Friday, August 04, 2006

கவிஞர் பொன்.கணேசமூர்த்தி சுட்டுக்கொலை

ஈழத்தைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியான கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.
புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான 'இலங்கை வேந்தன்' 'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் என் மனத்தில் நிற்கிறது. அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர். பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.

இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு (அவன் என்னுடைய வகுப்புத் தோழன்) அவர் எழுதிய இறுதிநாவல் (எடுக்கவோ தொடுக்கவோ???) உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான சில பாடல்களை எழுதியளித்துள்ளார்.

இவருடைய மூன்றாவது மகன் (மதன மெளனி) விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றிய இக்கலைஞன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேரிலறிந்த, மிக நெருக்கமான குடும்பம் அவருடையது.

கவிஞரின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கவிஞர் பொன்.கணேசமூர்த்தி சுட்டுக்கொலை" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (04 August, 2006 18:25) : 

ஈழத்தின் ஆயுதப் போராட்டக் குழுக்கள் அத்தனையும் தமது அரசியலை ஏற்றுக்கொள்கின்ற/ஏற்றுக்கொள்ளாத போக்கை வைத்தே தமது எதிரி/நண்பரைத் தீர்மானிக்கின்றன. இதில் ஆயுதம் தாங்கியோர்/நிராயுதபாணிகள் என்ற பேதம் பார்ப்பதில்லை. இக் குழுக்களின் ஆதரவாளர்களும் அவற்றின் அரசியலடிப்படையில், தாம் ஆதரிக்கின்ற குழுக்களின் கொலைகளை நியாயப்படுத்துகிறார்கள்/கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். ஒவ்வொரு தரப்பாலும் எதிர்த்தரப்பினது கொலைகள் மட்டும் தூக்கி நிறுத்தபடுகிறது.

இந்தப் போக்கு ஆயுதக்குழுக்களிலும், அதனைச் சார்ந்தவர்களிலும் மாறாதவரை, ரஜனி, செல்வி, கோவிந்தன், தராகி, கணேசமூர்த்தி இன்னும் பத்திரிகை நிருபர்கள், பத்திரிகை விற்றவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள்.... என்று நீண்டுகொண்டே போகப் போகிறது. துயரம் என்னவெனில் இந்தப் பட்டியல்களில்கூட அவரவர் சார்புக்கேற்பவே இறந்துபோனவர்களும் இடம்பெறுகிறார்கள்/தவிர்க்கப்படுகிறார்கள்.

விடுதலைப் போராட்டமென்பது குறிப்பிட்ட குழுக்கள் நம்புகின்ற அரசியலுக்கானதா?மக்களின் விடுதலைக்கானதா? என்ற கேள்வியை எப்போது கேட்போம்?

 

Blogger கானா பிரபா said ... (04 August, 2006 19:29) : 

வேலையில் இருந்தபோது நண்பர் சொல்லியிருந்தார் ஒரு வங்கி ஊழியர் சுடப்பட்டார் என்று, உங்களின் பதிவு மூலமே திரு கணேசலிங்கம் என்று அறிந்துகொண்டேன். 90 களில் அவரின் படைப்பை வானொலி மூலம் கேட்ட அபிமான நேயர்களில் நானும் ஒருவன். இந்தச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

 

Anonymous Anonymous said ... (04 August, 2006 21:18) : 

எழுதிக்கொள்வது: Sri Rangan

பொறுக்கியின் கருத்தை வழிமொழிகிறேன்.இதுவே எனது கருத்தும்.


//ஈழத்தின் ஆயுதப் போராட்டக் குழுக்கள் அத்தனையும் தமது அரசியலை ஏற்றுக்கொள்கின்ற/ஏற்றுக்கொள்ளாத போக்கை வைத்தே தமது எதிரி/நண்பரைத் தீர்மானிக்கின்றன. இதில் ஆயுதம் தாங்கியோர்/நிராயுதபாணிகள் என்ற பேதம் பார்ப்பதில்லை. இக் குழுக்களின் ஆதரவாளர்களும் அவற்றின் அரசியலடிப்படையில், தாம் ஆதரிக்கின்ற குழுக்களின் கொலைகளை நியாயப்படுத்துகிறார்கள்/கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். ஒவ்வொரு தரப்பாலும் எதிர்த்தரப்பினது கொலைகள் மட்டும் தூக்கி நிறுத்தபடுகிறது.

இந்தப் போக்கு ஆயுதக்குழுக்களிலும், அதனைச் சார்ந்தவர்களிலும் மாறாதவரை, ரஜனி, செல்வி, கோவிந்தன், தராகி, கணேசமூர்த்தி இன்னும் பத்திரிகை நிருபர்கள், பத்திரிகை விற்றவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள்.... என்று நீண்டுகொண்டே போகப் போகிறது. துயரம் என்னவெனில் இந்தப் பட்டியல்களில்கூட அவரவர் சார்புக்கேற்பவே இறந்துபோனவர்களும் இடம்பெறுகிறார்கள்/தவிர்க்கப்படுகிறார்கள்.

விடுதலைப் போராட்டமென்பது குறிப்பிட்ட குழுக்கள் நம்புகின்ற அரசியலுக்கானதா?மக்களின் விடுதலைக்கானதா? என்ற கேள்வியை எப்போது கேட்போம்?//









13.43 4.8.2006

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (04 August, 2006 21:40) : 

பொறுக்கி,
வருகைக்கு, கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வது சரியே.
நானும் அந்த ஆதரவாளர் வகைக்குள் அடக்கமே.
எல்லாக் கொலைகளையும் எதிர்க்கிறேன், அழுகிறேன் என்று நான் சொன்னால் அது சுத்தப் பம்மாத்து.
நான் கவலைப்படும் கொலைக்காக மற்றவர்கள் கவலைப்பட வேண்டுமென்பதோ நான் மகிழும் கொலைக்காக மற்றவர்களும் மகிழ வேண்டுமென்றோ நான் எதிர்பார்க்க முடியாது.

என்பதிவில் இரு கொலைச்சம்பவங்களுக்கு மட்டுமே தனிப்பதிவு போட்டிருக்கிறேன். கவிஞருக்கும் போயன் மாஸ்டரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்கும். இரண்டு குடும்பங்களுமே எனக்குப் பழக்கமானவை. நான் நேரில் அறிந்தவர்கள். இரு குடும்பங்களிலும் என்னோடு ஒன்றாகப்படித்த நண்பர்கள் இருந்தார்கள். (இருவமே இன்று உயிரோடு இல்லை)
எதிர்த்தரப்பில் கொல்லப்பட்ட யாருமே எனக்குத் தெரிந்தவர்களாயில்லை - அவர்களின் வீட்டில் நான் விளையாடவில்லை - அவர்களில் யாரும் என்னோடு ஒன்றாகப் படித்த ஞாபகமுமில்லை. நான் என்ன செய்ய?

மேலும் இப்பதிவில் 'ஐயோ பாருங்கள், துரோகிகள்-பாசிஸ்டுகள்- கொன்றுவிட்டார்கள்" என்று குய்யோ முறையோ என்று ஒப்பாரிவைத்து எழுதவில்லை. அட! யார் கொன்றார்கள் என்றுகூட நான் சொல்லவில்லை.

கவிஞரின் கொலையை ஒரு செய்தியாக மட்டுமே -அத்தோடு கவிஞரைப்பற்றிய சிறுகுறிப்பையும் தரும் நிலையே இப்பதிவில் இருக்கிறது.
இவையுட்பட தமிழர் மீது நடத்தப்பட்ட பொதுக்கொலைகள் பற்றிய பதிவுகள் எவையும் முறைப்பாடாகவோ, அனுதாபத்தைப் பெறும் நோக்குடனோ பதியப்பட்டவையல்ல. அனுதாபம் பெறுவதை நோக்காகக் கொண்ட நடவடிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை. பலநேரங்களில் எரிச்சலே வரும். பாலத்தீன மக்களைவிடவும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டைக் காட்ட முடியாது. (இதுபற்றிச் சொன்னால் விரிவாகச் சென்றுவிடும்)

இவை பெரும்பாலும் ஒரு தகவலாகவோ செய்தியாகவோ சொல்லப்படுபவையே.

இத்தகைய பதிவுகள் மூலம் ஓர் அரசியலை செய்யமுடியுமென்று நான் நம்பினால் அது இதுவாகத்தான் இருக்கும்.
புலிகள் மட்டுமே பயங்கரமானவர்கள் - பயங்கரவாதிகள்- கொலை செய்பவர்கள்-போர் வெறியர்கள்- மனித உயிர்களை மதிக்கத் தெரியாதவர்கள் என்று பட்டம்சூட்டி, மறுபக்கத்தில் அரசைப் பாராட்டி- அதன் ஜனநாயகத்தை மெச்சி - அதற்குப் புனிதப்பட்டம் சூட்டிக்கொண்டு,
புலிகளை ஆயுதங்களைக் கீழேபோட்டு பேச்சுத் திரும்பவேண்டுமென்றும் - ஜனநாயகவழிக்குத் திரும்ப வேண்டுமென்றும் ஈழத்தவர் தொடர்பில் புத்திசொல்லிக்கொண்டு - காந்தியம், அகிம்சை, பேசித்தீர்த்தல், உயிர்களைக் கொல்லாமை உட்பட இன்னபிற பேத்தல்களைச் அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கும் வலைப்பதிவர்களுக்கு உறைப்பதற்காக இப்பதிவுகள் உதவலாம்.
உண்மையில் அரசதரப்பின் பயங்கரவாதம் எவ்வளவு கோரமானதென்று எங்காவது உறைக்கும்படி சொல்ல முற்பட்டால் குறைந்தபட்சம் ஓரிரு சுட்டிகளைக் கொடுக்கவாவது இவை பயன்படும்.

மீண்டும், இங்குவந்து கருத்தளித்ததுக்கு நன்றி.

//விடுதலைப் போராட்டமென்பது குறிப்பிட்ட குழுக்கள் நம்புகின்ற அரசியலுக்கானதா?மக்களின் விடுதலைக்கானதா? என்ற கேள்வியை எப்போது கேட்போம்? //

நல்ல கருத்து.

 

Blogger மலைநாடான் said ... (04 August, 2006 22:12) : 

கவிஞருக்கு அஞ்சலிகள் !

வசந்தன்!

துயரில் உங்களுடனும், கவிஞர் குடும்பத்தினருடன் இணைந்துகொள்கின்றேன்.
உங்களின் கருத்துக்கள் நேர்மையானவை

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (05 August, 2006 00:42) : 

சிறிரங்கன், மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

Blogger இளங்கோ-டிசே said ... (05 August, 2006 01:08) : 

சிறுவயதில் -அன்றையகாலகட்டத்தில் மிகப்பிரபல்யமாயிருந்த-'சந்தனக்காடு'என்றொரு நாடகம் பார்த்திருக்கின்றேன். இவருடைய பங்களிப்பு நெறியாள்கையாளராகவோ, நடிகராகவோ அதில் இருந்திருக்கவேண்டும். சரியா தெரியவில்லை.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (05 August, 2006 01:44) : 

ஆம் சந்தனக்காடு இவரது நெறியாழ்கை தான்.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் இந்நாடகத்தை மறந்திருக்கமாட்டார்கள்.

 

Blogger வெற்றி said ... (05 August, 2006 04:51) : 

வசந்தன்,
கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்களைப் பற்றி இது வரையில் நான் அறிந்திருக்கவில்லை. அத்துடன் அவரின் படைப்புகளையும் இது வரை படிக்க வாய்ப்ப்புக் கிடைக்கவில்லை. அவரின் படைப்புகளெஆதாவது இருந்தால் பதிய முடியுமா?
நிற்க. தமிழ்மண்ணை நேசிக்கும் தன்மானத் தமிழர்களின் இழப்புக்கள் ஈடு செய்ய முடியாதவை. அவ் வகையில் இந்த இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மிகவும் வேதனையளிக்கிறது. இருப்பினும், சிங்கள அரசும், சிங்கள அரசின் காலை நக்கி சேவகம் செய்யும் தன்மானமற்ற துரோகக் கும்பல்களும்
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஈழப்போராட்டத்தை ஆதரிப்பவர்களைக் கொல்வதன் மூலம் எமது போராட்டத்தை நசுக்கலாம் என நினைத்தால் அவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சும்.

கவிஞரின் பிரிவால் துயருறும் அவரது உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Anonymous Anonymous said ... (05 August, 2006 09:15) : 

வசந்தன், கணேசமூர்த்தி அவர்களை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள். அன்னாருக்கு அஞ்சலிகள். அவரைப் பற்றிய விக்கிப்பீடியாக் கட்டுரை இங்கே.

 

post a comment

© 2006  Thur Broeders

________________