Sunday, June 04, 2006

இன்னும் 34 நாட்கள்தாம்

நண்ப,
இன்னும் 34 நாட்கள் தாம்.
இப்போதே மணித்தியாலங்கள் கணிக்கிட்டு ஒவ்வொன்றாகக் குறைக்கத் தொடங்கி விட்டீராம்.
கொஞ்சம் பொறும்.
அதற்குள் என்ன அவசரம்?
மூத்தோர்கள் சிலர் உது பற்றி மூச்சே விடாமல் சும்மா கிடக்க, குறுக்கால பாயும் உமக்கு ஏனிந்தப் பரபரப்பு?
முப்பத்து நான்கு நாட்கள், சும்மா முக்கி விட ஓடிப்போகும்.
தினமொரு பின்னூட்டம் என் பதிவிற் போடும்.
நாள் போறதே தெரியாது.

வேறு என்ன?
இப்போதும் சந்தனம் மெத்துகிறதா?
மூஞ்சையில் தடவப்படுகிறதா?(நீர் எண்ணிக்கொண்டிருப்பதைக் காட்டிக்கொடுத்தவனுக்கு நன்றி)

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இன்னும் 34 நாட்கள்தாம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 June, 2006 01:49) : 

33ம் நாளில் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரிவைத்து... பலிக்கடாவாகும் நண்பருக்குப் பிரியாவிடை செய்வதாய் ஏற்கன்வே தீர்மானம்போட்டு முடிவுசெய்யப்பட்டுள்ளது. அனைவரும் வாரீர்! அணிதிரண்டு ஆதரவு தாரீர்!
....
/மூத்தோர்கள் சிலர் உது பற்றி மூச்சே விடாமல் சும்மா கிடக்க, குறுக்கால பாயும் உமக்கு ஏனிந்தப் பரபரப்பு?/
கிடைத்த சந்தர்ப்பத்தில் தனது அவலநிலையை அவலாக்கவிரும்பிய நண்பர் வசந்தனின் சாமர்த்தியத்தை பாராட்டும் அதேசமயம்,
/நீர் எண்ணிக்கொண்டிருப்பதைக் காட்டிக்கொடுத்தவனுக்கு/
அந்தத் 'துரோகியின்' பெயரை வெளியில் விடவேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்/றோம்.

 

said ... (04 June, 2006 02:31) : 

வசந்தன் அய்யா,
மன்னிக்கவும். எனக்கு உங்களைப் போல் தமிழறிவு இல்லை. அதனால் சில விடயங்களை வாசித்தவுடன் விளங்கிக்கொள்வது சிரமம். உண்மையில் நீங்கள் இக்கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லையே? சற்று விளக்கம் தர முடியுமா அய்யா?

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

 

said ... (04 June, 2006 02:47) : 

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது (பாதி)மர்மமா இருக்குது

என்றாலும் அந்த யாரோவுக்கும் மற்றோருக்கும் எஸ்கே பரராஜசிங்கம் & குலசீலநாதன் கணக்கிலே
கேட்டு மகிழ.

 

said ... (04 June, 2006 02:53) : 

யோவ் வெற்றி,
உதைக் கவிதையெண்டு சொல்லி என்னை மாட்டி விடாதையும்.

இப்ப இதை மட்டும் சொல்லிப் போறன். மற்றதுகளுக்கு பிறகு வாறன்.

 

said ... (04 June, 2006 02:55) : 

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

 

said ... (04 June, 2006 02:57) : 

வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது சீரியஸான விடயம் என்று யாராவது நினைத்துக் கொண்டு சாத்தமுன்னர்...தேவையான இடங்களில் சிரிப்பிச்சிமிலிகளை என் பின்னூட்டத்தில் சேர்த்து வாசிக்கவும் :-). நமது 'நண்பர்' வந்து 'உண்மையை'ச் சொல்லும்வரை உண்மையைச் சொல்லல் சரியாகாது :-).

 

said ... (04 June, 2006 03:01) : 

//வசந்தன் அய்யா,
மன்னிக்கவும். எனக்கு உங்களைப் போல் தமிழறிவு இல்லை. அதனால் சில விடயங்களை வாசித்தவுடன் விளங்கிக்கொள்வது சிரமம். உண்மையில் நீங்கள் இக்கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லையே? சற்று விளக்கம் தர முடியுமா அய்யா?

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி//

என்ன வெற்றி குழப்பமா?

அது ஒருதருக்கு புரியும்.. அதாவது சம்பந்தப்பட்ட அந்த நண்பருக்கு :)

இறுதியில் போட்டுள்ள படத்தை பார்த்தால் கொஞ்சம் புரியுமே :)

 

said ... (04 June, 2006 03:17) : 

//உண்மையில் நீங்கள் இக்கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லையே? சற்று விளக்கம் தர முடியுமா அய்யா?//

கவிதையா.. எங்கை? ஒரே நகைச்சுவையாக உள்ளது போங்கள்...

 

said ... (04 June, 2006 06:45) : 

வசந்தா,

யாருக்குப்பா கண்ணாலம்?

டி.சே வுக்கா?

சீக்கிரம் சொல்லுங்க.

 

said ... (04 June, 2006 08:15) : 

எல்லாம் சந்தோஷமான சேதி போலத் தான் தெரியுது. யார் யாருக்கு முடிச்சுப் போடுகிறார்? இன்னும் ஒரு clue தாருங்கோ:)

 

said ... (04 June, 2006 10:59) : 

டி.சே,
வருகைக்கு நன்றி.

வெற்றி,
உது கவிதையில்லையெண்டதை முதலே சொல்லிப்போட்டன். முதலும் ஒருத்தர் உதே மாதிரி சொன்னவர்.
நான் எழுதினதில விளங்க ஏதுமில்லை. தொடர்ச்சியான வலைப்பதிவு வாசகராயிருந்தால் ஓரளவு (ஓரளவு தான். ஆனானப்பட்ட பெயரிலிக்கே விசயம் பிடிபட்ட அளவுக்கு ஆள் பிடிபடேல.) பிடிபடும்.
என்ன அவசரம். 33 நாட்கள் தானே? (ஒண்டு குறைஞ்சிட்டுது).

பதிவில "மூத்தோர்கள்" எண்டதுக்க நானும் அடங்கிறன். (டி.சேயும் அதைச் சொல்லியிருக்கிறார். அனால் தன்னை மறைச்சிட்டார்)
அதுக்காக ஐயா கொய்யா எல்லாம் போட்டு ஒரேயடியா மூத்தோர் ஆக்க வேணுமோ?

 

said ... (04 June, 2006 11:00) : 

பெயரிலி,
பாட்டு நல்லாயிருக்கு.
உண்மையிலயே பாதி மர்மம் தானோ?

 

said ... (04 June, 2006 12:58) : 

//உது கவிதையில்லையெண்டதை முதலே சொல்லிப்போட்டன். //

அய்யோ! வசந்தன் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. நான் தமிழ்மணத்திற்கு வந்ததே தமிழ் படிக்கத்தான். நல்ல அழகாய் வாசிக்கச் சுவையாய் சொற்களைக் கோர்த்திருந்தியள். அதால இது கவிதையாய் இருக்குமோ என நினைச்சுப்போட்டென். சும்மா எழுதினதே இப்பிடி எண்டால், கவிதை எழுதினால்?! நீங்கள் எழுதினது மாதிரி ஒரு வீதம் கூட என்னால எழுத முடியாதய்யா!

 

said ... (04 June, 2006 21:07) : 

சநதிரவதனா, துளசி கோபால், பெயரில்லாதவர்

எல்லோருக்கும் விரைவில் நல்ல சேதி கிடைக்கும்.

குழைக்காட்டான், சயந்தன்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

 

said ... (04 June, 2006 23:56) : 

கண்டு பிடிச்சன் கணண்டு பிடிச்சன் காதல் நோயை கண்டு பிடிச்சன்.. அவரா அவரா.. இல்லை இவரா இவரா..

 

said ... (05 June, 2006 01:45) : 

ஹா.. ஹா.. தமிழ்மண முகப்பில தலைப்பைப் பார்க்கும் போதே இதுக்கும் பதிவு போட்டிட்டானா(மன்னிக்கவும்.. மரியாதைக் குறைச்சலுக்கு) என்று சிரிப்போட தான் இந்தப் பக்கம் வந்தன்...

ம்..ம்...

இது தானா? இது தானா? எதிர்பார்த்த இந்நாளும் இது தானா?

எண்ணுகிறவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......

//ஒரே நகைச்சுவையாக உள்ளது போங்கள்... //

ஆமாமா... எல்லாம் நகைச்சுவையாத் தான் இருக்கும் இப்போதைக்கு.....

 

said ... (05 June, 2006 02:28) : 

//இறுதியில் போட்டுள்ள படத்தை பார்த்தால் கொஞ்சம் புரியுமே :)//

அந்தப் படத்தில இருப்பவர்கள் யார்? வலை பதியிறவரா

 

said ... (05 June, 2006 02:36) : 

//அதால இது கவிதையாய் இருக்குமோ என நினைச்சுப்போட்டென். சும்மா எழுதினதே இப்பிடி எண்டால், கவிதை எழுதினால்//

வசந்தன்ர பாரத்திற்கு பப்பா மரம் தாங்காது.. முறிஞ்செழும்பப் போறீர்.. வசந்தன்.. கவனம்..

 

said ... (05 June, 2006 02:58) : 

வாழ்த்துகள்! அனுதாபங்கள்!

 

said ... (05 June, 2006 04:08) : 

ஆனா யாரோ வசமா மாட்டு படப்போறியள் எண்டு விளங்குது... இதுக்கு போய் துள்ளி குதிக்கிறியளே ... உதுக்கே போயும் போயும் நாளை எண்ணிறியள்......சாய் உது ஒரு விசயமெண்று

 

said ... (05 June, 2006 10:46) : 

வெற்றி,
பிறகு வந்து சயந்தன் சொன்னதுதான் உங்களுக்குப் பதில்.
பப்பாவில ஏறுறது அவ்வளவு சுலபமில்லை.

வருகை தந்து கண்டுபிடிச்ச பெயரில்லாதவரே,
நன்றி.

"எண்ணுகிறவர் கண்டுபிடிக்க" எண்ட பேரோட வந்தவரே,
நீங்கள் பெரிய ஆளப்பா. அவரின்ர பிறந்தநாள் எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிறியள்.
அவர் இப்ப மண்டைய உடைச்சுக்கொண்டிருப்பார் எண்டு நினைக்கிறன்.

 

said ... (06 June, 2006 08:24) : 

ஐயோ வசந்தன்!

உந்தப்படத்தை உங்கதான் எங்கேயோ பாத்தநினைவு. ரெண்டு நாளாத் தலைய உடைக்கிறன். சனியன் ஞாபகத்துக்கு வருகுதேயில்ல

 

said ... (07 June, 2006 02:18) : 

அண்ணருக்கு வாழ்த்துக்கள். என்ன வசந்தன் இரட்டையரில் ஒரு தருக்கு கலி யாணம் என்டால் நீங்கள் முன்னால நிண்டு செய்ய வேண்டாமோ? இப்படி வலையில நிண்டால் சரியே? அண்ணரும் இங்கின நிக்கிறமாதிரிக்கிடக்கு. :-)

யாரோ

 

said ... (07 June, 2006 13:01) : 

எழுதிக்கொள்வது: கானா பிரபா

சரி சரி விடுஙக தல..:-))))8.55 7.6.2006

 

said ... (07 June, 2006 16:42) : 

எழுதிக்கொள்வது: ஷ்ரேயா

பரவாயில்லை, இந்தமுறை பத்தாம் பழசில அல்லாமல் கொஞ்சம் புதிசில பின்னூட்டம் போடுறன். :O)

புகையிற சீசன் முடிஞ்சு போய், அது திரும்பத் தொடங்க இன்னும் எப்பிடியும் 5 மாதம் இருக்குதெண்ட நிலமையில எங்காலயிருந்து இந்தப் புகைச்சல் மணம் வருதெண்டு தெரியேல. உமக்கேதாவது தெரியுமோ டிசே? :O)

17.3 7.6.2006

 

said ... (07 June, 2006 17:23) : 

எழுதிக்கொள்வது: Vaa.Manikandan

சுத்தமாகப் புரியவில்லை! பின்னூட்டங்களைப் படித்தால் குழப்பம் அதிகரிக்கிறது.:)

13.23 7.6.2006

 

said ... (07 June, 2006 17:24) : 

சுத்தமாகப் புரியவில்லை! பின்னூட்டங்களைப் படித்தால் குழப்பம் அதிகரிக்கிறது.:)

 

said ... (08 June, 2006 11:46) : 

வாழ்த்துக்கள். நண்பரே! சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக்கொள்ள மனம் தவிக்கும் நண்பரே வாழ்த்துக்கள்.!!!!

 

said ... (03 July, 2006 20:35) : 

இன்னும் 4 நாள் தான் இருக்கிறது.. இனியாவது சொல்லாமே.. அல்லது திட்டம் ஏதாவது பிசகி விட்டதா?

 

said ... (03 July, 2006 21:15) : 

//இன்னும் 4 நாள் தான் இருக்கிறது.. இனியாவது சொல்லாமே.. அல்லது திட்டம் ஏதாவது பிசகி விட்டதா?//

ஆமாம். போட்ட தாக்குதல் திட்டம் பிசகிவிட்டது போல்தான் தெரிகிறது.
யாராவது காட்டிக்கொடுத்து விட்டார்களா?

 

said ... (04 July, 2006 14:10) : 

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.
எந்தப் பக்கம் புகைகிறது என்றுதான் எனக்கும் தெரியவில்லை.

எந்தத் திட்டமும் பிசகவில்லை. எல்லாம் திட்டப்படியே நடக்கின்றன. இன்னும் சில மணித்துளிகளில் அறிவிப்பு வரும்.

 

said ... (04 July, 2006 16:19) : 

எழுதிக்கொள்வது: ஷ்ரேயா

நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்.. பதிவில வாழ்த்துப் போடோணும் என்டு நினைச்சனான்... எதுக்கும் அறிவிப்பு வரட்டும்.

16.38 4.7.2006

 

said ... (05 July, 2006 01:57) : 

ஷ்ரேயா,
மற்றும் அனைவருக்கும்.

இதோ பதிவு போட்டாயிற்று.

 

said ... (06 October, 2007 23:48) : 

வெற்றி சொன்னது

//சும்மா எழுதினதே இப்பிடி எண்டால், கவிதை எழுதினால்?! நீங்கள் எழுதினது மாதிரி ஒரு வீதம் கூட என்னால எழுத முடியாதய்யா!//

வின்னர் படத்தில, அடிவாங்கி நொந்து நூலாகி வந்திருக்கும் வடிவேலுவைப் பாத்து ரெண்டுபேர் சொல்லுவினம்
"அடி குடுத்த வடிவேலுவுக்கே இப்பிடியெண்டா அடிவாங்கினவன் உயிரோட இருப்பான் எண்டுறா?"

அப்பிடியிருக்கு உங்கட கருத்து.

"34" நாட்கள் எண்ட தலைப்போட வந்த பதிவுக்கு இது 34 ஆவது பின்னூட்டம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________