பங்குபற்றுங்கள் பரிசை வெல்லுங்கள்.
இது போட்டிகளின் காலம். ஆகவே நானுமொரு போட்டி வைக்கலாமென்று முடிவெடுத்து இந்தப் போட்டியை வைக்கிறேன். இந்தப்படத்திலிருப்பது யார்? ‘செத்தல்’ போலவோ ‘நெத்திலி’ போலவோ இருக்கும் (நிற்கும்) இவர் யார்? சுமார் 8 வருடங்களின் முன் எடுக்கப்பட்ட படம்.பார்க்கப் பாவமாக இருக்கிறதென்று யாரும் இரக்கப்படாதீர்கள். கையிலிருக்கும் மணிக்கூட்டையும் கமராவையும் பாருங்கள். இன்று ஆள் பெரிய வில்லன். இவர், இடிந்துவிழாமலிருக்க முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பது வன்னியின் வளங்களில் ஒன்றான முத்தையன் கட்டுக்குளத்தின் அணைக்கட்டுச் சுவரை. முத்தையன் கட்டுக்குளம். நான் வன்னியில் நீண்டகாலம் ஊடாடிய குளம். மிகப்பிடித்த இடமும்கூட. இதைப்பற்றிக் கதைக்கவே நிறைய இருக்கு. சரி போட்டியில் பங்குபற்றுங்கள் பரிசினை வெல்லுங்கள். இந்தப் போட்டியில் வெல்பவருக்கு என்ன பரிசென்று பின்னர் தீர்மானிக்கப்படும். |
"பங்குபற்றுங்கள் பரிசை வெல்லுங்கள்." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: Chenthooran
அய்யோ ஏதோ பாவாப்பட ஜென்மம் போல இருக்குது . கருவட்ட மீண்டும் காயபோடது மாதிரி இருக்கு
23.13 27.8.2005
வசந்தன் நீர் இப்ப இருக்கிறதுக்கும் முந்தி இருந்ததுக்கும் சரியான வித்தியாசம்!
இது ஈழநாதன்
எழுதிக்கொள்வது: kobi
நீ தான் வசந்தன்
19.24 27.8.2005
எழுதிக்கொள்வது: ஈழநாதன்
அண்ணையாணை நானில்லை...
(சயந்தன் என்று நினைக்கிறேன்)
23.11 27.8.2005
வசந்தன் முதன்முதலா தன்ரை படத்தை வெளியிட்டு இருக்கிறார் எண்டு நினைக்கிறன். வசந்தன் அடுத்ததா உமது இப்போதைய படம் தானே?
எழுதிக்கொள்வது: என்னைத் தெரியேலையா?
கதிரேசம்பிள்ளை சயேந்திரன்
23.32 27.8.2005
‘செத்தல்’ போலவோ ‘நெத்திலி’ போலவோ இருக்கும் (நிற்கும்)//
மண்ணின் மைந்தரை இப்படிச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 'இவர், இடிந்துவிழாமலிருக்க முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பது'இதெல்லாம் அதிகம்.
நல்லாத்தான் நிற்கிறார். இவர்தான் நீங்கள் அடிக்கடி போடுகிற புகைப்படங்களின் கலைஞர் கருணாவா?
எழுதிக்கொள்வது: kulakaddan
சயந்தன் போல கிடக்கு
19.55 27.8.2005
//(சயந்தன் என்று நினைக்கிறேன்)//
//சயந்தன் போல கிடக்கு //
ஓ.. வாங்கோ.. உடனை உங்கடை வாய்க்குள்ளை நான் தான் வாறனாக்கும்.. உது நல்லதுக்கில்லை.. சொல்லிப்போட்டன்
கோபி சொன்னது:
//நீ தான் வசந்தன்.//
ஐயா, நான் தான் வசந்தனெண்டு எனக்கும் தெரியும் மற்றாக்களுக்கும் தெரியும். நான் கேட்டது படத்திலயிருக்கிறது யார் எண்டு.
படத்திலயிருக்கிறது சத்தியமா நானில்ல.
திங்கட்கிழமை பதில் தரப்படும்.
பொடிச்சி,
உது மண்ணின் மைந்தனில்லைப் பாருங்கோ.
அதேநேரம் உது கருணாவும் இல்லை.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
திங்கள் வரை காத்திருக்கவும்.
எழுதிக்கொள்வது: Chenthooran
இது சயந்தனா?சீ......... சயந்தன் சின்னன்ல சரியான குண்டு..........................எனக்கு நல்லா தெரியும்..... இது கருணாதான்!!!!!!!!!!
12.10 28.8.2005
He is a man....... ;-)
வலைப்பதிவாளரா? வழமையாக நீங்கள் சயந்தனின் படங்களை தானே வெளியிடுவதுண்டு?.. இதுவும் அவர் தானோ?
பார்த்தால் தனியப் பிரயாணப்பட விரும்பாதவர் மாதிரி இருக்கு! :O)
எழுதிக்கொள்வது: ShiyamSunthar
அழகாயிருக்கிறார்! பயமாயிருக்கிறது.. :(
18.12 29.8.2005
இன்று திங்கள் கிழமை. விடை என்ன ? பரிசு என்ன?
ஒருநாள் காயப்போட்டதுக்கு மன்னிக்கவும்.
விடை இதோ.
பலர் விடையைச் சரியாகச் சொல்லியிருந்தனர். ஆகவே ஒருவருக்கும் பரிசு இல்லை.
இந்தப் படத்திலிருப்பவர் தான் முன்னர் போட்டிக்குப் போட்ட படத்திலிருப்பவர்.
அது சயந்தனேதான்.