Wednesday, June 28, 2006

வருத்தங்கள்

வருத்தம் தெரிவிக்கிறார்களாம். மறைமுகமாக மன்னிப்புக் கேட்கிறார்களாம். இது ஏதோ ஒரு விதத்தில் சாதாரணமான என்னையும் பாதிக்கத்தான் செய்கிறது. எரிச்சல்தான் வருகிறது. இந்தமுறை 'துன்பியல் சம்பவம்' என்பதைவிட கொஞ்சம் கீழிறங்கியது போல் தோன்றியதால் எனது எரிச்சலும் சற்று அதிகம்தான்.

ஆனால் தலைமையில், பொறுப்பில் இருப்பவர்கள் எங்களைப்போல் உணர்ச்சிவசப்பட முடியாது. ரோசத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்களைப் பொறுத்தவரை அதுசரி.

எண்டாலும் எனக்குக் கிழம்பின விசரைத் தணிக்க ஒரு பதிவு அவ்வளவுதான். 'துன்பியல் சம்பவத்துக்கு' நேரடியா ஒரு கண்டனம் என்றால் இப்போது செய்யமுடிந்தது இந்தப்பதிவு. அவ்வளவுதான். இனவரப்போகும் சிலரின் பதிவுகளிற் பின்னூட்டமிடுவதைத் தவிர்த்து தணிந்து போகவும் ஒரு பதிவு.

இங்கே 'துன்பியல் சம்பவத்தையே' நக்கலடித்துக் காயப்போட்ட கூட்டம் இப்போது தொடைதட்டி எழும்பும். புதியாய் நையாண்டிகள் வரும். புலி பயந்து பணிந்துவிட்டதாய்க்கூடப் புலம்பலாம்.

கருத்து வெளியிடப்பட்டது அன்ரன் பாலசிங்கம் அவர்களிடமிருந்து என்பதில் ஒரு திருப்தி.


_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வருத்தங்கள்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (28 June, 2006 10:41) : 

இந்தியப்படை கொன்றொழித்த அப்பாவிப் பொதுமக்களின் துயரங்களை கொஞ்சம் சொல்லிப்போட்டு மன்னிப்போ மயிரோ கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பெரியண்ணன் தான் செய்த கொலைகளுக்கு எப்ப மன்னிப்பு கேட்பாராம் எண்டு உந்த நக்கலடிக்க வெளிக்கிடுறவை சொன்னா நல்லாயிருக்கும்

 

said ... (28 June, 2006 21:00) : 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பெயரில்லாதவரே,

நினைத்தது போல் சிலரிடமிருந்து விசமத்தனமான கருத்து வந்திருக்கிறது.
இவர்கள் யாருக்கும் இன்னும் இந்தியா மன்னிப்போ வருத்தமோ கேட்காமலிருப்பதை நினைத்து வெட்கப்படத் தெரியவில்லை. ஓர் இனத்தையே சூறையாடிவிட்டு இன்றும் சூறையாடப்பட்டவனை நோக்கியே விரல்களை நீட்டிக்கொண்டிருக்கும் கும்பல் இது.

ஆனால் இந்தியா இன்னும் இன்னும் வெட்கித்தலைகுனிய வேண்டி நிலைக்குத்தான் புலிகள் அதைத்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் அந்தக் குற்றவுணர்வு வரப்போவதில்லை.

இன்னும் இந்திய, காந்திய, ஜனநாயக வழிகளைப் புலிகளுக்கும் ஈழத்தவருக்கும் போதிக்க முன் இந்த போலிக்கோமாளிகள் தங்கள் இந்தியத்தை ஒருமுறை உரசிப்பார்ப்பது நன்று. புலிக்கிருக்கும் ஜனநாயகம், தவறுகளை ஏற்கும் தன்மை என்பவற்றின் சிறுபகுதியாவது இந்தியாவுக்கு இருக்கிறாவென்பதையும் யோசிப்பது நன்று.

இதெல்லாம் உறைக்கவா போகிறது?
இதற்குள் இந்தியாவுக்கு அந்த அவசியமில்லையென்று திமிராகவும் ஆணவமாகவும் பதில்வேறு.

லக்கிலுக் போன்றவர்கள் ஓரளவு யதார்த்தமாக எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள்கூட இந்தியா ஈழத்தவரிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவேண்டிய தேவையை வலியுறுத்தாமல் சும்மா ஒப்புக்கு ஒரு வசனம் சொல்லவிட்டுப் போகிறார்கள்.

 

said ... (29 June, 2006 02:44) : 

/நினைத்தது போல் சிலரிடமிருந்து விசமத்தனமான கருத்து வந்திருக்கிறது.
இவர்கள் யாருக்கும் இன்னும் இந்தியா மன்னிப்போ வருத்தமோ கேட்காமலிருப்பதை நினைத்து வெட்கப்படத் தெரியவில்லை/

நித்திரையைத் துயிலெழுப்பலாம். நித்திரைபோலுள்ளதை எழுப்பமுடியுமா?

 

said ... (29 June, 2006 04:33) : 

வசந்தன்,
வணக்கம். உங்களின் வலியை என்னால் உணரமுடிகிறது. அதேநேரம், நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. எமது இலக்கு, சுதந்திரத் தமிழீழம், அதை அடைவதற்கு அரசியல்ரீதியான பல நகர்வுகளை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும். இல்லாவிடில் நாம் எமது இலக்கை அடைய முடியாது. அவ்வகையில் புலிகளின் முடிவு மிகவும் வரவேற்கத்தக்க முடிவு. இக் கருத்தை நான் நண்பர் சசியின் சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்-1 எனும் பதிவில் ஈழபாரதியின் கருத்துக்கான என் மாற்றுக்கருத்தாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தேன்.

 

said ... (29 June, 2006 11:37) : 

வசந்தன். உங்கள் வருத்தங்களுக்கு என் வருத்தங்களைப் பதிலாகத் தருவதைத் தவிர மேற்கொண்டு கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு இதில் விவரம் பத்தாது. ஆனால் என் வருத்தங்களைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

 

said ... (29 June, 2006 11:54) : 

இந்தியா பங்களாதேசத்தில் படைஎடுத்து செய்த கொடுமை எல்லோரும்
அறிந்ததே பின் எதற்காக (அப்போது புலம்பெயர்ந்தவர்கள் புலிகள் உட்பட)
இந்தியா வாவா வந்து எங்கள காபாத்து என்று கூச்சல் கும்மாளம் போட்டு
வரவச்சு பின் அவனுக்கு அடி அடி என்று அடித்து (தங்கள் இருப்பை தக்க
வைத்துக் கொள்ள இப்போதும் அதுதான் நடக்குது) எங்களையும் துன்பப்
படுத்தி. இப்போதும் நாலாபக்கமும் ஓரேகொலை. இந்தியா இராணுவ காலத்திலும் அதற்கு பின்பும் நான் யாழ்பணாத்தில குடும்பத்துடன்
இருந்து அல்லோல கல்லோல பட்டு இப்பதான் கொஞ்சம் நின்மதியுடன்
இருக்கிறன். ஆனால் அங்க இருக்கிற சனத்த நினைக்கிற போது நாங்கள்
பட்ட அனுபவம்தான் வருகுது.

 

said ... (29 June, 2006 12:58) : 

நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ,தமிழ் பெண்களை மானபங்கப்படுத்திய ஒரு இராணுவத்தின் செயலையும் ,ராஜீவ் காந்தியின் படுகொலையும் ஒப்பிட முடியாது .ராஜாங்க ரீதியில் ஒரு நாட்டின் தலைவர் கொல்லப்பட்டதால் இந்த மன்னிப்பு அவசியமாக இருக்கலாம் .ஆனால் தார்மீக ரீதியில் ராஜீவ்காந்தி படுகொலைக்காக புலிகள் மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழ்நாட்டு தமிழர்களிடம் .உணர்வு பூர்வமாகவும் வெளிப்படையாகவும் தமக்கு ஆதரவு அளித்து வந்த அம்மக்களை இந்த ஒரு நிகழ்வின் மூலம் சொந்த நாட்டில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மற்றவர் பரிகசிக்கச் செய்தது மிகப்பெரிய தவறு .அதற்கான பலனைத்தான் இன்று அவர்கள் அனுபவிக்கிறார்கள் .அதைப்பார்த்து தமிழ்நாட்டு தமிழர்கள் வாய்பொத்தி நிற்பதற்கு புலிகளே காரணம் .தங்கள் தலையிலே தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டதுமில்லாமல் ,தமிழக தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது தான் தார்மீக அடிப்படையில் சரியானது.

 

said ... (29 June, 2006 13:57) : 

வசந்தன்,
மேலேயுள்ள பின்னூட்டன் என்னுடையது தான் .அதை நீங்கள் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளீர்கள் எனத் தெரியவில்லை .ஈழத்தமிழர்கள் நல்வாழ்விலும் ,அதற்கு தமிழக தமிழர்கள் கொடுக்க வேண்டிய ஆதரவிலும் நான் அக்கரையும் ஆதரவும் கொண்டவன் என உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன் .அதனடிப்படையில் என் மேற்சொன்ன கருத்து ,முன்பொரு காலத்தில் தமிழக மக்கள் வெளிப்படையாக குரல் கொடுக்கவும் தங்கள் நாட்டை நிர்ப்பந்திக்கவும் இருந்த வாய்ப்பு இப்போது இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் எழுந்தது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

 

said ... (29 June, 2006 14:01) : 

எனக்கு எந்த உறுத்தலுமில்மை.
சம்பந்தமேயில்லாமல் கோ.வி.கண்ணனின் பதிவிலும் இதே பின்னூட்டம் வந்ததைக் கண்டதும் தான் உங்களிடம் கேட்டிருந்தேன்.

 

said ... (29 June, 2006 14:19) : 

வசந்தன்,
முதலில் ஸ்ரீகாந்த் அவர்கள் பதிவில் தான் இந்த கருத்தை தெரிவித்தேன் .இது ஒரு பொதுவான கருத்தாக இருந்ததால் இது குறித்த பதிவுகளில் அதே கருத்தை இட்டிருந்தேன் .கோ.வி .கண்ணனின் பதிவு என்னுடைய கருத்துக்கு நேரடித் தொடர்பு இல்லாதது என்பது உண்மை தான் .குழப்பத்துக்கு மன்னிக்கவும்.!

 

said ... (29 June, 2006 15:34) : 

எழுதிக்கொள்வது: தூயவன்

இவ் ஒளிபரப்பில் வழமை மாதிரி றோ தன் கைவேலையைக் காட்டி பல விடயங்களை ஒளிததுவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. என் கருத்தின்படி இது இப்போதைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக அகதிகள் விடயத்தில் தமிழக மக்கள் கரிசனை அதிகரிக்கும்போது ராஸிவ் விடயத்தை முன்னணிக்கு கொண்டு வந்தது ஏற்பானதா எனத் தெரியவில்லை. இது சிலவேளைகளில் இந்தியாவின் சதித்துpட்ட்ததுக்கு பலியாகி விட்டதாக்க கூட இருக்கலாம்.

ஆனால் தெரிவித்தாகி விட்டதால்இ எனி நாம் அதற்கு வரும் பதில்களுக்கு. பதில் அளிப்பது பற்றித் தான் சிந்திக்க வேண்டும்.

இதில் அகதிகள் விடயத்தர்ல இந்தியாவில் எழும் சஞ்சலங்களை குறைக்க ராஜீவ் விடயத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு வித சதியாகவே இதைக் கொள்ளலாம் என்பதே என் முடிவு!


11.52 29.6.2006

 

said ... (29 June, 2006 22:39) : 

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

புலிகள்தான் எமது அரசியற்றலைமை என்ற வகையில் அவர்கள் முடிவெடுக்கிறார்கள், கருத்துச் சொல்கிறார்கள். ஆனால் தனிமனிதனாக எனக்கு இதில் உறுத்தலும் எரிச்சலும் உண்டு. என்னைப்போல தலைமையிலுள்ளவர்கள் உணர்ச்சிவசப்படவோ ரோசப்படவோ கூடாது என்பதற்கிணங்க அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் எனது எரிச்சலையும் பதிவுசெய்வதே நோக்கம்.
****************************************
நிற்க, இப்படியொரு கருத்து புலிகள் தரப்பிலிருந்து சொல்லப்படுவதற்கான காலம் கனிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. கடைசியாக வெளியிட்ட கருத்தின்படி 'நீங்கள் இராஜீவ் கொலையை உரிமை கோருகிறீர்களா?' என்ற கேள்விக்கு புலிகள் ஆம் என்ற பதிலைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துள் வருகிறார்கள். அல்லது சிறுபிள்ளைத்தனமாக மறுக்கவேண்டிய நிலைக்குள் வருகிறார்கள். (இந்த இடத்தில் இந்து வென்றுவிட்டது). என்ன தான் இருந்தாலும் உரிமைகோரக்கூடிய நிலைக்கு புலிகளும் ஈழப்போராட்டமும் இன்னும் வரவில்லை. கட்டுநாயக்கா தாக்குதலைக்கூட மேடைப்பேச்சுக்களில் ஒத்துக்கொண்டதோடு, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுத்திலும் ஓரிடத்தில் சொல்லியுள்ளார். ஆனால் இதுபற்றி உலகம் பகிரங்கமாக கேள்விகேட்டால் உரிமைகோரும் நிலையில் புலிகள் இல்லையென்றே நினைக்கிறேன். கட்டுநாயக்கா தாக்குதலுக்கே இப்படியென்றால் இராஜீவ் கொலை இன்னும் சிக்கல் நிறைந்தது.

ஆக, பகிரங்கமாக உரிமைகோரும் நிலைக்கு வராமல் பிறகெதற்கு இப்படியொரு கருத்தை வெளியிடவேண்டுமென்பது எனக்குப் புரியவில்லை. இலக்கை அடையும் வரை கொழும்புத் தாக்குதல்களுக்குக் கூட உரிமைகோருவது நடைபெறாத விசயமாகவே படுகிறது. தொடர்ந்தும் இப்படியான பாதையிலேயே பயணிக்க வேண்டிய தேவையுமுள்ளது.

 

said ... (04 July, 2006 07:06) : 

அன்ரன் பாலசிங்கம் இப்படி பேசியிருக்க தேவையே இல்லை. ஏதோ ஒரு desperation என்றே தோன்றுகிரது. ஒரு பக்கம் சிங்கள அரசாங்கத்தின் ஆராஜகம், சமாதான பேச்சு வார்த்தையில் பின்னடைவுக்கு காரணம் புலிகளே என்று தோன்றமளிக்கும் வெளியுலக பிரச்சாரம், பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டதே தங்களை பலப்படுத்திக்கொள்ளத்தான் என்று மற்றொரு யூகம், இத்தனையும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருக்கும் இந்தியாவின் போக்கு, இந்த பின்புலத்திலேயே என்னதான் விடிவு என்ற ஒரு நம்பிக்கையின்மையினால் பேசியது போல்தான் தோன்றுகிரது. ஆனாலும் அரசியல்வாதிகளுக்கு சம்மாக ஊடகங்களும் நடந்து கொள்வது, நெருப்பு அனைந்துவிடாமல் இருந்தால்தான் தங்கள் தொழில் நல்லபடியாக நடக்கும் என்ற "உயர்ந்த" நோக்கம் மட்டுமே தெரிகிரது.

 

post a comment

© 2006  Thur Broeders

________________