தமிழர்கள் பலர் படுகொலை
இன்றும் நேற்றும் (சனி, ஞாயிறு) தமிழர்கள் பலர் சிறிலங்கா அரசபடையினராலும் துணைக்குழுக்களாலும் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். "யாழ். தீவகம் மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழிலிருந்து தீவகத்துக்கு செல்லும் மார்க்கத்தில் மண்டைதீவுக்கு அடுத்துள்ள வேலணையின் அல்லைப்பிட்டி கிராமத்தில் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள மாடி வீடு ஒன்றில் இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது. கறுப்புத்துணியால் முகத்தை மூடியபடி துப்பாக்கிகள் சகிதம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரும் துணை இராணுவக்குழுவினரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். வீட்டின் அறைகள் ஒவ்வொன்றையும் தேடி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு மாதக்குழந்தையும் இந்த கொலை வெறியாட்டத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது. வீடு முழுவதும் படையினரின் கொலை வெறியாட்டத்தில் இரத்த வெள்ளமானது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் பாரிய முகாம் உள்ளது. கொலை நடைபெற்ற பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ளது. கொல்லப்பட்டோர் விவரம்: மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28) ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28) பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25) பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25) பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்) நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50) ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64) வர்த்தகர் சிவநேசன் (வயது 56) காயமடைந்தோர் விவரம்: எஸ்.மோகனாம்பிகை (வயது 46) கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38) ரி.செல்லத்துரை (வயது 61)" ****************************** "யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேலும் 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை புளியங்கூடலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள கடற்படையின் இந்த கொடூர கொலை வெறியாட்டத்தில முருகேசு சண்முகலிங்கம் (வயது 72), அவரது மகன் சண்முகலிங்கம் காந்தரூபன் (வயது 29) மற்றும் அவரது மனைவி சண்முகலிங்கம் பரமேஸ்வரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. சண்முகலிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக் கும்பல் கண்மூடித்தனமாக வீட்டில் இருந்தவர்களை நோக்கிச் சுட்டதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நடராசா வித்தியாலயம் அருகே சண்முகலிங்கம் நடத்தி வந்த தொலைத் தொடர்பு நிலையத்தையும் ஆயுதக் கும்பல் குண்டு வீசி அழித்துள்ளது. மேலும் வங்களாவடிச் சந்தி அருகே தேநீர் கடை உரிமையாளரான இரட்ணம் செந்தூரன் (வயது 22) என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளானது. மேலும் ஊர்க்காவற்றுறையில் புளியங்கூடல் சந்திப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஆயுத கும்பல் ஒன்று பல கடைகளைத் தீக்கிரையாக்கி அப்பகுதி மின்மாற்றி ஒன்றையும் தகர்த்துள்ளனர். " ****************************** இவற்றைவிட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் கோரமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொழும்பில் அண்மையில் 5 தமிழர்களின் உடல்கள் தலையில்லாமற் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வுடல்கள் பின்னர் அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. ஆனாலும் அது பெரிய பிரச்சினையாக வெளிவரவேயில்லை. ஒருநாட்டின் தலைநகரில் நடந்த இப்படுகொலைகள்கூட யாரையும் சலனப்படுத்தவில்லை. கிழக்கில் நாளாந்தம் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இதில் ஜிகாத் குழுவும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட சிலநாட்களின் முன் தென்மராட்சிப் பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட 7 பேரை இராணுவத்தினர் கைது செய்திருந்ததும், இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாமலுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அப்பகுதி மக்கள் அவர்களைப் படையினர் சுட்டுக்கொன்றதாகச் சொல்கின்றனர். கைது செய்ததை ஒத்துக்கொண்ட படையினர் இதுவரை அவர்களுக்கான முடிவை அறிவிக்கவில்லை. உடலங்கள் கிடப்பதாகச் சொல்லப்பட்ட பகுதிக்குள்ள மக்களைப் புகவிடாமல் இராணுவம் காவல்காத்ததும் 30 மணித்தியாலங்களின்பின்பே கண்காணிப்புக்குழு இடத்துக்கு வந்து பார்த்துவிட்டு எந்தச் சடலங்களுமில்லையென்று சொல்லவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்ககது. முன்பு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமற்போன எழுநூறுபேர்வரையானோரின் நிலை ஆண்டுக்கணக்காகத் தெரியவரவில்லை. இதேவேளை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச தமிழ்மாணவர் பேரவையினரின் அலுவலகமும் சொத்துக்களும் படையினரால் எரியூட்டி அழிக்கப்பட்டன. நாற்பது வரையான கணிணிகள், பல்கலைக்கழக நூலகத்துக்கான இரண்டாயிரம் புத்தகங்கள் என்பவற்றுடன் அவ்வீடும் எரிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரனின் அலுவலகத்திலும் அதனுடனிணைந்த கட்டடத்திலும். நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்கே இந்த நிலைமை. ******************************** வெறிபிடித்தது போன்ற மனநிலையில் சிங்களப்படைகள் செயற்படுகின்றன. இந்நிலையில் புலிகள் என்ன செய்யப்போகிறார்கள்? மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் அவர்கள் நிச்சயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இந்தநிலையில் 1999 செப்ரெம்பர் நடத்தப்பட்ட மந்துவில் -கோணாகல படுகொலைகளும் அதைத்தொடந்து சில ஆண்டுகள் (அண்மையில் நடத்தப்பட்ட திருகோணமலை வான்வழித்தாக்குதல் வரை) தமிழ்மக்கள் மேல் வான்வழிப்படுகொலைகள் நடத்தப்படாமலிருந்ததும் ஞாபகம் வந்து தொலைக்கிறது. ********************************* படுகொலை செய்யப்பட்டோரின் படங்களைப் பார்க்கலாம். இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் பார்க்க வேண்டாம். படங்கள். நன்றி: புதினம், தமிழ்நெற், நிதர்சனம். |
"தமிழர்கள் பலர் படுகொலை" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: chameleon
என் மனம் பொங்குகிறது. கண்ணீர் வருகிறது
20.1 14.5.2006
என் மனம் பொங்குகிறது.
கண்ணீர் வருகிறது.
This comment has been removed by a blog administrator.
இன்று நடந்த வேறு சம்பவங்கள்:
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இளைஞர் ஒருவர் படையினரால் சுட்டுக்கொலை.
ஏறாவூரில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகாயம். பலர் இடப்பெயர்வு.
எழுதிக்கொள்வது: நந்தன் | Nandhan
நாலு வயசு கொழந்தை என்னையா பாவம் செஞ்சுது. தமிழ்ல பேசகூட ஆரம்பித்திருக்காதே...கடவுளே!
12.48 14.5.2006
ஆப்கானில் ஒரு இந்திய பொறியிலாளரை தலை துண்டித்து வீசிய செய்தி பல நாட்களாக தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானது. அந்த மனைவி அழும் காட்சிகளும் குழந்தைகள் அழும் காட்சிகளும் மனதைப் பிசைவன. ஆனால் இலங்கைப் படுகொலைச்செய்திகளை தர யாருமில்லை. உண்மையில எங்களிடம் சரியான ஊடக பலம் இல்லையோ..?
சண்டைக்காலத்தில் கூட இப்படி கொத்துக்கொத்தாக யாரும் சாகவில்லையே..
இந்தக் கொலைகளைப் பார்த்தாவது உலகம் உண்மைகளைப் புரியட்டும் என்று புலிகள் பொறுமை காத்தால்.. போங்...
சண்டையில் புலிகள் சாகலாம்.. இராணுவம் சாகலாம்.. அது குறித்து சொல்வதற்கு எதுவுமில்லை..
அந்த குழந்தை என்ன செய்தது.. ?
இதற்கிடையில் சிலர் வந்து.. புலிகள் தான் இராணுவத்தை தூண்டி விடுகிறார்கள் எனப் பாடுவார்கள். ஐயா.. புலிகள் இராணுவத்தை கொன்றால் பதிலுக்கு புலிகளை கொல்லுங்களேன்..
இந்தக் கொலைகள் தான்.. இராணுவத்தையும் இதே ரத்தம் கொப்பளிக்கும் உடல்களாக பார்க்க வேண்டும் என்ற வெறியை கொண்டு வருகிறது..
புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வாழும் என் உறவுகளே!
தயவு செய்து இச் செய்திகளையும் படங்களையும் நீங்கள் வசிக்கும் நாடுகளின் நாடளுமன்ற உறுப்பினர்கள், செனற்றர்கள், பிரதம மந்திரி, எதிர்க்கட்சிகள் என சகல அரசியல்வாதிகளுக்கும் அந்தந்த நாட்டு ஊடகங்களுக்கும் உடனடியாக fax மூலமோ அல்லது email மூலமோ அனுப்பி வைக்குமாறு உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம். காலம் தாழ்த்தாது உடனடியாகச் செய்யுங்கள் உறவுகளே.
வெற்றி!
உங்கள் யோசனை அவசியமானது, அவசரமானது. என்னால் முடிந்த இடங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டேன்
எழுதிக்கொள்வது: மணியன்
தூக்கத்தில் இருப்பவர்களை கொல்லும் ஈனப்பிறவிகளை என்ன செய்தாலும் தகும். எங்கோ இருக்கும் எனக்கே இது துயரத்தையும் ஆத்திரத்தையும் தரும்போது உங்கள் மன உளைச்சல்களை புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அரசு இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.மற்ற உலக நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ?
23.38 14.5.2006
ஆழ்ந்த அனுதாபங்கள் வசந்தன். சொல்ல என்ன இருக்கிறது? அரசியல், இராணுவ ரீதியாக ஈழத்தமிழர்கள் ஒன்று பட்டு செயல்பட வேண்டிய நேரம் இப்போது முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டதை இந்தப்படு கொலைகள் உணர்த்துகின்றன.
மலைநாடான்,
//என்னால் முடிந்த இடங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டேன் //
காலம் அறிந்து தேவை உணர்ந்து செயற்பட்டிருக்கிறீர்கள். இப்படி பல தமிழர்களும் உலக நாடுகளுக்கு அங்கு நடக்கும் நிலைமைகளை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.அது தான் நாம் செய்ய வேண்டிய தலையாய பணி.
//இந்திய அரசு இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.மற்ற உலக நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ?//
மணிஅண்ணா,
நாங்கள் மற்றவர்களை விமர்சிக்க முன் நாம் செய்ய வேண்டியதை நாம் செய்தோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நாங்கள் எத்தனை பேர் இச் செய்திகளை நாம் வாழும் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும்
பொது நிறுவனங்களுக்கும் அனுப்பினோம்? நாம் கொடுக்கும் அழுத்தம் தான் அவர்களைச் செயற்பட வைக்கும். ஆக, முதலில் நாம் அவர்களுக்கு இச் செய்திகளையும் படங்களையும் அனுப்புவோம். அதை எல்லோரும் உடனடியாகச் செய்வோம்.
/சொல்ல என்ன இருக்கிறது?/
அதுவேதான். :-((((
கமலியான், பெயரில்லாதவரே, வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மலைநாடான்,
மணியன்
உங்கள் வருகைக்கும் அனுதாபத்துக்கும் நன்றி.
இலங்கை அரசின் கொலைவெறி தாக்குதல் மிகவும் கண்டிக்கத் தக்கது.
இவ்வளவு கொடுமைகளுக்கும் தமிழகத்தில் ஒரு எதிரொலியும் இல்லை என்பது வருந்தத்தக்கது.
விரைவில் ஈழ ஆதரவு குரல் ஒலிக்கும். நான் ஈழ தமிழர் ஆதரவு நிலை எடுக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தகவல் அளிக்க முடிவு செய்துள்ளேன்.
நன்றி!
தங்கமணி, டி.சே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வெற்றி, மலைநாடான்,
அங்க மு.மயூரன் போட்டுத்தாக்கிறார்.
ஆனால் இவற்றை வெளியில் முறையிடத்தான் வேண்டுமென்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. தூதரங்களின் நயவஞ்சகங்கள் தெரியும்தானென்றாலும் பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் கூக்குரலிடத்தான் வேணும்.
இருபது பேர் அட்டைகளுடன் புலியை எதிர்த்து வீதிகளில் நிற்கும் காரணத்தைவிடவும் எங்கள் காரணம் நூறுமடங்கு மேலானது, முக்கியமானதென்பதால் நாங்கள் கூக்குரலிடத்தான் வேணும்.
அனால் 'அடியைப் போல் வேறேதும் உதவாது' என்பதில் மயூரனோடு முழு உடன்பாடு.
இன்று புத்தூர்ப் பகுதியில் இரு தமிழ்வர்த்தகர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் தமிழ் வர்த்தகர்கள் இராணுவத்தினரதும் துணைக்குழுக்களினதும் முக்கிய இலக்காகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு மாதங்களுள் பல வர்த்தகர்கள் சுட்டுக்கொல்ப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைவிட மற்ற இடங்களிலும் வர்த்தகர்கள் மீதான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதேவேளை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சேமமடுவில் படையினர் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.