Tuesday, September 20, 2005
ஒஸ்ரேலியாவிற் பனங்காய்ப் பணியாரம்.
முதலொருக்கா சயந்தன் பனங்காய்ப்பணியாரத்தின்ர படத்தைப்போட்டிருக்கேக்க அதைப்பார்த்து நான் வாயூற, ஒஸ்ரேலியாவில பனங்களி விக்கப்படுதெண்டு ஷ்ரேயா சொல்ல, ஒரு மாதிரித் தேடிப்பிடிச்சு வாங்கிப்போட்டன். தாய்லாந்திலயிருந்து போத்தலில அடைக்கப்பட்டு வருது. 450 கிராம் களிப்போத்தல் 3 டொலர்.
சரியெண்டு வாங்கி வந்து இண்டைக்கு பனங்காய்ப்பணியாரம் செய்தாச்சு. நான் தான் செய்தன். பனங்களி விறுத்தமில்ல. போத்திலத் திறந்த உடனயே குப்பெண்டு அடிச்சுதே ஒரு புளிச்ச மணம். எங்கட ஊர்ப்பனங்களி மாதிரி ருசியுமில்ல.சரி இனியென்ன செய்யிறதெண்டு முதல் அரைப்போத்தலில கொஞ்சம் செய்து பாத்தன். இனிப்புக் கூடப்போட்டுத்தான் செய்தன். நல்ல பதமா, நிறமா வந்துது. ஆனா வாயில வைக்கேக்க அந்தப் புளிச்ச மணம் சாதுவாக் குழப்பீச்சு.
என்ன செய்யலாமெண்டு யோசிச்சுட்டு பனங்களிய அடுப்பிலவச்சு நல்லாய் காச்சினன். வத்தவத்த தண்ணி கலந்து நல்லாக் காச்சனன். பிறகு புளிச்ச மணம் கொஞ்சம் குறைஞ்சுது. அதுக்குப்பிறகு மிச்சத்தைச் செய்தன். முந்தினதவிட மணம் குறைஞ்சிருந்திச்சு. ஆனா களி கறுத்துப்போயிட்டதால சரியான சிவப்பு நிறம் வரேல. ஆனா நல்ல ருசியா இருந்திச்சு.
நான் உந்தக் களிப்போத்தல் வேண்டி பத்துநாளாச்சு. ஆனா இண்டைக்கு ஏன் பணியாரம் செய்தன் எண்டு கேக்கிறியளோ? இண்டைக்குத்தான் உங்க சிட்னியில ஏதோ மாநாடு கூட்டினமாம். அவையின்ர சார்பா நான் பணியாரம் செய்து சாப்பிட்டன். அவை அங்க சந்திக்க, நான் பனங்காய்ப்பணியாரம் திண்டு மாநாட்டில பங்குபற்றினன். படத்தில இருக்கிற பணியாரங்கள் ஒரு சேப்புக் (shape) கெட்டதா இருக்கு. ஆனா நல்ல வடிவான உருண்டையாயும் பணியாரங்கள் வந்தது. அதுகளப் பொறுக்கி அடுக்கிப்போட்டு படமெடுக்கிறதுக்கு கமரா எடுக்கப்போய் வாறதுக்குள்ள அந்தத் தட்டு வெறுமையாப் போச்சு. பிறகென்ன மிஞ்சினத வச்சுத்தான் உந்தப்படங்கள் எடுத்தனான்.
ஷ்ரேயா, சயந்தன்! எப்பிடியெண?? உங்கள விட்டுட்டு நான் மட்டும் பணியாரம் திண்டிட்டன்.
சயந்தன், முடிஞ்சா என்ர சார்பில "பனங்காய்ப் பணியாரம் செய்வது எப்பிடி?" எண்டு இன்பத்தமிழொலி வானொலியில வாற சனி நிகழ்ச்சி செய்யும். "கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி?" எண்டு சொல்லுறதவிட இது நல்லாயிருக்கும்.
தமிழ்ப்பதிவுகள் |
"ஒஸ்ரேலியாவிற் பனங்காய்ப் பணியாரம்." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: canada vaasi
அந்தப் பனங்காய்ப்பணியாரத்தை ஒரு இரண்டு மூண்டு நாள் வccஆ அந்த மணம் போயிரும். ரெண்டு மூண்டு நாளைக்குப்பிறகு சாபிட்டுட்டுச் சொல்லும்.
12.14 19.9.2005
கனடாவாசி,
என்னை ஒரேயடியா ஒழிக்கிற எண்ணம்போல கிடக்கு.
கொட்டின மழைக்குள்ளயும் நாங்கள் சந்திப்பை நடத்த நீர் பணியாரஞ் செய்து சாப்பிட்டனீரோ!! துளசி சொன்னது சரிதான்.. உமக்குக் களி கொஞ்சம் அனுப்பியிருக்கோணும்!!
அதுசரி, இலங்கையிலேருந்து வாற பனங்களி உமக்குக் கிடைக்கேலையோ? அதுதான் நல்லாருக்கும். கேடுகெட்ட மணத்தையெல்லாம் போக்காட்ட முயற்சிக்கத் தேவையில்ல! :O)
சிட்னியில தான் சிறிலங்காப் பனங்களி கிடைக்கும்போல. நான் முயற்சித்துப் பாத்தன். ஒருத்தருக்கும் அப்பிடிக் களி வாறது தெரியேல. வேணுமெண்டா செயலாளரை ஒரு போத்தல் வேண்டியரச்சொல்லுங்கோ. இங்க வந்து அவரே பணியாரஞ்செய்து சாப்பிடட்டும். இல்லாட்டி நீங்கள் ஏன் பணியாரஞ்செய்து செயலாளரிட்டக் குடுத்துவிடக்கூடாது?
அவர் பணியாரமொ/களியோ கொண்டு வாறது இருக்கட்டும்.(ஏலாதெண்டதை எவ்வளவு இடக்கரடக்கலாச் சொல்லுறன் பாத்தீரோ!).. மாநாட்டு அறிக்கையை முதல்ல வெளியிடச் சொல்லும்!
//ஏலாதெண்டதை எவ்வளவு இடக்கரடக்கலாச் சொல்லுறன் பாத்தீரோ//
இப்பிடிச்சொல்லித்தான் புரியவைக்கிற நிலையில இருக்கிறதை என்னெண்டாம் இடக்கரடக்கல் எண்டுறது?
தலைவருக்குக் தற்சமயம் விளங்காமப் போயிட்டுதெண்டா! அதுக்குத்தான்!
செயலாளர் என்னவாம்? அறிக்கை பெரிசா இருக்குமோ! இவ்வளவு நேரமெடுக்குது! ;O)
வசந்தன் அப்படி புளிச்சு மணத்திருக்கும் எண்டு நான் நினைக்கேலை எங்கை ஒருக்கால் அனுப்பும் சாப்பிட்டுப் பார்த்து உண்மையைச் சொல்லுறன்
சயந்தன் தாயகம் திரும்பின பிறகுதான் எதுவும் செய்வார்.
ஈழநாதன், இங்கயிருந்து ஆரேன் வந்தாத்தான் அனுப்பலாம். தபாலில அனுப்ப ஏலாது.
எழுதிக்கொள்வது: Mmmmmm
வசந்தன்.சயந்தன்.ஷ்ரேயா.துளசிகோபால் நீங்களெல்லாம் நல்ல பதிவுகளைப்போட்டுக்கொண்டு ஒழுங்காத்தானே இருந்தீர்கள்.
திடீரென ஏன் இப்படி போட்டு அறுக்கிறியள்.உங்கள் கொஞ்சப்பேருக்குத்தான் இந்தப்பனி.
23.35 20.9.2005
வசந்தன்,
எல்லாம் இருக்கட்டும். மொதல்லே இந்த 'பனங்களி' எண்டால் என்ன?
பனம் பழமேவா?
இங்கே எங்கேயும் பார்த்தா ஞாபகம் இல்லையே இந்த மாதிரி போத்தலை.
(பி.நா)
துளசி,
பனம்பழச்சாறு எண்டா விளங்குதோ?
பனம்பழத்திலயிருக்கிற சாறுதான் இப்பிடி போத்தலில அடைச்சு விக்கப்படுது. நாங்கள் இந்தச்சாறை பனங்களி எண்டும் சொல்லுறனாங்கள். சத்தியமா நீங்கள் கிண்டிற களிமாதிரியில்ல.
ஓஹோ.... அதுவா? விளங்கிட்டது.