Thursday, September 15, 2005

தொலைபேசியூடு ஒரு சந்திப்பு.

இன்று தென்துருவ வலைப்பதிவர் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிட்னிக்கிளையின் பொறுப்பாளர் ஆகியோரிடையே தொலைபேசி வழிச் சந்திப்பு நடைபெற்றது.

மெல்பேணிலிருந்து சயந்தனும் வசந்தனும் சிட்னியிலிருந்து ஷ்ரேயாவும் இச்சந்திப்பிற் கலந்துகொண்டார்கள். எதிர்வரும் வாரம் சிட்னியில் நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு முன்னோடியாக இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

அம்மாநாட்டு ஒழுங்குகள், அதில் விவாதிக்கப்பட வேண்டிய விதயங்கள் மற்றும் சாப்பாட்டு ஒழுங்குகள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
ஒஸ்ரேலியாவில் இன்று தமிழ் மற்றும் தமிழரின் நிலைபற்றியும் சுருக்கமாக ஆராயப்பட்டது. மாநாட்டில் விரிவாக ஆராயப்படும்.

தொடக்கத்தில் சீரியசாகப் போய்க்கொண்டிருந்த கலந்துரையாடல் பின் தத்தமது சொந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு வந்தது. அதில் அவரவரின் சொந்த இடங்கள், படித்த இடங்கள், வேலைத்தளங்கள் உட்பட இன்னபிற விசயங்களும் கதைக்கப்பட்டன.
இறுதியில் நாளை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் செயலாளரை வாழ்த்தி கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

இக்கலந்துரையாடல் தான் சிட்னிக்கிளையுடன் நடத்தப்பட்ட முதற்கலந்துரையாடல். மிகப் பயனுள்ள வகையில் முக்கால்மணிநேரக் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
மாநாடு முடிந்ததும் விரிவான அறிக்கை வெளியிடப்படும். காத்திருங்கள்.

கலந்துரையாடல் முடிந்தபின் சயந்தன் எனக்குச் சொன்னார், ஷ்ரேயா கதைக்காமல் எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்கிறாரென்று.
ஷ்ரேயா கதைப்பதே சிரிப்பது போல் தான் என்று சொல்ல வருகிறாரோ?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தொலைபேசியூடு ஒரு சந்திப்பு." இற்குரிய பின்னூட்டங்கள்

 

Blogger வானம்பாடி said ... (15 September, 2005 23:26) : 

ஷ்ரேயா, உண்மையிலேயே வசந்தனும் சயந்தனும் வெவ்வேறு ஆட்களா? :)

 

Anonymous Anonymous said ... (15 September, 2005 23:28) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

//ஷ்ரேயா கதைக்காமல் எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்கிறாரென்று.
ஷ்ரேயா கதைப்பதே சிரிப்பது போல் தான் என்று சொல்ல வருகிறாரோ?//

ஷ்ரேயா சிரிப்பது மட்டும் தான் கேட்டுதோ என்னவோ?


15.56 15.9.2005

 

Anonymous Anonymous said ... (16 September, 2005 05:50) : 

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

'அம்மாநாட்டு ஒழுங்குகள்'

இருக்கிறதா/இல்லையா ன்னு சொல்லக்கூடாதா?

அது இருக்கட்டும் எந்த அம்மாவைச் சொல்றிங்க?

8.15 16.9.2005

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (16 September, 2005 09:22) : 

எந்த அம்மாவையென்று நான் சொல்ல விரும்பவில்லை.
என்னைச் சிக்கலுக்குள் மாட்ட நீங்கள் செய்யும் சதியிது.

'அந்த', 'இந்த' எண்ட சொல்லுகள பாவிக்கக் கூச்சமாயிருக்கிறதாலதான் இந்த அ, இ எண்ட சுட்டெழுத்துக்களுடன் முடிக்கிறன்.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (16 September, 2005 09:26) : 

எந்த அம்மாவையென்று நான் சொல்ல விரும்பவில்லை.
என்னைச் சிக்கலுக்குள் மாட்ட நீங்கள் செய்யும் சதியிது.

'அந்த', 'இந்த' எண்ட சொல்லுகள பாவிக்கக் கூச்சமாயிருக்கிறதாலதான் இந்த அ, இ எண்ட சுட்டெழுத்துக்களுடன் முடிக்கிறன்.

ஐயா சுரேசு,
துவங்கீட்டியளோ பழையபடி உந்தப் ஆள் மாறாட்டப் பிரச்சினைய?
ஷ்ரேயா இதுக்குப் பதிலளிப்பா எண்டு நினைக்கிறன்.
ஆர் கண்டது, ஒரேஆள்தான் தன்னோட குரலமாத்தி வேறவேற தொலைபேசியில கதைச்சவர் எண்டும் சிலவேள சொல்லக்கூடும்.
அந்தளவுக்கு சிலருக்கு மூளை குழப்பிப் போயிருக்கு.

 

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said ... (16 September, 2005 09:37) : 

சந்திப்புப் பற்றிய இந்த அறிக்கை பொய்யென சகலருக்கும் இத்தால் அறியத் தருகிறேன். விபரங்களுக்கு

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (16 September, 2005 10:10) : 

நன்றி ஷ்ரேயா,
நான் முந்தி சயந்தனுக்கு என்ர அடிமட்டப் பதிவில இப்பிடியொரு கால வாருற வேல செய்தனான்.
அதின்ர பலன் இப்ப எனக்குக் கிடைச்சிருக்கு.

ஆனா தலைமையை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிற தைரியம் எனக்குப் பிடிச்சிருக்கு.
உங்களை நம்பி நிறையப் பொறுப்புத் தரலாமெண்ட நம்பிக்கை வந்திருக்கு.
சயந்தன் திட்டங்களோட வருவார்.

அதுசரி, சுரேசின்ர சந்தேகத்தைத் தீர்ப்பியள் எண்டு பாத்தா பேசாமப்போயிட்டியள்.

 

Blogger சயந்தன் said ... (16 September, 2005 11:21) : 

//சயந்தன் திட்டங்களோட வருவார்//

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒண்ணுமே புரியலை.. உலகத்தில

 

Anonymous Anonymous said ... (16 September, 2005 14:14) : 

வசந்தன் சொல்வார்..சயந்தன் செய்வார்!

 

Blogger வானம்பாடி said ... (16 September, 2005 18:00) : 

//ஐயா சுரேசு,
துவங்கீட்டியளோ பழையபடி உந்தப் ஆள் மாறாட்டப் பிரச்சினைய?//

அது சுரேசு இல்லை, சுதர்சன், சுதர்சன், சுதர்சன்!

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (16 September, 2005 23:23) : 

மன்னிக்கவும் சுதர்சன்.
உங்கள் வியாதி எனக்கும் தொற்றிவிட்டதுபோல.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (17 September, 2005 01:50) : 

இதோ தென்துருவ தமிழ்வலைப்பதிவர் சம்மேளனத்தின் செயலாளர் சிட்னி நோக்கிய தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.
அவர் நலமாய்ப் போய்ச் சேரவும், அவ்வாறே நலமாய்த் திரும்பிவரவும் உங்கள் ஆசீர்வாதத்தை அளியுங்கள். கடவுள் பக்தியுள்ளவர்கள் உங்கள் இஸ்ட தெய்வங்களை மனமார வேண்டிக்கொள்ளுங்கள்.

 

Anonymous Anonymous said ... (17 September, 2005 13:02) : 

நலமாய்ப் போய்ச்சேர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________