Monday, April 17, 2006

கவிஞர் நாவண்ணன் மறைவு.

"வன்னி இலக்கியத்தின்" முக்கிய படைப்பாளி, பங்காளி கவிஞர் நாவண்ணன் அவர்கள் காலமானார்.

பிற்காலத்தில் புலிகளின் குரல் வானொலி மூலம் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். இது தகவலைச் சொல்லும் சுருக்கமான பதிவே. கீழே இதுபற்றி வந்த தகவல்.
**********************************


தமிழன் சிந்திய இரத்தம்,
கரும்புலி காவியம்,
இனிமைத் தமிழ் எமது,
ஈரமுது
உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட "வலியும் பழியும்" என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்ப்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.



செய்தி: புலிகளின் குரல்
*****************************
நாவண்ணன் என்ற மறக்க முடியாத ஆளுமைக்கு என் அஞ்சலி.
****************************
பட உதவி: புதினம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கவிஞர் நாவண்ணன் மறைவு." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (17 April, 2006 10:14) : 

எழுதிக்கொள்வது: malainaaddaan

மூத்த கலைஞருக்கு எமது அங்சலிகள்!

2.35 17.4.2006

 

post a comment

© 2006  Thur Broeders

________________