தொடரும் சிங்களப்படைக் கொடூரம்
மன்னார்-வங்காலையில் நேற்றிரவு தமிழ்க்குடும்பமொன்று கொடூரமான முறையிற் சிங்களப்படையாற் படுகொலை செய்யப்பட்டுள்ளது. சின்னப்பிள்ளைகளைக்கூட கழுத்திற் சுருக்கிட்டுப் படுகொலை செய்துள்ளது இராணுவம். வங்காலைக்கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மார்டீன்(35), அவரது மனைவி மேரி மதலேன் (27), மற்றும் அவர்களின் பிள்ளைகளான லக்சிகா(9), நிக்சன(7) ஆகியோரே இவ்வாறு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். குடும்பத்தலைவர் மூர்த்தி தச்சுத்தொழிலாளி. அவரின் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்களும் கொலையாளிகளாற் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்டசித்திரவதைக்குப்பின்பே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளாக இனங்கண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே கொல்லப்படுகிறார்கள் என்று புராணம் பாடும் புலியெதிர்ப்புக் கும்பல் இதற்கும் ஏதாவது காரணத்தைத் தேடி "மறைநூல்களில்" துலாவிக்கொண்டிருக்கும். பார்ப்போம் எதைக்கொண்டு வருகிறார்களென்று. படுகொலை செய்ப்பட்டவர்களின் படங்கள் கோரமானவை. விரும்பாதவர்கள் பார்க்கவேண்டாம். செய்திகளும் படங்களும். சங்கதி தமிழ்நெட் ****************************** நேற்று முன்தினம் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் படையினர் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட பத்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். செய்தி மற்றும் படங்கள் ******************************* மூதூரிலிருந்து தொடர்ந்தும் தமிழர்கள் இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே மன்னாருக்கு வந்துவிட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தெட்டாயிரம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கச் சென்றுவிட்டனர். இந்நிலையில் மேலும் பல குடும்பங்கள் நீர்கொழும்புநோக்கி இடம்பெயர்ந்துள்ளன. ****************************** யாழ்ப்பாணத்தில் கைதடி என்ற இடத்தில் மனிதப்புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. சில தினங்களின் முன் படையினராற் கைதாகி காணாமற்போன இந்து மதகுரு வெங்கட் சர்மா என்பவரின் சடலமே முதலில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மேலும் தோண்டிய நிலையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒருவர் பரணிதரன் என்று அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில் மேலும் இவ்விசாரணைகள் தொடர்வதைத் தடுக்க படையினர் தீவிர முயற்சி செய்கின்றனர். இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கைதடிப் பகுதி ஏற்கனவே உலகை உலுக்கிய செம்மணிப் புதைகுழிக்கு அண்மையில் இருக்கும் பகுதி. ************************* நிலைமை இப்படியிருக்க இன்னும் பேச்சுவார்த்தையென்று இழுத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. புலிகள் என்ன செய்யப்போகிறார்கள்? ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரை வெளியேறச் சொல்லிப் புலிகள் கேட்டது சரியான நடவடிக்கை. அதில் விடாப்பிடியாக நிற்பதில்தான் வெற்றி இருக்கிறது. அதேநேரம் கண்காணிப்புக்குழுவைச் சீரமைக்க ஆறுமாதகாலம் ஆகும் என்று நோர்வே சொல்லியிருப்பதும் அதுவரை இருதரப்பும் பொறுமை காக்க முடியுமா என்று கேட்டிருப்பதும் சிக்கலுக்குரிய விசயங்கள். கண்காணிப்புக்குழு இருந்தும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்ற நிலைமைக்கு இலங்கைத்தீவு வந்து நாட்கள் பல கடந்துவிட்டன. இவ்வளவுநாட்களாக அறுபதுபேரை வைத்துக்கொண்டு கண்காணிப்புக்குழு செய்ததற்கும் இருபதுபேரை வைத்துக்கொண்டு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை. யுத்தம் நடக்கும்போது இப்படுகொலைகளை எப்படி எதிர்கொள்வது, எப்படிக் கட்டுப்படுத்துவதென்று புலிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். புலிகள் அவர்களுக்கேயுரிய முறையில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த காலத்தில் அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சும்மா உலகத்துக்காகப் பொறுமை காக்கிறோம் என்ற பேரில் கையைக் கட்டிக்கொண்டு இருப்பது இனியும் சரிவராது. கொழும்பு வாசஸ்தலங்களின் வாசல்களுக்குக் குண்டுகள் வரும்வரை அவர்கள் யாருக்கும் உறைக்கப்போவதில்லை. _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் |
"தொடரும் சிங்களப்படைக் கொடூரம்" இற்குரிய பின்னூட்டங்கள்
என்னத்தைச் சொல்ல...எழுத...:-(((
எழுதிக்கொள்வது: நிலவை வென்றவன்
//யுத்தம் நடக்கும்போது இப்படுகொலைகளை எப்படி எதிர்கொள்வது, எப்படிக் கட்டுப்படுத்துவதென்று புலிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். புலிகள் அவர்களுக்கேயுரிய முறையில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த காலத்தில் அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சும்மா உலகத்துக்காகப் பொறுமை காக்கிறோம் என்ற பேரில் கையைக் கட்டிக்கொண்டு இருப்பது இனியும் சரிவராது.//
காத்திருந்ததன் பயன் நாளாந்தம் மக்களின் சாவு எண்ணிக்கை தான். நாளந்தம் காலை மதியம் , மாலை என இணைய செய்திகளை நோக்கினால் புதிது புதிதாக படுகொலைச்செய்திகளை தான் பார்க்க முடிகிறது :(
பொறுத்திருந்தது போதும் பொங்கியெளு தமிழா என கோசமிட்ட காலம் எல்லாம் எங்கே போய்விட்டதோ :( ?
21.2 9.6.2006
எழுதிக்கொள்வது: theevu
//நிலைமை இப்படியிருக்க இன்னும் பேச்சுவார்த்தையென்று இழுத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. புலிகள் என்ன செய்யப்போகிறார்கள்?//
சர்வதேசமும் மண்ணாங்கட்டியும்...எல்லாம் அழிந்தபின்
உதவிக் கரம் என கடன் அட்டை கொண்டு வருவார்கள்.
புலிகளின் பொறுமை புதிராக உள்ளது.
0.38 8.6.2006
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
நேற்று புலிகளின் மூத்த தளபதியான லெப்.கேணல் மகேந்தி படையினரின் ஆழஊடுருவும் படையணியால் கிளிநொச்சிக்கு அண்மையில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சாமாதான காலம் எனச்சொல்லப்படும் காலத்தில் புலிகள் இழந்த பல உயர்மட்டத் தளபதிகளில் இவருமொருவர்.
அனேகமாக இறுதிக்காலத்தில் யாழ்ப்பாணத்திலோ வன்னியிலோ வாழ்ந்தவர்களுக்கு மகேந்தி அவர்களைத் தெரிந்திருக்கும்.
மிக நீண்டகால உறுப்பினர். பல களங்களைச் சந்தித்தவர். இவரின் தமையன் ஆகாய கடல் வெளிச்சமரில் 91 ஆம் ஆண்டு வெற்றிலைக்கேணி தரையிறக்கத்தை எதிர்த்துச் சமராடி வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி ஆவார். இன்னொரு தமையனும் புலிகளின் மிகமூத்த உறுப்பினராக இருக்கிறார்.