Wednesday, May 24, 2006

புலிகளின் உயர்தளபதி படுகொலை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.05.06) அன்று பிற்பகல் 5.30 மணியளவில் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தளபதியொருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கேணல் ரமணன் எனப்படும் நாற்பது வயதான "கந்தையா உலகநாதன்" எனும் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தளபதியே கொல்லப்பட்டவர். யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்திற் கொல்லப்பட்ட உயர் தளபதி இவராவார்.

ஒட்டுமொத்தமாக புலிகள் இயக்கத்தில் "கேணல்" நிலையில் வீரச்சாவடைந்தவர்கள் இவரையும் சேர்த்து நான்கு பேர்.
கேணல் கிட்டு
கேணல் சங்கர்
கேணல் ராயு ஆகியோர் மற்றவர்கள்.



எண்ணிக்கை ஒன்றுதானென்றாலும் சம்பந்தப்பட்ட தரப்புக்குரிய இழப்பு கொல்லப்படுபவர்களின் தரத்தில் தங்கியுள்ளது. ஓர் இராணுவத் தளபதியின் மீதான கொலை முயற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இதனால்தான். அண்மையில் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே.



அவ்வகையில் கேணல் ரமணனின் கொலையும் முக்கியமானது. புலிகள் தரப்புக்குப் பெரிய இழப்பு.



கிழக்கில் கருணாவின் பிரச்சினை வரும்வரை அதிகம் வெளியே பேசப்படாத பெயர் தான் ரமணன். கருணாவை முறியடித்துப் புலிகள் கிழக்கில் காலூன்றியபோது ரமணன் அவர்களின் பெயர் பிரபலமாகத் தொடங்கியது.
இருபது வருடகாலம் புலிகள் இயக்கத்தில் சேவையாற்றியவர்.
1986 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தேர்வெழுதிய பின் அமைப்பில் இணைந்தவர்.
சிறிலங்கா, இந்தியப் படைகளுக்கெதிரான களத்திற் போராடியுள்ளார்.
பெரும்பாலான காலப்பகுதி புலனாய்வுப்பணியாக இருந்ததால் அதிகம் பிரபலமாகாத பெயர்.
மட்டக்களப்பில் இராணுவப்புலனாய்வுத் துறைப்பொறுப்பாளராயிருந்த லெப்.கேணல் நிசாம் அவர்களின் வீரச்சாவின்பின் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்தான் இந்த ரமணன். கருணா பிரச்சினையின் போதும் அதே பொறுப்பு வகித்தவர். குழப்பம் தீர்ந்தபின் மாமுனை-முன்மாரிக்கோட்ட இராணுவத் தளபதியாகவும் பின் மட்டு-அம்பாறை மாவட்டத் துணைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டவர்.



கடந்த ஞாயிறன்று புலிகளின் காவலரண்வரிசையைக் கண்காணித்துக் கொண்டு சென்றவேளை பதுங்கிச்சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட காலமும் முக்கியமானது. புலிகளின் உயர்மட்டத் தளபதியைக் கொல்வது கிட்டத்தட்ட சரத் பொன்சேகா மீதான தாக்குதலுக்குச் சமன். இப்படியானதொரு தாக்குதலுக்கு புலிகளிடமிருந்து கட்டாயம் பதிலடி கிடைக்கும் என்பது தெரியும். அது 'மட்டுப்படுத்தப்பட்டது' என்ற பெயரில் நடத்தப்படலாம். ஆனால் புலிகளின் உடனடி எதிர்வினையைத் தடுக்கும் காலப்பகுதியைப் படையினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அதாவது உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலப்பகுதி. இதன்மூலம் புலிகள் உடனடியான எதிர்வினையைச் செய்யமுடியாததைப் படையினர் உறுதிப்படுத்திக்கொண்டார்கள். பரீட்சை முடிய ரமணின் கொலைக்கான பதிலடி என்ற பெயரில் புலிகள் தாக்குதல் நடத்துவதற்குக் காலம் கடந்துவிட்டிருக்கும்.

எது எப்படியோ, அந்தப் பெயரில் இல்லையென்றாலும் தாக்குதல் நடத்தப்படப்போவது உறுதி என்பதைக் கணிக்கலாம்.
அதைவிடவும் முக்கியமான சேதியொன்றைச் சொல்கிறது இக்கொலை. அதாவது சண்டை முழு அளவில் தொடங்கிவிட்டது. சண்டை நடந்த காலப்பகுதி போலவே இனி முன்னணிக் காவலரண் வரிசை இருக்கும். நூறு வீதமும் தாக்குதலை எதிர்பார்த்தே இருதரப்புக்களும் இயங்கப்போகின்றன.

*************************************
கருணா குழப்பத்தின் போது போராளிகளையும் மக்களையும் குழப்பமடைய விடாமற் செய்தவர்களில் ரமணனும் பவாவும் முக்கியமானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.
இவர்களில் லெப்.கேணல். பவா, ஒப்பந்தப்படி அரசியல் வேலை செய்தபோது அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
*************************************
கேணல் ரமணனுக்கு நான்கு ஆண் சகோதரர்கள். இவர்களில் ஒருவர் ஏற்கனவே போராட்டத்தில் வீரச்சாவடைந்துவிட்டார்.
மிகுதியரில், சகோதரர்கள் இருவரும் தங்கையொருத்தியும் இன்னும் போராட்டத்திற் பங்குகொண்டுள்ளார்கள்.
இவரது குடும்பத்தில்,
ஆண்கள் இருவர் களப்பலியாகிவிட்டனர்.
இன்னும் மூவர் களத்திலே நிற்கின்றனர்
.

*************************************

தளபதிக்கு என் அஞ்சலி.
*************************************

படங்களுக்கு நன்றி: தமிழ்நெற்.

_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"புலிகளின் உயர்தளபதி படுகொலை." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (24 May, 2006 20:24) : 

எழுதிக்கொள்வது: Sivaramanan

ஆழ்ந்த அனுதாபங்கள்.

20.51 24.5.2006

 

said ... (24 May, 2006 21:35) : 

வீர வணக்கங்கள். பதிவுக்கு நன்றி வசந்தன்.

 

said ... (24 May, 2006 23:39) : 

எழுதிக்கொள்வது: Anonymous said...

//அவ்வகையில் கேணல் ரமணனின் கொலையும் முக்கியமானது. புலிகள் தரப்புக்குப் பெரிய இழப்பு.//

இஃது உண்மையே!


ஆழ்ந்த அனுதாபம்!


16.1 24.5.2006

 

said ... (25 May, 2006 08:38) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

 

said ... (25 May, 2006 09:04) : 

வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்

 

said ... (25 May, 2006 13:20) : 

வசந்தன்,
தளபதி ரமணன் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள்.

தமிழ் இனத்தின் விடிவுக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்த வீரவேங்கை
ரமணனுக்கு என் வீர வணக்கங்கள்.

 

said ... (26 May, 2006 01:34) : 

வெற்றி, கானா பிரபா,
வருகைக்கு நன்றி.


நேற்று லெப்.கேணல் வீரமணி வெடிவிபத்தில் சாவடைந்துள்ளார்.
புலிகளின் முக்கியமான போர்முனைத் தளபதிதான் வீரமணி. வடமுனையில் பல சமர்க்களங்களை வழிநடத்தியவர் இவர். இவரின் இழப்பும் நிச்சயம் பெரியதொரு இழப்புத்தான்.
ஒரு கிழமைக்குள் இரு முக்கிய தளபதிகளை இழந்துள்ளனர் புலிகள்.

வருத்தத்துக்குரிய செய்தி.

 

said ... (26 May, 2006 05:59) : 

எழுதிக்கொள்வது: saravanan

அதிக வேதனை தரும் நிகழ்வு. ஆழ்ந்த அனுதாபம்.
அவரின் கனவை நிறைவேற்றுவோம். தமிழர்களே ஒன்றுபடுங்கள். இது சென்னைத் தமிழனின் வேண்டுகோள்

22.19 25.5.2006

 

said ... (26 May, 2006 06:01) : 

எழுதிக்கொள்வது: gfytd;

எனது ஆழ்ந்த அனுதாபம்

22.27 25.5.2006

 

said ... (26 May, 2006 08:00) : 

தளபதிக்கு வீரவணக்கங்கள்...

 

said ... (30 May, 2006 01:59) : 

எழுதிக்கொள்வது: fud;

நல்லவிடயம். படங்கள் அதிகமானவை மட்டக்களப்பு ஈழநாதத்தில் nவிளயாளவை

9.43 30.5.2006

 

post a comment

© 2006  Thur Broeders

________________