Friday, November 04, 2005

ஒண்ணாங் கிளாஸ்.

இப்போது ஒண்ணு, ஒன்னு, ஒண்டு பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அதைப்பார்த்த போது எனக்குப் பழைய ஞாபகமொன்று வந்தது.

அப்போதுதான் எங்கள் குடும்பம் இந்தியாவிலிருந்து ஈழத்துக்குத் திரும்பியிருந்தது. சிறிதுகாலம் இந்தியாவில் அகதிகளாக இருந்துவிட்டு 1988 இன் தொடக்கத்தில் ஈழம் திரும்பியாயிற்று. அப்போது நான் மூன்றாம் வகுப்பு.எங்கள் ஊர்ப்பாடசாலையில் என்னைச் சேர்த்தார்கள்.பாடசாலை சென்ற முதல்நாள் என்னை அறிமுகப்படுத்துவதற்காக வகுப்பில் ஆசிரியர் கேள்விகள் கேட்கிறார்.

"அங்க என்னென்ன வகுப்புக்கள் படிச்சனீர்?"
"ஒண்ணாங் கிளாஸ்.... ரெண்ணாங் கிளாஸ்..."
வகுப்பே கொல்லென்று சிரித்தது.

எனக்கு உடனே புரியவில்லை.அடடே 'கிளாஸ்' என்று யாரும் கதைப்பதில்லையே, அதற்காகத்தான் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். (உண்மையில் அப்போதெல்லாம் கிளாஸ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதில்லை)

ஆனால் அடுத்தடுத்த கதைகளில் ஒண்ணாம், ஒண்ணாவது என்ற சொற்கள் வந்தபோதும் சிரிப்புத் தொடர்ந்தது.
பிறகு ஆசிரியரே விளக்கினார். ஒண்ணாம், ஒண்டாம், ஒன்றாம் என்று எந்த வடிவங்கபளுமே யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டிலில்லை.

உண்மைதான். 'ஆம்', 'ஆவது' என்பவற்றை 'ஒன்று' என்ற சொல்லோடு நாம் சேர்த்துச்சொல்வதில்லை.ஒன்றாம் திகதி என்றோ, ஒன்றாம் பிள்ளையென்றோ யாரும் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் அது சிரிப்புக்குரியதுதான்.
மாறாக எதற்கெடுத்ததாலும் முதலாம், முதலாவது என்பவற்றைத்தான் பாவிப்போம். முதலாம் திகதி, முதலாவது பிள்ளை என்று.

'முதலாவது', 'முதலாம்' என்று சொல்வது சரி. ஆனால் 'ஒன்றாம்', 'ஒன்றாவது' என்ற வழக்கு ஏன் அறவே இல்லையென்பது தெரியவில்லை. அது தவறான வடிவமாகவும் தெரியவில்லை.
நான் கண்டளவில் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் இந்த ஒன்றாம், ஒன்றாவது என்பவை பயன்பாட்டிலில்லை. அப்படியிருக்கிறதா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஒண்ணாங் கிளாஸ்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 November, 2005 01:47) : 

Nalla pathivu vaztthukkal...

 

said ... (04 November, 2005 02:02) : 

எழுதிக்கொள்வது: -L-L-D-a-s-u--

undefined

23.37 3.11.2005

 

said ... (04 November, 2005 02:03) : 

எழுதிக்கொள்வது: -L-L-D-a-s-u--

முதலாம் வகுப்பு .. என்ன அழகு ... இதை விட்டுவிட்டு ஒ(ன்னாஃண்ணா)ம் க்ளாஸாம்??

23.42 3.11.2005

 

said ... (11 November, 2005 01:53) : 

எழுதிக்கொள்வது: darumi

அப்போ அவ்வைப் பாட்டி எப்படி பாடணும்? 'முதலானவன்...என்று பாடியிருக்கணும். அது சரி, அவ்வைப் பாட்டியை யார் கண்டது..நமக்குத் தெரிஞ்சது எல்லாம் கே.பி. சுந்தராம்பாள்தானே...!

20.49 10.11.2005

 

said ... (11 November, 2005 02:04) : 

எழுதிக்கொள்வது: dharumi

இன்னொண்ணு சொல்லணுமே...நான் சின்னப் பையனாக இருந்தபோது, மதுரைத்தமிழுக்கும், நெல்லைத் தமிழுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்ததுண்டு. மதுரையில் இருக்கும்போது 'பிறவாட்டி'ன்னு (பிறகு) நெல்லைத்தமிழில் சொன்னால் நண்பர்கள் 'பிறவாட்டி...எருவாட்டி'ன்னு சொல்லி கேலி செய்வார்கள். அதே போல் நெல்லையில் 'அப்புறம்' (பிறகு)என்று சொன்னால் 'அப்புறம் சப்புறம் என்று கேலி செய்யப்பட்டதுண்டு.

20.54 10.11.2005

 

said ... (11 November, 2005 04:23) : 

//மதுரையில் இருக்கும்போது 'பிறவாட்டி'ன்னு (பிறகு) நெல்லைத்தமிழில் சொன்னால் நண்பர்கள் 'பிறவாட்டி...எருவாட்டி'ன்னு சொல்லி கேலி செய்வார்கள். அதே போல் நெல்லையில் 'அப்புறம்' (பிறகு)என்று சொன்னால் 'அப்புறம் சப்புறம் என்று கேலி செய்யப்பட்டதுண்டு.
//

பேந்து..?

 

said ... (11 November, 2005 05:19) : 

எழுதிக்கொள்வது: theevu

நா பெ(f)ஸ்ற்று பெ(f)ஸ்ற்றா முதல்ல நடிச்ச தமிழ்ப்படம் அப்படீன்னுதானே பேட்டி கொடுக்கிறாங்க.

19.45 10.11.2005

 

said ... (14 November, 2005 20:10) : 

தருமி,
என் பக்கம் வந்ததுக்கு நன்றி.
ஒளவை பாடிய 'ஒன்றானவன்' என்பதற்கு முதலாமவன் (ஒன்றாமவன்) என்ற கருத்தில்லையே?

சயந்தன், தீவு, நன்றி.

"பேந்து" பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேனாக்கும்;-)

 

said ... (19 November, 2005 04:09) : 

எழுதிக்கொள்வது: Bruno

Hi Friend,

Thanks for visiting my blog.
I wanted to blog in Tamil, but the system I use here (Windows ME) does not support unicode.
If I install the unicode fonts, I am not able to print other fonts in my printer ( I have to change the font of my files to Arial Unicode or other fonts and then print)
So I have decided to blog in English and come back to "Vaanambaadi" after some time (after installing Windows XP, which I suppose does not have these problems)

This is my Blog
http://doctorbruno.blogspot.com/

This is for my work

http://phcdoctor.blogspot.com/

These are other sites

www.nellaimedicos.com
www.targetpg.com
www.targetpg.org
www.medicolegal.blogpsot.com

With regards

Bruno

23.18 18.11.2005

 

said ... (19 November, 2005 04:09) : 

Hi Friend,

Thanks for visiting my blog.
I wanted to blog in Tamil, but the system I use here (Windows ME) does not support unicode.
If I install the unicode fonts, I am not able to print other fonts in my printer ( I have to change the font of my files to Arial Unicode or other fonts and then print)
So I have decided to blog in English and come back to "Vaanambaadi" after some time (after installing Windows XP, which I suppose does not have these problems)

This is my Blog
http://doctorbruno.blogspot.com/

This is for my work

http://phcdoctor.blogspot.com/

These are other sites

www.nellaimedicos.com
www.targetpg.com
www.targetpg.org
www.medicolegal.blogpsot.com

With regards

Bruno

 

said ... (11 January, 2006 10:50) : 

சயந்தன் said...
//மதுரையில் இருக்கும்போது 'பிறவாட்டி'ன்னு (பிறகு) நெல்லைத்தமிழில் சொன்னால் நண்பர்கள் 'பிறவாட்டி...எருவாட்டி'ன்னு சொல்லி கேலி செய்வார்கள். அதே போல் நெல்லையில் 'அப்புறம்' (பிறகு)என்று சொன்னால் 'அப்புறம் சப்புறம் என்று கேலி செய்யப்பட்டதுண்டு.
//

பேந்து..?

என்ன இங்கை கதையே சொல்லுயினம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________