Saturday, August 26, 2006

பனங்காய்ப் பணியாரம் -பாடல்

துளசி கோபாலின் பனங்காய்ப் பணியாரம் பதிவு பார்த்திருப்பீர்கள்.
அப்பாடலை அவவின் அனுமதியோடு ஒலிவடிவாக இங்கே பதிவாக்குகிறேன்.

பாடியவர்கள் புஸ்பவனம் குப்புசாமி குழுவினரா?
எழுதியவர் யார்?
களுத்துறைக் கருவாடா, மன்னார்க் கருவாடா பிரபலம்?
அல்லது கீரிமலைக் கள்ளுக்கு களுத்துறைக் கருவாடுதான் தோதோ?

பாடலும் அனுமதியும் தந்த துளசியம்மாவுக்கு நன்றி.

வல்லை வெளியிலே காற்றடிக்கும்
திரளிமீன் துள்ளியெழும்
ஒடியல்கூழ் குடித்தால்
மனமெல்லாம் விண் கூவும்
===========
பனங்காய் பணியாரமே (2)

பச்சைக் கொழும்பு வெத்திலையே -உன்
பார்வை கொஞ்சம் பத்தலையே

பனையோலைப் பாய் விரித்து படுத்துறங்கும் மணியக்கா
கமுகமர பாக்கு தந்து கவுக்கிறது என்னக்கா (1)

காங்கேசந்துறை சுண்ணாம்பை கொஞ்சம் தடவிதடவி கொடடி -உன்
கையாலே வாய் சிவக்க வெத்தலை மடிச்சு கொடடி
ஒக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் வீட்டு கூரையிலே ஏறுது
கீரிமலைப் பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் கிக்குதான் கிக்குதான்
கீரிமலைப் பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் மப்புதான் மப்புதான்

நான் கோவில்கடவை ஆளு,
நீ சேலை கட்டிய தேரு
நீ சுன்னாகத்து மாங்காய்,
நான் கொடிகாமத்துத் தேங்காய்

பனங்காய் பணியாரமே......

***கீச்சுமாச்சு தம்பலம் கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம் மாயாமாயா தம்பலம் (2)

***


மட்டுநகர் தயிர் எடுத்து வளைஞ்சு நெளிஞ்சு வாடி -என்
உயிரை பிடித்து உறைய வைத்து உறியில் வைத்து போடி
மண்பானை தயிர் கனக்கும் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?
கண்டி குளிரிலதான் கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேத்த நெஞ்சு நினைக்குதடி

முல்லைத்தீவு போவோம்
முயலிரண்டு பிடிப்போம்
நீமூச்சிழுக்கும் நேரம்
நான் பேச்சிழந்து போவேன்

பனங்காய் ...பணியாரமே

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தரவிறக்க மூன்று இணைப்புக்கள் தந்துள்ளேன். ஏதாவதொன்று சரிவரும்.

இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு
இணைப்பு மூன்று_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பனங்காய்ப் பணியாரம் -பாடல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 August, 2006 17:29) : 

http://sayanthan.blogspot.com/2005/07/blog-post_25.html

அப்பவே இதைப்பற்றி சொல்லிருக்கிறன் தெரீயுமோ..

காதல் கடிதம் இசைத்தொகுப்பில் இடம்பெற்றது. இசை உதயா பாடல் வசீகரன்--

இதே தொகுப்பில் இடம் பெற்ற யாழ் தேவியில் காதல் செய்தால் பாடலும் பிரபலமானது..

 

said ... (26 August, 2006 18:57) : 

எழுதிக்கொள்வது: Nasamaruppan

வணக்கம் வசந்தன்
நல்ல பதிவு

5.20 26.8.2006

 

said ... (26 August, 2006 18:57) : 

எழுதிக்கொள்வது: Nasamaruppan

எழுதிக்கொள்வது: Nasamaruppan

வணக்கம் வசந்தன்
நல்ல பதிவு

5.20 26.8.2006

5.20 26.8.2006

 

said ... (26 August, 2006 21:26) : 

வசந்தனய்யா,
நல்ல பதிவு. ரொம்பவும் ரசிச்சேன்...

 

said ... (26 August, 2006 23:06) : 

எழுதிக்கொள்வது: -theevu-

வசந்தன் பாட்டு வேலைசெய்யுதில்லை.நேரடி முகவரி இருந்தால் கொடுங்கள் mp3 குப்பியில் இறக்கி கேட்டுக்கொள்வேன்.

-theevu-

16.14 26.8.2006

 

said ... (27 August, 2006 06:16) : 

எழுதிக்கொள்வது: theevu

இப்ப வேலை செய்கிறது.
-theevu-

23.22 26.8.2006

 

said ... (27 August, 2006 07:07) : 

வசந்தன்
பாட்டை ரசித்தேன்.
நன்றி.

 

said ... (27 August, 2006 10:19) : 

எழுதிக்கொள்வது: johan- paris

வசந்தன்!
பாடலுக்கு நன்றி! நம்ம பையன்களா? ஆச்சர்யமா!!!இருக்கு ;கலக்கி அடிச்சிருக்கிறாங்க!இவங்க குடத்து விளக்காக இருக்குறாங்க!அப்பபோ வெளிக்கொணர்ந்து,குன்றில் இடுங்கள்.
யோகன் பாரிஸ்

2.33 27.8.2006

 

said ... (28 August, 2006 01:31) : 

சயந்தன்,
தகவலுக்கு நன்றி.
அதுசரி நீங்கள் யார்? வலைப்பதிவரா?

நாசமறுப்பான், நெல்லைக்கிறுக்கன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தீவு, மேலதிகமாக ஓர் இணைப்பும், தரவிறக்க மூன்று இணைப்பும் தந்துள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (28 August, 2006 13:42) : 

தீவு, சந்திரவதனா,
நன்றி.

 

said ... (01 September, 2006 21:52) : 

யோகன்,
வருகைக்கு நன்றி.
இது துளசி அவர்கள் அனுப்பிய பாடல்.
பாடியவர் புஸ்பவனம் குப்புசாமி என்று தெரிகிறது.

 

said ... (01 September, 2006 23:11) : 

அடிக்கடி தமிழ்மணத்தின் முன் பக்கம் வந்து வாயூற வைக்கும் பதிவாக இருக்கிறது.

 

said ... (30 September, 2006 23:28) : 

சந்திரவதனா,
நன்றி.

 

said ... (01 October, 2006 01:23) : 

http://kumili.yarl.net/archives/003310.html

வசந்தன், இதைப்பற்றி சொல்லி இணைப்பும் கொடுத்தனான்.

பாடல் தரவேற்ற உதவினது வன்னியன். ;)

 

said ... (02 October, 2006 01:41) : 

குழைக்காட்டான்,
வருகைக்கு நன்றி.
நீர் தந்த இணைப்பு வேலை செய்யுதில்லை.
அதுசரி வன்னியனுக்கு எதுக்கு நன்றி?
;-)

 

post a comment

© 2006  Thur Broeders

________________