காரணம். தமிழ்ப்பதிவுகள் |
"வானொலியில் சயந்தனின் செவ்வி" இற்குரிய பின்னூட்டங்கள்
It is very funny. I'm waiting for Sayanthan's reply.
என்னவோ நடக்குது.
மர்மமாய் இருக்குது.
எழுதிக்கொள்வது: raja
தல சும்மா ஒரு முயர்சி வாரான்
1.59 17.9.2005