Saturday, April 29, 2006

தினமலரில் வந்த திருகோணமலைச் செய்தி

இன்று சனிக்கிழமை தினமலர் பத்திரிகையில் 'சென்னையிலுள்ள இலங்கைக்கான துணைத்தூதர் சுமித் நகுந்தலா' தெரிவித்ததாகச் சொல்லி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

'சுமித் நகுந்தலா' சொன்னதை அப்படியே தினமலர் வெளியிட்டுள்ளது என்று கருதிக்கொள்வோம்.
எப்படியாயினும் இது சிறுபிள்ளைத்தனமான செவ்வி. இலங்கை பற்றியே ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத ஒரு கோமாளி துணைத்தூதராக இருப்பதாகக் கருதவேண்டியுள்ளது. அல்லது விசமத்தனமான பொய்யை அவிழ்த்துவிடும் கபடதாரியென்று கருதத் தோன்றுகிறது.
எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்காமல் அதைப்பிரசுரித்த தினமலரை என்ன சொல்வது?

இனி அந்தச் செய்தியிலுள்ள விசயங்களுக்கு வருவோம்.
முதலாவது,
"இராணுவத் தளபதி பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதல், திருகோணமலையின் சம்பூரில் நடத்தப்பட்டதாகத்"
தெரிவித்த கருத்து. இதைச் சொன்னவருக்கு உலகப்படத்தில் இலங்கையின் உருவவடிவமாவது தெரியுமா? என்ற ஐயம் வருகிறது.
இராணுவத் தலைமையகம் எங்குள்ளது?, இராணுவத் தளபதி மீது எங்குத் தாக்குதல் நடத்தப்பட்டது?, திருகோணமலை எங்குள்ளது? சம்பூர் எங்குள்ளது?, அது யாரின் கட்டுப்பாட்டிலுள்ளது? என்ற விவரங்கள் கூடத் தெரியாமல் என்ன துணைத்தூதர் பொறுப்பு வேண்டிக்கிடக்கிறது?

இதைக் கேள்வி கேட்காமல் பிரசுரித்த தினமலரின் நோக்கம் என்ன என்பதும் அடுத்த கேள்வி. அவர்களுக்குத் தெரிந்தும், அச்செவ்வியை அப்படியே போட்டுள்ளார்கள் என்றே நினைக்கிறேன். தூதுவரிடமே இக்குழப்பம் குறித்து கேட்டுத் தெளிவுபடுத்தியிருக்கலாமே?

இங்கே இலங்கையின் அமைவிடங்கள் தொடர்பில் தினமலருக்குத் தெரியாது என்று கதைவிட முடியாது. அதுவும் செய்திப்பத்திரிகை நடத்துபவர்களுக்கு.
கடந்த சிலநாட்களில் உலகச் செய்தித் தளங்களிலெல்லாம் இவை பற்றிய செய்திகள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றையாவது வாசித்திருந்தால் தினமலருக்கு துணைத்தூதரின் கருத்தை அப்பிடியே போட மனம் வந்திருக்குமா? குறைந்தபட்சம் அவரிடம் திருப்பியாவது கேட்டிருக்கலாமே? (தினமலரின் ஏனைய சில செய்திகளில் திருகோணமலையில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதும், கொழும்பில் இராணுவத் தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் வந்துள்ளன.)
******************************
அடுத்தது,
"சம்பூரில் வசிப்பது 16500 தமிழர்களே. ஆனால் அங்கு வசிக்கும் விடுதலைப்புலிகளோ நாற்பதாயிரம்"
என்ற கருத்து. (எழுத்தில் தொகையுள்ளதால் சுழியம் தவறுதாலகப் போடப்படவில்லையென்று கொள்ளலாம்.)
இதென்ன கோதாரி? சம்பூரில மட்டுமென்ன, ஒட்டுமொத்தமாகவே புலிகளில நாற்பதாயிரம் பேர் இருந்தா எங்களுக்கு ஏன் இந்தச் சிக்கல்?
அங்கிருக்கிற நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, சுவர், மரம் எல்லாம் புலிகள் என்று கணிக்கிறாரோ? அப்பிடியானால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான புலிகளின் கதை முடிந்திருக்கிறதென்பது உண்மைதான் போலும்.

******************************
அதைவிட ஒன்று சொல்லியுள்ளார். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
'புலிகள் மக்களைக் குறிவைத்துத் தாக்கவில்லை. அவர்கள் இராணுவத்தையே குறிவைத்துத் தாக்குகிறார்கள்'
என்று அத்துணைத்தூதர் சொன்னதாக அதிலுள்ளது.

தினமலரில் வந்த செய்தி இணைப்புக்கு..

தகவலைப் வெளிப்படுத்திய புதினத்துக்கு நன்றி.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தினமலரில் வந்த திருகோணமலைச் செய்தி" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (29 April, 2006 13:54) : 

எழுதிக்கொள்வது: nasamarupaan

வசந்தன் இது என்ன கோமாளிப் பேட்டியாக இருக்கிறது?

21.18 28.4.2006

 

said ... (29 April, 2006 14:14) : 

வசந்தன்,

தின-மலத்தில் ஒரு செய்தி வந்தால் அது 100% சரியே. அவர்கள் திருகோணமலையை (திருமலை) - திருப்பதி என்று கூட சொல்லுவார்கள். அது சரியே என்று வாதாட ஒரு கூட்டம் இங்கே உண்டு.

இந்த செய்தியை பற்றி தின-மலம் தாங்கி ஜெ-விடமும், மாயவரத்தாரிடமும் கேளுங்கள்.

 

said ... (29 April, 2006 14:23) : 

அனாமதேய அன்பரே,
இங்கே கருத்துச் சொன்னது இலங்கைக்கான துணைத்தூதர்.
தினமலர் இப்படியொரு கருத்தை விதைக்கவில்லை. அவர்கள் செய்திருக்கவேண்டியது, தவறான இக்கருத்து மட்டில் திருப்பிக் கேட்டு எழுதியிருப்பதே.
இங்கு நான் முக்கியத்துவப் படுத்த நினைப்பது, இலங்கைத் தூதுவரின் கோமாளித் தனத்தையே.

 

said ... (29 April, 2006 14:24) : 

இச்செவ்விக்கு தினமலர்கூட நேரடியாகப் பொறுப்பாகாதபோது, இங்கு ஜேவும், மாயவரத்தானும் எங்கு வருகிறார்கள்?

 

said ... (29 April, 2006 14:44) : 

எழுதிக்கொள்வது: ஏகலைவன்

இது கோமாளிப் பேட்டியாக இருப்பினும்இ சில ஈழப் போராட்டத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு நம்மக் கூடியவிதத்தில் இவர் சொல்லியிருக்கின்றார் . உண்மையில் இப் பேட்டியை பலர் நம்பக் கூடும். அது ஏதோ ஒரு வகையில் புலிகள் மீதான அவப்பெயரை ஏற்படுத்தத் தான் போகின்றது.

எனவே இதை இங்கு கேலி பண்ணுவதை விட தினமலருக்கு ஒரு விளக்கக் கட்டுரை அனுப்பி விடுதல் நலல்லது.10.38 29.4.2006

 

said ... (29 April, 2006 22:39) : 

இடுக்கண் வருங்கால் நகுந்தலா ;)

 

said ... (01 May, 2006 01:55) : 

வசந்தன் ''சென்னையிலுள்ள இலங்கைக்கான துணைத்தூதர் சுமித் நகுந்தலா''அப்ப அவர் இலங்கையாள்தானே....
புழுகிறதில கூட கெட்டிதனம் இல்லாத இவையல என்னத்த சொல்ல....
சரியான் கோமாளிப் பேட்டியாக இருக்கிறது.

 

said ... (01 May, 2006 16:56) : 

//இங்கே கருத்துச் சொன்னது இலங்கைக்கான துணைத்தூதர்.
தினமலர் இப்படியொரு கருத்தை விதைக்கவில்லை.//

Vasanthan,

It was dinamalar who published about Thambi's death in front page (long time back).

I wont be surprised if the whole article is created in the dinamalar office.

 

post a comment

© 2006  Thur Broeders

________________