ஒன்று ரெண்டு மூன்று - சிறுவர் பாடல்
சுந்தரவடிவேல் அவர்கள் மிருகக்காட்சி சாலை என்றொரு பாட்டை, படங்களுடன் அழகிய கோப்பாக்கி தரவிறக்க விட்டிருந்தார். அழகான சிறுவர் பாடலது. அதே மெட்டிலமைந்த - எண்களை எண்ணும் பாடலொன்றை இப்போது நான் இங்கே இடுகின்றேன். சுந்தரவடிவேலரின் மிருகக்காட்சி சாலைப் பாடலின் மெட்டுத்தான் இந்தப்பாட்டுக்கும். எனவே அப்பாடலின் மெட்டு தெரிந்தவர்கள் அதே மெட்டில் இப்பாடலையும் பாடலாம். (ஆம், இப்பாடலின் மெட்டுத் தெரிந்தவர்கள் இதே மெட்டில் அப்பாடலையும் பாடி மகிழலாம்.) இப்பாடலின் சிறப்பு, ஒன்று தொடக்கம் பத்துவரையான எண்கள் பாடலில் வரக்கூடியதாக அமைக்கப்பட்டதே. இனி பாடல். ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள். ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில் ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ. உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும் பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே. ------------------------------------------- மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும். அதையும் தருகிறேன். ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள். ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில் ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ. உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே -------------------------------------------------- இதை யாராவது பாடி ஒலிப்பதிவாகத் தந்தால் நன்று. செய்பவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும். ஓய், சயந்தன்! கேக்குதா? தமிழ்ப்பதிவுகள் |
"ஒன்று ரெண்டு மூன்று - சிறுவர் பாடல்" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: Shreya
அவர் எங்க திரியிறார் என்டு ஒருதருக்குமே தெரியுதில்லை.. அவருக்கே தெரியுமோ தெரியாது!!
17.55 12.12.2005
வசந்தன்,
நல்ல பாட்டு.
அன்றைக்கு ஜானா முழுதாகத் தெரியாது, அம்மாவிடம் கேட்கிறேன் என்றார். உங்கள் பஞ்சியைத் துரத்தியடித்துவிட்டு இட்டமைக்கு நன்றி! இதைச் சிறுவர் பாடல்கள் வலைப்பதிவில் போட்டு வைக்கட்டுமா?
ஓய் ஷ்ரேயா!
உங்க சிட்னியில ஏதோ அடிபாடு புடுங்குப்பாடு எண்டு செய்தியள் வருது. சயந்தனப் பாருங்கோ, ஆள் அதுவழிய மிலாந்திக்கொண்டு நிப்பார். கவனமா இருக்கட்டாம் எண்டு சொல்லுங்கோ.
சுந்தரவடிவேல்,
அதற்கென்ன போட்டு வையுங்கள்.
இன்னும் இப்படியான நிறையப் பாட்டுக்கள் அங்கே நிரம்ப வேண்டுமென்பது என் அவா.
பாடலுக்கு நன்றி.
ஓமோம் கேக்குது!
கேக்குதா?
சரி. உங்க ஏதோ அடிபாடு பிடுங்குப்பாடு எண்டு செய்திகள் வருது. கவனம்.
நான் பாடி ரெக்கோட் பண்ணின்னான்.
ஆனா...
சயஸ்
எழுதிக்கொள்வது: undefined
Nice post.
0.11 28.12.2005
எழுதிக்கொள்வது: KRISHNA kumar
உயிருடன் இருக்கும் பொது உதிர தனம்
கண் முடிய பின் கண் தனம்
11.20 7.1.2006