தனிநாடு ஒன்றே தீர்வு - கலாநிதி செனவிரட்ன
ஒஸ்ரேலியாவில் ஈழத்தமிழருக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் சிங்களவரான மருத்துவக் கலாநிதி பிறையன் செனவிரட்ன அவர்கள் இன்பத் தமிழொலி வானொலிக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம். ஜேவிபி யின் பயங்கரவாதம், அரச பயங்கரவாதம், மகிந்தவின் அணுகுமுறை என்பவற்றோடு தற்போது நடந்தது கொண்டிருப்பது என்ன என்பது பற்றி உரையாடுகிறார். தமிழருக்கான ஒரே தீர்வு தனிநாடுதான் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இலங்கைத் தீவு கடந்த காலத்தில் ஒரேநாடன்று, அது தனித்தனி நாடுகளாக இருந்தது, என்று சொல்லும் இவர் இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கு அது இருநாடுகளாகப் பிரிவதே சிறப்பு என்கிறார். கலாநிதி பிறைன் செனவிரட்ன அவர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து வந்தவர். முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்காவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓலி இணைப்பு _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், நேர்காணல், விவாதம் |
"தனிநாடு ஒன்றே தீர்வு - கலாநிதி செனவிரட்ன" இற்குரிய பின்னூட்டங்கள்
பிரயன் செனவிரட்னா எண்பதுகளில்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அவர் பாவம் என்ன செய்ய.
வசந்தன்,
செனவிரத்னவின் செவ்வியின் சுட்டியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
அனானி,
ஒலிப்பதிவைக் கேட்டியளோ தெரியேல.
அந்தாள் எண்பதுகளின்ர பிரச்சினை பற்றிக் கதைக்கேலயே, இப்பத்தயான் பிரச்சினை பற்றியெல்லாம் கதைக்கிறாரே?
சிலவேளை அந்தாளின்ர வயசைக் கருத்தில கொண்டு எண்பதுகளில வாழ்ந்து கொண்டிருக்கிறார் எண்டு சொல்லிறியளோ?
_____________________________
வெற்றி,
வருகைக்கு நன்றி.
அன்று வந்து பார்த்தபோது இணைப்பு வேலை செய்யவில்லை.
இன்று கேட்டேன்.
இணைப்புக்கு நன்றி.
சிட்னியில தொடக்கி வைக்கப்பட்ட அந்த அமைப்பின் நிகழ்வுகள் பற்றி எதுவும் எழுதவில்லயா?
ஜெகன்
நோர்வே
வருகைக்கு நன்றி ஜெகன்.
அந்த அமைப்பைப் பற்றி பெரிதாகச் செய்திகள் ஏதும் வரவில்லை.