Monday, May 29, 2006

பெரு வெற்றியில் முடிந்த கவன ஈர்ப்புப் போராட்டம்.

உலகின் பல நாடுகளிலும் இன்று (29.05.2006) திங்கட்கிழமை ஈழத்தமிழர்களால் கவன ஈர்ப்புப் பேராட்டம் நடைபெறுகிறதென்பது யாவரும் அறிந்ததே. (அறியாட்டி இப்பவாவது அறிஞ்சு கொள்ளுங்கோ.)

அவ்வகையில் ஒஸ்ரேலியாவின் தலைநகர் கன்பராவில் நாடாளுமன்றத்தின் முன் இன்று ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் வரையான மக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்ட இப்போராட்டம் மிகச்சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நிறைவு பெற்றது.

இதில் பல முக்கிய உரைகள் இடம்பெற்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஓர் உரை, மருத்துவக் கலாநிதி பிறயன் செனிவிரட்ன அவர்களுடையது.
முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் உறவினரும் நீண்டகாலமான ஈழத்தமிழரின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுப்பவருமான இவரின் உரை மிகத் தீவிரமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அவரது உரையின் சில பகுதிகள்:

"தனிநாடொன்றைப் பிரிக்க முடியாத நிலையில்தானா இலங்கை இருக்கிறது? அப்படிச் சொல்லுவதற்கு வலுவான காரணமேதாவது இருக்கிறதா? இன்று ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடுகளில் ஈழத்தை விடவும் நிலப்பரப்பாற் குறுகிய நாடுகள் நிறைய. தனிநாடாவதற்கு ஈழத்தைவிடவும் காரணகாரியங்கள் குறைவுடைய முப்பது நாடுகள் வரை தனிநாடாகிவிட்டன.

"புலிகள் தனிநாடு உருவாக்கப் போராடுகிறார்கள், அவர்களை விடக்கூடாது என்று புலம்புவதில் எந்தப் பயனுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே வலுவான, திறமையான அரசாட்சியொன்றைப் புலிகள் நடத்துகிறார்கள். பல ஆண்டுகளாக நடத்துகிறார்கள். மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இனித்தான் அவர்கள் தனிநாடு அமைக்கப்போகிறார்கள் என்றும் அதை நடத்த விடக்கூடாதென்றும் புலம்புவது வீண்.

"இன்றைய நிலையில் இலங்கைத் தீவில் நடக்கும் பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஒரே தீர்வுதான் இருக்க முடியும். அது தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து செல்வதுதான்.
அப்படிப் பிரிந்து போகாமல் பேச்சு மூலம் தீர்வொன்றை எட்டுவது சாத்தியம் என்று சிலர் கருதலாம். ஆனால் அந்த நிலையைக் கடந்து நீண்டகாலமாகிவிட்டது. இனி ஒருபோதும் சாத்தியப்படாத தீர்வொன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதோ அதை நோக்கிச் செயற்படுவதாக நாடகமாடுவதோ ஏமாற்று வேலை.


"இலங்கைத் தீவில் புழுத்துப் போயிருக்கும் சிங்கள - பெளத்த பேரினவாதத்தைப் பற்றி உலகம் தெரியாதது போல் மெளனம் காக்கிறது. என் மாமனாரான S.W.R.D பண்டாரநாயக்காவைக் கொன்றவர் யார்? புலியா? தமிழனா? ஒரு சிங்களவன். ஒரு பெளத்தன். ஒரு பெளத்த பிக்கு.

"சிறுவர் படை சேர்ப்புப் பற்றி அரசாங்கம் ஒருதலைப்பட்டசமாக மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்கிறது. அதைத் தவறென்று சொல்லி ஒரு தரப்பைக் குற்றம் சாட்ட யாருக்கு அருகதை இருக்கிறது? யாழ்ப்பாணத்தில் மட்டும் முப்பது பாடசாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பால் செயலிழந்துள்ளன. ஏராளமான பகுதி நிலப்பரப்பு இராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளது. அதைவிட வறுமை. நாளாந்தம் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு ஒரே தெரிவுதான். அது ஆயுதம் தூக்குவது. இதைப் பிழையென்று சொல்ல யாரால் முடியும்?

"நான் புலிகளின் ஆதரவாளன் அல்லன். சிங்களவரின் ஆதரவாளனும் அல்லன். ஆனால் தமிழீழம் என்ற தனியரசைத் தமிழர்கள் அமைப்பதற்கு எப்போதும் ஆதரவானவன். அதுதான் இலங்கைத் தீவுக்குரிய ஓரே தீர்வு என்பதில் அசையாத நம்பிக்கையும் வேட்கையும் கொண்டவன்.
சிங்களத் தரப்பில் யாருக்கும் கருத்தால் எதிர்கொள்ளும் வல்லமையில்லை. என்னோடு வாதிட முடிந்தால் வாருங்கள் வாதிடுவோம்.
"


இன்னொருவரின் உரையும் குறிப்பிடத்தக்கது. ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரான Murphy MP உரையாற்றிய போது,

தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இலத்திரனியல் ஊடகமூடாக எனக்குக் கொலை அச்சுறுத்தல்கள் வந்தன. வெளிநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இப்படி அச்சுறுத்தல் என்றால் அந்த நாட்டில் இருப்பவர்களுக்குரிய பிரச்சினையைப் புறம்தள்ள முடியாதென்பது நன்கு புலப்படுகிறது
என்றார்.

நிகழ்வில் பெருமளவு இளையவர்கள் உணர்வோடு பங்குபற்றினர். ஈழத்து நிகழ்வுகளில் அக்கறையுடன் செயற்படும், புலிகளை விமர்சிப்பதன் மூலம் தன்னை நடுநிலைமையாகக் காட்டிக்கொள்ளும் ஒருவரிடம் இன்றைய உரிமைக்குரல் நிகழ்வு பற்றிக் கேட்டபோது அவர் சொன்னது:

"பொதுவாக இளைய தலைமுறை பற்றிய பயம் எல்லோரிடமும் இருக்கிறது. போராட்டச் சூழலிலிருந்து மிகவும் விலத்திப் போவதாகவும், குறிப்பிட்ட காலத்தில் போராட்ட ஆதரவுத்தளம் மிகவும் பலவீனப்படும் என்றும் நானுட்பட அனேகம் பேர் கருதினர், கருதுகின்றனர். அதற்கான ஏதுநிலைகள் தான் அதிகம். ஒப்பீட்டளவில் கனடா, இங்கிலந்து என்பவற்றைவிட ஒஸ்ரேலியாவில் இந்த ஆபத்து அதிகமே. ஆனால் இந்தத் தலைமுறை இடைவெளி பற்றிய பயத்தை அசைத்திருக்கிறது இன்றைய நிகழ்வு. அவ்வளவு இலகுவில் தலைமுறை இடைவெளி மூலம் ஒரு பெரும் ஆபத்தை எதிர்நோக்கிவிட மாட்டோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. தொடர்நது கொண்டு செல்வதில்தான் வெற்றியிருக்கிறது" என்றார்.

ஆம். இன்றைய செய்தியும் அதுதான். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமான புலமையுடைய, தடக்கியென்றாலும் தமிழ் பேசுவதூடாக அடையாளப்படுத்த முனைப்புடைய என்று பலதரப்பட்டதாயிருந்தாலும் ஈழத்து இளந்தலைமுறை பயப்பட்டது போல் விலத்திப் போய்விடவில்லை.

இந்த கவன ஈர்ப்பு, எதிர்ப்புப் போராட்டங்களால் உலகமோ, ஒஸ்ரேலியாவோ மாறப்போவதில்லை. ஆனால் எங்களின் ஒற்றுமையை, உணர்வைப் பேணவாவது இவை அவசியம். குறிப்பாக இளந்தலைமுறையைச் செயற்பாடுள்ளதாக வைத்திருக்க இவை அவசியம்.


அதேநேரம் இளையவர்களின் ஒற்றுமை, பங்களிப்பையிட்டு அதிகம் குதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்களைத் திரட்ட, ஒன்றிக்க வைக்க என்று நாங்கள் செய்வதைவிட எதிரியே அதிகம் செய்கிறான். எதிரியே எமது ஒற்றுமையைப் பேண முனைப்புடன் நிற்கிறான்.

இறுதியாக,
உரிமைக்குரல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நல்ல ஒழுங்குபடுத்தல். மிகமிகக் குறுகிய காலத்துள் செய்யப்பட்டதென்றாலும் நிறைவானது.
இளையவர்களின் ஒருங்கமைப்பு, அரங்க நிகழ்வு, பதாகைகள் வடிவமைத்தல், முழக்கங்கள் என்று நன்றாக இருந்தது. ஒஸ்ரேலியாவுக்கு சிறிலங்காத் தூதுவராக ஜானக பெரேரா வருவதையிட்டு எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்வுக்கு அடுத்தபடியாக ஒஸ்ரேலியாவில் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட பெரும் நிகழ்வு இதுவென்று சொல்லப்படுகிறது. வேலை நாள்; சிக்கலான காலநிலை. இவற்றையும்விட நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வரவேண்டிய நிலை. ஆனாலும் குழந்தைகள், சிறுவர்கள் என்று பாராமல் வந்து சேர்ந்தார்கள்.

முக்கியமான இன்னும் சில உரைகள் நடந்தன. ஒஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் ஆதரவாகவும் ஆக்ரோசமாகவும் பேசினார்கள். பின் இதே பதிவில் சேர்த்தோ தனியாகவோ சிலவேளை எழுதுவேன். மேலதிக படங்களைத் தனியாகத் தருகிறேன். ஒஸ்ரேலியாவில் தான் முதல் நடந்துள்ளது. ஏனைய நாடுகளில் நிகழ்வுகள் முடிந்தபின் அந்நாட்டுப் பதிவாளர்கள் யாராவது பதிவார்கள் என்று நினைக்கிறேன்.

இறுதியாக, சிட்னி வாழ் உறவுகளுக்கு - குறிப்பாக இளையவர்களுக்கு:
"நீங்கள் தானையா ஆக்கள்".











_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பெரு வெற்றியில் முடிந்த கவன ஈர்ப்புப் போராட்டம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (29 May, 2006 20:58) : 

எழுதிக்கொள்வது: Vaa.Manikandan

வாழ்த்துக்கள். மகிழ்ச்சி தரும் பதிவு.

16.59 29.5.2006

 

said ... (29 May, 2006 21:22) : 

வசந்தன் இந்தப்பதிவுக்கு நன்றி.
....
/இந்த கவன ஈர்ப்பு, எதிர்ப்புப் போராட்டங்களால் உலகமோ, ஒஸ்ரேலியாவோ மாறப்போவதில்லை. ஆனால் எங்களின் ஒற்றுமையை, உணர்வைப் பேணவாவது இவை அவசியம். குறிப்பாக இளந்தலைமுறையைச் செயற்பாடுள்ளதாக வைத்திருக்க இவை அவசியம்./
இதுதான் என்னளவிலும் முக்கியமானது. இங்கும் இன்று மாலை இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. ஆனால் சடுதியாக காலையில் ரொரண்டோ நகரம் முழுதும் (வேறு சில காரணங்களால்) பஸ் வேலை நிறுத்தம் செய்யப்படுவதால் எவ்வளவுபேர் பங்குபற்ற முடியும் என்றும் தெரியவில்லை. பஸ் சேவையில்லாது வெளியே போகமுடியாமல் விளித்துக்கொண்டிருந்தாலும் இயலுமாயின் மாலையில் இந்தப்பேரணியில் பங்குபற்றுவதாய் நினைத்துள்ளேன். சந்தர்ப்பம் வாய்த்தால் அது குறித்து எதையாவது எழுத முயற்சிக்கின்றேன்.

 

said ... (29 May, 2006 22:02) : 

ACHAMMILLIAI ACHAMILLAI ACHAM ENNBATHUUILLAIJA

nALLA pATHEVUU nanree VASANTHAN

 

said ... (29 May, 2006 22:12) : 

வசந்தன், நீங்களும் அங்கு வந்திருந்தீர்களா? என்னுடைய பதிவில் சில படங்கள் இணைத்துள்ளேன்.
//இளையவர்களின் ஒற்றுமை, பங்களிப்பையிட்டு அதிகம் குதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்களைத் திரட்ட, ஒன்றிக்க வைக்க என்று நாங்கள் செய்வதைவிட எதிரியே அதிகம் செய்கிறான். எதிரியே எமது ஒற்றுமையைப் பேண முனைப்புடன் நிற்கிறான்//
சரியாகச் சொன்னீர்கள். அங்கு பேசிய இரண்டு இளம் பிள்ளைகளும் வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள். ஈழம் சென்று அங்கு சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.
//அவ்வளவு இலகுவில் தலைமுறை இடைவெளி மூலம் ஒரு பெரும் ஆபத்தை எதிர்நோக்கிவிட மாட்டோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது//

 

said ... (29 May, 2006 22:34) : 

//இளையவர்களின் ஒற்றுமை, பங்களிப்பையிட்டு அதிகம் குதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்களைத் திரட்ட, ஒன்றிக்க வைக்க என்று நாங்கள் செய்வதைவிட எதிரியே அதிகம் செய்கிறான். எதிரியே எமது ஒற்றுமையைப் பேண முனைப்புடன் நிற்கிறான்//
சரியாகச் சொன்னீர்கள். அங்கு பேசிய இரண்டு இளம் பிள்ளைகளும் வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள். ஈழம் சென்று அங்கு சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.
//அவ்வளவு இலகுவில் தலைமுறை இடைவெளி மூலம் ஒரு பெரும் ஆபத்தை எதிர்நோக்கிவிட மாட்டோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது//

வசந்தன், கனக்ஸ்!
உங்கள் கூற்றுக்கள் உண்மை. சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாரளுமன்றத்தின் முன் இப்பொழுது உரிமைக்குரல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நன்றி!

 

said ... (05 June, 2006 11:03) : 

வா. மணிகண்டன், டி.சே, பெயரில்லாதவர், கனகு, மலைநாடான்
ஆகியோருக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________