Friday, June 09, 2006

திருமலையில் நடந்தது என்ன?

இரத்தம் தோய்ந்த தமிழர் படுகொலை நாளொன்றின் நினைவுகள்.

கடந்த சிங்கள, இந்துப் புத்தாண்டன்று திரு(க்)கோணமலையில் தமிழர் படுகொலையொன்று நடந்தது நினைவிருக்கலாம். அந்நாளில் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள் சிலவற்றைக் கொண்டு எழுதப்பட்டது இக்கட்டுரை.
_____________________________

"ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ" என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள்.


1983 யூலை இன அழித்தொழிப்பில் இத்தீவு தமிழ் மக்களின் இரத்தத்தில் தோய்ந்த வரலாற்றை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
ஓவ்வொரு தமிழனின் மனங்களிலும் ஆழப்புதைந்துகிடக்கும் ரணமது. இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் அந்தக் கொடூரத்திற்கு மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் பலியாகிவருவதுதான். புரிந்துணர்வு ஒப்பந்தம், நல்லிணக்கப் பேச்சுவார்த்தை, சர்வதேசத்தலையீடு எவையுமே சிங்களத்தின் கொடூரமனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எஞ்சிக்கிடந்த கொஞ்ச நம்பிக்கைகளும் பொய்த்துப் போனதன் சாட்சியாக இருக்கிறது அந்தநாள்.

புதுவருடக் கொண்டாட்டங்களுக்கான முனைப்பில் கிடந்தனர் திருமலைவாழ் தமிழ் மக்கள். அப்பொழுதுதான் அந்தக்கொடூரங்கள் அரங்கேறின. 2006 ஏப்பிரல் 12ஆம் திகதி அன்று , மாலை 3.45 மணியளவில் திருமலை நகரின் மத்தியசந்தையின் பின்வாயில் பகுதியில் ஒரு குண்டு வடிக்கிறது. அதில் 8 தமிழ்மக்கள் உட்பட 10பேர் காயமடைகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சிங்களக் காடையர்கள் கூட்டம் சிலமணி நேரம் வெறித்தாண்டவமாடினர். அந்த வெறித்தாண்டவம் பற்றிய சிலரது நினைவுகள்தாம் இங்குப் பதிவாகின்றன.

இத்தாக்குதல்களில் சிங்களவர் காட்டிய வேகத்தைப் பார்த்தால் முன்கூட்டியே எல்லாம் தயார்நிலையில் இருந்திருக்கிறது போல்தான் தெரிகிறது. சரியாக 4.20 மணியளவில் சிங்களக்காடையர்கள் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த தமிழ்மக்கள் மீது குண்டு வீச்சை நடாத்தினர். அதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டும் 12பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மத்திய வீதியில்புகுந்த காடையர்கள் கூட்டம் கத்திகள், இரும்புக்கம்பிகள், பொல்லுகள் சகிதம் தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். அதேவேளை நகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றனர். லிங்கநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றார். அனுராதபுரச்சந்தியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றனர். இதனை அப்பகுதி மக்கள் பலர் பார்த்திருக்கின்றனர்.

இவையனைத்தும் சிறிலங்காவின் முப்படையினரின் பார்வையிலும் ஆசியிலுமே நடந்தேறின. முதல்நாள் வெறித்தாக்குதல்களில் திருப்தியடையாத சிங்களக் காடையர் கூட்டம் மறுநாள் புதுவருடதினத்தன்று தமிழ்மக்கள் வாழும் கிராமங்கள் மீது தமது தாக்குதல்களை நடாத்தியது. தமிழ் மக்களின் வீடுகளை எரித்து சொத்துக்களையும் கொள்ளையடித்தனர். இதுவும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடனேயே நடந்துமுடிந்தது. இதன்போது கன்னியா சிவயோகபுரம் நடேசர்கோயில் சிங்களக் காடையர்களால் எரிக்கப்பட்டிருக்கிறது.
"ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ" என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக்கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள். சிங்களக்காடையர்களின் கோரத்தாண்டவத்தின்போது தமிழ்பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிங்களக்காடையர்கள் இறந்தவர்களின் நகைகளையும் ஒன்று விடாமல் எடுத்திருக்கின்றனர். இதன்போது தோடுகளை எடுப்பதற்காகக் காதுகளை வெட்டியிருக்கின்றனர்.
இவைகள் பற்றி ஆதங்கப்பட்ட திருகோணமலையின் கல்விமான் ஒருவர்
"இந்த நூற்றாண்டில் இப்படிக் கொடுமைசெய்தவர்கள் சிங்களவர்களாகவும் இப்படியொரு கொடுமைக்கு ஆளாகியவர்கள் தமிழ்மக்களாகவும்தான் இருக்கமுடியும்" என்றார்.

இந்தக்கொடுமைகளில் அகப்பட்டு தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தங்களது வேதனைகளையும் ஆதங்கத்தினையும் இப்படிக் கொட்டித்தீர்த்தனர். மேற்படி நடேசர் கோயிலில் வெட்டிக்கொல்லப்பட்ட தாயாரின் மருமகனான திரு.ரவீந்திரன் தனது அனுபவங்களை இவ்வாறு விபரித்தார்:

"புதுவருசத்தண்டு சொந்தக்காரர் எல்லோருமாகச்சேர்ந்து எங்கடவீட்டில் சந்தோசமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு நாலரை மணியிருக்கும், சிங்கள இளைஞன் ஒருவன் காணாமல்போய்விட்டதாகச் செய்திகள் வந்தது. அந்தச்செய்தி வந்து 10 நிமிடங்களிருக்கும் எங்கடவீட்டுக்கு முன் பக்கத்தில் இருந்த வீடுகள் எரியுது. கூடவே ஐயோ அம்மா என்ற அவலக்குரல்களும் கேட்குது. உயிரைக்காப்பாற்றிக் கொண்டால் போதுமென்டு பொருட்கள் எல்லாத்தையும்விட்டிட்டு வளவுக்குப் பின்னாலிருந்த வயலுக்கால ஓடினம். என்ர மாமி வயதானவர்.அண்டைக்கு கோயில்ல பஜனை இருக்குதெண்டு உயிர் போனாலும் வரமாட்டன் எண்டு சொல்லிட்டார். என்ர கண்ணால பார்த்தனான். சிங்களக்காடையர்கள் கத்திகள், பொல்லுகளோட ஓடி வந்தாங்கள். பொலிஸ் அல்லது ஆமி நினைச்சிருந்தால் இதையெல்லாம்தடுத்திருக்கலாம். காலுக்கு கீழ் சுட்டிருந்தால் ஓடியிருப்பாங்கள். ஆனால் அவங்கள் காடையர்களின் காடைத்தனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாங்கள். இதேநேரம் தமிழனெண்டால் சுட்டுவிட்டு கலவரத்தை அடக்கச் சுட்டம் எண்டிருப்பாங்கள். இனி ஒரே வழி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தலைவரோட போறது தான்".

மூன்று பிள்ளைகளின்தாயான கிருபாகரன்- யோகராணி கோரமான தனது அனுபவங்கள்குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்.
"வீட்டில் நாங்கள் நித்திரை. திடீரென்டு எங்கட வீட்டைச் சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் எரியுது. ஒரே புகைமண்டலம் எங்கட நடேசர்
கோயிலைப் பார்த்தால் அங்கேயும் புகைமண்டலம். எல்லாத்தையும் பொலிஸ் பாத்துக்கொண்டு தானிருந்தது. அவங்கள விட்டுப்போட்டு பயத்தில ஓடிவந்த எங்கள வீட்ட போகச் சொல்லியது பொலிஸ். இப்ப எங்களிட்ட ஒன்றுமில்ல எல்லாத்தையும் இழந்து நிக்கிறம்
"
என்றார் அவர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சந்திரன் ஜெகநாதன் என்பவர் கூறும் போது,
"நான் என்ர கண்ணால பாத்தனான். ஊர்க்காவல்படையும் மகிந்தபுரம் சிங்களவரும் டயரைக் கொளுத்திக்கொண்டு வந்தாங்கள். நான்
தனியாளாத்தான் இங்க இருக்கிறன். வாய்க்கால் கரையோட நிண்டு பார்த்தனான் எனக்கு நல்லாத் தெரியும். மகிந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோக்காரங்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையைச் சேர்ந்தவங்கள் முகத்தைக் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு
வந்த வங்கள், சிலர் ஆமியின்ர சேட் போட்டிருந்தாங்கள். கத்திகள் பொல்லுகளோட வந்தாங்கள். எங்கட பகுதியிலிருந்த 42 வீடுகளை எரிச்சும், எங்கட சாமாங்களையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போனாங்கள் இவங்களுக்குப் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் குறுப் முன்னால் சென்றது
"


இது பற்றி ஓர் ஆசிரியை இவ்வாறு கூறினார். திருகோணமலை மத்தியசந்தை குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற வீதியைச்சேர்ந்த அந்த ஆசிரியை,
"நாங்கள் வாயில்கதவை மூடிக்கொண்டு இருந்தம். பெரும் சத்தத்தோட சிங்களக் காடையர் கூட்டம் எங்கட வீட்டுக் கதவைத் தட்டி உதைத்தனர். எங்கள் வளவிற்கு மதில் இல்லாததால் நாங்கள் தப்பினம். எங்கட வீட்டிற்கு முன்னால் இருந்த வீடொன்றையும் எரித்தனர். வெளியிலிருந்துதான் பல காடையர்கள் கொண்டுவரப்பட்டிருகின்றனர். யாரோ ஒருவர் இது தமிழருடையது என அடையாளம் காட்ட ஒவ்வொரு கடையாக எரிக்கப்பட்டிருக்கிறது. இதில எல்லாச் சிங்களவரும் பங்கு கொண்டார்கள் எண்டுதான் நான் சொல்லுவன். இங்கயிருக்கிற சிங்களவர்கள் நினைச்சிருந்தால் நாங்கள் இஞ்ச ஒண்டா இருக்கிறம் இஞ்ச நீங்கள் இப்படியெல்லாம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டம் எண்டு சொல்லித் தடுத்திருக்கலாம். சிங்களவர்கள் எப்போதும் எங்கள அழிக்கத்தான் காத்துக் கொண்டிருக்கிறாங்கள். அவங்கள் திருந்தப்போறதில்ல"
என்று ஆதங்கப்பட்டார்.

சிங்களக் காடையர்களுக்குப் பயந்துபாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் சோதனை என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு தன்னார்வ நிறுவனப் பிரதிநிதி தங்கட வேலையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் என ஆதங்கப்பட்டார்.
இந்த நாலுவருட காலமாக நாங்கள் நல்லிணக்கம், ஜக்கியம், மனிதப்பாதுகாப்பு என்றெல்லாம் காசச்செலவளித்ததுதான் மிச்சம். ஜ.நா அகதி மக்களின் உரிமையெல்லாம் பேசிச்சு. நாங்களும் பேசினம். ஆனால் அகதி முகாமிலிருக்கும் மக்களையே சந்தேகத்தின்பேரில் ராணுவம் கைது செய்கிறது. விசாரணைக்கு என அழைத்துக்கொண்டு செல்கிறது. அவர்களது அகதி உரிமைவாதங்களின் அர்த்தம் என்ன?"

இவ்வாறு இந்தக் கொடூர இன அழித்தொழிப்பு தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதையிருக்கிறது. திருமலை இன்று அச்சம் கலந்த அமைதியுடன் தன் மண்ணின் கீழே கொதித்துக்கொண்டிருக்கும் சிங்கள இனவாத எரிமலைக்குழம்பின் மேல் உள்ளது.
***********************

தொகுப்பு: கதிரவன்.

நன்றி விடுதலைப்புலிகள்:சித்திரை-வைகாசி-2006.

(எழுத்துரு மாற்றியபோது வந்த எழுத்துப்பிழைகளை இயன்றவரை திருத்தியுள்ளேன்.)

_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"திருமலையில் நடந்தது என்ன?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (09 June, 2006 23:03) : 

Latest News:
SLA soldiers massacre family of four in Vankalai, Mannar
WARNING: STORY CONTAINS UNEDITED PHOTO FROM MASSACRE SITE

 

said ... (10 June, 2006 07:14) : 

வசந்தன் உங்கள் மேல் எனக்கு நல்ல அபிபிராயம் உண்டு ஆனால்
இதில் முதல் குண்டு வெடித்ததில் 7 சிங்களவரும் 2 முஸ்லிமும்
தான் கொல்லப்பட்டார்கள் அதனைத் தொடர்ந்துதான் தமிழர்கள் கொல்லப்
பட்டார்கள். அப்படியிருக்க இதை மறைத்துக் கொண்டு ஏன் இப்படி செய்தி
புனைகிறீர்கள் என்று விளங்கவில்லை. கொல்லப்படுவர்கள் சிங்களவரோ
தமிழரோ முஸ்லிமோ கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த சம்பவத்துக்கு பின்பு (சில வாரங்கள் மே முதலாம் திகதி) ஆட்டோவில் பிரயாணம் செய்த தாயும் இரண்டு பிள்ளைகளும் ஆட்டோசாரதியும் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப் பட்டார்கள் இந்த சம்பவம் உங்கள் மனதை உறுத்தவில்லையா...?

 

said ... (10 June, 2006 11:20) : 

நன்றி விண்ணாணம்.

பெயரில்லாதவரே, என்மேல் நல்லபிப்பிராயம் வைத்திருப்பதற்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
பதிவை முழுமையாகப் படித்தீர்களா அல்லது தொடக்கத்தோடு நிறுத்திவிட்டு பின்னூட்டமிட்டுவிட்டுப் போய்விட்டீர்களா தெரியவில்லை.
ஆம். நீங்கள் சொன்னதுபோல்தான் நானும் செய்தியறிந்தேன். சிங்களவருக்குப் பதிலாக தமிழர்கள் என்று தட்டச்சிட்டார்களோ என்றும் யோசித்தேன்.
ஆனால் காயமடைந்தவர்களாகத் தான் தமிழர்களைச் சொல்லப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சிங்களவர்களைப் பற்றி ஏதுமில்லை. ஆக இது திரிப்பன்றி மறைப்பு. சிங்களவர்கள் கொல்லப்பட்டது மறைக்கப்பட்டது.

நீங்கள் சொன்ன ஓட்டோச் சம்பவம் உறுத்தியதுதான். ஆனால் இந்தப் பதிவுக்கு அதைச் சம்பந்தப்படுத்தி என்னைக் கேள்விகேட்பது ஏனென்று புரியவில்லை. அத்தாக்குதல் அந்த ஓட்டோவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதன்று. ஆனால் இங்கே இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. இரண்டையும் சமப்படுத்தி கணக்குச் சரியென்று சொல்லிவிட்டுப் போகலாமா?

வேண்டுமானால், 3 தினங்களின் முன் மட்டக்களப்பில் மக்கள் பயணம்செய்த உழவு இயந்திரம் மீது படையினர் கண்ணிவெடித்தாக்குதல் நடத்தி 3 குழந்தைகளுட்பட பத்துப் பொதுமக்கள் கொல்லப்பட்ட, மேலும் பலர் காயமடைந்த சம்பவம் பற்றி எழுதப்பட்ட பதிவில் அந்த ஓட்டோச் சம்பவத்தைக் குறித்துக் கேள்வி கேட்டுக் கண்க்கைச் சரிசெய்யுங்கள்.

எதுக்கப்பா விண்வம்பு?
உங்களைப் போன்றவர்கள் சொல்வதுபோல
"யார் கொல்லப்பட்டாலும் வருந்துகிறேன்"
என்று ஒரு வசனம் போட்டாற் போயிற்று.

 

said ... (10 June, 2006 14:31) : 

Trincomalee: Press release by a fact-finding team from South Sri Lanka

PRESS RELEASE#

CALL FOR IMMEDIATE ACTION ON
TRINCOMALEE SITUATION

A fact-finding team of civil society representatives traveled to
Trincomalee on 16th and 17th of April 2006 in the wake of reports of civil unrest in the District.

The findings of this mission have left us gravely concerned by the
events that have unfolded in Trincomalee over the past week; events which have left over 20 civilians dead, over 30 shops and 100 homes destroyed by fire and over 3000 persons displaced and seeking refuge in schools and places of worship.

On 12th April, a bomb exploded in the vegetable market in Trincomalee
town, leaving five persons, including one child, dead. Within 15 minutes of the explosion, a gang of armed Sinhala persons began a rampage through the business area of the town, setting Tamil shops on fire, and looting goods. According to bystanders, though the gang never consisted
of more than 100 at any given time, there was no reasonable attempt made by the security forces to prevent the violence.

Several people have been reported killed in and around the market on the 12th during the course of the rioting. Some bodies were thrown into the flames of the burning shops. 19 deaths, including of 7 women, have been reported so far; however the figure is rising daily. The burning of bodies has resulted in delays in identification, and has destroyed
traces of mutilation and sexual assault prior to the death..

Over 30 shops were burned in all, the majority belonging to Tamils and 2 to Muslims. It appeared that several large shops were specifically targeted - among them were Hari Electricals, the Dollar Agency, the Dialog Company and the Sunlight (Lever Brothers) Agency. The mob also attacked the Hatton National Bank.

Other incidents of violence, including arson and murder took place outside the town. The body of a young Sinhala man, identified as Nissanka, was found in Mahindapura on the 14th April. He had been missing since the 13th. Subsequently the Sinhala villagers of Mahindapura went on a rampage in the neighbouring Tamil village
Nadesapura and set fire to over 40 homes. The office of the Trincomalee District Youth Development Organization (AHAM) was attacked and several
vehicles belonging to the organization were set on fire; the Hindu temple in the village was also attacked. Similar incidents have taken place in Thuwarangkadu, resulting in the displacement of almost 1000 persons, and in Andankulam, where several houses were burnt down. The houses in Andankulam were new, built under a post-tsunami reconstruction scheme.

The violence, as well as the fear and insecurity experienced by the
civilians, has led to a fairly substantial displacement. As of the 20th April, the District Secretariat, Trincomalee, had this figure at 2673 persons (723 families). This does not take into account the large numbers who are residing with family and friends, and those who are simply leaving their homes at night-time for more secure locations. The response to the displacement, even from NGOs, has been slow, hampered by the prevailing tensions and lack of personnel. In some areas government assistance was received only on the 18th April, despite the fact that people were displaced on the 14th April.

The speed with which the violence erupted after the explosion seems to indicate an element of pre-planning that is extremely disturbing. Two observers referred to the situation as being reminiscent of the anti-Tamil riots of July 1983. The rioting lasted for over two hours,
during the daytime. During this entire period the armed forces and the Police did almost nothing to prevent the violence from taking place.

There are several very credible eye witness accounts to the manner in which the security forces stood by and allowed the burning and killing to take place.

Although there is a multi-ethnic Citizens' Committee led by religious leaders of all communities in Trincomalee town, as well as Peace Committees initiated by the Police at the level of every Grama Sevaka
Division, they have been ineffective in the face of the recent incidents of violence. There is a very high degree of mistrust and animosity
between the Sinhala and Tamil communities in particular. Groups remain polarized on the basis of ethnicity and there is no structure that has the capacity to bring them together in a positive and constructive manner. Even well-established social activists expressed their fear of taking the initiative to assist those affected by the violence; some of
them were already receiving threatening telephone calls.

Given that Trincomalee has always been a flashpoint for ethnic conflict in Sri Lanka, it is imperative that civil society organizations in the south concentrate on strengthening existing networks and building new
ones, to give a truly plural character to the moderate and peace-loving voices of Trincomalee's peoples and to ensure that a slide back into
barbaric ethnic tensions does not arise.

On the basis of its findings, we wish to highlight the following areas of concern and appeal to the government, political parties,
non-governmental organizations and all members of civil society:
* Immediate steps must be taken to ensure that all emergency and
humanitarian assistance necessary is extended to those displaced by the violence; rebuilding of houses should be a priority;
* A delegation of senior members of all leading political parties
should undertake a visit to Trincomalee to meet with all sections of the population as a confidence-building measure;
* The government should devise some means of accepting
accountability for the inability of the security forces to prevent the violence; a collective apology from the state and from southern
political parties to the people of Trincomalee would go a long way
towards re-building bridges of communication and trust;
* An independent investigation into the violence following the
bomb explosion on 12th April should be undertaken by a team comprising representatives of government and non-government bodies; the investigation should aim at recording the various testimonies regarding the incidents and at making recommendations to the government regarding justice and redress for the victims;
* These measures should take into account the culture of impunity
that has prevailed in Sri Lanka, taking on board the experiences of
previous commissions, and ensure that concrete steps are taken and
implemented by the government to end impunity;
* Civil society organizations should create a 'rapid response'
network that will make regular and systematic visits to their partners
and colleagues in Trincomalee in order to monitor the situation;
* Payment of compensation should be transparent, unbiased and
acceptable to all affected parties;
* Institutions such as the District office of the National Human Rights Commission should be reinforced with material and human resources to enable it to act more effectively in a time of crisis such as this;
* The Citizens' Committee should be strengthened so that it can
act independently and with the recognition of the authorities;

We note that the LTTE have been engaged in acts of armed attacks against the security forces resulting in further heightening tension and fear within the community and the Trincomalee area.

We appeal to the LTTE to:

* Halt these acts of violence and commit to the pursuit of its
objectives through non-violent and democratic means;
* Ensure that there are no obstacles in providing emergency and humanitarian assistance to those displaced by the violence and
facilitate in creating a safe environment for the implementation of aid work by agencies and individuals;

It is imperative that all political actors are aware of the dangers involved in not taking control of the situation and ensuring that the potential for heightened violence in Trincomalee is curbed. The creation of an environment in which people can return to their homes and their
livelihoods should be given priority. In the current climate of
insecurity, attempts by some politically motivated groups to incite ethnic and religious hatred should be dealt with immediately and all citizens need to be more vigilant about these manipulations. The
fragility of the peace process at this moment calls for a concerted
initiative to safeguard the CFA and strengthen the voices for peace in Sri Lanka.

Sunila Abeysekera, Udaya Kalupathirana: INFORM
Paikiasothy Saravanamuttu, Rohan Edrisinha, Devanesan Nesiah, Bhavani
Fonseka, Mirak Raheem: CENTRE FOR POLICY ALTERNATIVES
Ramani Muttetuwegama: LAW AND SOCIETY TRUST
P.D. Gunatilaka: DEVASARANA DEVELOPMENT CENTRE
Buddhika Weerasinghe: FREE MEDIA MOVEMENT
Ambika Satkunanathan, Soundarie David, Charan Rainford, Nimanthi
Rajasingham, Sonali Moonesinghe, P. Thambirajah, S. Varatharajan,
INTERNATIONAL CENTRE FOR ETHNIC STUDIES
Nimalka Fernando, INTERNATIONAL MOVEMENT AGAINST RACIAL DISCRIMINATION
Kumudini Samuel, Sepali Kottegoda WOMEN AND MEDIA COLLECTIVE
Jayadeva Uyangoda, SOCIAL SCIENTISTS' ASSOCIATION
Rukshana Nanayakkara, TRANSPARENCY INTERNATIONAL, SRI LANKA
Anita Nesiah
Manouri Muttetuwegama
Darini Rajsaingham
Tharumini Wijekoon
Samatha, Jawaharlal Nehru University
Roshan Mendis, LEADS, Sri Lanka

# This press release has been refused to be carried by all local media approached
21st April 2006

 

said ... (11 June, 2006 21:32) : 

பெயரில்லாமல் வந்து அறிக்கை சமர்ப்பித்தவருக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________