தெகெல்காவில் ஒரு போராளியின் கதை.
இந்தியப் பத்திரிகையான தெகெல்காவில் விடுதலைப்புலிப் பெண் போராளியொருவரைப் பற்றிய தொகுப்பு வந்துள்ளது. விடுதலைப்புலிகளின் புகைப்படப் பிரிவைச் சேர்ந்த கஜானி என்ற பெண் போராளியின் சுயசரிதையே THE TIGERS’ FIGHTER JOURNALIST என்ற தலைப்போடு வெளிவந்துள்ளது. தற்செயலாக வாசிக்கச் சிக்கிய அப்பக்கத்தை இங்குப் பகிரலாம் என நினைக்கிறேன். அதில் கஜானியின் பிறப்பிடமான கிளிநொச்சியின் தொடக்க நிலைமை, சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்கள், பயிற்சி முகாமில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், முதற்களம் - அதைத்தொடர்ந்த ஆனையிறவுக் களம், பின் புகைப்படப் பிரிவுக்குத் தெரிவாகியமை, அங்குப் பெற்ற பயிற்சிகள், சமர்முனையில் புகைப்படமெடுத்த மயிர்கூச்செறியும் அனுபவங்கள் உட்பட பல சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையாக அப்பகுதி உள்ளது. களமுனையை ஆவணப்படுத்துவதில் புலிகளுக்கிருக்கும் வேட்கை யாவரும் அறிந்ததே. இதற்கெனவே கணிசமான போராளிகள் ஒவ்வொரு சமரிலும் ஈடுபடுத்தப்படுவர். பலர் இப்பணியில் வீரச்சாவடைந்துள்ளனர். புகைப்படப் பிரிவுப் போராளிகளின் இணையத்தளமான அருச்சுனாவில் ஒரு தொகுதிப் புகைப்படங்களைப் பார்க்கலாம். கஜானி அவர்கள் முன்பு ஒரு வலைப்பதிவையும் தொடக்கியிருந்தார். அதன்பிறகு எதையும் காணவில்லை. ____________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: ஈழ அரசியல், நேர்காணல் |
"தெகெல்காவில் ஒரு போராளியின் கதை." இற்குரிய பின்னூட்டங்கள்
தீவிரவாத்தை பரப்பதே.....
நீ கொடுத்த சுட்டி ஒரு தீவிரவாத சுட்டி....
"Reason:
The category "Militancy and Extremist" is filtered."
வசந்தன்,
தகவல்களுக்கும் சுட்டிகளுக்கும் மிக்க நன்றி.
அனானி,
தீவிர 'வாத்தை'ப் பரப்ப வேண்டாமெண்டுறியளோ?
அல்லது தீவிரவாதத்தைச் சொன்னியளோ?
;-)
சரியண்ணை, இனி இப்பிடிச் செய்ய மாட்டன்.
வெற்றி,
வருகைக்கு நன்றி.