Friday, April 28, 2006

ஜெனிவாப் பேச்சின்பின் நடந்த அரசபடுகொலை

103 தமிழர்களைப் படுகொலை செய்து ஜெனீவாப் பேச்சுக்களை சீர்குலைத்தது சிறிலங்கா:
புலிகள் விளக்க அறிக்கை

விடுதலைப்புலிகள் இன்று (28.04.2006) அன்று விவரமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள். பெப்ரவரி இறுதியில் நடந்த ஜெனிவாப் பேச்சின் பின்னர் இன்றுவரையான இரண்டு மாதங்களாக சிறிலங்கா அரசபடைத்தரப்பாலும் அவர்களது துணை இராணுவக் குழுவாலும் 103 பொதுமக்கள் பல்வேறு வழிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்களென்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் கொல்லப்பட்டவர்களது விவரங்களுடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் தொகுப்பு: (பெயர் விவரங்களுக்குரிய இணைப்பு இறுதியாக இணைக்கப்பட்டுள்ளது)

ஜெனீவாவில் பெப்ரவரி 24 ஆம் நாள் முதல் சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்தினராலும் சிறிலங்கா இராணுவத்தினரது முன்னிலையிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள விவரம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காப் படையினரால் தமிழ் மக்கள் எப்படிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் சிறிலங்காப் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்கள் எத்தகைய பயங்கரமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை இந்த அட்டவணை வெளிப்படுத்தும்.

இப்படுகொலைகள் இரண்டு முறைகளில் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும்

சிறிலங்கா இராணுவத்தினரது பாதுகாப்புடன் துணை இராணுவக் குழுவினர் நேரடியாக துப்பாக்கிச் சூடு

ஆகிய முறைகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நேரடிப் படுகொலையின் போது பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் முதலில் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் படுகொலை செய்து பொது இடங்களில் சடலங்களை வீசிவிட்டு மக்களால் அது கண்டெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதே முறையில்தான் ஏப்ரல் 18 ஆம் நாளன்று யாழ். புத்தூரில் 5 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது.

துணை இராணுவக் குழுவினரைப் பயன்படுத்தி படுகொலை செய்வது மற்றொரு சிறிலங்கா இராணுவத்தினரது முறையாகும்.

துணை இராணுவக் குழுவினருக்கான அடிப்படை பாதுகாப்புகள் மற்றும் கொலையை நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் செய்து கொடுக்கின்றனர். சில நேரங்களில் படுகொலை நடத்தப்படுகிற வீதிகளில் வாகனங்கள் அப்புறபடுத்தப்பட்டுவிடும். இதனால் அக்கொலையை ஒரு சிலரே நேரடியாக பார்க்க நேரிடும். மேலும் அருகாமை வீடுகளில் நின்று கொண்டு பாதிக்கப்பட்ட நபருக்கு எதுவித உதவியும் செய்யவிடாமல் படையினர் தடுத்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினர் அருகாமையில் நின்று கொண்டிருக்கும்போதே இத்தகைய அனைத்துப் படுகொலைகளும் நடத்தப்படுகின்றன.

படுகொலைகள் நடத்தப்படும்போது அங்கிருந்து நகர்ந்துவிட்டு படுகொலை செய்த பின்னர் துணை இராணுவக் குழுவினர் தப்பிய பின்னர் மீண்டும் அந்த இடத்துக்கு படையினர் திரும்பிவிடுவதை மக்கள் அவதானித்துள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் இருதரப்பினரும் எப்படி இணைந்து படுகொலைகளை அரங்கேற்றுகின்றனர் என்பது தௌ்ளத் தெளிவாக தெரிகிறது. வெள்ளை வானில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வீடுகளுக்குச் சென்று இப்படுகொலைகளை துணை இராணுவத்தினர் நடத்துகின்றனர். பகல் நேரங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு இத்துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு தப்பி விடுகின்றனர்.

திருகோணமலையில் தமிழர்களைப் படுகொலை செய்ய சிங்களக் காடையர்களை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். சிங்களக் காடையர்களால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது சிறிலங்கா இராணுவத்தினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த செயல் இப்போது சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.

இத்தகைய நேருக்கு நேரான படுகொலைகளுக்குப் பின்னர் சிறிலங்கா காவல்துறையினர் சம்பவ இடத்தது வந்து உடல்கள் அகற்றுவது, வழமைபோல் நீதிபதி சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவது அதன் பின்னர் உறவினர்களை ஒப்படைப்பது என்பதுதான் நடக்கிறது. நீதிமன்றுக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்படும். இப்போது சிறிலங்காவின் நீதித்துறை இங்கே நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த இரு வகையான படுகொலைகளுடன்

பொதுமக்களை இலக்கு வைத்து கிளைமோர் கண்ணிவெடிகளை இயக்குவது மற்றும்

பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக் குண்டு வீச்சு, பீரங்கித் தாக்குதல்களை நடத்துவது

என்ற மேலதிகமான இரு முறைகளையும் இராணுவத்தினர் இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் ஊருவி நேரடித் தாக்குதலையும் இக்கிளைமோர்த் தாக்குதலையும் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்துகின்றனர்.

நாம் வெளியிட்டுள்ள அட்டவணையில்

- சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடித் துப்பாக்கிச் சூடு.

- சிறிலங்கா இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அவர்கள் அருகாமையில் இருக்கும்போது துனை இராணுவக் குழுவினர் நேரடியான துப்பாக்கிச் சூடு.

(வெள்ளை வானில் இரவு நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

பகல் நேரங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

கடத்தப்பட்டு படுகொலை செய்தல் ஆகியவை துணை இராணுவக்குழுவினர் நடத்தும் படுகொலை முறைகள்)

- சிறிலங்கா இராணுவத்தால் சிங்களக் காடையர்கள் பயன்படுத்துவது

- பொதுமக்களைக் குறிவைத்து கிளைமோர் கண்ணிவெடிகளை இயக்குவது

- பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக் குண்டு வீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்துவது

- விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி படுகொலை செய்வது

ஆகியவற்றால் நிகழ்ந்த படுகொலைகளின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள பாரிய தாக்குதல் விவரங்கள்:

ஜெனீவாப் பேச்சுகளுக்குப் பின்னர் பெருமளவிலான பெண்களும் குழந்தைகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை விளக்கும் வகையில் அவர்களது வயதும் பாலினமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதுக்குக் குறைவான 6 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் முப்படையினர் ஏப்ரல் 25 ஆம் நாள் திருகோணமலையில் நடத்திய "மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை" மூலம் 3 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 வயது குழந்தையும் படுகொலை செய்யப்பட்டுள்ளது. பக்கம் 8-இல் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் சடலம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரால் 15 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தின் 3 முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 7 ஆம் நாளன்று விக்னேஸ்வரன்

ஏப்ரல் 20 ஆம் நாளன்று வில்வராசா

ஏப்ரல் 26 ஆம் நாளன்று செந்தில்நாதன்

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட இம் மூவரும் வடக்கு கிழக்கின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகக் கூடியவர்கள். தமிழர் மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக தலைவர்கள் உருவாவதை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெப்ரவரி 27, மார்ச் 5, 6, 9, 20, 22, 24, 25 மற்றும் 29 ஆகிய நாட்களில் மொத்தம் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது சர்வதேச பார்வையாளர்களால் கவனிக்கப்படாததாகி உள்ளது.

இந்தப் படுகொலைப் பட்டியலைப் படித்துப் பார்த்த பின்னர் ஜெனீவாப் பேச்சுக்களின் சீர்குலைவுக்கு யார் காரணம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


படுகொலைப் பட்டியலைப் பார்க்க இந்த இணைப்பை அழுத்தவும்.


நன்றி: புதினம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஜெனிவாப் பேச்சின்பின் நடந்த அரசபடுகொலை" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (28 April, 2006 21:46) : 

எழுதிக்கொள்வது: Ms Sivakumar

இந்திய குறிப்பாக தமிழக ஊடகங்களில் இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் வெளியாவதேயில்லையே ஏன்? இந்து பத்திரிகை புலிகள் எதிர்ப்பு நிலையை எடுத்து விட்டது என்று கொண்டாலும், மற்ற பத்திரிகைகள் ஏன் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன?

17.47 28.4.2006

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (28 April, 2006 21:49) : 

யாரோ ஒரு அனாமதேயப் பேர்வழி நாலு பின்னூட்டங்கள் அனுப்பியுள்ளார். அவற்றை மட்டுறுத்தலில் நிறுத்திவிட்டேன்.

ஐயா,
ஒன்றில தமிழில் எழுதுங்கள். இரண்டுமாதமான வலைப்பதிவில் (குறிப்பாக என் வலைப்பதிவில்) குப்பை கொட்டிவரும் நீங்கள், இவ்வளவு காலத்துள் எப்படி தமிழில் எழுதுவது என்று அறிந்திருக்க வேண்டும். அல்லது அளிக்கப்பட்டிருக்கும் தமிழில் பின்னூட்டமிடும் வசதியையாவது பாவித்தீருக்க வேண்டும்.

அல்லது ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுங்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான்.

குறைந்தபட்சம் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு தமிழ் உச்சரிப்பு வரத்தக்கதாகவென்றாலும் எழுதுங்கள். வாசித்தறியலாம்.

இவை எதுவுமில்லாமல் சகட்டு மேனிக்கு எழுதினால் எப்படிப் புரிந்துகொள்வது? நீங்கள் என்ன கோதாரியை எழுதித் தொலைக்கிறீர்கள் என்று புரிந்துகொள்வது? நான் உங்களோடு மினக்கெட விரும்பவில்லை. அப்பின்னூட்டங்களை வெளியிட்டு மற்றவர்களுக்கும் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. குறைந்தபட்சம் உங்களுக்காவது என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்குதோ தெரியேல.
*******************8
சம்பந்தமில்லாமல் அங்க இஞ்ச எண்டு மற்றவங்கள் எழுதினதுகளப் பொறுக்கி ஒட்ட வேண்டாம். நான் போட்ட பதிவுக்கும் அதுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
அதவிட அதுகளைப் பொறுக்கேக்க, தமிழ்மணம் ரூல்பார், posted by.... எண்டதுள நிப்பாட்டிப் பொறுக்கக்கூடப் பொறுமையில்லாத ஆளா இருக்கிறீரே?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (28 April, 2006 21:53) : 

சிவகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் கேள்வி நியாயமானதே.

************
மேலே அனாமதேயத்துக்கு இட்ட மறுமொழியில் சில எழுத்துப்பிழைகளுள்ளன. பொறுத்தருள்க.

 

Blogger இளந்திரையன் said ... (28 April, 2006 21:58) : 

இப்படியான விடயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பல் மொழி ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டியவை. தாம் வாழும் பல்லினக் காலாச்சார சூழலில் அம்மக்களின் கவன ஈர்ப்பையும் ஆதரவையும் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது பெற்றுக் கொள்ள இது உதவும். புலப்பெயர் மக்களின் முன்னாலுள்ள கடப்பாடு இதுவாகும்.

 

Anonymous Anonymous said ... (28 April, 2006 22:37) : 

எழுதிக்கொள்வது: theevu

எனக்கெண்டால் உந்த சர்வதேச சமூகத்தோட மினக்கெடுறது தேவையில்லாத வேலை போல கிடக்குது.ஆள் முடிஞ்சாப்பிறகுதான் மருந்துப்பெட்டியோடை வருவாங்கள்.

14.47 28.4.2006

 

Blogger இளங்கோ-டிசே said ... (28 April, 2006 22:48) : 

வசந்தன், இதை எடுத்துப்போட்டதுக்கு நன்றி.
....
தங்கடை இராணுவத்தில் கைவைத்தால் இப்படித்தான் நடக்கும் என்று இராணுவப்பேசாளர் திருகோணமலை விமானத்தாக்குதல் படுகொலைகளை நியாயப்படுத்திக்கொள்ளுவது ஒருபக்கம் என்றால், இங்கே வலைப்பதிவுகளில் ஒருசிலர் நாலைந்து வெவ்வேறு பெயர்களில் தங்கடை 'பரப்புரைகளை' பரப்பிக் கொண்டிருப்பது இன்னும் பீதியை உருவாக்கிறது.
.....
புலிகள் மீது விமர்சனம் வைப்பது பிரச்சினையில்லை; அவசியமானதும் கூட. ஆனால் புலிகளை முற்றாக அழித்தால்...., தமிழர்களின் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும், சிங்கள் அரசாங்கங்கள் எல்லா உரிமைகளையும் வாரி வழங்கிவிடும் என்ற தொனியில் எழுதிக்கொண்டிருப்பதுதான் எரிச்சல் வருகிறது. அண்மையில் சில சிங்கள எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போது, தமிழில் 'நடுநிலையாளர்கள்','சனநாயகவாதிகள்' என்று கூறிக்கொண்டிருப்போரை விட அவர்கள் தமிழ்- சிங்கள பிரச்சினைகளை தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்றுதான் தோன்றியது. எஙகடை சமூகத்தின் நிலை எப்பவும் மற்ற ஆக்களிட்டை கையேந்திர நிலைதானே :-(((.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (29 April, 2006 00:44) : 

இளந்திரையன், தீவு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

Blogger SnackDragon said ... (29 April, 2006 01:49) : 

வசந்தன், இதை எடுத்துப்போட்டதுக்கு நன்றி.

இதற்கு இரண்டு மாதங்கள் முன்னால் நடந்த கொலை விவரங்களைப் பற்றி தமிழ்நெற்-இலிருந்து எடுத்துப்போட்டு ஒரு பதிவெழுதி இருந்தன் . அதையும் பார்க்கவும்.

http://karthikraamas.net/pathivu/?m=200602

 

Blogger வெற்றி said ... (29 April, 2006 02:14) : 

அன்பின் வசந்தன்,
புலம் பெயர்ந்து வாழும் எமக்கு உள்ள பாரிய பொறுப்பு என்னவென்றால் ஊடகங்களை மட்டும் நம்பி இராது, நாம் ஈழத்தில் நடக்கும் சிங்கள அரசின் பயங்கரவாதத்தை நாம் வாழும் நாடுகளில் தெரியப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக இன்று விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட இவ் அறிக்கையை நாம் வாழும் நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் , மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் , ஊடகப் பணிமனைகள் போன்றவற்றிற்கு Fax or email மூலம் அனுப்ப வேண்டும். இன்று நான் செய்த முதல் வேலை அதுதான். அத்துடன் திருகோணமலையில் சிங்கள அரசால் நாடத்தப்பட்ட விமானக் குண்டு தாக்குதல் பற்றிய செய்திகளையும் அனுப்புங்கள். அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூட புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பரப்புரைகள் போதாது என்று கவலை தெரிவித்துள்ளதாக புதினம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. விரும்பியோ விரும்பாமலோ நாம் இன்று வாழும் நாடுகளின் பிரஜாவுரிமை பெற்று அந் நாடுகளின் குடிவாசிகள். ஆகவே அந்த நாடுகளின் சட்டங்களை மதித்து, எமது உரிமைகளைப் பயன்படுத்தி எமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டியது எமது தலையாய கடமை.
இதை உணர்ந்து நாம் அனைவரும் செயற்படுவோம்.

 

Anonymous Anonymous said ... (29 April, 2006 03:34) : 

அண்மையில் நடைபெற்ற அப்பாவி மக்களின் படுகொலைகள் ஆச்சரியத்தைக் கொடுக்ககவில்லை எனினும், விசனத்தையும், விரக்கிதியையும் அளிக்கின்றன. மீண்டுமொருமொறு 'போரில் அப்பாவி மக்களே அதிக விலையைக் கொடுக்கிறார்கள்' என்பது புலனாகிறது.

விடுதலைப் புலிகள் வெளியிட்ட இவ்வறிக்கையைப்போல், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களை நிரல்படுத்தி ஒரு அறிக்கி விடுவது சாத்தியமே.

இப்படி மாறிமாறி அறிக்கைகள் விடலாம். ஆனால், இவை இலங்கையின் குறிப்பாக வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

மேலும், போருக்குச் செல்வதால் ஒரு விடிவு வரும் என்று நம்புவர்களுடன் என்னால் சிறிதும் உடன்பட முடியவில்லை. இந்த முடிவை இருதரப்பிலிருக்கும் பலத்தக் கொண்டும், பிரச்சனையில் சிக்கலைக்கொண்டும், இன்னும் பல புற காரணிகளை அடிப்படையாக வைத்தே கூறுகிறேன். இவை எல்லாத்துக்கும் மேலாக அப்பாவி மக்களின் உயிர்கள். பலகாலம் நடக்கும் போரால் களைத்துபோயிருக்கும் மக்கள் மீண்டும் ஒருபோரை வெறுக்கிறார்கள் என்று அவர்கள் கொடுக்கும் பேட்டிகளிலிருந்த்து புலனாகிறது.

தமிழ் ஒற்றுமையைப் பற்றி அடிக்கடி கதைக்கிறோம். ஆனால், எல்லாத்தமிழர்களையும் ஒற்றுமையாக்கி ஓங்கிய ஒரு உரிமை குரலைக்கொடுக்க என்ன செய்யப்பட்டது என்று சிந்திதுப் பார்த்தால் பெரிதாக் ஒன்றுமில்லையென்று விளங்கும்.

எமது உரிமைப் போராட்டம் முன் செல்ல வேண்டுமெனில், முதலில் இன்று பகையுணர்வுடன் செயற்படும் அனைத்துத் தமிழ் தரப்புகளும் முதலில் பேசி தங்களிடையே உள்ள பகையுணர்வுகளை களையவேண்டும். இவர்கள் அனைவரும் போராட முற்பட்டதன் நோக்கத்தை மனதில் கொண்டால், இது சாத்தியமெனப்படுகிறது. இனவாத இலங்கை அரசுடன் பேசமுடியுமென்றால், சேர்ந்து இயங்க முடியுமென்றால் (இதில் எந்த இயக்கங்களும் விதி விலக்கல்ல) இப்படியான ஒர் reconciliation processம் சாத்தியமே. இப்படியான ஒரு பேச்சுக்குகளின் மூலம் ஒரு பொதுவான முன்னணியை உருவாக்கலாம் (இப்போதிருக்கு TNAஐ போலல்லாத ஒரு அணி). இதனடிப்படியில் வரும் ஒருமித்த குரலாலையே எமது உரிமைகளை வென்றெடுப்பது சாத்தியம் என்று எனக்குப்படுகிறது.

இது மிகும் கடினமான காரியம்தான். ஆனால், இதுதான் காலத்தின் தேவை.

 

Anonymous Anonymous said ... (29 April, 2006 13:05) : 

எழுதிக்கொள்வது: nasamarupaan

வணக்கம் வசந்தன்,
பதிவிற்கு நன்றி. உங்களுக்கு பின்னூட்டம் விட்ட தர்சனின் கருத்து யதார்த்தமானதும், காலத்தின் தேவையும் கூட. இன்று ஈழத்தில் வன்முறைக்கு காரணமானவர்களின் பட்டியல்கள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு நீளமானவைதான். இன்னும் இருதரப்பும் மாறிமாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதால் நல்லகாரரியம் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. இலங்கையின் பதட்டமான சூழ்நிலைக்கு இரு சாராருமே பொறுப்பு. யார் கூட, யார் குறைய என்பது தற்போது முக்கியமல்ல. மாறாக சம்பந்தப்பட்ட இருதரப்பும் வன்முறைகளைக் கைவிட்டு எதையும் பேச்சு மேசைக்கு கொண்டுவந்து அங்கே எல்லாவிதமான பிரச்சினைக்கும் வழியைத்தேடுவதே தற்போது இவர்கள் செய்யவேண்டிய கட்டாயம்.


20.30 28.4.2006

 

Blogger Kanags said ... (29 April, 2006 13:21) : 

திருமலை படுகொலை குறித்து போர்நிறுத்த கண்காணிப்புக்குழு பேச் சாளர் ஹெலன் ஒலப்ஸ்டொடிட்டர் நேற்று அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் ஒலிக்கு வழங்கிய நேர்காணலை இங்கே செவி மடுக்க.

 

Anonymous Anonymous said ... (29 April, 2006 13:28) : 

தினமலர் ஜோக்
1. C¢v¯&C»[øP GÀø»¨ £Sv°À wµ ÷µõ¢x £o°À PhØ£øh AvPõ›PÒ

öPõÊ®¦ : C¢v¯, C»[øP GÀø»¨ £Sv°À wµ ÷µõ¢x £o°À PhØ£øh AvPõ›PÒ Dk£mkÒÍõºPÒ. uªÇºPÒ Á]US® v›÷Põn©ø»¨ £SvPÎÀ, öuõhº¢x Âkuø»¨ ¦¼PÒ uõUSuÀ |hzv Á¸ÁuõÀ, ©UPøÍ £õxPõUS® ÁøP°¾®, «ÚÁºPÐUS £õxPõ¨¦ AÎUS® ÁøP°¾®, C¢v¯ C»[øP GÀø»¨ £Sv°À £õxPõ¨¦ wµ¨ £kzu¨£mkÒÍx. ÷©¾®, APvPÒ •Põ®PÒ AøÚzx® PsPõoUP¨£mk Á¸ÁuõP, C¢v¯ PhØ£øh uÍ£v A¸s ¤µPõè öu›ÂzxÒÍõº.

 

Anonymous Anonymous said ... (29 April, 2006 23:18) : 

thamilar otumaipada vendum enraal pulikal thamathu thavarukalai marukkamal eetu kollavendum.ethu nadakkira katijama? pulikalai evatum nampuvarkala?nampa mudijuma?

 

post a comment

© 2006  Thur Broeders

________________