Friday, May 26, 2006

பாடகி மாயாவுக்கு அமெரிக்கா தடை

புகழ்பெற்ற ராப் பாடகி மாயா அருட்பிரகாசத்தின் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பாடகி மாயா அருட்பிரகாசம் MIA என்ற பெயரில் பிரபலமானவர். இவரின் தந்தை அருளர் ஈரோஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயிருந்தவர்.
ஏற்கனவே மாயா சில இசைநிகழ்ச்சிகளை அமெரிக்காவில் நடத்தியுள்ளார்.

இவரைப் பற்றி சகவலைப்பதிவாளர் டி.சே எழுதியுள்ளார்.
இவரின் நிகழ்ச்சியொன்றைப் பற்றி வாசன்பிள்ளை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. இவரது ஈழ ஆதரவுக் கருத்துக்களாலேயே இத்தடை என்று தெரியவருகிறது.

மேலதிக செய்திகளுக்கு.

_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பாடகி மாயாவுக்கு அமெரிக்கா தடை" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (26 May, 2006 18:27) : 

ஐயையோ,
நேற்று இந்தப்பக்கத்தில் தான் முதலில் பதிவெழுதினேன். பின் தமிழ்மணத்திரட்டியில் இட்டபோது அது ஏற்றுக்கொள்ளவில்லை. நீண்டநேரமாக புதிய பதிவெதுவும் காணப்படவில்லையென்று சொல்லிக்கொண்டிருந்தது. பின் எனது மற்றைய வலைப்பதிவில் பதிந்து தமிழ்மணத்திரட்டியிற் கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது.
அது திரட்டியில் வந்து பலரும் வாசித்திருந்தனர்.

ஆனால் அதற்கு முன்னமே பதிந்த இப்பதிவு இப்போது திரட்டியில் வந்துள்ளது.

 

Blogger மலைநாடான் said ... (26 May, 2006 18:29) : 

ஈழவிடுலைப் போராட்டத்துடன் தொடர்புடைய முதலாவது நாவல், 'லங்காராணி'. இதை எழுதியவர் அருளர்,மாயாவின் தந்தை. தந்தையைப் போன்றே மகளும் ஈழத்தின்பால் பற்றுக்கொண்டவர். தேசத்தின்பால் அக்கறை கொண்ட ஒரு கலைஞர்மீதான தடை கண்டிப்புக்கும் கவலைக்குமுரியதாகும்.
என்ன செய்வது ?

 

Anonymous Anonymous said ... (26 May, 2006 18:36) : 

எழுதிக்கொள்வது: theevu

MIA வை அமெரிக்கா மேலும் பிரபலப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறது.

//இவரின் தந்தை அருளர் ஈரோஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயிருந்தவர்.//

முதல் அருளருடைய நூலான லங்காராணியை இலங்கை அரசு தடை செய்திருந்தது.இபபோது மகளை அமெரிக்கா தடை செய்கிறது.

இரண்டு தலைமுறை தாண்டியாச்சு.ஈழப்பிரச்சனை இன்னமும் இருக்கிறது என்பதுதான் யதார்த்தமாகவிருக்கிறது:(


10.21 26.5.2006

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (05 June, 2006 11:06) : 

வருகை தந்து கருத்துத் தெரிவித்த மலைநாடான், தீவு ஆகியோருக்கு நன்றி.
மலைநாடான் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் மற்றவர்களுக்காக உங்கள் தகவலுக்கு நன்றி.
தீவு, நீங்கள் சொல்வதைப்போல் பிரபலமானால் மகிழ்ச்சி.
ஜனநாயகம் பற்றிக் கதைப்பவர்களுக்கு இதையும் நாங்கள் சுட்டிக்காட்டலாம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________