எனது ஆறு ஆறு ஆறு ஆறு ஆறு
என்னை இவ்விளையாட்டுக்கு முதலில் அழைத்த மயூரனுக்கும் கடைசியாக அழைத்த கொழுவிக்கும் நன்றி. (இதைவிட வேறு யாராவது அழைத்தீர்களா தெரியாது. மயூரனின் பதிவைப்பார்த்த பின்தான் தமிழ்வலைப்பதிவுகளில் இப்படியொரு விசயம் நடந்துகொண்டிருப்பதே தெரியும்.) ஏற்கனவே வேறு விளையாட்டுக்கு அழைத்தவர்களின் அழைப்பை நிறைவேற்றாமைக்கு மன்னிக்கவும். ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன். ************************* பிடித்த உணவுகள்: 1.பிறந்த ஊர் (மாசி மாசத்து) முரற்சொதி 2.இறால், நண்டு, கணவாய் 3.உடும்பு 4.உக்கிளான் 5.பழஞ்சோறும் சுட்ட கருவாடும் 6.கரைவலை இழுத்தவுடன் வைக்கும் ஆணம். பிடித்த படைப்பாளிகள்: (ஈழத்துள் மட்டும் நின்றுகொள்கிறேன்) 1.கப்டன் மலரவன் 2.கப்டன் கஸ்தூரி 3. தமிழ்க்கவி 4.ஈரத்தீ / துளசிச் செல்வன் 5.நிலாந்தன், கருணாகரன் 6.மலைமகள் பிடித்த பாடல்கள்: சினிமாவில் 1.ஈரமான ரோஜாவே 2.நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா 3.இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை 4.பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா 5.கண்ணே கலைமானே 6.மலரே மெளனமா (கர்ணா) ஈழப்போராட்டப் பாடல்கள் 1.இந்தமண் எங்களின் சொந்தமண் 2.சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும் 3.வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது 4.பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது 5.மாங்கிளியும் மரங்கொத்தியும் 6.வெளுத்தவானம் கறுக்கும்போதில் விழிகள் விரிந்திடும் பிடித்த இடங்கள்: 1.வன்னி 2.யாழ்ப்பாணம் 3.மதுரை, கோடியாக்கரை 4.முல்லைத்தீவின் கள்ளப்பாட்டுக் கடற்கரை 5.ஊரில் அம்மம்மா வீடு 6.சிறுவயதிற் களவாடிய மகிழமரம், விளாத்தி, நாவல். போக விரும்பும் இடங்கள்: 1.வன்னி (ஏற்கனவே அளந்து முடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் அலைய வேண்டும் வன்னியில்) 2.மட்டக்களப்பு, 3அம்பாறை 4.திருமலை 5.தீவகம் 6.எல்லாம் பார்த்தபின் நேரமிருந்தால் யாழ்ப்பாணத்தில் நான் பிறந்துவளர்ந்த ஊர். வலையில் அடிக்கடி போகுமிடங்கள்: 1.எப்போதும் முதலிடம் தமிழ்மணத்துக்கே 2.புதினம், தமிழ்நெட் 3.தமிழ்நாதம் 4.இப்போது விளையாட்டுப் பக்கங்கள் (உலகக்கோப்பைக்காக அடிக்கடி) 5.என் பள்ளிக்கூட வலைப்பக்கம் 6.youtube பிடிக்கிற விசயங்கள்: 1.மாலை நேரம் கடற்கரையில் நடத்தல், காடுகளில் காலாற நடத்தல். 2.கடல்நீச்சலும் அதன்பின்னான் நல்ல "வெட்டலும்" 3.நண்பர்களுடன் மேசை, தகரங்களில் தட்டிப்பாடுதல் 4.நாட்டுக்கூத்துப் பார்ப்பது 5.கிளித்தட்டு (யாடு / தாச்சி) விளையாடுவது 6.தனிமையில் உரத்துப் பாடுதல், சமைத்தல் பாதித்தவர்கள்/பாதிப்பவர்கள்: (நேரில் அறிந்தவர்கள் மட்டும்) 1.பாடகனும் போராளியுமாயிருந்து களப்பலியான மேஜர் சிட்டு 2.தமிழ்க்கவி 3.மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் 4.மறைந்த சிங்கராயர் அடிகள் 5.கருணரத்தினம் (கிளி) அடிகள் 6.அண்மையில் மறைந்த கவிஞர் நாவண்ணன் மறக்க முடியாத சினிமா: (தமிழுக்குள் மட்டும் நின்று கொள்கிறேன்) 1.குட்டி 2.முகம் 3.ஹேராம் 4.அன்பே சிவம் 5.சிலநேரங்களில் சில மனிதர்கள் 6.சில விமர்சனங்கள் இருந்தாலும் புலிகளால் தயாரிக்கப்பட்ட அனைத்துப் படங்களும். மறக்கமுடியாத நூல்கள்: (ஈழத்துள் மட்டும் நின்று கொள்கிறேன்) 1.போர் உலா (கப்டன் மலரவன்) 2.இனி வானம வெளிச்சிடும் (தமிழ்க்கவி) 3.செம்மணி தொகுப்பு 4.நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் 5.உயிராயுதம் 6. முற்றத்து ஒற்றைப்பனை _________________________________________ ஆறு முற்றியது. நான் யாரையும் அழைக்கப்போவதில்லை. ஏற்கனவே அழைக்கப்படாதவர்களில் முந்திவந்து பின்னூட்டமிடும் ஆறுபேர் இதைத் தொடரலாம். _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் |
"எனது ஆறு ஆறு ஆறு ஆறு ஆறு" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: ஈழநாதன்
வசந்தன் தமிழ்ப்படங்களைப் பொருத்தவரை உங்களின் ரசனையும் தேர்வும் வியப்பளிப்பது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத்தண்டனைக் கைதியான சின்னச் சாந்தன்(ம.தி.சாந்தன்) ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் 13905 அதன் பெயர்(அவரது கைதி எண்)கிடைத்தால் வாசித்துப் பாரும்
0.10 21.6.2006
ஈழநாதன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இன்னொரு கைதியான பேரறிவாளனின் தாயாரை மையமாக வைத்து பழ.நெடுமாறன் அவர்களின் மகள் எழுதிய புத்தகமொன்று ஒரு வருடத்தின் முன் என்கையில் கிடைத்தது. பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். வாசிக்கவில்லை.
எழுதிக்கொள்வது: johan-paris
வசந்தன்!
உக்கிளான் என்பது என்ன? விளக்கவும். மரக்கறி வகை தப்பிவிட்டது.
யோகன் பாரிஸ்
10.33 21.6.2006
யோகன்,
நானும் உந்த உக்கிளானை வன்னிக்கு வந்துதான் அறிஞ்சன். (அதேமாதிரி அறிஞ்ச இன்னொண்டு புலுட்டை)
உருவ அடிப்படையில பார்த்தா மரைக்கு அடுத்தது மான்.
மானுக்கு அடுத்தது புலுட்டை. (மான் மாதிரியேதான். ஆனா சின்ன உருவம்).
அதுக்கும் அடுத்தது உக்கிளான். முயலைவிட கொஞ்சம் பெரிசு எண்டு சொல்லலாம்.
ஆனா நல்ல உருசி. கொஞ்சம் மினக்கெட வேணும்; வேட்டையாடவும்தான், சமைக்கவும்தான்.
உண்மையிலயே எனக்கு நல்லாப்பிடிச்ச இன்னொரு உணவு சொல்லேல.
மரக்கறி எண்டு பாத்தா கிட்டத்தட்ட பாகற்காய் முதற்கொண்டு எல்லாமே பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்லிறதெண்டா பிலாக்கொட்டையும் முருங்கைக்காயும் சேர்த்து வைக்கிற ஒரு வத்தல் குழம்பு. என்ன செய்ய? ஆறுதானே சொல்லலாம்.