Wednesday, July 05, 2006

சக வலைப்பதிவாளரின் திருமணம்

இது தமிழ் வலைப்பதிவாளர்களின் திருமணக் காலம் போலுள்ளது. அடுத்தடுத்து சில திருமணங்கள்.
அந்தவகையில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணத் திரட்டியில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவான "சாரல்" என்ற வலைப்பக்கத்துக்குரிய பதிவாளர் திரு. சயந்தன் அவர்களுக்கு திருமணம்.

இப்போது ஏராளமான புதிய வலைப்பதிவாளர்கள். கொஞ்சம் பழையவர்கள் வசந்தனையும் சயந்தனையும் மறந்திருக்க மாட்டார்கள் ;-).
கொஞ்சக்காலமாக 'சாரல்' வலைப்பதிவில் பதிந்து வருவதைக் குறைத்துக் கொண்டார். (பதியாமலே இருப்பதற்கு தன்னைப் பயிற்றுவித்திருப்பார் போலும்) பதிந்த காலங்களிற்கூட அடிக்கடி பதிவுகளை வெட்டிக் கொத்தித் திருத்துவதும், சிலசமயம் வெளியிடப்பட்ட பதிவையே ஒளித்து வைப்பதுமாக அவர் அல்லாடியதை உணர்ந்தவர்களுக்கு 'ஆட்டிப்படைத்த கை' பற்றி ஓரளவு புரிந்திருக்கும். ஆனாலும் ஆங்காங்கே அவரின் கைவண்ணத்தைக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

சரி. தகவலுக்கு வருகிறேன். இந்த மாதம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் திகதிகளில் சுவிஸ் நாட்டில் Zug என்ற நகரத்தில்
செல்வன் கதிர் சயெந்திரன் அவர்களுக்கும்
செல்வி Virginia தேவசகாயம் அவர்களுக்கும்
திருமணம் இனிதே நடைபெற உள்ளது.

அன்பர்கள், நண்பர்கள், சகவலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவரும் தங்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாழ்த்தவும்.
(அப்படியே தொடர்ந்தும் வலைப்பதிவுத் தொடர்போடு இருக்கும்படியும் அறிவுறுத்துங்கள்.)

(ஏன் இரண்டு நாட்கள் திருமணம் நடக்கிறதென்று என்னைக் கேட்காதீர்கள்.
அதெல்லாம் பிறப்பில் வந்த பலன். எல்லோருக்கும் இப்படியொரு பாக்கியம் கிடைக்காது;-))

"இன்னும் 34 நாட்கள்தாம்" என்று நான் பதிவு போட்டு உங்களை ஆவலில் காத்திருக்க வைத்ததை இப்பதிவு மூலம் தீர்த்துக் கொள்கிறேன்.
"மூன்று வருட ஆவலை" இந்நாளில் அவர் தீர்த்துக் கொள்வார்.

_____________________________________________

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சக வலைப்பதிவாளரின் திருமணம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 July, 2006 01:59) : 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

 

said ... (05 July, 2006 02:08) : 

எழுதிக்கொள்வது: friend

வாழ்த்துக்கள்.

16.44 4.7.2006

 

said ... (05 July, 2006 02:18) : 

திருமண நல்வாழ்த்துக்கள்.

 

said ... (05 July, 2006 09:01) : 

பதினாறும் ( முடிந்தால் இன்னும் அதிகம்) பெற்று பெருவாழ்வு வாழனும் ராசா

 

said ... (05 July, 2006 11:04) : 

வாழ்த்து.
அவர் கரையேறிவிட்டார்; நீங்கள் எப்போது ஏறப்போகிறீர்கள்?

 

said ... (05 July, 2006 11:19) : 

எழுதிக்கொள்வது: இளவஞ்சி

// பதியாமலே இருப்பதற்கு தன்னைப் பயிற்றுவித்திருப்பார் போலும் //

அடடா! கிடைப்பதற்கறிய ஞானம்! :)))

// வாசகர்கள் அனைவரும் தங்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாழ்த்தவும். //

சரிசரி! மணவிழா காணும் மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

7.11 5.7.2006

 

said ... (05 July, 2006 13:24) : 

எழுதிக்கொள்வது: kumaran ennam

மண மக்களுக்கு வாழ்த்துக்கள்...

9.14 5.7.2006

 

said ... (05 July, 2006 15:04) : 

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
சுந்தரவடிவேல்,
இப்போதாவது இரண்டு பேரினதும் குழப்பம் தீர்ந்திருக்கும் தானே?

//அவர் கரையேறிவிட்டார்; நீங்கள் எப்போது ஏறப்போகிறீர்கள்? //
என்ன? நாங்கள் ஏதோ தண்ணிக்குள்ள நிக்கிற மாதிரியெல்லோ கதையிருக்கு?

 

said ... (05 July, 2006 16:10) : 

எழுதிக்கொள்வது: மணியன்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!
சாரலில் அவர் தொடர்ந்து எழுத விண்ணப்பமுடன்
மணியன்

11.57 5.7.2006

 

said ... (05 July, 2006 16:11) : 

//இப்போதாவது இரண்டு பேரினதும் குழப்பம் தீர்ந்திருக்கும் தானே?//
அவர் மணவிழாவிற்கு நீங்கள் அழைப்பதைப் பார்த்தால் குழப்பம் எப்படித் தீரும் ?

 

said ... (05 July, 2006 18:10) : 

கடைசியில சுவிஸிலை செட்டிலாகி விட்டார். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

 

said ... (05 July, 2006 18:50) : 

சயந்திரன்+வெர்ஜீனியா! இனிதே வாழவாழ்த்துகிறேன்.
யோகன் பாரிஸ்

 

said ... (05 July, 2006 19:59) : 

எழுதிக்கொள்வது: Vijayakumar

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

15.57 5.7.2006

 

said ... (05 July, 2006 20:00) : 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

 

said ... (05 July, 2006 21:29) : 

(ஏன் இரண்டு நாட்கள் திருமணம் நடக்கிறதென்று என்னைக் கேட்காதீர்கள்.)


Aiyoo.... Enakku therinchakanum.. Sayanthanum inka illaiye kedka.... Paavipaya 2 naal enru sollamale poyiddaar.... enakku thalai vedukuthu


Anpudan
Jeeva Jeevan

 

said ... (05 July, 2006 23:56) : 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

 

said ... (05 July, 2006 23:58) : 

நண்பனுக்கு இனிய திருமண வாழ்த்து.
.....
/கடைசியில சுவிஸிலை செட்டிலாகி விட்டார்./
சுவிஸ் பாங்கில் இரகசியக்கணக்கு இருந்தால் சுவிஸ் என்ன சுக்கிரனில் கூட செட்டில் ஆகலாந்தானே :-)

 

said ... (06 July, 2006 01:46) : 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

 

said ... (06 July, 2006 02:50) : 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

 

said ... (06 July, 2006 15:15) : 

எழுதிக்கொள்வது: theevu

வலையாம் வலைப்பதிவாம் யாருக்கு வேண்டும் பின்னூட்டமாம் என்று ஒரு முறை கட்டபொம்மன் வசனம் சயந்தன் விடேக்கையே தெரிந்தது ஏதோ ஏடாகூடமாக ஆகிவிட்டது என..

முன்னாள் வலைப்பதிவாளருக்கு எனது திருமண வாழ்த்துக்கள்.

15.27 5.7.2006

 

said ... (06 July, 2006 22:04) : 

//அவர் மணவிழாவிற்கு நீங்கள் அழைப்பதைப் பார்த்தால் குழப்பம் எப்படித் தீரும் ?//

மணியன்,
விடமாட்டீர்கள் போல.
இனியாவது இந்தக்கதைகளை விட்டுவிடுங்கள். குடும்பத்தில் பிரச்சினையை உருவாக்காதீர்கள். இல்லாவிட்டால் நான் எழுதுபவற்றுக்கு அங்கொருவர் வீட்டுக்காரம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்.

ஜீவா,
உமக்கே சொல்லவில்லையா? அப்ப நான் பரவாயில்லை.

டி.சே,
வங்கிக் கணக்குப் பற்றியெல்லாம் சொல்லிறீர். எனக்கு விளங்கேல.

 

said ... (07 July, 2006 13:06) : 

//"மூன்று வருட ஆவலை" இந்நாளில் அவர் தீர்த்துக் கொள்வார்.//

புரியலியே?
அதென்ன 3 வருடம்?

 

said ... (08 July, 2006 17:42) : 

எழுதிக்கொள்வது: சுதர்சன்.கோபால்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் :-)


13.37 8.7.2006

 

said ... (08 July, 2006 18:56) : 

எழுதிக்கொள்வது: karthick

சார் என்னக்கும் திருமணம்..டிசம்பர் 1 அன்று..நானும் சகவலைப் பதிவாளன் தான்..

14.40 8.7.2006

 

said ... (08 July, 2006 22:04) : 

எழுதிக்கொள்வது: ajeevan

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

14.28 8.7.2006

 

said ... (08 July, 2006 22:28) : 

வளம் யாவும் பெற்று
நலமுடன் வாழ்க!

 

said ... (08 July, 2006 23:31) : 

எழுதிக்கொள்வது: kumar

பலதும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்துக்கள்.

21.57 8.7.2006

 

said ... (09 July, 2006 05:48) : 

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்

 

post a comment

© 2006  Thur Broeders

________________