நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு
இதுவொரு வித்தியாசமான ஒலிப்பதிவு முயற்சி. ஓடியாடித் திரிந்த இடங்களைப் பற்றிய நினைவுமீட்டலாக இருக்கும். முதற்கட்டமாக வீதியொன்றினூடான பயணமாக இது இருக்கும். பலவருடங்களின் முன் அவ்வீதியால் பயணம் செய்த நினைவை மீட்டுப் பார்க்கிறேன். முதற்கட்டமாக பண்டத்தரிப்புச் சந்தியிலிருந்து யாழ்ப்பாண நகர்ப்பகுதி நோக்கிய பயணம் தொடங்குகிறது. யாராவது ஒருவருக்கு இது சுவாரசியமாக இருக்கக்கூடும். பலருக்கு இது சலிப்பான ஒலிப்பதிவாக இருக்கும். ஏராளமானோருக்கு கதைக்கப்படும் இடங்களே தெரியாமலிருக்கும் சூழ்நிலையில் எப்படி சுவாரசியமிருக்கும்? அப்படிப்பட்டவர்கள் என்வலைப்பதிவில் 'நினைவுப்பயணம்' என்ற தலைப்புடன் வரும் இடுகைகளைத் தவிர்த்துவிட்டால் போயிற்று. இனி ஒலிப்பதிவைக் கேளுங்கள். நகர்ப்பகுதிக்குள் போவதற்குள் யாராவது துணையாக வந்து சேராமலா போய்விடுவார்கள்? _____________________________ அனைவருக்கும் இலகுவாக ஒலிக்கோப்பின் கொள்ளளவு நன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒலிப்பதிவு: சிஞ்சாமனுசிக் கலையக பரீட்சார்த்தக்கிளை (அவுஸ்திரேலியா) Labels: அனுபவம், ஒலி, பேச்சுத்தமிழ் |